யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

"தமிழகத்தில் புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள்": அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடியான 37 அறிவிப்புகள்!!!

தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பள்ளி கல்வி துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 30 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்க புதுமை பள்ளி விருதுகள் வழங்கப்படு என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பாக துணை கருவிகள் ரூ.31.25 கோடி செலவில் பள்ளிகளுக்கு வழஙகப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனித்திறன் கொண்ட மாணவர்களை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்ப ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும், 32 மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, போட்டி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடத்த ரூ.2 கோடியில் மேலாண்மை தளம் அமைக்கப்படும் என்றார்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார.
அரசு பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அமைச்சர் கூறினார். 5,639 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் 3,336 முதுநிலை பட்டதாரி அசிரியர்களும் 748 கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணிகளாக மாற்றப்படும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் உள்பட 37 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக