கணக்கில்காட்டாத பணத்திற்கு அதிக வரி விதிப்பதுதொடர்பாக புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்ற அறிவிப்பிற்கு பின்னர், ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு அதற்கேற்ப வரிவிதிப்புகளைசெயல்படுத்த புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும்அமளிக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த8ம் தேதி இரவில் இருந்து500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பழைய நோட்டுக்களைவங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்பவர்கள்கணக்குக் கேட்கப்படும் என்றும், கணக்கு சரியாக இல்லைஎன்றால் கறுப்புப் பணமாக கருதப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது. அப்படி கணக்கில் காட்டாதகறுப்பு பணத்திற்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்என்றும் வருமான வரித்துறை அறிவித்தது. பின்னர், இந்த அறிவிப்பை செயல்படுத்ததற்போதுள்ள வருமான வரி சட்டத்தில்உரிய அங்கீகாரம் இல்லை. எனவே இந்தமுடிவை மத்திய அரசு கைவிட்டது.
கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் மீது கூடுதாக வரிகளைவிதிப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள்காரணமாக புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி, இன்று லோக்சபாவில் இந்தமசோதாவை மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
ரூபாய்நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்க்காலக் கூட்டத்தில் கடும் அமளி நிலவிவரும் சூழ்நிலையில் லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவின் படி, வருமானத்தை கணக்கில்காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு 30 சதவீதம் வருமான வரிவிதிக்கப்படுகிறது. மேலும், அபராதமாக 10 சதவீதவரி விதிக்கப்படுகிறது. இதுபோக 30 சதவீத வரி மீது33 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படும். இவை அனைத்தையும் கூட்டினால், அதன் மதிப்பு கணக்கிற்குமீறியுள்ள பணத்தில் 50 சதவீதமாகும். இந்த தொகையில், 25 சதவீதம்பிரதமரின் ஏழைகள் நலன் வைப்புதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டில் குடிநீர், சாலை போன்ற அடிப்படைவசதிகளை அமைக்க அந்த கருப்புபணத்தை அரசு பயன்படுத்தும்.
அதேவேளையில், எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டு வருமானத்திற்குஅதிகமாக பணம் சேர்த்துள்ளதை மறைத்தால், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கும்போது, கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம்வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்த வருமானத்தின் ஒருபகுதியை நான்காண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுக்க முடியாது. எனவே சிக்கினால் 85 சதவீத வரியும், தானாகஅறிவித்துவிட்டால் 50 சதவீத வரியோடும் தப்பிவிடலாம்.
முன்னதாகஇந்த மசோதா குறித்து முடிவுஎடுக்க பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக