யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/3/18

பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். 

2018-2019 ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்வி நிலையங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

உதவித் தொகை
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ITI, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், M.Phil ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், புத்த, சீக்கிய, ஜெயின், பார்லி மதத்தை சேர்ந்த சிறுபான்மை மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அனைத்து கல்வி நிலையங்களும் இணைய தளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே 2018 - 2019 ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற முடியும்.

கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்ய CLICK HERE

10, 11ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பிளஸ் 1 தேர்வு எழுத முடியாமல் திணறும் மாணவ, மாணவிகள்!!

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு!!!

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை
ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

15/3/18

நாளை 16.03.2018 அன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

வாழ்த்துக்கள் : 

 வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

* தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடவேண்டும்.

*கண்டிப்பாக Mobile எடுத்துசெல்லக்கூடாது.

* நுழைவு சீட்டு உள்ளிட்ட. பேனா,பென்சில் கையோடு எடுத்துச்செல்லுங்கள் .

* விடைத்தாள் வழங்கப்பட்டப் பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண்ணும் புகைப்படமும் சரிபார்த்துக்கொண்டு,
தவறானது என்றால் உடனடியாக அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரியதைப் பெற்றுக்கொள்ளவும்.

*நம்பிக்கையோடு எழுதுங்கள் அடித்தல்- திருத்தலின்றி எழுதுங்கள் , வெற்றி நிச்சயம்.

*பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் வருத்தம் அளிக்கும் வார்த்தைகளை பேசக் கூடாது.

*ஆறுதலான சொற்கள் வழியாகவே குழந்தைகளிடம் அற்புதத்தை அறியமுடியும்.

* திணிக்கும் வார்த்தைகளைவிட தித்திக்கும்  வார்த்தைகளே திருப்தியளிக்கும்.

 வாழ்த்துகள்

சென்னை மெட்ரோ ரயில் நாளை (17/03/2018) நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்​



​குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும்​

​Click Here​--> https://goo.gl/LRJGrn 
  
​தேவையான கல்வி தகுதி:​  B.Tech/B.E

​சம்பளம் :​ Rs.40,000/-

​மொத்த காலியிடங்கள்:​ 3434+

​நுழைவு கட்டணம்:​  அனுமதி இலவசம்

​தேர்வு முறை:​ Walkin

*நாள்: * 17/03/2018

​இடம் :​ chennai

​நேரம்:​ 8.00AM to 1.00PM.

​Venue Details Click This Link​--> https://goo.gl/LRJGrn

​இது மற்ற பல நண்பர்களுக்கு உதவலாம்​

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு,ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.


அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2009 & TET ஆசிரியர்களுக்கு இன்றைய வழக்கு நிலவரம்...



👍👍நமது ஊதிய வழக்கானது இன்று (14/03/2018-புதன்கிழமை) சுமார் 2.15 க்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முக்கிய வழக்குகளின் இறுதிகட்ட  விசாரணைப்பட்டியலில் இடம்பெற்று முதல் வழக்காக 166 வது பட்டியலில் இடம் பெற்ற வழக்கு 4.10 மணியளவிலும் அதனை தெடர்ந்த பிற வழக்குகளும்  விசாரணைக்கு வந்தது.

 விசாரணைப்பட்டியலில் 171 வது இடம்பெற்றிருந்த நமது வழக்கானது வழக்கறிஞரின் கடும்முயற்சியின் காரணமாக சுமார் 4.40க்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஒருநபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான அரசாணையை நீதிமன்றத்தில் அளித்தனர்.

💪🏼💪🏼நமது தரப்பில் எழுந்த  நமது மூத்த வழக்கறிஞர் வழக்கின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.சுமார் 9600 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 7 வது  ஊதியக்குழுவின் ஊதியத்தை புறக்கணித்து தொடர்ந்து 6 வது பழைய ஊதியத்திலே தொடர்கிறார்கள் என்ற தகவலை மிக அழுத்தமாக கூறினார்.

🤝🤝 நாங்கள் பல குழுக்களைப் பார்த்துவிட்டோம் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் ஊதியக்குழுவானது ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைவதற்கானது என்றும் நாங்கள் கேட்பது 6 ஆறாவது ஊதியக்குழுவின் பிரச்சினைகள் தொடர்பானது என்ற சிறப்பாக அரசு தரப்பில் பதில் சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பாக வாதாடினார்.

அரசு தரப்பில் பதில் ஏதும் கூற முடியவில்லை.
அவர்களிடம்  இறுதியாக  இருக்கும் ஒரே ஆயுதம் ஒருநபர் ஊதியக்குழு என்பது தான். அதற்கும் நமது தரப்பில் சரியான பதிலடி கொடுத்துள்ளோம். நீதியரசரும் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டதோடு அரசுதரப்பில் சொல்லப்பட்ட கோரிக்கைகளையும் நிராகரித்தார்.

 *அதனைத்தொடர்ந்து அரசு தரப்பில்
மேலும் ஒரு தேதி கேட்கப்பட்டது. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பெரிய வழக்குகள் இறுதிகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதநிலையுள்ளதால் அடுத்த வாரம் ஒரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்று நீதியரசர் கூறியதால

் மீண்டும் வரும் 21.03.2018 புதன் கிழமை2.15 க்கு அடுத்தகட்ட  இறுதி விசாரணைக்கு நமது வழக்கு வருகிறது.

🗣🗣இதற்கு தமது வழக்கறிஞரின் சாமர்த்தியமான வாதம் மற்றும் நாம் தொடர்ந்து பழைய ஊதியத்தை வாங்கி வருவதே  நமது வழக்கை வெற்றிக்கு அழைத்து செல்கிறது.


இதைவிட்டுவிட்டு நாம் அவசரப்பட்டு புதிய ஊதியத்தை வாங்கினால் நம் வழக்கின் வெற்றி சில ஆண்டுகள் கூட  தாமதமாகும். நம் வெற்றி நம்கையிலே!!!

இவண்
2009& TET 
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வினை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் மேலும் வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் மோசடி நடந்து இருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 156 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர் சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். 3 மாதங்களாக சுப்பிரமணியன் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அதேபோல் டே்ட்டா என்ட்ரி ஊழியர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய ஆவணங்களுடன் ராஜேஷ் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடு வழக்கில் 156 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவன ஊழியர்கள் என இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் விரைவில் கைது செய்யவில்லை எனில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில், ‘இந்தியா முழுவதும் 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உற்பத்தித் துறையில் 89,000 வேலைவாய்ப்புகளும், கல்வித் துறையில் 21,000 வேலைவாய்ப்புகளும், போக்குவரத்துத் துறையில் 20,000 வேலைவாய்ப்புகளும், வர்த்தகத் துறையில் 14,000 வேலைவாய்ப்புகளும், சுகாதாரத் துறையில் 11,000 வேலைவாய்ப்புகளும், தங்கும் விடுதி மற்றும் உணவகத் துறையில் 2,000 வேலைவாய்ப்புகளும், ஐடி/பிபிஓ துறையில் 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறையில்தான் பின்னடைவாக 22,000 பணியிழப்புகள் நடந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உருவாக்கப்பட்ட 1.36 லட்சம் வேலைவாய்ப்புகளில் ஆண்கள் 62,000 பேரும், பெண்கள் 74,000 பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும் தொழிலாளர் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமான இந்தத் தொழிலாளர் பணியகம் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலே ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த விவரங்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டு வருகிறது. விவசாயம் தவிர்த்து இதர எட்டு துறைகளை மையமாக வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதால் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக் கப்படும்.


நேரம் ஒதுக்கவில்லை

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக கடந்த பிப்.22-ம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பிரதமரை சந்தித்து மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பிரதமரிடம் நேரம் கோரப்பட்டது. ஆனால், நேரம் ஒதுக்கப்படவில்லை.தமிழக குழுவை பிரதமர் சந்திக்காததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட் தாக்கல் முடிந்தும் நாளை மாலை அல்லது 16-ம்தேதி காலை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட லாம் என்று கூறப்படுகிறது.

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா?

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கார்டியன்' இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.
இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.


தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
மதகுருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்த ஸ்டீபன் ஹாக்கிங்.

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.
யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், "ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்" எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தகக்து. 

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு :

20 காலி பணியிடங்களுக்கான குரூப் 3 தேர்வு முடிவு 5 ஆண்டுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. 03.08.2013ல் நடைபெற்ற எழுத்துத்தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 46,797 விண்ணப்பதாரர்களில் 45,802 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. 

நபார்டு வங்கி அதிகாரிகள் பணிக்கு அழைப்பு

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 92

பணியிடம்: இந்தியா முழுவதும் 

பணி: Assistnat Manager in Grade A (Rural Banking Service) - 92

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. பொது - General - 46 
2. கால்நடை பராமரிப்பு - Animal Husbandry - 05 
3. பட்டய கணக்காளர்  - Chartered Accountant - 05 
4. பொருளாதாரம் - Economics - 09 
5. சுற்றுச்சூழல் பொறியியல் - Environmental Engineering - 02 
6. உணவு பதப்படுத்துதல், உணவு தொழில்நுட்பம் - Food Processing / Food Technology - 04 
7. வனவியல் - Forestry - 04 
8. நில மேம்பாடு (மண் விஞ்ஞானம்) - Land Development (Soil Science) / Agriculture - 08 
9. சிறு நீர்ப்பாசனம் (நீர் வளங்கள்) - Minor Irrigation (Water Resources) - 06 
10. சமூக வேலை - Social Work - 03

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (RDBS) Agriculture - 08 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 21 - 30குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2018

ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2018

ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை  27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1303180258Advt%202018-Grade%20A-Final-13.03.2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க முக்கியமான 8 ஆவணங்கள் :

முதன் முதலாக சொத்து வாங்குவதென்பது ஒரு வித பதட்டத்தையும்,மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை கொடுக்கும். அப்படி வாங்கப்படும் ஒரு சொத்து நிலையானதாக இருக்கக் கீழ் கண்ட 8 அத்தியாவசிய ஆவணங்களை சரி பார்த்துகொள்ளுங்கள்.


1. டைட்டில் டீட் (Title deed)
ஒரு சொத்தினை வாங்குவதற்கு முன் அதன் அசல் டைட்டில் டீடை வாங்கி வக்கிலை வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அந்தச் சொத்து அடைமானத்திலோ அல்லது எந்த ஒரு தனி நபருக்கு விற்கும் உரிமையையோ கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது. அதில் விற்பவரின் விவரம் மட்டுமே இருக்க வேண்டும்
2. சோதனைச் சான்றிதழ் (Encumbrance certificate)
பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து சோதனைச் சான்றிதழை பெற்று அந்த சொத்தின் மீது சட்ட ரீதியாக எந்த ஒரு கடனோ வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சொத்தை வைத்து நடத்தப்பட்டிருக்கும் பரிவர்த்தனைகள் பற்றி இது சொல்லும்.
3. சர்வே ஸ்கெட்ச் (Survey sketch)
சர்வே துறையிலிருந்து சொத்தின் திட்ட வரைபடத்தை பெற்று, விற்பவர் கூறிய அளவுகள் அதில் கச்சிதமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. ரிலீஸ் சான்றிதழ் (Release certificate)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்து இதற்கு முன் வங்கி கடனில் இருந்திருந்தால் அந்தப் பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்பட்டு வங்கியிலிருந்து ரிலீஸ் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் அந்த சொத்தை அடமானை வைக்க நினைத்தாலும் இந்த சான்றிதழ் உதவும்.
5. வரி ரசீதுகள் (Tax receipts)
நீங்கள் வாங்கவிருக்கும் சொத்தினை விற்பவர் அதுவரை சரியாக வரி செலுத்தியிருக்கிறாரா என  வரி செலுத்திய ரசீதுகளை பெற்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. விற்பனை பத்திரம் (Sale deed)
விற்பனை வரைவை வக்கீலை வைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவேண்டும்.
7. தாய் பத்திரம் (Mother deed)
தாய் பத்திரம்தான் ஒரு சொத்தின் உரிமையை பற்றி அதன் ஆரம்பத்தில் இருந்து சொல்லும். அதில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
8. பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)
சொத்தினை விற்பவர், அதை விற்கும் உரிமையை வேறு ஒரு தனி நபருக்கு அளித்திருந்தால் இந்த ஆவணம் அவசியம்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமல்லாமல் நீங்கள் வசிக்கும் நகராட்சிக்கு / ஊராட்சிக்கு உட்பட்டு விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது வக்கீலின் வழிகாட்டுதலுடன் வாங்குவது நல்லது. முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வாங்கி வைக்கும்போது சொத்து வாங்குதல் நல்ல அனுபவமாக இருக்கும்.

05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும்- DEEO உத்தரவு - செயல்முறைகள்:

நீட்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை முதல் அவகாசம்

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 
அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது. 
திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும்.