TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்புஅளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.