கல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில், தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கு பல விதிமுறைகள் உள்ளன. இளநிலைக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு, ’கட் ஆப்’ அடிப்படையிலும், முதுநிலை பட்டப்படிப்புக்கு, இளநிலை மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையும் பின்பற்றப்பட வேண்டும்.
பெரும்பாலான கல்லூரி மற்றும் பல்கலைகளில், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசுகள், பேராசிரியர்கள், சங்கங்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், ’செனட், சிண்டிகேட்’ உறுப்பினர்களுக்கான மறைமுக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அனைத்து பல்கலைகளிலும், ’ஓம்புட்ஸ் மேன்’ எனப்படும், குறை தீர் நடுவரை நியமித்து, மாணவர்களின் குறைகளை தீர்க்கவும், சேர்க்கை தில்லுமுல்லுவுக்கு முடிவு கட்டவும், யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.