வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.
புதுக்கோட்டை,டிச.4: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளிக் கூட வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
இதில் கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளான செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி,எண்ணை ஆதிதிராவின நல அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டன.அவற்றுள் எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப் பள்ளி அணியினர் முதலிடத்தையும்,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் வாழ்த்திப் பேசினார்.போட்டியின் நடுவர்களாக கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் சரவணப்பெருமாள்,காயாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டிகளை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜீ ஒருங்கிணைத்தார்..போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்ச்செல்வம்,அறந்தாங்கி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.