யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தைஉயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்துபள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்டசெயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளைஉருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாகஅமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்துசெயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில்பேணுதல் அவசியம்.
பள்ளிக்குஅரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்குஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன்நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும்தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
அதற்காகமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல்மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தைஉலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும்நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில்உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானதுபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வுஅலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனகல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம்புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காகபள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்டஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளைபதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்தகருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோலபுற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன் மூலம் புறமதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினைஉருவாக்கலாம்.
அவ்வாறுமதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும்மூன்று என பள்ளிகள் தரஅந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால்சுமார், 2-வது சாதாரணம், 3-வதுதர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்தபள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயேஇத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாககல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடுமுழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்ஒரே சீரான தரத்துடன் கல்விவழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
தரங்கள்மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக்காரணிகள்
1. பள்ளிவளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின்சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள்கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல்அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும்மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின்வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின்வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின்முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதியஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின்வருகை, செயல் இலக்குகளை வரையறுத்துபொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்தவளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச்சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கானசெயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும்மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கியகற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ளகுழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம்ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

7. பள்ளிமேலாண்மைக் குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளிமுன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும்இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயமகற்றல் வளம், சமுதாய மேம்பாடுஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக