யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

இலவச சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோதனை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச உணவுக்கு ஆசைப்ப
ட்டு, பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், திரவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு உணவகம், 'சில்லி பர்கர்' எனப்படும், மிளகாய் பர்கரை சாப்பிடும் போட்டியை நடத்தியது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.இந்தப் போட்டியில், டில்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கவுரவ் குப்தா, அதிக பர்கர்களை சாப்பிட்டு வெற்றி பெற்றார். அடுத்த நாள், கவுரவ், ரத்த வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர் தீப் கோயல், அதிக காரம் காரணமாக, வயிற்றின் உட்புறச் சுவர் கிழிந்து இருப்பதாகவும், கிழிந்த பகுதியை உடனே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, கவுரவின் வயிற்றில் கிழிந்த பகுதிகள் அகற்றப்பட்டன. தொடர் சிகிச்சையுடன், திரவ உணவு மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக