யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


ஆனால், மழை பாதிப்பில்லாத மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களில் 'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில் டிச.,7 முதல் 23க்குள் தேர்வுகள் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின் மழை பாதிப்பு அதிகம். பல நாட்கள் விடுமுறை விடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில் பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள் என்பதால் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்த மாவட்டம் சார்பில் நடக்கும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் தெளிவான அறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக