யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

37 அறிவிப்புகள் விளக்கமாக ........


அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களை, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.



சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். 

அவர், 'ஐந்து ஆண்டுகளில், பள்ளிகளில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகள், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவல் அனைவரையும் சென்றடைந்த நிலையில், தரமான கல்வியை அளிப்பது அடிநாதமாகியுள்ளது.

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சவால்கள், மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. கல்வியின் பரிணாம வளர்ச்சி கருதி, கல்வித் தரம் மாபெரும் உயரத்தை எட்ட வேண்டும்' என, தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, '17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம்; பள்ளிகள் தோறும் மாணவர் நாளிதழ் வாங்குதல்; 'ஆன்லைனில்' தேர்வு ஹால் டிக்கெட், போட்டித் தேர்வுக்கு வசதிகள், கணினி வழி கல்வி' என, 37 புதிய அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட்டார்.

அதன் விபரம்:

* கிராமம் மற்றும் மலைப் பகுதி உள்ளிட்ட 30 இடங்களில் புதிய துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும்
* சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒரு துவக்கப் பள்ளி, உயர்நிலை, நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிக்கு 1.92 கோடி ரூபாயில் ஆண்டுதோறும் 'புதுமைப் பள்ளி விருது' வழங்கப்படும்
* புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் 
அட்டைகள், 31.82 கோடி ரூபாயில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
* 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 40 ஆயிரம் மாணவர் பயன் பெறும் வகையில், தலா, மூன்று கணினிகள் உடைய கணினி வழி கற்றல் மையங்கள் 6.71 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* 5,639 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலை 

'நாப்கின்' வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும்
* 31 ஆயிரத்து 322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் 4.83 கோடி ரூபாயில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்


ஆசிரியர் நலன்


* நடப்பு கல்வியாண்டில், 3,336 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் மற்றும், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என 4,084 காலியிடங்கள் நிரப்பப்படும்
* 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படும்
* கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு யிற்றுவிக்கும் ஆசிரியர்கள்; குழந்தைகள் சேர்க்கையில் சிறப்பான ஆசிரியர்களை ஊக்கு விப்பதற்காக மாவட்டத்திற்கு, ஆறு ஆசிரியருக்கு 'கனவு ஆசிரியர் விருது' வழங்கப்படும். அவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பாராட்டுத் தொகை வழங்கப்படும்
* அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான, மாணவ - மாணவியர் கற்கும் திறனை அதிகரிப்பதற்காக 39.25 கோடி ரூபா யில் உச்சரிப்பு, எழுத்துக்களை அறிதல் போன்ற வற்றுக்காக, 39.25 கோடி ரூபாயில்,துணை கருவிகள் வழங்கப்படும்
* திறனின்றி தேர்வுகளில் பங்கேற்கும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
* அறிவியல், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும், 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மூன்று கோடி ரூபாயில், வெளிநாடு செல்ல வாய்ப்பு அளிக்கப் படும்
* தமிழர் பாரம்பரிய கலை மற்றும் மரபுகலை வளர்க்க,150 வகை பிரிவுகளில், பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவிலான கலை திருவிழா, ஆண்டுதோறும்,4 கோடி ரூபாயில் நடத்தப்படும்
* பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பை தொடரும் வகையில், தேசிய வங்கி மூலமாக, ஆண்டுதோறும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்
* கிராமப்புற மாணவர்களை தயார் செய்யும் வகையில், ஒன்றியங்கள் தோறும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற, 20 கோடி ரூபாயில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்கள், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும்


மின் ஆளுமை


* பள்ளிக்கல்வி துறைக்கென தனியாக, கற்றல், கற்பித்தல், மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும். இதில், பல்வேறு அலைபேசி செயலிகள் உருவாக்கப்படும்
* பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு வழங்குதல், மதிப்பெண் பதிவு செய்தல், தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புதல் போன்ற வற்றை மேற்கொள்வதற்காக, அரசு தேர்வுகள் 

துறை, இரண்டு கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவங்க, இணைய வழியில் அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படும்

நுாலகம்
* அரசு பொது நுாலகங்களுக்கு பயனுள்ள, தரமான நுால்கள் வாங்க, 25 கோடியும், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத் திற்கு,புதிய துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நுால்கள் வாங்க, ஐந்து கோடி ரூபாயும் வழங்கப்படும்
* மதுரையில், உலக தமிழ்ச்சங்க வளாகத்தில், ஆறு கோடி ரூபாய் செலவில், மாபெரும் நுாலகம் அமைக்கப்படும்
* மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, மாவட்ட தலைநகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்
* எட்டு கோடி ரூபாய் செலவில், சிவகங்கை மாவட்டம் - கீழடி, தஞ்சை, நெல்லை, நீலகிரி, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், சிறப்பு நுாலகங்கள் அமைக்கப்படும்
* கோவை, கரூர், நெல்லை, நாமக்கல், கடலுார், வேலுார், திருச்சி, விருதுநகர் ஆகிய நகரங்களில், போட்டித் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 24 மாவட்டங்களிலும், அவை துவங்கப்படும்
* தமிழகத்தில் கணினிமயமாகாத 123 முழுநேர கிளை நுாலகங்கள் 1.84 கோடி ரூபாயில் கணினி மயமாக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி உள்ளிட்ட வற்றை மின் மயமாக்கி, நவீன மின் நுாலகம் அமைக்கப்படும்
* அரிய நுால்கள், ஓலைச்சுவடி மற்றும் ஆவணங்களை, பொது மக்கள் மற்றும் தனியாரிடம் இருந்து பெற்று, பாதுகாக்க, புதிய திட்டம் உருவாக்கப்படும்
* அரிய நுால்களை பாதுகாப்பதற்காக, தனியார் அமைப்புகள் நடத்தும் நுாலகங்களுக்கு 
பராமரிப்பு நிதி வழங்கப்படும்
* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நுால்கள் மற்றும் உலகின் தலைசிறந்த பிற மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சிகள், நடமாடும் கண்காட்சிகள், 
புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து நடத்தப்படும்
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய பணியிடங்கள், 60 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டை சீர்படுத்துவதற்காக, இரு புதிய ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
* பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு 34 புதிய வாகனங்கள் 2.89 கோடி ரூபாயில் வழங்கப்படும்


வயது வந்தோர் கல்வி


* திருவண்ணாமலை, அரிய லுார், பெரம்பலுார், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மூன்றாம் வகுப்புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் படும். மேலும், ஐந்து மாவட்டங்களில் 14 கோடி ரூபாயில் சமநிலை கல்வி அளிக்கப் படும்
* வெளிநாடுகளில் வாழும் தமிழ் மாணவர் களுக்காக, பாடபுத்தகங்கள் மற்றும் கற்பிப்பதற் கான ஆசிரியர்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்
* இலங்கை, யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற் கும், மலேஷியா பல்கலைக்கும், பொதுமக்க ளிடம் இருந்து பெற்று, ஒரு லட்சம் அரிய நுால்கள் அனுப்பி வைக்கப்படும் பள்ளி கல்வித் துறையை மேம்படுத்த, அரசு அறிவித்துள்ள, இந்த புதிய அறிவிப்புகளுக்கு, கட்சிகள், கல்வி யாளர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக