யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி

நவம்பர்மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் விடுத்தகோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்தபதிலும்
அளிக்கப்படவில்லை; இது, அரசு ஊழியர்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகள் மற்றும்ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க, மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, நவ., மாத சம்பளத்தை, ரொக்கமாகவழங்க வேண்டும் என, அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, அரசு அலுவலகஉதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்சங்க நிர்வாகிகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலரை சந்தித்து, மனுகொடுத்தனர்; ஆனால், எந்த பதிலும்தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல், வங்கிக்கணக்குகளில் தான், சம்பள பணம்போடப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக