யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல்மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவுசெய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு
ஊழியர்களின் பணிபதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள்ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறுஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட்அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள்கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும்.
இப்பணிமுடிந்தபின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல்சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்தடிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ளமுதல் பக்க சுய விபரம்மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணைபதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறைதகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்துகல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்விதகுதிகளின் உண்மை தன்மை சார்ந்தபதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமைசார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயிலமுன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதியநிர்ணயம், தேர்வு நிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம் சார்ந்தபதிவுகள், பல்வேறு வகையான விடுப்புபதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசுநியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர்கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல்மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டியவழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவுகளைஒருமுறை தனி கவனம் செலுத்திஆய்வு செய்த பின்னர் பணிபதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்றுடிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்யதலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடமுதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கெனஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொருநாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள்சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திடவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக