யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம்போல வங்கி
கணக்கில் செலுத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண கட்டுப்பாடு
தமிழகத்தில்14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும்உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும்30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்றுஇந்த மாதமும் வங்கி கணக்கில்பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள்பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதுகுறித்துஎன்.ஜி.ஓ. சங்கதலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வங்கி கணக்கு மூலம் அரசுஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்குபென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கிகணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

வங்கிகளில்ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமேபணம் எடுக்க முடியும் என்றுகட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால்மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.

ரிசர்வ்வங்கிக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டுவாடகை, மளிகை செலவு, பால்செலவு போன்ற குடும்ப செலவுகளைமேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவேஅரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ்வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும்என்று கோரிக்கை விடுகிறோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக