யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/6/17

4 மாணவர்களே படிக்கும் அரசு பள்ளி

மேட்டூர்: கொளத்துார் ஒன்றியத்திலுள்ள இரு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில், 13 மாணவர்களே படிக்கின்றனர்.
இரு பள்ளிகளிலும், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்துார் ஒன்றியத்தில், 75 அரசு பள்ளிகள் உள்ளன. இதில்,கோல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து, ஏரிக்காடு கிராமத்தில் ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், தற்போது, முதல் வகுப்பில், இருவர், இரண்டாம் வகுப்பில், நால்வர், மூன்றாம் வகுப்பில், இருவர், ஐந்தாம் வகுப்பில் ஒருவர் என, ஒன்பது மாணவ, மாணவியரே படிக்கின்றனர். பள்ளியில், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. ஐந்தாம் வகுப்பில், ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவர் ஒருவருக்கு மட்டுமே, பள்ளி தலைமை ஆசிரியர் பாடம் நடத்துகிறார். இதுபோல, கொளத்துார் அடுத்த செ.செ.,காட்டுவளவு கிராமத்தில் உள்ள ஒன்றிய துவக்க பள்ளியிலும், நான்காம் வகுப்பில் மாணவர்களே கிடையாது. இதர, 1, 2, 3, 5 ஆகிய நான்கு வகுப்புகளிலும் தலா ஒரு மாணவ, மாணவியர் மட்டுமே படிக்கின்றனர்.
இரு பள்ளிகளிலும், தலா ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் பணிபுரிகின்றனர். இரு பள்ளிகளிலுமே, தலைமை ஆசிரியர், தலா ஒரு மாணவருக்கு மட்டுமே பாடம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டும் நிலையில், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், இரு பள்ளிகளும், வரும் ஆண்டுகளில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக