யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/12/18

கஜா புயலில் 200 தென்னைகள் பாதிப்பின்றி தப்பிய அதிசயம் துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவுமே காரணம் ..ஆசிரியர் இதனையும் மாணவர்கள் புரியும் வகையில் கற்பிக்கலாம்!!

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.
தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு. இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன்.
கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு.
சேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு.
பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு
அதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.
வாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன்.
வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா?’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.
எம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுப கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார்.
தொடர்ந்து பேசிய விவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.
துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்!

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாதோருக்கு சிக்கல்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி பணியாளர்களை பணி நிரவல் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் சிக்கல்ஏற்பட்டுள்ளது.நிதிநிலைமையை காரணம் காட்டி, உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அனுமதி வழங்க அரசு மறுத்து வந்தது.

பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் அப்பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.ஏற்கனவே 250 முதல் ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு எழுத்தர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கும் மேல் 3 பேரை நியமிக்கலாம்.ஆயிரம் மாணவர்கள் வரை ஒரு அலுவலகஉதவியாளர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கு மேல் 3 பேர் நியமிக்கலாம். எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு அலுவலக வேலையாள், காவலர் நியமிக்கலாம்.தற்போது அது மாற்றப்பட்டு 251 முதல் ஆயிரம் மாணவர்கள் வரை தலா ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (அ) உதவியாளர் (அ) பதிவுருஎழுத்தர், 1001 க்கு மேல் 2 பேர் இருக்கலாம்.எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு காவலர் இருக்கலாம்.மேலும் 1991-92 ல் அனுமதித்த பள்ளிகளில் மட்டுமே ஆய்வக உதவியாளர் நியமிக்க முடியும். சுத்தம் செய்வோர், அலுவலக வேலையாளர்,துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி வழங்கவில்லை.

விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், மதிய உணவு திட்டம் போன்று பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு  வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி?

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில்அளிக்க வேண்டும்.

மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருப்பவர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெற்றுள்ளனர்.

சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சீபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், நெல்லை மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்து: நீதிபதி கருத்து :

சென்னை: ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் 
கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகைகொற்கை பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி 3 கி.மீ தூரத்திலுள்ள பள்ளிக்கு பணி மாற்ற கோரினார். இடமாறுதல் கலந்தாய்வில் 104 கி.மீ தூரத்திலுள்ள பெரிய தும்பூருக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தில் பணி மாறுதலின் போது முன்னுரிமை தரவேண்டும் என்று உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
விதிகள் தெளிவாக உள்ள நிலையில் பணி மாறுதல் கலந்தாய்வு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி விமலா தெரிவித்தார் .

செல்பி’யால் பல உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், அமெரிக்காவில் செல்பி மூலம் ஒருவர் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பித்திருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், கிறிஸ்டோபர் பிரிகோபியா. அமெரிக்காவின் ஜார்ஜ் டவுனில் வேலைசெய்து வருகிறார். இவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது திடீரென போலீஸ் கைதுசெய்தது. ஏன் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் எனத் தவித்த கிறிஸ்டோபர், கைதுக்கான காரணத்தை போலீசார் விளக்கியபோது அதிர்ந்தார்.

இவர் தனது பள்ளிக்கால தோழியை வீடு புகுந்து தாக்கியதாகவும், அவரின் கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்தில் நான் வீட்டில் இருந்தேன்’ எனக் கதறிய வரின் விளக்கத்தைக் கேட்காமல் அவரைச் சிறையில் அடைந்த போலீசார், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 99 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்தனர். ஆனால், கிறிஸ்டோபரின் பெற்றோர்கள் கோர்ட்டை நாடினர். ஒன்பது மாதம் சிறையில் இருந்த அவரை ஜாமீனில் வெளியில் எடுத்தனர்.

அதேநேரம், சட்டப் போராட்டத்தைத் தீவிரப் படுத்திய அவர்களுக்கு, கோர்ட்டில் தங்கள் மகன் குற்றவாளி அல்ல என நிரூபிக்க உதவியது ஒரு செல்பி படம்.

ஆம், கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் கிறிஸ்டோபர் அதே நாளில், அதே நேரத்தில், சம்பவம் நடந்த இடத்துக்கு 65 மைலுக்கு அப்பால், தன் தாய் மற்றும் குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக, இவர்கள் அந்த நேரத்தில் குடும்பத்துடன் செல்பி ஒன்றை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.

இதை ஆதாரமாக வைத்து வாதாடிய வக்கீல்கள், கிறிஸ்டோபரை 99 வருட ஜெயில் தண்டனையில் இருந்து வெளிக்கொண்டுவந்தனர். இதை முன்னிட்டு, பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவரின் தாயார் எரினா, ‘தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அனைவருக்கும் நீதி வேண்டிப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இது இங்கே முடிவுக்கு வரவில்லை. நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் போராடுவோம்’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.

மாணவிகள் கொலுசு அணிவதால் மாணவர்களுக்கு என்னவெல்லாம் ஆகுது தெரியுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொலுசு அணிந்து

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களுக்கு 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். யூடியூப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் ஜனவரி 15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், இந்தாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் இருந்து 26,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றார். அப்போது கொலுசு அணிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்கு வரக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், ஆனால், மாணவிகள் கொலுசு அணிந்து செல்லும்போது மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும், தெரிவித்தார். அதேநேரம் மாணவிகள் பூ சூடிக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1/12/18

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் -2018 பள்ளி நாட்காட்டி:

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு :

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது
அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. 



அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், மேலும் குறைந்து 46 லட்சமாக உள்ளது.

21 ஆயிரத்து 378 பள்ளிகளில், வெறும் 15 முதல் 100 வரையிலான மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

6 ஆயிரத்து 167 பள்ளிகளில், 101 முதல் 250 வரையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

714 அரசு பள்ளிகளில் மட்டுமே, 251 முதல் ஆயிரம் வரையிலான மாணவர்கள் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள், வெறும் நான்கு மட்டுமே உள்ள நிலையில், 

900 பள்ளிகளில் பத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

அதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 22 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது, 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

மகிழ்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்... வங்கி அறிவித்த திட்டம் அப்படி!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த சில மாதங்களாக புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி அறிவிப்பாக, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, தற்போது, பிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் உயர்த்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதே எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வை எழுப்பியுள்ளது.
எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ள வட்டி விகிதம் முழு விபரம்
1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில்  பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு கடந்த 30.7.18 தேதி மாற்றப்பட்ட வட்டி விகிதம் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது அட்டவணையில் இன்று(28.11.18)  அறிவிக்கப்பட்ட  வட்டி விகிதம் இடம்பெற்றுள்ளது .


இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும். எஸ்பிஐ- யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளுக்கு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை! வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Homeவணிகம்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப் போன்ற வங்கிகள் பிக்சட் டெசாபிட் திட்டத்தில் எவ்வளவு வட்டி விகிதத்தை அளிக்கின்றன என்பது குறித்து கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஐ வங்கி நேற்றை தினம் தனது இணையதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வியையும் எழுப்பியது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் கவனத்தை பெற்று ஐசிஐசிஐ, எச்டிஎப் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எவ்வளவு வட்டிவிகிதம் வழங்குகின்றன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
1. ஐசிஐசிஐ வங்கி :
1 கோடிக்கு கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசி வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் திட்டத்திற்கான வட்டி விகிதம் முதல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
மூத்த குடிமக்கள் தொடரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கப்படும் வட்டி விகிதம் இரண்டாவது கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

2. எச்டிஎப்சி வங்கி :
1 கோடிக்கு கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் திட்டத்திற்கான வட்டி விகிதம் முதல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
மூத்த குடிமக்கள் தொடரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கப்படும் வட்டி விகிதம் இரண்டாவது கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.


3. எஸ்பிஐ வங்கி:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எஸ்பிஐ வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை  இங்கே கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளுங்கள் 

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்:

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும்
மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்*
🔥
🛡 தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.
🔥
🛡 இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.
🔥
🛡 இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.
🔥
🛡 தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.
🔥
🛡 அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த *CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது.*
🔥
🛡 தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் *அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி  உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.*
🔥
🛡 மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான *ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்.*
🔥
🛡 இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் *அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்.*
🔥
🛡 எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு *பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்*
🔥
🛡 தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து  வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அரசுடன் ஏற்பட்டபேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை| டிசம்பர் 4 முதல் கால வரையற்றவேலை நிறுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் :

இன்று 30.11.2018 மாலை ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.இதனால் நாளை மீண்டும் சென்னையில் உயர்ம்மட்ட குழு  உறுப்பினர்கள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு .செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார் .

29/11/18

உடல்நலம் மருத்துவம்,

பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.

பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக அமைகிறது. ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாகற்காய் சாப்பிடுவது என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

நீதிக் கதை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்

கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை!
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்
 காணவில்லை.
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
 வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.
யாரம்மா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.

 வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
"  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்

வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்.

 வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..

நீதி 2. அப்படி செஞ்சா பொண்டாட்டிக்கு தான் லாபம்..
நமக்கு எப்பவுமே அல்வா தான்.

சிந்தனை கதைகள்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் - இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம்j விட்டுவிட்டு watsapp தான் குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதையை மிக சுவாரசியமாக   வாசித்துக்கொன்டு  நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி  படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் **ஆள்!”
அடடா அடடா அடடடடடடடா  கக்கக்க போ

 மத்தவங்களுக்கு அனுப்பி மனசை தேத்திக்கங்க... நானும் அதை தான் செஞ்சேன்.

நீதிக்கதை



வனத்துக்கு வந்த வானவில்!


அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது.


 வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெனப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம்,  பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.

யானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க?’’ என்றது.

``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.

``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.

அடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா! இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.

கரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.

``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.

``அப்புறம் என்னதான் செய்வது?’’ என்றது மிளா.

``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.

``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு?’’ எனக் கேட்டது கழுகு.

உதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.


``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல் 
மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.

``நண்பர்களே... வானவில்லை உடைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். 


அதே தவற்றை நாமும் செய்யலாமா? எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.

``யாரடா இவன்? பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.

சட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும். 


சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.

பெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.

அனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.

அந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.

நீதிக்கதை



பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.

""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.

""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.

அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.

பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.

தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.

பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-

தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.

கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.

""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.

இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்
கதை கருத்து: இதனை இவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கண் விட வேண்டும்.

நீதிக்கதை



பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.

""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.

""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.

அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.

பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.

தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.

பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-

தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.

கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.

""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.

இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்
கதை கருத்து: இதனை இவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கண் விட வேண்டும்.

நீதிக்கதை



தங்கத் தூண்டில்

வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

 அடைந்துள்ளம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.

இதைப் பார்த்த சுந்தர், “”அண்ணா! இப்படிப்பட்ட சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப் பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு தந்தான். மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று கோபம் கொண்டான் சுந்தர்.

“”சோம்பேறிப் பயலே! அடுத்த முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!” என்று கத்தினான் சுந்தர். மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன். கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

“”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே? உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை.

பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர் கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று இருந்தது. வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை சுந்தரிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன், “”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக் காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!” என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றான். நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.

வசந்த்தைப் பார்த்து அவர், “”நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார். நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது. இதுவே என் தீர்ப்பு!” என்றார்.

நீதிக்கதை


தந்திர நரி
ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.

சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.

இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது.

தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.

தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.

நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை புயல் நிவாரணத்திற்கு அளித்த மாணவி

                                     Ã Â®Å¡Ã Â¯Ë†Ã Â®â€¢Ã Â¯ கிள௠ வாங௠க வைத௠திர௠ந௠த பணத௠தை ப௠யல௠ நிவாரணத௠திற௠க௠ அளித௠த மாணவி
ஓசூர் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை, 'கஜா' புயல் நிவாரணத்துக்கு, தனியார் பள்ளி மாணவி வழங்கினார்.புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், 25ம் தேதி இரவு, ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் இருந்து நிவாரண பொருட்கள், அனுப்பப்பட்டன.அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் லட்சிதா, 8, சைக்கிள் வாங்க, சேர்த்து வைத்த, 1,000 ரூபாயை, தே.மு.தி.க., மாவட்ட பொறுப்பாளர் முருகேசனிடம் வழங்கினார்.'தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வரும் லட்சிதா, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வந்த கஜா புயல் பாதிப்பு செய்திகளை பார்த்து, நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார்' என, அவரது பெற்றோர் கூறினர்.

தலைமையாசிரியர் கவனத்திற்கு : தனியார் அமைப்பினர் மாணவர்களை சந்திக்க தடை - CEO சுற்றறிக்கை!

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு


பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அப்போது வெளியிட்ட செய்தியில், இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.


அதாவது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை தேர்வு நடக்கும்.


இந்த தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, கஜா புயலால் கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டுமே அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், 10 நாட்களுக்கு பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விவாதித்தனர். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

TNOU - Application For Genuineness


சிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு

தமிழகத்தில் 2012ம் ஆண்டு கல்வித்துறையில் பணியில் சேர்ந்த சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களில் போலி உள்ளதா என்பது குறித்து அவர்களை நேரடியாக அழைத்து திடீர் ஆய்வு செய்தனர்.


தமிழகம் முழுவதும் 2012ம் ஆண்டு பள்ளி கல்வித்துறை மூலம் தையல், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை ஆகிய ஆசிரியர் பணிக்காக ஏராளமான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த சிறப்பாசிரியர்களில் கல்வி உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் சரியாக உள்ளதா என்பது குறித்த சந்தேகங்களை எழுப்பி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. 

இந்த நிலையில் இந்த சிறப்பாசிரியர்களின் கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்க கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக சிறப்பாசிரியர் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 339 சிறப்பாசிரியர்களின் சான்றுகள் நேற்று, நேற்று முன்தினமும் என 2 நாட்கள் பாளை சாராள்தக்கர் பள்ளியில் வைத்து சரிபார்க்கும் பணி நடந்தது.



முதன்மைக்கல்வி அலுவலர் பாலா, எஸ்எஸ்ஏ ஏபிஓ சேது சொக்கலிங்கம், கல்வி மாவட்ட அலுவலர்கள் நெல்லை ரேணுகா, தென்காசி ஷாஜகான் கபீர், சேரன்மகாதேவி ஜெயராஜ், சங்கரன்கோவில் சந்திரசேகர், வள்ளியூர் சின்னத்துரை மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் 10 தனித்தனி அறைகளில் ஆய்வு செய்தனர். முதல் நாள் நடந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு போலி சான்றிதழ்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். 

தொடர்ந்து 2வது நாளாக சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடந்து முடிந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் கல்வித்துறை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது போல் அனைத்து மாவட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பணியில் சேர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து தகுதி சான்றிதழ்களையும் ஆய்வு செய்தது அவர்களது மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

                                             
(28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.


👉   ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.
👉  மாநில உயர்மட்டக்குழு கூட்டம் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

SCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

நீதிக்கதை :

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்!!!

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு
தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது


தமிழகத்தில் நவம்பர் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இந்த நாட்களில் இரவு மற்றும் அதிகாலை நரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் மழைக்கு வாய்ப்பில்லையோ என கவலை வேண்டாம்.

சுமத்ரா தீவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 29-ம் தேதி மாலத்தீவு நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு மழை வாய்ப்புள்ளது.

எனினும் காற்று வலிமையாக இல்லாததால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட மேற்குபகுதி மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழை குறைவாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரளவே மழையை எதிர்பார்க்கலாம்.



அதேசமயம் கடலோரா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனினும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிக மிக கடுமையான மழையாகவோ இருக்க வாய்ப்பில்லை. டிசம்பர் -5ம் தேதிக்கு பிறகே வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

பள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை :

புயலால் சேதம் அடைந்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு கட்டடங்கள் புனரமைப்பு பணிக்கு, அரசிடம், 35 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறை கேட்டுள்ளது.
சமீபத்தில் வீசிய, 'கஜா' புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 865 அரசு பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள், ஆய்வு மாளிகை போன்றவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இவற்றை புனரமைக்க, 35 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நிதியை, அரசிடம் பொதுப்பணித் துறை கேட்டுள்ளது. நிதி கிடைப்பது தாமதமாகி வருவதால், பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைப்பதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி :

புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது.

வருகிறது, புதிய, வருமான வரி, சட்டம்,அடுத்த, அதிரடிக்கு, தயாராகிறார், மோடி,
அதன்படி, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய பொருளாதார சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமாக உள்ளது.இதற்காக, ஏற்கனவே, அரவிந்த் மோடி தலைமையில், செயல் திட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கையை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
இப்பணி முடிவடையாத நிலையில், கடந்த செப்டம்பரில், அரவிந்த் மோடி ஓய்வு பெற்றார்.

புதிய தலைவர்
இதையடுத்து, மத்திய அரசு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிக்கும் குழு தொடர்பாக, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள செயல் திட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மற்றபடி, குழு உறுப் பினர்களில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.
செயல் திட்டக் குழு, 57 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்ட வரைவறிக்கை தயாரித்து, 2019, பிப்., 28க்குள், அமைச்சகத்திற்கு வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரி செலுத்து வோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்கள்
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல நாடுகளில், வருமான வரி விகிதம் குறைவாக உள்ளது. வரி விலக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.இதே கொள்கையை மத்திய அரசு பின்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வருமான வரிசெலுத்தும் ஏராளமானோர் பயன் பெறுவர். தாமாக முன்வந்து வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தற்போது, தனிநபருக்கான, வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, செயல் திட்டக் குழு பரிசீலிக்கும்.வருமான வரி விகிதம்
, 10 - -30 சதவீதத்தில் இருந்து, 5 - - 20 சதவீத மாக குறைக்கப்படும் என, தெரிகிறது.வெளி நாடுகளை பின்பற்றி, நாட்டின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, சிறந்த வரி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலீடு களை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு களை அதிகரிக்கவும், 'கார்ப்பரேட்' நிறுவனங்க ளுக்கான வரியை குறைத்து, வெற்றி கண்டு உள்ளார். இதே பாணியை, மத்திய அரசு பின் பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
வரி குறையும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரியை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே, ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கான வரி, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளுக்கு TRB வழங்கியுள்ள RTI பதில்.



Labels: Morning Prayer Activities 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்!

TNPSC - டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு துறையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல், எழுத்து தேர்வு நடந்தது. அதன் மதிப்பெண் விபரங்கள், ஜூலை, 30ல் வெளியாகின. இதுதொடர்பாக, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும், 3ம் தேதி முதல் நடக்க உள்ளது.இதற்கு தகுதியுள்ளவர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

 தபாலில் தனியே அனுப்பப்பட மாட்டாது.எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதி மற்றும் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ப, கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் உத்தரவாதம் அல்ல. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்குக்கு வர தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி' :

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு, கல்வித்துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். முன் அனுமதி கோரும் விண்ணப்பங்கள், இறுதி நேரத்தில் அனுப்பப்படுவதால், அதிக பணிப்பளு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது:

வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள், கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்கும் முன், 10 வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம், ஏழு வேலைநாட்களுக்கு முன், அனுப்பினால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்கப்படும்.மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் இல்லாதவை மற்றும் முழு தகவல் இல்லாத விண்ணப்பங்களுக்கு, தடையின்மை சான்று வழங்கப்படமாட்டாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

28/11/18

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

FLASH NEWS-அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


கஜா புயலால் தமிழகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், ஆவணங்களை இழந்து உள்ளனர்.

இந்த புயலில் பல மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கஜா புயல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கஜா புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரைமேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு புதிய இறுதி தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்புகள்: கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு :

பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்ற குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்வதில் கல்வித் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக கல்வித் துறைக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. வாரம் ஒரு வகுப்பு நீதிபோதனைக்கு என ஒதுக்கப்பட்டு அதன்மூலம் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்துக்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன. இதனால் தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
காலப்போக்கில் இந்த வகுப்புகள் ப
டிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்த வகுப்புகளுக்காக செலவிடப்பட்ட நேரத்தை பெரும்பாலான பள்ளிகளில் பாட வேளையாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக, மாணவர்களிடையே மீண்டும் ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
செல்லிடப்பேசி, இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்குதல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பக்குவம் மாணவர்களிடம் இருப்பதில்லை. கல்வியறிவற்ற பெற்றோர் சிலரால் இதுதொடர்பாக கேள்வி எழுப்பவும் இயலுவதில்லை. இதனால், இளம் வயதிலேயே மாணவர்களின் மனநிலை சீர்கெட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே மதுஅருந்துதல், காதல் வயப்படுவது, ஜாதி மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினால் மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளை பெற்றோர்தான் கவனிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், அரசு உத்தரவுப்படி நீதிபோதனை, யோகா போன்ற வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்துவதில்லை. இதை கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தற்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு  கல்வியைவிட ஒழுக்கம்தான் அதிக அளவில் தேவை. எனவே, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை முறைப்படி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனைக்கு வகுப்புக்கு என தனியாக ஆசிரியர் நியமித்து வாரம் ஒரு வகுப்பு நடத்த கல்வியாண்டு தொடங்கத்திலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு, இதர திறன் வளர்ப்புக்கு பயிற்சிகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், நீதிபோதனைக்கு என தனியாக மதிப்பெண்கள் கிடையாது என்பதால் இந்த வகுப்புகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால்தான் உறுதிசெய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து, ஜக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியது:
மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருந்தவரை அவர்களது ஒழுக்கமும் கட்டுக்குள் இருந்தது. தற்போது அந்த உரிமை ஆசிரியர்களுக்கு இல்லாததால் மாணவர்களை கண்காணிப்பது  சவாலாக மாறிவிட்டது. மேலும், தேர்வு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் செயல் வடிவம் பெறுவதும் கேள்விக்குறியாகும்.
தவிர, இந்த நீதிபோதனை வகுப்புகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுகிறது. அவர்கள் வாரந்தோறும் நீதிபோதனை நடத்தலாம் அல்லது நடத்தாமலும் போகலாம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வகுப்புகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் மாதந்தோறும் எத்தனை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிக்கைகள் பெறப்பட வேண்டும். அவ்வாறு பெற்றாலே குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு :

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011-2012ஆம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்.
 புதுக்கோட்டை,நவ,26-          அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக 2011-2012ஆம் கல்வியாண்டில் அரசாணை 177ன்படி    தமிழகம் முழுவதும் 16549 தையல்,இசை,கணினி,உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர தொழிற்ஆசிரியர்கள் அரசு நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று 26ந்தேதி(திங்கட்கிழமை)மற்றும் நாளை27ந்தேதி (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அரசால்  அறிவிக்கப்பட்டு  அதன்படி தொடங்கியது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள   தேர்வுக்கூட அரங்கிலும்,புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் இன்று 26ந்தேதி (திங்கட்கிழமை) பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்கும் முறைக்குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் குழு உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இன்று 26-ந்தேதியும்(திங்கட்கிழமை) நாளை27-ந்தேதியும் (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் 451 பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணியில்  பாடவாரியாக உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலரை  உள்ளடிக்கிய 9குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணி நடைபெறுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா உத்தரவின்பேரில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் க.குணசேகரன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம் ஆகியோர் மேற்பார்வை செய்துவருகிறார்கள்.

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது :

'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு, புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்து வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது;
3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;மேலும், 6 - 7ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் :

பொதுநல வழக்குகளுக்கான மையம்’ என்ற
தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தின், திருத்தப்பட்ட 17ஏ (1) பிரிவின்படி, ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணையை தொடங்குவதற்கு முன்அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மீதான விசாரணையை முற்றிலும் தடுக்கும் வகையில் உள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற சட்டப்பிரிவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு 2 தடவை அறிவித்த பிறகும், 3-வது முறையாக மத்திய அரசு திணித்துள்ளது.

தனது அரசுப்பணியை செய்யும்போது, அரசு ஊழியர் எடுக்கும் முடிவு அல்லது சிபாரிசு தொடர்பான குற்றங்களை பற்றிய புகார்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பணி தொடர்பான குற்றமா என்று தீர்மானிப்பது போலீசாருக்கு கடினமாக இருக்கும். அப்படி தீர்மானித்தாலும், அது வழக்குக்கு வழிவகுத்து விடும். அதனால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.

மேலும், முன்அனுமதி பெறுவதற்குள், அரசு ஊழியர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கும், அனுமதி கொடுப்பதை தடுப்பதற்கு வேலை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அனுமதி கொடுக்கும் பொறுப்பு, ஊழியர் பணியாற்றும் துறைக்கே இருப்பதால், மேலிடம் அவருக்கு சாதகமாக செயல்படும் நிலை உள்ளது. அத்துடன், அனுமதி பெறுதல் என்பதே இன்னொரு ஊழலுக்கு காரணமாகி விடும்.

அனுமதி பெற்று விசாரணையை தொடங்குவதற்குள் ஊழல் பணத்தை சொத்துகளாக மாற்றுவதற்கும், வெளிநாடுகளில் பதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த சட்டப்பிரிவு, ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பானதாக அமைவதுடன், ஊழலின் அளவை அதிகரித்து விடும். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளை நீர்த்து போகச் செய்து விடும். ஆகவே, அந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் வானிலை ஆய்வாளர்கள் தகவல்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை 7 புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், தமிழகத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழறசி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராமபட்டினத்தில் 41.4 மி.மீ, காரைக்கால் 111 மி.மீ, நாகையில் 166 மி.மீ, பாம்பனில் 154 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 53 மி.மீ, தஞ்சாவூரில் 70 மி.மீ, திருச்சியில் 27 மி.மீ, வால்பாறையில் 26 மி.மீ, வேலூரில் 16 மி.மீ, நாமக்கல்லில் 16 மி.மீ, குன்னூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 29ம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் :

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில்
‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்

TNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்!

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான மைதாமாவு உஷார்:

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன்(oxidation)  என்கிற இந்த செயலினால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவுநோய்.
விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள்:
 அலொக்ஸான்(Alloxan) என்கிற  ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பென்சாயில் பெராக்சைடு' (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை மைதாவில் கலக்கிறார்கள், இந்த ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.  காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும்  தலைமுடியை கருப்பாக்க பயன்படுற, 'ஹேர் டை'யில் சேர்க்கிற நச்சுப்பொருள் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு.இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும்.இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.
மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 
மைதாவில் தண்ணீர் ஊற்றினாலே பசைபோல் ஒட்டும். இந்த பசைத்தன்மை உடலிலிருந்து வெளியேற 24 மணி நேரம் ஆகும். சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் தங்கித் தங்கி செல்வதால் அந்த நேரத்தில் கிருமிகள் உடலில் உற்பத்தியாகிவிடும்.
ஒரு காலத்தில் பசை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மைதாவை பல நூறு டன்கள் விற்பதற்கு  விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை கலந்து பரோட்டா எனும் பண்டத்தையும் உருவாக்கி மக்களை அதற்கு அடிமையாக்கி-விட்டனர். விளைவு, இன்று சில்லறைக் கடைகளில் சிறுதானிய மாவுகள் கிராம் கணக்கில் விற்பனையாக, மைதாவோ மூட்டைக் கணக்கில் விற்பனையாகிறது.

ஆபத்துவிளைவிக்கும் மைதா கலந்த உணவுகளை தவிர்ப்போம்,சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.