👍👍நமது ஊதிய வழக்கானது இன்று (14/03/2018-புதன்கிழமை) சுமார் 2.15 க்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முக்கிய வழக்குகளின் இறுதிகட்ட விசாரணைப்பட்டியலில் இடம்பெற்று முதல் வழக்காக 166 வது பட்டியலில் இடம் பெற்ற வழக்கு 4.10 மணியளவிலும் அதனை தெடர்ந்த பிற வழக்குகளும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைப்பட்டியலில் 171 வது இடம்பெற்றிருந்த நமது வழக்கானது வழக்கறிஞரின் கடும்முயற்சியின் காரணமாக சுமார் 4.40க்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஒருநபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் அளித்தனர்.
💪🏼💪🏼நமது தரப்பில் எழுந்த நமது மூத்த வழக்கறிஞர் வழக்கின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.சுமார் 9600 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை புறக்கணித்து தொடர்ந்து 6 வது பழைய ஊதியத்திலே தொடர்கிறார்கள் என்ற தகவலை மிக அழுத்தமாக கூறினார்.
🤝🤝 நாங்கள் பல குழுக்களைப் பார்த்துவிட்டோம் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஊதியக்குழுவானது ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைவதற்கானது என்றும் நாங்கள் கேட்பது 6 ஆறாவது ஊதியக்குழுவின் பிரச்சினைகள் தொடர்பானது என்ற சிறப்பாக அரசு தரப்பில் பதில் சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பாக வாதாடினார்.
அரசு தரப்பில் பதில் ஏதும் கூற முடியவில்லை.
அவர்களிடம் இறுதியாக இருக்கும் ஒரே ஆயுதம் ஒருநபர் ஊதியக்குழு என்பது தான். அதற்கும் நமது தரப்பில் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். நீதியரசரும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டதோடு அரசுதரப்பில் சொல்லப்பட்ட கோரிக்கைகளையும் நிராகரித்தார்.
*அதனைத்தொடர்ந்து அரசு தரப்பில்
மேலும் ஒரு தேதி கேட்கப்பட்டது. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பெரிய வழக்குகள் இறுதிகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதநிலையுள்ளதால் அடுத்த வாரம் ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்று நீதியரசர் கூறியதால
் மீண்டும் வரும் 21.03.2018 புதன் கிழமை2.15 க்கு அடுத்தகட்ட இறுதி விசாரணைக்கு நமது வழக்கு வருகிறது.
🗣🗣இதற்கு தமது வழக்கறிஞரின் சாமர்த்தியமான வாதம் மற்றும் நாம் தொடர்ந்து பழைய ஊதியத்தை வாங்கி வருவதே நமது வழக்கை வெற்றிக்கு அழைத்து செல்கிறது.
இதைவிட்டுவிட்டு நாம் அவசரப்பட்டு புதிய ஊதியத்தை வாங்கினால் நம் வழக்கின் வெற்றி சில ஆண்டுகள் கூட தாமதமாகும். நம் வெற்றி நம்கையிலே!!!
இவண்
2009& TET
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக