இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறையால் பல வருடங்களாக லட்சக்கணக்கான வழக்குகள் நீதிபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன என பலமுறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவந்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாததால்,வழக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இது மிகவும் வேதனையளிக்கிறது என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் வேதனை தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்' விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு நீதிபதிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அந்த விவகாரம் முடிவுக்கு வராமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களில் நீதிபதிகளை நிரப்ப முடியாத காரணத்தால் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது, ’உச்சநீதிமன்றத்துக்கு 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது 23 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், உச்ச நீதிமன்ற அலுவல் வேலைகள் முடிக்கப்படாமல் பாதிக்கப்படுகின்றன. இதனால், தினசரி வழக்குகளும் முடிக்கப்படாமல், கால தாமதமடைகின்றன. தற்போது,
நீதிபதிகளை விரைவில் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த மாத இறுதிக்குள் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்’ என நீதிபதி கூறினார்.
நாட்டில் உள்ள எட்டு மாநில உயர்நீதிமன்றங்களில் மட்டும் 80% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒட்டுமொத்த வழக்குகளையும் சேர்த்து பார்த்தால் உத்தரபிரதேசத்தில் மட்டும் 25% வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, மராட்டியம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதற்கு முன்பு, நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சனை மற்றும் உயர்நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணியில் உள்ள நீதிபதிகள் அதிகளவில் பணிசுமைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாகூர் வேதனையுடன் முன்பு பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீதிபதி தாகூரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.