யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/8/16

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?

வங்கி இருப்பு குறித்து அறிய !!! அனைவரும் பயன் உள்ள தகவல்

வாழ வைக்கும் வைட்டமின்கள்

24/8/16

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகைப் பதிவேடு முறை அறிமுகம் முதல்வர் அறிவிப்பு




உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்

IGNOU - BED Prospectus for January 2017

Directorate of Government Examinations - HSE September 2016 - Private Candidate Instruction for Online Registration





DGE - HSE September 2016 - Examination Time Table

23/08/2010 முதல் 23/08/2016 வரை ! RTE act ல் சிக்கித் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற எதிர்பார்ப்பு

2016 ஜுலைஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்
நடந்துகொண்டுள்ள தமிழக சட்டப் பேரவையில்TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்றுஎதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள்மற்றும் அவர்களின்
குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் திட்டம்;

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன்‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும்புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம்குறித்து ஆசிரியர்களுக்கு
செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்குசெயல்விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றைதேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம்மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை தயார் செய்துள்ளது. இதன்உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சிமூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளடி.பி.ஐ. வளாகத்தில்இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

பதிவிறக்கம்செய்யலாம்
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறைமூலம் ‘ TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்றுபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும்நாங்கள் பதிவு செய்து ஒவ்வொருபள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம். மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டுதங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்தஅப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்தபடம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.


141 பாடங்கள்
பின்புஅந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள்தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துவிளக்கங்களையும் அதில் பெற்று படித்துகொள்ளலாம். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம்செய்து இருக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில்57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களைபடித்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள, அரசு பள்ளிஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதிகவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதியஇடங்களில் சேர, தொடக்கக் கல்விஇயக்குனரகம் திடீர் தடை
விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஐந்தாம்வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ளபள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்தஇடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்தமாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்றஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறுஆசிரியர் வரும் வரை காத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை
அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

 இவர்களை மாவட்ட பள்ளிகளுக்குமாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

ஆங்கிலவழி வகுப்பு களிலும், மாணவர்கள்எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர்விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம்என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராளமான புதிய தொடக்க பள்ளிதுவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும்அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்என அரசு எதிர்பார்த்தது. மாறாககுறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழிகல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின்ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஜூனியர்கள்எதிர்ப்பு : 'சீனியர்' ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளனர். பணி நிரவல் என்றால் முதலில்பாதிப்பது, 'ஜூனியர்'கள் தான். 'பல ஆண்டுகளாக பணியாற்றும் சீனியர்கள், ஏன் மாணவர் சேர்க்கையில்அக்கறை செலுத்த வில்லை,' எனஜூனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள்கூறுகையில், 'வெளி மாவட்டங்களில் பணியாற்றியநாங்கள், பல லட்சம் ரூபாய்'இழந்து' தான் சொந்த மாவட்டங்களுக்குமாற்றலாகினோம். மாணவர் எண்ணிக்கை குறைவால், 'சர்பிளஸ்' கணக்கில் வரும் நாங்கள் ஒவ்வொருஆண்டும் மாற்றப் படுகிறோம். எங்களுக்கும் குடும்பசூழ்நிலை உள்ளது' என்றனர்.


ஆசிரியர்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அதிகாரிகள் சிலர் தங்கள் 'தேவை' கருதி, குறைந்த மாணவர் எண்ணிக்கைஉள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவுபிறப்பித்தனர். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு போதிய கவனம் செலுத்தாமல், 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' கதையாக தற்போது ஆசிரியர்களை அலைக்கழிக்கமுடிவு செய்துள்ளது. 'சர்பிளஸ்' ஆசிரியர்களை மாறுதல் செய்வதற்கு பதில்அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவுதிட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தஉள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்குகிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டதுதமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் நேற்று  110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.தமிழகத்தில்ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்துபோகாத பல கிராமங்களில் கூடஅனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடுஅரசு
துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்குபட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புறபகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலானதுவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்துஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச்சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்உள்ளன. பல கிராமங்களில் இருக்கும்தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகதான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்குவசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்குபள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்குவரும் அவல நிலைகள் தமிழககிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.

அதே போல் இரண்டு ஆசிரியர்பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான்உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாகஉள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்குவருவது என்பது பல அரசுஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவேஅரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாகஉள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில்இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளைதுவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாகஇருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில்இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்தகிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமேஉள்ளன.

அதில் ஒரு பேருந்து அவர்கள்வசிக்கும் நகரில் எட்டு மணிக்குபுறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்தகிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டுபத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின்வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகைபதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்குவந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின்பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின்நிலையாக உள்ளது. பல கிராமங்களில்ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்தகிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம்கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள்எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்றகாலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள்வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வுகாண அதிரடி உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறைகுறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்குஅறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும்முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில்வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்படஉள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

பயோமெட்ரிக்முறையில் வருகையை பதிவு செய்யும்போது, குறித்த நேரத்தில் பள்ளிக்குவரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளிமுடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும்நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியைவிட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டிவருகைப்பதிவேட்டில்  பதிவுசெய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்புஇருப்பதால், கால தாமதத்தை இனிதொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.


கிராமத்துதொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கேஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும்பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட்ஆப் பேங்கிங்
பர்சனஸ் செலக்சன்’ நடத்தும்தேர்வை எழுதலாம்!

மொத்தப்பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032)
வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும்உண்டு.
கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில்ஏதேனும் ஒரு பாடப் பிரிவில்இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர்அறிவு:கணினி அறிவியல் பாடத்தைசான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பாகபடித்திருக்க வேண்டும். அல்லதுபட்டப் படிப்பில் கணினி அறிவியல் பாடத்தைஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்களும்இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பங்கேற்கும்வங்கிகள்:அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,யூகோ(யு.சி.ஒ.,) வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன்வங்கி, யூனியன் பேங்க் ஆப்இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, தேனாவங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும்விஜயா வங்கி.
தேர்வுமுறை:பிரிலிமினரி தேர்வு மற்றும் மெயின்தேர்வு என இருநிலைகளைக் கொண்டுள்ளது.
பிரிலிமினரிதேர்வு:முதல் நிலைத் தேர்வானதுஆன்லைனில் அப்ஜெக்டிவ் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், நியூமரிக்கல் அபிலிட்டி மற்றும் ரீசனிங் அபிலிட்டிபோன்ற திறன்கள் பரிசோதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதிபெறுவர்.
மெயின்தேர்வு:இந்த இரண்டாம் நிலைத்தேர்வு, அப்ஜெக்டிவ் அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு, ரீசனிங், குவான்டிடேடிவ் ஆப்டிடியூட், வங்கித்துறை சார்ந்த பொதுஅறிவு, கணினிஅறிவு மற்றும் ஆங்கில மொழியறிவுஉள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் திறன்கள் சோதிக்கப்படும்.
முன்தேர்வுபயிற்சி:எஸ்.சி., மற்றும்எஸ்.டி., பிரிவினர்களுக்கு, வங்கிகள்சார்பில் சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்டநகரங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பிக்ககடைசி நாள்:செப்டம்பர் 19

மேலும்விவரங்களுக்கு:www.ibps.in

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR

கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்விளையாட்டு நேரம்  வெகுவாககுறைந்துவிட்டதால் போட்டிகளில்
ஜொலிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படிஇன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவதுஇடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன்திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுவீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாகவேண்டும். காலை, மாலை எனஎந்த நேரமும் படிப்பு, மார்க்என மாணவ மாணவியர்களை கசக்கிபிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால்விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளிகள்வரை பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களைவாங்க பள்ளிகளுக்கு அரசு நிதி உதவிவழங்குகிறது. இதை தலைமை ஆசிரியர்கள்முறையாக செலவிடுவதில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக 'பில்' வைக்கப்படுகிறது. இறுதியாண்டில்பொருட்கள் பழசாகிவிட்டதால் ஏலம் விட்டதாக கணக்கெழுதப்படுகிறது. இதை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால்மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம்ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் எனஉடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பி.இ.டி., பீரியடில்மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டைபற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணேபிரதானமாக கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில்அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணாவிளையாட்டு மைதானம் இருந்தும் மாநிலஅளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.
அண்மையில்கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒருசிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னைமாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலைதான்பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவமாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதைஆசிரியர்கள் உணர வேண்டும். அப்போதுதான்நாம் உலக அளவில் ஜொலிக்கமுடியும்

தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம்வகுப்பு வரை உள்ள, தமிழ்புத்தக பாடல்களின் வீடியோவை,
இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருபிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல்சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திவருகிறது.


செயல்வழிகற்றல், கணினி வழி கற்றல்போன்ற பல திட்டங்களில், மொழியைஎளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும்அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில்பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்தமாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பலஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர்ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன்வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்புவரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்றபிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர்பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி

களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்படஉள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறினார்.

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

கம்மாபுரம்: 'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும்' எனஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். கம்மாபுரம்அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் பாதை இயக்கம்சார்பில்
மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும்விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள்பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள்முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது

டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன்
அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்உலக அளவில் டாப் 10 பணக்காரநாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள்விவரங்களின் படி இந்த மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்கா48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம்இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
பிரான்ஸ்6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், இந்தியா5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.
கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன்அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வதுஇடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வதுஇடத்திலும் உள்ளது.

நபர்களின்நிகர சொத்து மதிப்பு என்றஅளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரதுஅசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தகவருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசுநிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியாடாப் 10ல் 7வது இடத்தில்இருக்கக் காரணம் அதன் மக்கள்தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்டஆஸ்திரேலியா டாப் 10ல் இடம்பெற்றிருப்பதுகவனிக்கத்தக்கது.

கடந்த5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில்சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாகவிளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை.
ஆஸ்திரேலியாவும்இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில்கூறப்பட்டுள்ளது.

கடந்த12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

LAST DATE- 30.09.2016

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை இரத்து செய்ய வேண்டும். Tngtf மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ் கோரிக்கை. இன்றைய தின இதழ்

3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

BSNL USSD Codes for Balance and Validit1

குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க

பேஸ்புக் ரகசியங்கள் !

கொத்தமலலியின் மருத்துவ குணங்கள்

வழுக்கைவிழுவதுஏன்?

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

INTERNET

MOBILE INTERNET SERVICE SPECIAL ARTICLE

Some tips about Memory Card

SPECIAL ARTICLE ABOUT WOMEN

SPECIAL NEWS FOR EYES

USES OF GREEN TEA

ஆசிரியர் பொன்மொழிகள்

ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

இன்று ஒரு தகவல்

தினம் 14

23/8/16

தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டைவழங்காதமாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்கதொடக்ககல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளில்படிக்கும் மாணவர்களுக்கு

ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது. அவர்களில்விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்கதொடக்ககல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கானபதிவுகளை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாணொலி காட்சிமூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதில் மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் கலந்து கொள்ளவேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களைதொகுத்து வழங்க வேண்டும், ஆதார்பதிவு ெசய்யும்மையங்கள் அமைக்க வேண்டும் என்றுதொடக்க கல்வித்துறைஇயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர்25ம்தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள்மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளும் தொடக்ககல்வித்துறையில் ஆதார்விவரங்களை ஒன்றியம்வாரியாக தொடக்க கல்வித்துறைஇயக்ககத்துக்குமின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவேண்டும்என்றும் தொடக்க கல்வித்துறைஇயக்குநர்தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016



அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான பதிவுகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களை தொகுத்து வழங்க வேண்டும், ஆதார் பதிவு ெசய்யும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்க கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement for Admission in B.Ed(IGNOU) for January 2017



தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் பள்ளிகல்விதுறை அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதில் முக்கியமானதாக, பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அட்டெண்டன்ஸ் எனும் வருகை பதிவேடு முறை ஒழிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக எம்.என்.சி.நிறுவனங்களில் உள்ளது போல கைரேகை பதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ-மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவு முறை முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நல்லாசிரியர் விருதும், 5000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நல்லாசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப்பரிசாக 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

5 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கு 28.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் 28 கோடியே 55 லட்சம் செலவில் செய்யப்படும்                        

பள்ளிகளில் இணையதளம் மூலம் கல்வியை நடைமுறைப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 555 நடுநிலைப்பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினிவழி கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்

ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்துவது எப்படி?

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது; இதில், மாவட்ட கவுன்சிலர் மற்றும்
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி ரீதியாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர் பதவிகள்; 99 ஆயிரத்து, 324 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, இந்த முறை கட்சி ரீதியாக தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கட்சி ரீதியாக தேர்தல் நடந்தால், அரசியல் குறுக்கீடுகள் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பயந்தனர். இந்நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் கட்சி சார்பற்ற தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.'இதற்கான முடிவுகள், இன்று பிற்பகல்,

2:00 மணிக்கு மேல், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியாகும்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை – இந்தத் திட்டத்தில் உள்ளபடியே- செயல்பாட்டுக்கு வந்தால் மேல்தட்டு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இனி உயர்கல்வி கிடைக்கும்; உயர்கல்வி இனி, ஏழைக்கு எட்டாக்கனியாகவே போய்விடும்!

கல்வி எதற்காக?

கல்வி அறிவுக்கானது என்பதை மாற்றி, மதி்ப்பெண்ணுக்கானது என்றும், கல்வி முன்னேற்றத்துக்கானது என்பதை மாற்றி, வேலைவாய்ப்புக்கானது என்றும், கல்வி சமூகமாற்றத்துக்கானது என்பதை மாற்றி, வணிகத்துக்கே என்றும் ஆக்கப்பட்டுள்ள கொடுமையான இன்றைய சூழலில் இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை ‘குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக’வே தோன்றுகிறது.கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, ‘கல்வி வள்ளல்’ என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!அண்ணாமலையார், பச்சையப்பர், அழகப்பர் இன்ன பிற சான்றோரும், கிறித்துவ மிஷினரியினரும் கல்வியை மக்கள் சேவையாகவும் மக்களோடு தொடர்புகொள்ளும் அறவழியாகவும் பார்த்த காலம் இப்போது இல்லையே!கவிஞர் தங்கம் மூர்த்தி சொல்வது போல,

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம்ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள்நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.


அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறைஉதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லதுதுணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம்வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. 
இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர்கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நுழைவுத்தேர்வு

சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்

தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது. இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள்நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வு: 10 ஆயிரம் பேர் எழுதினர்- 2 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் 1094 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத்தேர்வு நடந்தது.இத்தேர்வை 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர். 
இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு12 ஆயிரத்து 337 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். விரி வாக விடையளிக்கும் வகையி லான மெயின் தேர்வு சென்னை, கோவை, சிதம்பரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 மையங்களில் நேற்று நடைபெற்றது.சென்னையில் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 10 இடங்களில் தேர்வு நடந்தது. மெயின் தேர்வை தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் எழுதினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத வரவில்லை. குரூப்-2 மெயின் தேர்வில் 80 சதவீதம் பேர் கலந்துகொண்டதாகவும் 20 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டேதெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதையஅரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது.

இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில்இல்லை என்பது உண்மைதான்.

பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே..

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016

22/8/16

தமிழ் இரண்டாம் பருவம் ஓன்று முதல் எட்டாம் வகுப்பு வரை

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: பறிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் காலி பணி இடங்கள் இல்லை

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 20/8/16 அன்று நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டுமே இடமாறுதலுக்கு வாய்ப்பு கிடைத்தது.


தமிழகம் முழுதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முன்னிலையில் ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.
ஆனால், தாங்கள் விரும்பிய எந்த மாவட்டத்திலும் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் கணிதத்தில் தமிழகம் முழுவதும் ஒருவருக்கு மட்டும் இடமாறுதல் காட்டப்பட்டது. Zone.. ,2,3,4 ல் கணிதத்தில் காலி பணியிடங்கள் இல்லை எனவும்,zone.. 1 ல் மட்டும் ஒரே பணிடம் காட்டப்பட்டத்து.
இது மூன்றாண்டுகள் தொடர்ந்து இதே போன்ற நிலை உள்ளது. கல்வி அதிகாரிகளால் இடங்கள் மறைக்கப்பட்டு வருகிறதா?
அல்லது விலைபோக நிறுத்தி வைக்கப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது.
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மகன்,மகள், கணவன் பெற்றோர்கள் இவர்கள் விடுத்து இங்கே படும் வேதனைகளுக்கு * இந்த அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. சங்கங்கள் முனைப்போடு செயல்பட்டு *இதற்கான ஒரு தீர்வை விரைவில் நடவடிக்கைகள். மேற்கொண்டு நல்ல முயற்சி எடுக்க வேண்டும்.
அரசாங்கம் கலந்தாய்வு ஆணையை சென்ற ஆண்டில் நடத்திய முறையை மாற்றி அமைத்து கலந்தாய்வு நடத்த முடியும் எனில் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையை ஏன்உருவாக்க கூடாது.
கலந்தாய்வில் முதலில் ஒன்றியத்திற்குள், பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல், உடனே பதவி உயர்வு நடைபெறுகிறது. கடைசியாக மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது.
ஒன்றியத்திற்குள் , பிறகு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பதவி உயர்வு நடைபெற்றுவிடுவதால் மாவட்டத்தில் பணி இடங்கள் வாய்ப்பு குறைவு. மாவட்டத்தில் கடைசியாக மாறுதலும்,பதவி உயர்வு நடைபெறுகிறது.
மாறுதல் தனியாகவும், பதவி உயர்வு தனியாக நடத்த வேண்டும். இல்லையேல் முதலில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை அரசாங்கம் நடைமுறை செய்யுமா?
மாணவர்கள் நலன் கருதி கலந்தாய்வு விதிகளை மாற்றும்போது, தனிதனியாக நடத்த இது சாத்தியம் ஏன் இல்லை. அப்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கருத்தை அரசாங்கம் மற்றும் சங்கங்கள் செவி சாய்க்குமா?
அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேலை செய்யும்போது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் ஏன் அடுத்த ஒன்றியத்திலும் வேறு மாவட்டத்தில் வேலை செய்ய கூடாது.
அரசு அலுவலர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி புரிந்தால் மாறுதல் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தன் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க வேண்டும்.
இல்லையேல் வேறு மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்தது மூன்று ஆண்டுகள் மாறுதல் கிடக்காத வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஊக்க ஊதியம் தரவேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி புரியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதை ஏற்க்குமா? இந்த அரசாங்கம். இவர்களுக்கு குரல் தருவீர்களா? சங்க வாதிகள். 
இவர்களுக்கு இந்த சங்கங்கள் எந்த வகையில் உதவப்போகிறது.
நகரம் ஒட்டி வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதுபோல் வேறு மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து தனி ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாங்கம் முதலில் பணியில் அமர்த்தும்போது விருப்பத்தின் பேரில் பணி சில சமயங்களில் வழங்குகிறார்கள், சில சமயம் அவர்களாகவே பணி அணை தேர்வு(ரேன்டம்) செய்து பணி வழங்குகிறது. ஏன் இந்த முரண்பாடு? இனி வரும் காலங்களில் ஒரே மாதிரியான முறை கடைப்பிடித்து பணி வழங்கவேண்டும்.
ஆசிரியர்கள் நலனுக்காக சங்கம் என்றால் சங்கங்கள், இந்த வகையான ஆசிரியர்களுக்கு சங்கம் ஏதாவது செய்யாதா? 
அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தாதா? 
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் பணிஇடங்கள் இல்லை என்று கூறியே கடமைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளது.
ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெறும் போதும்,பதவி உயர்வு நடைபெறும்போதும் அனைத்து சங்கங்களும்,AEEO க்கள் அனைவரும் வந்திருந்து தவறு நடைபெறாமல் கலந்தாய்வு நடத்துகின்றனர். ஆனால் மாவட்டம் கலந்தாய்வில் யாரும் இருப்பதில்லை ஏன்?
வேறு மாவட்டத்தில் இருந்து வந்து தங்கள் ஒன்றியத்தில் பணி புரியும் இவர்கள் ஆசிரியர்கள் அல்லவா? இவர்களுக்கு யார் உதவி செய்வது சங்க பொறுப்பாளர்களே சிந்தியுங்கள். இதனால் இடங்கள் மறைக்கப்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற அவல நிலையை ஏற்படாத வண்ணம் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.சங்கங்கள் இதற்கான ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். அரசிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேசியோ ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேதனையுடன் ஆசிரியர்கள் இவர்களின் புலம்பல் அரசாங்கம் செவி சாய்க்கமா?
ஏதாவது வழி செய்ய சங்கங்கள் முயற்சி செய்யுமா?
அன்புடன்
ஆசிரியர்கள்.*


RMSA SOCIAL ICT TRAINING

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளாலேயே நிரப்பப் பட்டு வந்தன. 

இணையதளம் மூலம் கலந்தாய்வு: 1,277 ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி 2016-17-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

நேற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 3,882 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று நடந்த இணையதள கலந்தாய்வில் 1,277 முதுகலை ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்துக்குள் மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடந்தது.

இப்பணிகளை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து இணை இயக்குனர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கலந்தாய்வின் மூலம் மாறுதல் நடைபெறுவதை மேற்பார்வை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.


சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது; 25ம் தேதி அரசு விடுமுறை.

பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,
வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது
துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர் சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது; இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் தகவல்கள் பரிமாறியதால், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த, மூன்று ஆசிரியர்களுக்கு, 'மெமோ' தரப்பட்டது.


இந்நிலையில், நீலகிரி மாவட்டம், தும்மானாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள இவர், அதிகாரிகளின் விதிமீறல்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தி வருகிறார்; 19 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, போராட்டமும் நடத்தி வருகிறார். இவருக்கான சஸ்பெண்ட் உத்தரவில், பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை தருவதாக, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.கணேஷ்மூர்த்தி தெரிவித்து உள்ளார்; இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சங்கத்தினர் போராடவும், பத்திரிகைகளிடம் பேசவும் அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

பி.சங்கரநாராயணன்
தலைவர், அகில இந்திய அனைத்து ஆசிரியர்கள் சங்கம்.
சங்க நிர்வாகிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறை நடவடிக்கை கூடாது. இயக்க நலன்கள், இயக்க உறுப்பினர்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டால், சங்க நிர்வாகிகள் தான் குரல் கொடுக்க முடியும்; அதை தடுப்பது சரியல்ல.
பி.இளங்கோவன்
ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு.
அதிகாரிகள் தவறே செய்யாமல் இருக்கின்றனரா; அதை சங்கங்கள் தான் வெளிக்கொண்டு
வருகின்றன. அதனால், இது போன்ற அடக்குமுறை
நடவடிக்கைகளை எடுக்கின்றனர். உடனடியாக, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
எஸ்.சி.கிப்சன்
பொதுச் செயலர், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).
ஓவியம், கலை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், சங்க நிர்வாகி மீது, விதிகளை மீறி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்; இது, அதிகாரிகளின் பழி வாங்கும் செயல்.
நல்ல.காசிராஜன்
தலைவர், தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

சென்னை;முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,
வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.

ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக்  கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


முகாமுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். இதில், தேசிய பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், முதன்மை நிர்வாக அலுவலர் சி.நாகராஜன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவைகார்த்திகேயன், மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், பயிற்சியாளர்கள் ரகுநாதன், என்.டி.சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்

மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ், தலா 22 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம், கழிப்பறை கட்டடங்கள் கட்ட, தலா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமை வகித்தார், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் ரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோசப், பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராமசந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதைய அரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது உண்மைதான். பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே.

மத்திய அரசு தனது கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது.



அதில் ஒன்றுதான்.. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பு.

மிக நல்ல திட்டம்தானே என்று பலரும் வரிந்து கட்டிக் கொண்டு பாய்ந்து வருவீர்கள்..

ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்றார் போல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களே இருக்கக்கூடாது. 

அவ்வாறு இருப்பின் அது மாணவர்கள் சமுதாயத்தையேப் பாதித்துவிடும்.

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தப்பு?

அதுமாத்திரமா.. வாத்திமார்கள் எங்க சார் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா வேலைக்குப் போறாங்க? எவன் சார் ஒழுங்காப் பாடம் நடத்துறாங்க? வெட்டிப் பயலுக சார்.. பள்ளிக்கூடத்துல போய் தூங்குறாங்க.. வட்டிக்கு விடுதாங்க.. 

இவனுகளை எல்லாம் தூக்குல போடணும் சார்..

என்றுகூட சொல்வதற்கு இச்சமூகத்தில் பலரும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்..

இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

சர்தார்ஜிக்களைப் பற்றி எப்படி ஒரு மாயத் தோற்றம் இருக்கிறதோ, அதைப் போலத்தான் ஆசிரியர்களைப் பற்றியும் ஒரு எதிர்மறைக் கருத்து சினிமாக்கள் வழியாக.. கதைகள் வழியாக.. நகைச்சுவைத் தோரணங்கள் வழியாக..ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டது.. 

ஆசிரியர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றால் அந்த தேசத்தில் குழந்தைகள் கல்வி கற்றுத் தேர்வது எப்படி?

கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குத் தினமும் சென்று கொண்டுதானே இருக்கின்றார்கள்?

ஆசிரியர்கள் சரியாகச் செயல்படாத கல்வி நிறுவனத்திற்கு உங்கள் குழந்தைகளை எப்படி அனுப்புகின்றீர்கள்?

இல்ல சார்.. என் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் எல்லோரும் ஒழுங்காக வேலை பார்க்கிறார்கள்..

ஓ.. அப்ப எந்த ஆசிரியர் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை?

அதுவா.. அது.. அன்னைக்கு ஒரு பேப்பர்ல போட்டிருந்தாங்களே..

எந்த ஊர்ல?

ம்..ம்..அது எதுக்கு சார்? பொதுவா வாத்திமார் யாரும் ஒழுங்கா வேலை பார்ப்பதில்லை சார்.. அவ்ளோதான்..

இது என்ன மாதிரியான மனோபாவம்?

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள்.. என் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள் என்று ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்வார்கள்..

ஆக, பிழை எங்கிருக்கிறது என்றால்.. நமது உளவியலில் இருக்கிறது..

இவன்தான் காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமா பள்ளிக்குப் போகிறான்.. சாயங்காலம் வீட்டுக்கு ஜம்முன்னு வருகிறான்..

இதைத் தினமும் பார்க்கும் பொழுது, நம்மையறியாமல் அவர்கள் மீது ஒரு எரிச்சல் வருகிறது.. பொறாமை வந்து விடுகிறது.. இது இயல்பு.

ஆகவேதான் 100ல் 1 ஆசிரியர் செய்யும் தவறுகளைப் பூதாகாரப் படுத்தி, அதை எல்லோர் முகத்திலும் பொறுத்திவைத்து மனம் மகிழ்கின்றான்..

தவறிழைக்கும் மனிதர்கள் சமூகமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இதில் விதிவிலக்கேக் கிடையாது.. சில ஆசிரியர்களும் அதில் உள்ளடக்கம்.

உங்கள் ஊரில் 100 ஆசிரியர்கள் இருப்பின், வட்டித் தொழில் செய்யும் ஆசிரியர் ஒருவராக இருப்பார். வகுப்பறையில் தூங்குபவராகவும் அவர் இருப்பார்..

இவரைத் தன் பூதாகர லென்ஸால் பார்க்கும் சமூகம், எஞ்சியுள்ள 99 பேரைக் கவனிக்கத் தவறுகிறது..

அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியமனித வளத் துறை அமைச்சரின் முடிவும்..

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு என்பதுவும்.. பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப மறுதேர்வு என்பதுவும்..

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் எவரும் தகுதித் தேர்வின்கீழ் வந்தவர்கள் அல்ல..

அய்யா அப்துல்கலாமின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல.. 

ஆனாலும், எல்லோரும் படித்தோம்.. நன்றாகவே..

என் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.. அவர்களின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல..

இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற IASகள், IPSகள், டாக்டர்கள், தலை சிறந்த சட்ட நிபுணர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள் யாரும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களிடம் படித்து வர வில்லை..

ஒரு சாதாரண இளநிலை (BA) பட்டம் படித்து முடித்ததும் ஒரு தேர்வெழுதி IAS ஆகி, இந்திய அரசையே ஆட்சி செய்வதற்கு இங்கு முடிகிறது.

IAS ஆகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு ஒருத் தகுதித் தேர்வு இங்கு வைக்கப்படுவதில்லை. அவர்கள் யாரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தகுதித் தேர்வை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை.

ஆனால், B.Sc முடித்து, M.Sc முடித்து.. ஆசிரியராகப் பணி புரிவதெற்கென்றேத் தனியாக இரண்டு ஆண்டுகள் படித்து, பயிற்சி முடித்து, தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இவர் ஆசிரியராகப் பணி புரியத் தகுதியானவர்தான் என்று ஒரு அரசே பட்டம் வழங்கிய பிறகும், அவர் தகுதியானவர்தானா என்று இன்னும் ஒரு தகுதித் தேர்வு வைப்போம் என்பதுவும், பிறகு அதுவும் போதாது என்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தேர்வு வைத்துக் கொண்டே இருப்போம் என்பது மட்டும் எந்த வகையில் நியாயம்? 

காரணம், ஆசிரியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்கிற எண்ணம் இந்த அரசிற்கு இருப்பதால்தான் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.

நாடு முழுவதும் 60 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் எத்தனை பேரைக் குற்றப்படுத்துகிறோம்?

6 பேரை?

60 பேரை?

600 பேரை?

6000 பேரை?

60000 பேரை?

600000 பேரை?

அல்லது..

6000000 பேரையுமா?

ஒரு மருத்துவருக்கு, ஒரு வழக்கறிஞருக்கு, ஒரு நீதிபதிக்கு, ஒரு இஞ்சினியருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தகுதித் தேர்வு தேவையில்லையா?

அவர்களும் தங்கள் நுண்ணறிவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா?

1970ல் மருத்துவம் படித்துப்பட்டம் பெற்ற ஒரு மருத்துவருக்கு இப்போதைய நவீன மருத்துவத்துறை பற்றி தேர்வினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டியது அவசியம் இல்லையா?

ஒரு தகுதித் தேர்வு என்ற பெயரில், பிங்கிப் பிங்கி முறையில் டிக் அடித்துத் தேர்ச்சி பெறும் ஒருவரா சிறந்த ஆசிரியர்? 

ஒரு ஆசிரியருக்கு, மாணவர்கள் கவனத்தைத் தன்பால் ஈர்த்து, அவர்களுக்கு நன்கு புரியும்படி கற்றுக் கொடுக்கும் திறமைதானே மிக முக்கியம்?

அதை அளவிடாதத் தகுதித் தேர்வுகளும் ஒரு தேர்வா?

எதுவோ அரசாண்டால் எதையோத் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்துவிடாதிருங்கள்..

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்.. அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள்..

தகுதியற்ற ஆசிரியர்களைப் பெற்றோர்களே ஒதுக்கிவிடுவார்கள்..

எவருக்கும் அதுபற்றிக் கவலை வேண்டாம்..

ஆசிரியர் கலந்தாய்வு: 1,277 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்றனர்

பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் கலந்தாய்வில், மாநிலம் முழுவதிலும் 1,277 ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் ஆணை சனிக்கிழமை பெற்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2016-17 கல்வி ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்றது.

மொத்தம் 3,882 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இணையதளம் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 1,277 பேர்களுக்கு மாறுதல் கிடைத்துள்ளது.

இந்தக் கலந்தாய்வுப் பணிகள் யாவும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை

மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர் ரா.செல்வக்குமார் பேசினர். 

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். 
 ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார். 
 இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
 பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000 உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 
 வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின் கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின் பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும் பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்,
மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படுத்தாமல், தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

 திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி
Labels: Article

FLASH NEWS: தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:21/8/16- சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும்

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

உள்ளாட்சி தேர்தல் 2016 - உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம் ஆணை