யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/17

30,000 இளைஞர்களுக்குப் பயிற்சி!"

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவின் சுமார் 30,000 இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்துள்ளதாகத் 
தெரிவித்துள்ளது. மேலும், 4,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், 26,000 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்திட பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு உதவியுள்ளதாகவும் செப்டம்பர் 22ஆம் தேதி (நேற்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பிஸ்பார்க், மைக்ரோசாஃப்ட் ஆக்சலரேட்டர் ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிஸ்பார்க் திட்டத்தின்கீழ் 100 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆக்சலரேட்டர் திட்டத்தின்படி ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கட்டமைக்கும் பணி, சந்தைப்படுத்துதலுக்குத் தயார்படுத்துதல், பொருள்கள் வழங்குதல், இணைப்புகள், ஆலோசனை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க சிக்ஸா திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8,124 ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,61,000 மாணவர்கள் பயனடைவார்கள்’. இவ்வாறு கூறியுள்ளது. மேலும், இந்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ், தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுதல், சுகாதாரம், வேளாண்துறை குறித்த பயிற்சியும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரித்தாக்கல் விவரங்களைப் புதுப்பிக்க ஆணை!!!

மின்னணு முறையில் வரித்தாக்கல் செய்வோர் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று
வருமான வரித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் நேற்று (22.09.2017) தெரிவித்துள்ளதாவது: ‘ஐ.டி.ஆர்.எஸ். மற்றும் ஐ.டி. போன்றவற்றை ஆன்லைனில் வரித்தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் மற்றும் முக்கிய விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இதனால் தொடர்பு வசதியை எளிதாக்கலாம். இதன்படி அனைவரும் தங்களுடைய முதன்மை அல்லது, இரண்டாம் நிலை மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை தங்களுடைய சுயவிவரங்களில் அளிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு வரி செலுத்துவோருக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும் கடவு எண் (ஓ.டி.பி.) அவர்கள் அளித்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதைக்கொண்டு அவர்கள் புதிய கடவு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.’

எந்தவிதமான தொழில் செய்பவர்களும் தங்களுடைய மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பித்த பிறகே பயன்படுத்த முடியும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரிச் செலுத்துவோர் மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பிக்கவும், இயக்கவும் e-Filing என்ற இணையப் பக்கத்தை அணுகலாம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ப
ள்ளிகளில், 15 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்,பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணைநடத்தி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாதம் தோறும், 25 முதல், 30ம் தேதிக்குள், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மின்னணு முறையில் பெற்று, 5ம் தேதிக்குள் வழங்கி விட்டு, அறிக்கை தர வேண்டும். 'தாமதமாக சம்பளம்வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தபால் துறையில் வேலை: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!!

இந்திய அரசின் மிகப் பெரிய துறையான தபால் துறையின் பிகார் மற்றும்
சதீஷ்கர் தபால் வட்டத்தில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 963 கிராமின் டாக் சேவகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தகுதி பெற்றவர்களிடமிருந்துபு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3, 963

பிகார் காலியிடங்கள்: 1471

சதீஷ்கர் காலியிடங்கள்: 2492

பணி: Gramin Dak Sevaks (GDS)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதன்மூலம் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பார்த்து, படித்து தெரிந்துகொள்ளவும்

அரசு விழாவிற்கு பள்ளி மாணவர்களா?: உயர் நீதிமன்றம்!

கல்வி சாராத நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது தொடர்பாகத் தமிழக அரசு 
விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை மாவட்ட தலைநகரங்களில் தமிழக அரசு கொண்டாடிவருகிறது. இந்த நிகழ்வில் பார்வையாளர்களாக பங்கெடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். இது போன்ற கல்விச்சாராத நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் மனுத்தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில்.

தமிழக அரசுக் கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்து வருகிறது. மாலையில் நடக்கும் நிகழ்ச்சிக்குக் காலை முதலே மாணவர்களை அரங்கத்தில் காத்திருக்க வைக்கின்றனர். மாணவ, மாணவியருக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள்கூட முறையாகச் செய்து கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மாணவ, மாணவியரை அழைத்துச் செல்பவர்கள் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறுவதில்லை. சில இடங்களில் மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இதனால், மாணவ, மாணவியர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோர் தங்களது குழந்தைகளை கல்வி கற்கவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுப்பி வைப்பதில்லை. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி நேரங்களின்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குத் தமிழக அரசு அக்டோபர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

போலி செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்!!!

சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் விதமான 
பிரசாரத்தை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது.

உலகளவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதுபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக்கில் அதிகளவு போலி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இதனால் போலி செய்தி பரப்பப்படுவதற்கான ஊடகமாக ஃபேஸ்புக் உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. போலி செய்திகளைக் கண்டுபிடிப்பதற்கான 10 வழிகளை பயனாளர்களுக்கு அது வழங்கியுள்ளது. இது தொடர்பாக முக்கிய செய்தித்தாள்களில் விளம்பரமும் அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில், ‘நாம் ஒன்றாக இருப்பதன் மூலம் தவறான செய்தி பரவுவதைக் குறைக்க முடியும்’ என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளது.

மேலும், ‘செய்திகளின் தலைப்புகளைச் சந்தேகியுங்கள். இணையப்பக்கத்தின் யு.ஆர்.எல்லைக் கவனியுங்கள். செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். செய்திக்கும் புகைப்படத்துக்குத் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நம்பகமான செய்தியாக இருந்தால் மட்டும் சமூக வலைதளத்தில் பகிருங்கள்’ என்றும் ஃபேஸ்புக் தனது பயனாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!!!

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர் முருகனை 15 நாள்
நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது.


இதற்கு கண்டனம் சென்னை ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார். கடந்த 14-ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது நீதிபதியை ஊழியர் பாளை பெருமாள்புரம் அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் பணியாற்றும் திருமால் நகரைச் சேர்ந்த முருகன்(47) அவதூறாக பேசினார்.



இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்றைய தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவல்கள் 1,00,000 மேல் காலியிடங்கள்!!!

https://www.yoyojobs.com 
*👮🏻👮🏻‍♀ TNSPYB- 10500 பணியிடங்கள்
நிரப்பப் படஉள்ளது.*
சம்பளம்: Rs.20200
அப்ளைலிங்க்: https://goo.gl/VAJei1

*15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/Eeuukv

*ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் வேலை.*
சம்பளம்: Rs.20,200/-
அப்ளைலிங்க்: https://goo.gl/oLJDXU

*ரகசிய போலீஸ் நிறுவனத்தில் (IB) 1430 வேலை.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/pgTKgh

*ஊழியர்கள் தேர்வு ஆணையத்தில் 605 வேலை வாய்ப்பு 💼*
சம்பளம்: Rs.92,300/-
அப்ளைலிங்க்: https://goo.gl/CuJQnT

*🌐குரூப்-V A பணியிடங்களுக்கு 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு..*
சம்பளம்: Rs.20,200/-
அப்ளைலிங்க்: https://goo.gl/iQPAib

*🐄 🥛 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..*
சம்பளம்: Rs.25.00/-
அப்ளைலிங்க்: https://goo.gl/jA1j3d

*ஏர் இந்தியா நிறுவனத்தில் 217 வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/Vuasrd

*மின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.35,500/-
அப்ளைலிங்க்: https://goo.gl/ek2ZMH

*🚢கடற்படையில் என்ஜினீயர்கள், பட்டதாரிகள் சேர்ப்பு.*
சம்பளம்: Rs.39,100/-
அப்ளைலிங்க்: https://goo.gl/BGdAFn

*🏢தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/BN6tDC

*🏛வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும்  வங்கி தேர்வுக்கான 7875 விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.*
சம்பளம்: Rs.34,800/-
அப்ளைலிங்க்: https://goo.gl/ijXTp5

*👨‍💻 BSNL - JAO Recruitment பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெடில் JAO வேலை வாய்ப்பு.*
சம்பளம்: Rs.45.500/-
அப்ளைலிங்க்: https://goo.gl/DuVALN

*இந்த பதிவை மற்ற பலநண்பர்களுக்கும்தகவல் பரிமாறி உதவலாம்.*

*At least 1 or 2 Whatsapp Group- க்கும் Share- பண்ணுங்கள் 📱📲💻✅🔰♻*

வியாபாரிக்கு 34 பைசாவை காசோலையாக அனுப்பிய செல்போன் நிறுவனம்*

                                         
                                             


       கொடைக்கானல்:

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. 
இவர் மார்க்கெட்டில் கடை வைத்து நடத்தி வருகிறார். வோடபோன் செல்லில் போஸ்ட்பெய்டு வசதி வைத்திருந்தார். அதில் பில் கூடுதலாக வந்ததால் பிரீபெய்டு சேவைக்கு மாறினார்.

அதன் பிறகு தனது போஸ்ட்பெய்டு கணக்கில் உள்ள பாக்கித் தொகையை அனுப்புமாறு செல்போன் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து 34 பைசாவுக்கு காசோலையாக ஆக்சிஸ் வங்கி மூலம் பாலசுப்பிரமணி வீட்டுக்கு ஒரு தபால் வந்தது. அதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி இது குறித்து செல்போன் கம்பெனியிடம் போய் கேட்ட போது உங்கள் கணக்கில் 34 பைசா மட்டுமே பாக்கி இருந்ததாகவும் அதனால்தான் அதனை காசோலையாக அனுப்பி வைத்ததாக அவர்கள் கூறினர்.

இதனை வங்கியில் போட்டு கலெக்‌ஷன் எடுத்தாலே ரூ.150 செலவாகும். இது கூட தெரியாமல் எதற்காக காசோலையை வீணடித்தீர்கள்? என கூறியவாறு பாலசுப்பிரமணி வேதனையுடன் வீடு திரும்பினார்.                     

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது!!



Flash News : உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதித்த தடை நீக்கம்.

நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாளை நடக்க இருந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு தடை நீக்கம்.இடைக்கால தடை நீக்கத்தை அடுத்து நாளை வழக்கம் போல் தேர்வு நடைபெறும்

Facebook, Whatsapp இயக்கத்தை நிறுத்தக் கோரும் மனு தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ்!!

வி டி மூர்த்தி என்பவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தொலைபேசி சேவைகளை கட்டுப்படுத்தும்படி நீதிமன்றத்தை பொது நல வழக்கு ஒன்றின் மூலம் அணுகினார்.

இதையடுத்து அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அரசை பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வி டி மூர்த்தி என்பவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தொலைபேசி சேவைகளை கட்டுப்படுத்தும்படி நீதிமன்றத்தை பொது நல வழக்கு ஒன்றின் மூலம் அணுகினார். இதையடுத்து அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அரசை பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்காலிக நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இந்தத் தொலைபேசி சேவைகளை தீவிரவாதிகள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி செய்யப்படும் அழைப்புகளின் சங்கேதக் குறியீடுகளை கண்டறிவது சுலபமல்ல என்றும் மனுவானது குறிப்பிட்டுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி இதே போன்று தொலைபேசி சேவைகளை அளிக்கும் இதர ஆப்ஸ்களையும் அரசின் ஒழுங்குமுறை சட்டகத்திற்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை மனுதாரர் வலியுறுத்தினார். ”இவ்வாறு கட்டுப்படுத்த இயலாத இயக்கம் தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மட்டுமின்றி அரசின் கருவூலத்திற்கும் நஷ்டம்” என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டார்

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அவசியமில்லை-ஐகோர்ட்!!



அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை தேவையில்லை என சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறி உள்ளார்.

"அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது; மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது".

அசல் ஓட்டுநர் உரிமம் எடுக்காதவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறி உள்ளார்

22/9/17

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு!!

அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பது விவசாயக் காப்பீட்டிற்கு  என்று பிரத்யேகமாக செயல்படும் காப்பீட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
*காலியிடங்கள்  :*AIC நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவியில் SC பிரிவினருக்கு 8ம், ST பிரிவினருக்கு 4ம், OBC பிரிவினருக்கு 13ம், பொது இடங்களாக 25ம் சேர்த்து மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.
*வயது :* 1.9.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.9.1987க்குப் பின்னரும் 1.9.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
*கல்வித் தகுதி :*B.Sc. Agri, BE அல்லது B.Tech படிப்பை அக்ரிகல்சரில் முடித்தவராக இருக்க வேண்டும். இது தவிர M.Sc Agri , BE அல்லது B.Tech படிப்பை, CS அல்லது IT யில் முடித்தவர்கள், B.Com அல்லது M.Com, CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், MBA - நிதிப்பிரிவு, ஸ்டாடிஸ்டிக்ஸ், லீகல், மார்க்கெட்டிங், முடித்தவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.

*தேர்ந்தெடுக்கும்  முறை :* ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகதேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

*விண்ணப்பக் கட்டணம் :* ரூ.650/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

*விண்ணப்பிக்கும் முறை :* ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள் :* அக். 10

*கூடுதல் விபரங்களுக்கு :* www.aicofindia.com

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மத்தியரசுப் பணி!!!

நமது  நாட்டின் தாமிர உற்பத்தியில் முத்திரை பதித்து வரும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் பெருமைக்குரியது. இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்கள் 75ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*பிரிவுகள் :* எலக்ட்ரீசியனில் 25, ஆர்மச்சூரி வைண்டரில் 2, மெக்கானிக் டீசலில் 10, சி., அண்டு இ., வெல்டரில் 7, பிட்டரில் 10, டர்னரில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்கில்2, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 3, சர்வேயரில் 3, கார்பென்டரில் 3, பிளம்பரில் 2ம் சேர்த்து மொத்தம் 75 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
*வயது :* விண்ணப்பதாரர்கள் 2017 செப்., 1 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

*கல்வித் தகுதி :* பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, உரிய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

*தேர்ச்சி முறை :* எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

*விண்ணப்பிக்கும் முறை :* பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்ப படிவத்தை
முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

```Assistant General Manager (HR&A),

Hindustan Copper Limited,

Malanjkhand Copper Project,

Tehsil:- Birsa, P.O.- Malanjkhand,

 District Balaghat,

Madhya Pradesh -481116```

*விண்ணப்பிக்க கடைசி நாள் :* அக். 8.

*கூடுதல் விபரங்களுக்கு :* www.hindustancopper.com

TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!

TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

```Advt.No.: 477```

பணியின் பெயர்: Statistician

காலியிடங்கள்:31 (UR-10, BC-9, MBC/DC-6, SC-5, SCA-1)

சம்பளம்:*9,300 – 34,800+GP

வயது:*  1.7.2017 தேதிபடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/DW/MBC/DC/SC/SCA/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:* Statistics/ Mathematics/Economics பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 26.11.2017

தேர்வுக் கட்டணம்:

 ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். One Time Registration செய்யாதவர்கள் மட்டும் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:* 3.10.2017

*மேலும் கூடுதல் தகவல்களுக்கு*  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.
ரூ.5,400 கோடி
வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.
இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்யும் முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம் 
பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.
தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. 
முறைகேடுகளுக்கு முடிவு
இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும். 
ஒரே மாதத்தில், இரு இடங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட முறைகேடுகள், இனி செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது. 
செப்., 29 முதல் அக்.,2 வரை வங்கிகள் இயங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் 28ம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 முதல், 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.