யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்!

500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலிஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தைபெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும்சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனால்தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து20 லட்சம் பேர்
காத்திருக்கின்றனர்.


பயன்பாட்டில்இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்று பிரமதர் மோடி அறிவித்தநாளில் இருந்து மக்கள் தினமும்பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 9-ம் முதல்தேதி முதல் இதுவரை இன்னும்பணத்தேவைக்கான நிலைமை சரியாகவில்லை. ஏ.டி.எம்களில் தினமும்ஒருகார்டுக்கு 2000 ரூபாய் பெற முடிகிறது. வங்கிகளில் வாரத்துக்கு ஒருவர், 24,000 ரூபாய் வரை பெறலாம்போன்ற நிபந்தனைகளால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு இசிஎஸ் மூலம் அவர்களதுசம்பளம் வங்கி மூலம் பட்டுவாடாசெய்யப்படும். அரசு ஊழியர்களின் வங்கிகணக்குகளுக்கு மாதத்தின் கடைசி நாளுக்குள் ஊதியம்வரவு வைக்கப்பட்டுவிடும். இன்றைய சூழ்நிலையில் இந்தமாதத்துக்குரிய ஊதியம் வரும் 30-ம்தேதிக்குள் ஒவ்வொரு அரசு ஊழியர்களின்வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்தாலும் அதைஎடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இதுகுறித்துதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமாநில தலைவர் தமிழ்செல்வியிடம் பேசினோம். "கறுப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும்ஒழிக்கவே மத்திய அரசு 1000, 500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. புதியவரவாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமேமக்களிடையே அதிக பயன்பாட்டில் இருந்துவருகிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும்பயன்பாட்டுக்கு அதிகளவில் வரவில்லை. இதனால் 2000 ரூபாய் புதிய ரூபாய்நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இதன்காரணமாகஅன்றாட தேவைகளை கூட மக்கள்சந்திக்க முடியவில்லை. இதனால் இந்த மாதம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை ரொக்கமாக பணத்தை கையில் கொடுக்கவேண்டும் என்று தமிழக அரசிடம்வலியுறுத்தி கோரிக்கை மனுவை கொடுத்தோம். ஆனால், அரசு ஊழியர்களுக்கு கையில் ரொக்கமாக பணம்வழங்கப்படாது என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இதனால்மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்யும்என்று நாங்கள் எதிர்பார்த்து  காத்திருக்கிறோம். இன்று வரை எந்தஅறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. எந்த ஏற்பாடும் அரசு செய்யவில்லை என்றால்இந்த மாத ஊதியத்தை அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவதில் கடும் சிக்கல் ஏற்படும். சம்பளம் பெற அரசு ஊழியர்கள்விடுமுறை எடுக்க வேண்டிய நிலையும்உருவாகும். இதனால் ஓட்டுமொத்த அரசுஇயந்திரமும் பாதிக்கப்படும்"என்றார்.
 இதுகுறித்து தமிழ்நாடு  தலைமைச்செயலகச் சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன்கூறுகையில், "தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும்அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடியிருப்பதற்குபோதிய வாடகை குடியிருப்புகள் இல்லாததால்பெரும்பாலோனார் வாடகை வீடுகளில் குடியிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தில் சராசரி25 சதவிகிதம் வாடகைக்கு கொடுக்கின்றனர். இதுதவிர கல்விக் கட்டணம், மருத்துவச்செலவு, மளிகை பொருட்களுக்கான செலவுஉள்ளிட்ட பண தேவைகளை மாதத்தின்முதல் வார நாட்களில் சந்திக்கவேண்டியதுள்ளது. இதற்கு தேவையான பணம்கிடைக்கவில்லை என்றால் பல்வேறு பிரச்னைகள்ஏற்படும். எனவே அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் மட்டும்ஊதியத்தை ரொக்கமாக கையில் வழங்க முதல்வர்ஜெயலலிதா ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.
தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சாந்தகுமார், "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை அரசு கையில் கொடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகஉள்ளது. ஆசிரியர்கள், தங்களது வேலை நேரத்தில்வங்கிக்கு செல்ல இயலாது. இந்தமாதம் ஊதியத்தைப் பெற விடுமுறை எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். டெபிட் கார்டை கொண்டுஎல்லா பணத்தேவைகளையும் சமாளிக்க முடியாது. எனவே அரசு மாற்றுஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்"என்றார்.
இதுகுறித்துஆர்.பி.ஐ. வட்டாரங்கள்கூறுகையில், "அரசு ஊழியர்களின் சம்பளத்தைரொக்கமாக கையில் வழங்க முடியாது. அதே நேரத்தில் வங்கிகளுக்கு தேவையான பணத்தை சப்ளைசெய்துள்ளோம். அதன்மூலம் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பெரும்பாலான ஏ.டி.எம்களைசெயல்பட வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதோடு புதிய 500 ரூபாய்நோட்டுகளையும் அனைத்துப் பகுதிகளிலும் பயன்பாட்டில் கொண்டு வர ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டுக்கான சில்லறையைஆர்.பி.ஐயில் பெற்றுக்கொள்ளலாம்" என்றனர்.
 தமிழக அரசின் நிதித்துறைவட்டாரங்கள் கூறுகையில், "அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 3,500  கோடி ரூபாயை தமிழக அரசுகொடுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையை காரணம்காட்டி அரசு ஊழியர்கள் சங்கங்கள்எங்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்றகோரிக்கையை வைத்தனர். அதுதொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கிடையில் சம்பளம் வங்கிகள் மூலம்வழங்குவது தொடர்பான பணிகள் மட்டுமே தற்போதுநடக்கிறது. ரொக்கமாக சம்பளம் வழங்குவது தொடர்பாக  ஆலோசனையில்முடிவு எடுக்கப்பட்டால் அதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லதுநாளை வெளியிடப்படும்" என்றனர்.
 அரசு சங்கங்கள் அதிரடி

 தமிழக அரசை எதிர்பார்த்துஇதுவரை காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்சங்கங்கள் தற்காலிக ஏற்பாடு ஒன்றை செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தேசியமாக்கப்பட்டவங்கி அதிகாரிகளிடம் சங்கப் பிரதிநிதிகள் பேசி, முதற்கட்டமாக மாதத்தின் தொடக்கத்தில் 10,000 ரூபாயை கையில் பெறவழிவகை செய்துள்ளது. இருப்பினும் இந்த மாத தொடக்கம்அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக