யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/3/17

DTED Exam: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு
எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டுவிண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலைபதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19- ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது - NCERT.

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற
நடைமுறைகள் எதுவும் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது.


  என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு
அங்கீகாரம், அனுமதி நீட்டிப்பு வழங்குவது, புதிய படிப்புகள்- இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திகொள்ள அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்.சி.டி.இ. மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்.சி.டி.இ. உறுப்பினர் செயலர் சஞ்சய் அவஸ்தி வெளியிடப்பட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு


இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் இல்லை

பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, 'லேப் - டாப்' கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் - டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது.


கோடைவிடுமுறை

ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை.
பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும்
எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:
இருவாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை.


அவகாசம்

அதைஇறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி : 3,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி : விரைவில் நிரப்ப வலியுறுத்தல்

*பள்ளிக்கல்வியில் காலியாக உள்ள, 3,000 ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், 30 கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள்; 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங் களும் காலியாக உள்ளன. அதனால், பொதுத் தேர்வு பணிகளை ஒருங்கிணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


  தமிழகத்தில், 145 இடங்களில் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில், பொறுப்பு பணிகளில் நியமிக்க, 100 அதிகாரிகளே உள்ளனர்; 45 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வியில், 3,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் தாமதமின்றி நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

\பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 8.98 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த கல்வி ஆண்டில் 8.98 
லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.

தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தேர்வு கட்டண சலுகை பெற்றனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.

மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.

ஹால்டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளைதொடங்கும் பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் ‘தமிழ் தாள் 1’ தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.


  அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும். சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்கள்
பிளஸ் 2 தேர்வுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 8ம் தேதியும் ெதாடங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகியஎண்களில் தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPS : வல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது எப்போது?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அரசுக்கு எப் போது அறிக்கை அளிக்கும் என்று தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். 

பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த ஆண்டு பிப்.26-ம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் கடந்த டிச.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வல்லுநர் குழு தலைவரான சாந்தா ஷீலா நாயர் பிப்.6-ம் தேதிதனது பதவியை ராஜி னாமா செய்துவிட்ட நிலையில், குழு அமைத்து ஓராண்டாகியும் எவ்வித அறிவிப்பும் இல் லாதததால் வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை எதுவும் அளித்ததா என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு ஊதிய விகித மாற்றக் குழு அமைத்துள்ளது .

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற் றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: ஊதிய விகித மாற்றத்துக் காக குழு அமைக்கப்பட்டுள் ளதை வரவேற்கிறோம். ஆனால், இந்தக் குழுவின் மீது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அர சுக்கு அறிக்கை அளித்ததா?, அந்தக் குழு உயிர்ப்புடன் உள்ளதா? என்றே தெரிய வில்லை. எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அறிவித்தால்தான், ஊதிய விகித மாற்ற குழுவின் மீது நம்பகத்தன்மையும், அரசின் மீது நம்பிக்கையும் ஏற்படும். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகமாகவே இதைப் பார்க்க முடியும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் கூறும்போது, "ஊதிய விகித மாற்றக் குழுவை அமைத் ததற்கு முதல்வரை சந்தித்து வரவேற்பு தெரிவித்தோம். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு ஓராண் டாகிவிட்ட நிலையில், குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதற்கு, ஒவ்வொன்றாக கவனிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஊதிய விகித மாற்ற குழு அமைக்கும்போது வழங் கப்படும் இடைக்காலநிவா ரணத்தை உடனடியாக வழங்கினால்தான் அரசின் மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் களுக்கு நம்பிக்கை வரும்"என்றார்.

TNPSC - 'Group 2A' பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

'குரூப் - 2 ஏ' பதவிகளில்,நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட, 1,940 பணியிடங்களுக்கு, 2016 ஜன., 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது.

இதில் பங்கேற்ற தேர்வர்களின் மதிப்பெண், தர வரிசை விபரம், ஜூனில் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோருக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 1 முதல் 10 ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் மழை - வரலாற்றில் இடம்பெறும்

மிக மோசமான பருவ மழைக் காலத்தைக் கடந்திருக்கும் தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பேரானந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது பேஸ்புக் பதிவில் விரிவான தகவல்களை ஆராய்ந்து எடுத்து பதிவு செய்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும், அதன் மூலம் பூண்டி, புழல் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் மாதம் மழை பெய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அந்த நாள் தற்போது வெகு விரைவில் வரவிருக்கிறது. ஆனால், இந்த மழையின் அளவு குறித்து இன்னமும் ஒரு உறுதியான தகவலை சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதங்களில் பெய்த மழை வரலாறு

வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மி.மீ. மழை தான் பதிவாகும். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மி.மீ. மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டதும் அப்போதுதான். ஆனால், 2008 போல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம்.

கடந்த கால வரலாறு (மி.மீட்டர்களில்)
2008 - 166.9
1984 - 82.0
1879 - 76.8
1954 - 67.0
1893 - 62.0
1925 - 61.5
1944 - 57.5
2006 - 54.5
1936 - 52.9
1938 - 50.5

இந்த வரிசையில் 2017ம் ஆண்டு முதல் பத்து பட்டியலில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அது மார்ச் மாத இறுதியில்தான் உறுதியாகும். நமது எதிர்பார்ப்பு 2006ம் ஆண்டு மழைப் பதிவையாவது இந்த ஆண்டு எட்ட வேண்டும் என்பதே.

சரி சென்னைக்கு வருவோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால், ஆண்டில் மிகக் குறைவான மழைப் பொழிவு இருக்கும் மாதம் பிப்ரவரி கூட இல்லை. மார்ச் மாதம் தான் என்று சொல்லலாம். சென்னையில் மார்ச் மாதங்களில் வெறும் 5 மி.மீ. மழைதான் பெய்யும். இது சாலையைக் கூட முழுதாக நனைக்காது.

சென்னையில் மார்ச் மாத மழை வரலாறு

2008 - 137.9
1933 - 86.9
1853 - 85.6
1925 - 72.6
1852 - 66.5
1919 - 49.8
1870 - 43.7
1893 - 42.2
1879 - 38.1
1938 - 36.8

சென்னைக்கு மிக அதிக மழை கூட எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 20 மி.மீ. மழை பெய்தால் கூட மகிழ்ச்சிதான். ஆனால் இது அணைகளின் நீர் மட்டத்தை எந்த வகையிலும் மாற்ற உதவாது.

மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.


அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் பிறமொழி மாணவ மாணவிகள் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக் கேட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பிறமொழி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர்.
அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் பழநியில் மொட்டை

பழநி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டி, கோவை யைச் சேர்ந்த 48 மாணவர்கள் பழநிகோயிலில் முடிகாணிக்கை (மொட் டை) செலுத்தினர்.பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8ல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் ஆசிரியர்களுடன் நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர்.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என வேண்டிமுடிகாணிக்கை செலுத்தினர். பின், மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாணவர்கள் கூறுகையில்,''பல பள்ளிகளில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் முருகப்பெருமான் அருள்வேண்டி 'மொட்டை'அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளோம்,'' என்றனர்.

அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். 'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் !!

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட 
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு,

கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர்.

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்" என்றார்.

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை !!

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி          பள்ளி மாணவர்களுக்கு யோகா வகுப்பு கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக கோவையில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
மேலும் முதலமைச்சர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு!

25 வயதுக்கு மேற்பட்டவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என, இந்திய மருத்துவக் கவுன்சில் சி.பி.எஸ்.இ.,க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக பல குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் கடந்த மாதம் யூஜிசி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீட் 
தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவு மாணவர்கள் 25 வயது வரை தேர்வை எழுதலாம் இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரை தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை 25 வயது வரைதான் எழுத முடியும் என்னும் வயது உச்சவரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்வு எழுத அனுமதிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தேர்வு எழுதுவது தொடர்பாக நீட் சட்டத்தில் விதிமுறைகள் எதுவும் விதிக்கவில்லை. வயது தொடர்பாக சி.பி.எஸ்.இ., தான் விதிமுறைகளை விதித்துள்ளது என இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளித்தது. அதைத் தொடர்ந்து, வயது உச்சவரம்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையெனில் அந்த விதிமுறை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PSTM என்பது Person Studied in Tamil Medium

அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.


நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை.

சான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி / கல்லூரி முத்திரை இட்டு பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.

முக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

PSTM சான்றிதழை, தமிழில் வாங்கி வைத்து இருப்பது தவறு இல்லை, ஆனால் TNPSC அதற்க்கான ஆங்கில படிவத்தை கொடுத்து இருப்பதால் அதனையே பயன்படுத்துதல் மிகவும் நன்று. அதாவது நமது அனைத்து சான்றிதழ்களிலும் நமது பெயர் ஆங்கிலத்திலயே இருக்கும். இந்த சான்றிதழில் மட்டும் தமிழில் இருந்தால் பெயர் குழப்பம் ஏற்படும் என்பதற்காக ஆங்கிலத்தில் வைத்து இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே தமிழ் படிவத்தில் விண்ணப்பித்து இருந்தால் பரவாயில்லை.

18/2/17

இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா? தகவல் ஆணையம் கேள்வி?

இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இருந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் பிரத்யோத் குமார் மித்ரா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவை ஆட்சிபுரிந்து வந்த பிரிட்டீஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்காக இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நாட்டின் பல்வேறு 
பகுதிகளில் இருந்து ஆட்களைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்தார்.
ஆனால், சில காலத்துக்குள்ளாக எனினும், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் யாரும் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை. பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் என்பதால் அவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. உண்மையிலேயே, இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானா அல்லது பிரிட்டீஷ் ராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களா? என அந்த மனுவில் தகவல் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இந்த மனுவை அனுப்பியது.
இந்த மனுவை ஆய்வு செய்த தேசிய ஆவணக் காப்பகம், அதுதொடர்பான சில ஆவணங்களை மனுதாரருக்கு அனுப்பி வைத்தது. அதிலிருந்து தேவையான தகவலை எடுத்துக்கொள்ளுமாறும் மனுதாரரிடம் தெரிவித்தது.
இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர், இதுதொடர்பாக தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். அதன் விவரம்: ஆவணங்கள் அல்லது கோப்புகள் தொடர்பாக தகவல்களைக் கோரும்போது, அதனை தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைப்பது உள்துறை அமைச்சகத்தின் உரிமைதான்.
ஆனால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய இந்திய தேசிய ராணுவத்தினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமையாகும். இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலமாகவே இந்திய தேசிய ராணுவத்தினர் மீது படிந்திருக்கும் களங்கத்தை துடைக்க முடியும்.
எனவே, இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க வேண்டும்

வேலைவாய்ப்பு செய்திகள் !!

முக்கிய அறிவிப்பு...!

வருகின்ற 18-02-2017 சனிக்கிழமை,  சென்னையில் உள்ள  Tambaram தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் தலை சிறந்த Corporate Companyகள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன.  Core - B.E, M.E, M.Tech, B.Tech, MBA, MCA, MA,  BCA, BISM, BBA, BSC, BA,கள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...


 1500+ பேர் வரை பயன் பெறுவர்.

[நேரம்  காலை 9.00 - மாலை 3.00 மணி]

இதில் ITI முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை Tambaram Dhanalakshmi Engg College - DCE மற்றும் Genius Consultant Ltd, இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 8939174777- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது  மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

மெரீனா பக்கமே யாரையும் போக விடாதீங்க.. பழனிச்சாமிக்கு 'ஆர்டர்' போடும் சு. சாமி !!



சென்னை மெரீன் கடற்கரை முழுவதுமே 144 தடை சட்டத்தைப் பிரயோகித்து யாரையுமே அந்தப் பக்கம் போக விடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிட்டத்தட்ட உத்தரவிடுவது போல கூறியுள்ளார் சு.சாமி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதோ அரசாங்க உத்தரவிடுவது போல உள்ளது சாமியின் டிவீட். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரீனாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பிரயோகித்து கைதாவோரை குறைந்தது 1 மாதம் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
முன்பு சசிகலாவுக்கு ஆதரவாக பேசி எழுதி வந்த சாமி தற்போது சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கிளம்பியுள்ளார்.

எம்.எல்.ஏ. பதவி போனாலும் பரவாயில்லை மனசாட்சிப்படி வாக்களிப்பேன்: மயிலாப்பூர் நடராஜ் ,போர்கொடி !!

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பின்னர் சசிகலா தரப்புக்கு 122 பேரும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு 10 பேரும் ஆதரவு அளித்தனர். இதில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் மவுனம் காத்து வந்தனர்.


*இந்த நிலையில் இன்று நடராஜ, தனது எம்.எல்.ஏ. பதவி பறிபோனாலும் பறவாயில்லை. நான் நம்பிக்கை* *வாக்கெடுப்பின்போது மனசாட்சிப்படி வாக்களிக்க முடிவு செய்துள்ளேன் என கூறி பரபரப்பை ஏறுபத்தியுள்ளார்.

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்!!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது. ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து 
விடுகிறது.பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்து வைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாத பரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது. இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது. இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது. இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது, புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர். கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசிய சராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆர்கிடெக்சர் மாணவர்களுக்கான தேசிய வடிவமைப்பு போட்டி!!!

கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு துறைசார்ந்த மாணவர்களுக்கு, ’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ எனும் தேசிய அளவிலான கட்டடக்கலை வடிவமைப்பு போட்டியை, செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.



’ஸ்பேஷ் இன் மோஷன்’ எனும் தலைப்பிலான இப்போட்டியில், நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்று, தங்களது படைப்புத்திறன்களை சமர்ப்பித்தனர். இதில், தகுதி பெற்ற சிறந்த 8 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

இறுதி போட்டி சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பி.சந்தானம், கே.வி.ஆர்., நிறுவனத்தின் இயக்குனர் சென் கபாடியா, டி.பி.ஏ., நிறுவனர் சோனாலி பகவதி மற்றும் ஆர்கிடெக்சர் அட் ஸ்பேஸ் மேட்ரிக்ஸ் இயக்குனர் அனுப் நாயக் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஐ.பி.எஸ்., இந்தூர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், குணால் ஜெயின் மற்றும் ஷிவானி அகர்வால் முதல் பரிசு (ரூபாய் 75 ஆயிரம்) பெற்றனர். இரண்டாம் பரிசை (ரூபாய் 50 ஆயிரம்) சித்தகங்கா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த மாணவர்கள், ஐஸ்வர்யா, ராகவேந்திரா மற்றும் ரக்சா மனோகர் ஷெட்டி ஆகியோர் பெற்றனர்.

’டிரான்ஸ்பரன்ஸ் 2016’ல் மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டியும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூபார் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு நம்மைப் பல இயக்குநர்களும் அழைத்து சென்றுள்ளனர் என்பதை மறுக்க

முடியாது. உதாரணமாக ஜுராசிக் பார்க், அவதார், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், என பல்வேறு திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் . இவை அனைத்தும் நாம் நேரில் காண முடியாத ஒரு உலகினை நம் கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியவை என்பதே உண்மை.



எனவே நாம் காண விரும்பும் சில அதிசயமான காட்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு நேரில் காண உதவியாக ஜப்பான் புதிய 7D தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்றில் ஜப்பானில் புதிதாக அமைத்துள்ள 7D தொழில்நுட்ப பூங்கா பற்றிய தகவலை வெளியிட்டனர். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்ம் வேடசந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த 2006ஆம் ஆண்டு, தமிழக அரசு பிறப்பித்த 
அரசாணையின் அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த நூலகங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நூலகங்கள் ரேஷன் கடைகளாகவும், கிராம நிர்வாக அலுவலகங்களாகவும் இயங்கி வருகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங்களை பராமரிக்கவும், மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன், 'தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு, 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என வாதிட்டார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

நூலகத்தைப் பராமரிக்கும் நூலகரின் பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல நூலகங்களுக்கு ஆலோசகராகச் செயல்படும் வாய்ப்பு நூலகத் துறையில் உள்ளது. புத்தகங்களை பரிந்துரை செய்யவும், கிடைக்கும் இடத்தை முறையாகப் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்க முடியும். நூலக மேலாண்மை படிப்பை தேர்வுசெய்து படிப்பதன்மூலம், சிறந்த நூலகராகப் பணியாற்ற முடியும்.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் : சுஷ்மா சுவராஜ்

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா‌ சுவராஜ் தெரிவித்துள்‌‌ளார்.‌



இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘முதற்கட்டமா‌க மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும். பாஸ்‌‌போர்ட் சேவையை தொடங்குவதற்கான ஏற்பாடுக‌ள் ரூ‌ர்‌கேலா, சம்பல்பூர், ஜெய்சால்மர், பிகானீர், அவுரங்காபாத், உதய்பூர், கோட்டா, ராஜஸ்தானின் ஜலாவர், ஜுன்ஜுனு உள்ளிட்ட நக‌ரங்களில் ‌உள்ள தபால் நிலையங்களில் ‌நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, உதய்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் முதல் வாரத்தில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும்.

மேலும் பா‌ஸ்போர்ட் சேவை எந்தெந்த தபால் நிலையங்களில் கிடைக்கும் என்பதை வெளியுறவுத்துறையின் அதிகாரபூ‌ர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். அப்போது அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது !!

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது..

அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம்அமலில் உள்ளது. ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து விடுகிறது.பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்துவைத்தும், மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.தமிழ் மொழியை வாசிக்கத் திணறும் இந்த மாணவர்கள் கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பது கடினமாகும்.எனவே, தனி கவனம் எடுத்து தமிழில்தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும், கணிதம் கற்றுத் தருவதும்அவசியமாகிறது.இதற்காக, புதுச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வாசிப்புடன் கூடிய 'மேத்ஸ் கார்னர்' துவங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய அரசின் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்தின் துணை திட்டமான 'பதே பாரத்; படே பாரத்' (படிக்கும் இந்தியா; முன்னேறும் இந்தியா) திட்டத்தின் கீழ், ரொக்கமில்லாதபரிவர்த்தனை முறையில் 5 ஆயிரம் ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சுகாதார துாதர் திட்டம் அறிமுகம் செய்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கண்காணிக்கப் பட்டது.இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அதேபோன்ற நடைமுறையை 'மேக்ஸ் கார்னர்' விஷயத்திலும் நடைமுறைப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வாசிப்பு துாதர் என, ஒரு மாணவர் நியமிக்கப்பட உள்ளார்.இந்த 'ஹைக்டெக்' திட்டத்தின் மூலம், புதுச்சேரி பிராந்தியத்தில் 5117 மாணவர்கள், காரைக்கால்- 1859, மாஹி-505, ஏனாம்-775 என, ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8,256 பேர் பயனடைய உள்ளனர்.அதன்படி, 3,993 மாணவர்கள், 4,263 மாணவிகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிதத்தில் சாதிக்கவும் கற்றுக்த் தரப்பட உள்ளது.

இதற்காக, 2 ஆயிரம் புத்தகங்கள் கதைகளுடன் கூடிய கல்வி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.இ.ஆர்.டி., புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் ஆய்வு நடத்தியது.இரண்டு வகுப்புகளிலும், தேசிய சராசரியை காட்டிலும் புதுச்சேரி துவக்கப் பள்ளி மாணவர்கள் மேலோங்கியே இருந்தனர்.மூன்றாம் வகுப்பில் தேசிய அளவில் மொழிப்பாட கற்றல் திறன் 64 மதிப்பெண் ஆக இருந்தபோது,புதுச்சேரி மாணவர்களின் கற்றல் திறனில் 73 மதிப்பெண் ஸ்கோர் செய்து சாதித்தனர்.

கணிதத்தில், தேசிய சராசரி 60 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 75 மதிப்பெண் பெற்று, முத்திரை பதித்தனர்.ஐந்தாம் வகுப்பிலும் கணித பாடத்தில் தேசியசராசரி 241 ஆக இருக்கும்போது, புதுச்சேரி மாணவர்கள் 246 மதிப்பெண் ஸ்கோர் செய்திருந்தனர்.தற்போது, ஒன்றாம், இரண்டாம் வகுப்பில் வாசிப்புடன் கூடிய 'மேக்ஸ் கார்னர்' விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

NCRTE புத்தகத்தை மட்டும் பயன்படுத்த CBSE.க்கு உத்தரவு

புதுடெல்லி: தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
இங்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரித்து வழங்கும் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்சிஇஆர்டி புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் தனியாரிடம் புத்தகங்களை கூடுதல் விலை கொடுத்து வேறு புத்தகங்கள்வாங்குவதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தரமான கல்வி வழங்கும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல பள்ளிகளில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தனியார் கடைகள் இயங்கி வருகின்றன.

 இந்த கடையில் கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பள்ளிநிர்வாகிகளை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த கடை அதிபர்கள் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்வதாக தெரியவந்துள்ளது.எனவே முறைகேட்டை தவிர்க்கும் வகையில் 2017-18ம் ஆண்டு முதல் என்சிஇஆர்டி புத்தகங்கள் போதுமான அளவுக்கு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நாடு முழுவதும் உள்ள 680 மையங்கள் மூலம் மார்ச் மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ப்ளஸ்: மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஏற்கனவே இருந்த மத்தியக் கல்விக் கழகம் உள்ளிட்ட 7 அமைப்புகளை ஒருங்கிணைத்து,தன்னாட்சி அமைப்புடன் 1961ல் நிறுவப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு.

+2 வினாத்தாள்கள் தயார்.

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!

நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.

ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

17/2/17

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு
முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே, நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விடும்.


இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.01.2017 to 31.03.2017 – Orders – Issued.

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - தேர்விற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்தல் / திரும்ப பெறுதல் சார்ந்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கோரி உத்தரவு

டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென
நிறுத்தப்பட்டது; இதனால், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகினர். தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும்; பட்டதாரி ஆசிரியர் களுக்கு, ஏப்., 30ம் தேதியும், தகுதித்தேர்வு (டி.இ. டி.,) நடத்தப்படும் என்று, தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


இதற்கான விண்ப்பம், நேற்று முதல், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் இருந்து மாவட்டம் வாரியாக விண்ப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்கு, 14 ஆயிரத்து, 800 விண்ப்பங்கள் பெறப்பட்டு, 14 மையங்கள் மூலம் வழங்கப்படும் என்று, முதன்மை கல்வி அவலர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, விண்ப்பம் பெற வந்த ஆசிரியர்களுக்கு, நேற்று வழங்கவில்லை.

விண்ப்பங்கள் வைக்கப்பட்டிருந்த, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, மற்ற மையங் களுக்கு அவை அனுப்பி வைக்கப்படவில்லை. விண்ப்பம் பெற வந்திருந்த ஆசிரியர்கள், ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசிடம் இருந்து உத்தரவு ஏது வும் வராததால், விண்ப்பம் வழங்கப்படவில்லை. மறு அறிவிப்பு வந்த பிறகே, விண்ப்பம் வழங்கப்படும்,’ என்றனர்.

நேற்று முன்தினம் பள்ளி கல்வி இயக்குனரிடம் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்ற றிக்கையில்,‘டி.இ.டி., விண்ப்பங்கள், மார்ச் முதல் வாரத்தில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், ஒவ்வொரு ஒன்றியத்திம் தேர்வு நடைபெறாத இரண்டு பள்ளிகளின் விவரத்தை அனுப்ப வேண்டும்,’ என தெரிவிக்கப்பட் டிருந்தது. இதனால், நேற்று விண்ப்பம் வழங் குவது நிறுத்தப்பட்டது.


ஆசிரியர் தரப்பில்,‘ பொதுத்தேர்வு துவங்குவது மார்ச்,2ம் தேதி; ‘டெட்’ விண்ப்பம் பெற கடைசி நாளோ, பிப்., 27ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விண்ப்ப வினியோகத்தை தள்ளிப்போடக்கூடாது,’ என்றனர்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

TET 2017 Exam Date Change ?

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழகஅரசு முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு...

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்றுஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே,நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிதேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு விடும்.இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC -. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது

 டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் 2015-ம் ஆண்டு மே 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு, சென்னை பிரேசர் சாலையில் உள்ள (கோட்டை ரெயில் நிலையம் அருகில்) தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். மறுவாய்ப்பு கிடையாது கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் அவர்களுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இட ஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற முடியாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்புஅளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி, 2016 அக்டோபரில் நடந்தது. அப்போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, சட்டசபை தொகுதிகளில் மட்டும், திருத்தப் பணி நடைபெறவில்லை. இந்தத் தொகுதிகளில் மட்டும், பிப்., 20ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அன்று முதல், மார்ச், 6 வரை விண்ணப்பிக்கலாம்.

பிப்., 25ல், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும். பிப்., 26 மற்றும் மார்ச், 5ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், மார்ச், 16ல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மதுரையில் தினமலர் நடத்துகிறது.

தமிழக போலீஸ் துறையில், 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, மே 21ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை முகாம், தினமலர் சார்பில் நாளை( பிப்.,18) மதுரையில் நடக்கிறது.

இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம் நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.,22. இத்தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 100. இதில் எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.எழுத்துதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடக்கும்.வாசகர்கள், எழுத்து தேர்வில் வென்றிடும்விதமாக வழிகாட்ட, ஆலோசனை நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. நாளை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது.

அனுமதி இலவசம்.மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் டாக்டர் அருண்சக்திகுமார் துவக்க உரை நிகழ்த்துகிறார். தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள், முக்கிய கேள்விகள், பாடமுறைகள் குறித்து நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் விளக்குகிறார்.

TNPSC - குரூப் - 4 பதவிக்கு 'கவுன்சிலிங்' அறிவிப்பு.

குரூப் - 4' அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்., 22ல் நடக்க உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு:
'குரூப் - 4' பதவிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு, டிச., 21ல் தேர்வு நடந்தது.இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிகளில், காலி இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, பிப்., 22 முதல், 24 வரை நடக்கும். விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

பன்னீருக்கு ஆதரவாக மீண்டும் மாணவர் போராட்டம்?

அ.தி.மு.க., சட்டசபைக் குழு தலைவராக, சசிகலாவின் ஆதரவாளர் இடைப்பாடி பழனிச்சாமி, தேர்வு செய்யப்பட்டு, நேற்று மாலை முதல்வராக பதவியேற்றார். 
இது, பன்னீர் ஆதரவாளர்கள் மற்றும் அவர் தலைமையை எதிர்பார்த்து, ஆதரவு அளித்து வரும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல், பன்னீருக்கு ஆதரவாகவும், இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, சமூக வலைதளங்களில் நேற்று இத்தகவல், 'வைரலாக' பரவியது. இதையடுத்து போலீசார், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி

நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, முறையாக கை கழுவுவது எப்படி என, ஒரு லட்சம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி செய்முறை பயிற்சி அளித்தது.
சென்னை மாநகராட்சி சுகாதார கல்வித் துறை சார்பில், நோய் பாதிப்பில் இருந்து தப்புவது குறித்தும், கொசு உற்பத்தி, நோய் உருவாவது எப்படி என்பது போன்ற, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை, நகர மக்களுக்குதெரியப்படுத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார துாதுவர்களுக்கான, அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு, சுகாதார துாதுவர்களுக்கான அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்று, நகர் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரு லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, முறையாக சோப்பு போட்டு கை கழுவுவது எப்படி என, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் செய்முறை பயிற்சி அளித்தனர்.

அப்போது, சுகாதாரம் குறித்து பல்வேறு தகவல்களை, மாணவர்களுக்கு, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒரு பள்ளி வீதம், மொத்தம், 200 பள்ளிகளில் நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக் கப்பட்டது. இந்த நூலகங்கள் தற்போது பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. பல இடங்க ளில் நூலகங்கள் ரேஷன் கடைக ளாகவும், கிராம நிர்வாக அலுவலக மாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர் களும், பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங் களை பராமரித்து மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்''என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, ''தமிழகத்தில் 2006-ல் 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன"என்றார். இதையடுத்து, காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா நகைகள், கைக்கடிகாரங்கள் மதிப்பு என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


1991-1996 கால கட்டத்தில், ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவரும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளித்தது.

வழக்கை முதலில் விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உறுதி செய்தனர். அதன்படி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறார்.

நீதிபதிகள் வழங்கிய 570 பக்க தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தங்கம், வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சம்.

* கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 90 ஆயிரம்.

* கார்களின் மதிப்பு ரூ.1 கோடியே 29 லட்சம். (மாருதி கார், கண்டெசா கார், வேன்கள், ஜீப்புகள் அடங்கும்.)

* 400 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்து 80 ஆயிரம்.

* அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.20 கோடியே 7 லட்சம். புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடியே 53 லட்சம்.

* 1991-1996 கால கட்டத்துக்கு முன்பு அவர்களது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம். மீதி சொத்துகள் அனைத்தும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதாகும்.

* தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருப்பு ரூ.97 லட்சத்து 47 ஆயிரம். ரூ.3 கோடியே 42 லட்சத்தை நிலைத்த வைப்புகளிலும், பங்குகளிலும் வைத்துள்ளனர்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி: மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடிதம் !!

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியிலான தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சம்ஸ்கிருத பாடலை மனப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவிகள் ஏராளமானோருக்கு, மைதானத்தை 
கீழாடை (ஸ்கர்ட்) இன்றி சுற்றி ஒடிவரும்படி தண்டனை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு மேனகா காந்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையத்தால், மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முடிவு கொண்டு வருவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் தெரியும்படி வெளியிட வேண்டும் என்றும், அதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகள், மாணவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடர்பான புகார்களை கவனிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் கருவிழி மூலம் வங்கிக் கணக்கு திறக்கும் வசதி..!

பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எனப் பல ஆவணங்களை வழங்கி வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நம் நாட்டில் முதன் 
முறையாகக் கண் கருவிழி ஸ்கேனிங் மற்றும் ஆதார் எண்ணை மட்டுமே வழங்கி, வங்கிக் கணக்கைத் திறக்கும் வசதியை டிசிபி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.


டிசிபி இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் வங்கிக் கணக்குத் திறக்கும் முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கடந்த ஆண்டு, ஆதார் அடிப்படையிலான ஏடிஎம்களை இந்த டிசிபி வங்கிஅறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கருவிழி அடிப்படையிலான வங்கிக் கணக்குத் திறக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
முதலில், 10 கிளைகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இது தொடங்கப்பட்டது. கருவிழி ஸ்கேனிங் மூலமாக இதுவரை நூற்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் திறக்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பல வாடிக்கையாளர்கள், ஆவணங்களைக் கையாள் வதை பிரச்னையாகக் கருதி வந்தனர். இப்போது இதன் மூலம் அது எளிதாக்கப்பட்டு உள்ளது.

வதந்தியால் ரூபெல்லா தடுப்பூசி போட அச்சம் !!

குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ் - ரூபெல்லா' தடுப்பூசி போட்டு கொள்ள, பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவி வருவதால், தடுப்பூசி போடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து, மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது.ஒன்பது 
மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகள் முதல், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் கள், கடந்த, 6ம் தேதி துவங்கியது.'மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறையும்' என்ற வதந்தி பரவ துவங்கியது. இதனால், புறநகரில் நடந்த முகாம்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தாம்பரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோரிடம் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கியும் எடுபடவில்லை.தாம்பரத்தில், அரசு பள்ளிகள் - 6; தனியார் பள்ளிகள் - 47; அரசு உதவிபெறும் பள்ளிகள் - 2; மழலையர் பள்ளிகள் - 15; சத்துணவு மையங்கள் - 20 என, மொத்தம், 90 இடங்களில் தடுப்பூசி போட முதலில் திட்டமிடப்பட்டது.தாம்பரத்தில், மொத்தம், 39 ஆயிரத்து, 705 குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில், வெறும், 5,442 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 34 ஆயிரத்து, 263 பேருக்கு, இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை.'குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட, தனியார் பள்ளிகள் ஒத்துழைக்கவில்லை' என, தாம்பரம் நகராட்சி சுகாதாரத் துறையினர் புகார் கூறுகின்றனர். அதே சமயம், 'தடுப்பூசி போடுவதால், மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதை நீங்களே பார்த்து கொள்ள வேண்டும்; நாங்கள் பொறுப்பல்ல' என, தனியார் பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனால், தனியார் பள்ளிகள் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என, பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வரும், 28ம் தேதி வரை, இந்த முகாம்கள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, தடுப்பூசிகள் போட்டு கொள்ள யாரும் முன்வரவில்லை.தமிழக சுகாதாரத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கூடவே வரும் வில்லன் இவர்தான்!

தலைவாரி, பூச்சூட்டி நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். திரும்பி கையசைக்கும் அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையின் சுமை நம் மனதை வலிக்கச் செய்யும். இதற்கு ஒரு வழிபிறக்காதா என்ற கேள்வி தினந்தோறும் நமக்கு எழுகிறது. இந்த புத்தகப் பையிடம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு குழந்தையின் மனமும் நினைக்காத நாளில்லை. பள்ளிப் படிக்கும் வயதில், எடை அதிகமான புத்தகப் பையைச் சுமப்பதால் நம்

குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

"வீட்டுப் பாடம் எழுதுவதை என்றைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றிலிருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம், மரம், தோல், அலுமினியப் பெட்டி என பல கண்டங்கள் தாண்டி இப்போ நம் செல்லங்களின் முதுகில் அமர்ந்திருப்பது ‘எர்கோனோமிக் ஸ்கூல் பேக்’. ஸ்டைல் மாறினால் என்ன வெயிட் மாறவில்லையே. புத்தகச் சுமையைக் குறைக்க நமது முப்பருவக் கல்வி முறையில் மூன்று பருவங்களுக்கான புத்தகங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்தந்த பருவத்துக்கு என்று புத்தகங்களும் நோட்டுகளுமாக புத்தகப் பை மூச்சுத் திணறும் அளவுக்கே உள்ளது.

இந்திய மாணவர்கள் 15 கிலோ எடை வரை புத்தகப் பையாக சுமக்கின்றனர். தனது உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதத்தை புத்தக மூட்டையாக சுமக்கின்றனர். 68 சதவீத குழந்தைகள் தங்களது எடையில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான எடையை சுமப்பதால் உடல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.

மேலும் இவர் கூறுகையில், “இந்தியக் குழந்தைகள் பள்ளி நாட்களில் புத்தகப் பையை நீண்ட தூரம் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 12 வயது முதல் 14 வயது வரை குழந்தைகளின் உடல் வளர்சிதை மாற்றங்கள் உச்சியில் இருக்கும். இந்தக் கட்டத்தில் அளவுக்கு அதிகமாக எடை தூக்குவதால் கூன், முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற தொந்தரவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் மட்டும் பைகளை மாட்டிச் செயல்வதால் 29 சதவீதம் முதுகு தண்டுவட குருத்தெலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது

முதுகுத் தண்டில் 33 சிறிய எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினாற் போல இருக்கும். இதன் இடையில் இருக்கும் குறுத்தெலும்புகள், அதன் உறுதித் தன்மையை மேம்படுத்தி உடலுக்கு கட்டமைப்பை கொடுக்கிறது. அதிகப்படியான அழுத்தம், புத்தகப் பையினால் தண்டுவடத்திலும், குறுத்தெலும்புகளிலும் சரிசெய்ய முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. பின் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எலும்பின் உறுதித் தன்மை சீர்குலைவு சிறு வயதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை கீழ் முதுகில் குழந்தைகள் தூக்கிச் செல்வது இயல்பே. புத்தகப் பையை பேலன்ஸ் செய்ய அவர்கள் முன்னோக்கி குனிகின்றனர். இதனால் கழுத்துவலி, தோள்பட்டை வலி ஏற்படுகிறது. கழுத்து இறுக்கத்தையும் மாணவர்கள் சந்திக்கின்றனர்.

நீண்ட நேரம் தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு நிற்கும் போது இரு கால்களில் சமமான எடையைப் போடாமல் ஒரு பக்கம் சாய்ந்தவாறு நிற்பதால் அனைத்து விதமான தசை வலிகளும் ஏற்படுகிறது. மேலும் அதிக வியர்வையால் தோள்பட்டை ஸ்ட்ராப் மாட்டும் இடங்களில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படலாம் புத்தகப்பையின் எடையை குறைப்பதோடு அதன் ஸ்டைலையும் மாற்ற வேண்டும் என்கிறார் செந்தில்குமார்.

- யாழ் ஶ்ரீதேவி

ஆசிரியர்கள் பல விதம் !!

ஆசிரியர் பணியென்பது பல பேர்களுக்கு லட்சியப் பணி. அதுவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலானது.

     இத்தகைய அரிதான பணி வாய்ப்பை பெற்ற நம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லையென்பதே உண்மை.

*முதல் ரகம்*
      மாணவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டு தங்களது பணியை சிறப்பாக செய்பவர்கள். கற்பித்தல் பணியை திறம்பட செய்வதோடு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஊட்டுபவர்கள். சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுபவர்கள்.

     சில நேரங்களில் மாணவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகளைச் செய்வதோடு மட்டுமில்லாமல் உயர்வான நிலைக்கு ஏற்றிவிடும் ஏணிபோல் செயல்படுபவர்கள்.

 *இத்தகைய ஆசிரியர்களை தங்களது வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மிக அதிகம்*

*இரண்டாம் ரகம்*
     தங்களுக்கு ஆசிரிய பணி கிடைத்துவிட்டது. வேலை செய்கிறோம்,  ஊதியம் பெறுகிறோம் என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

     கற்பித்தல் பணியிலும் எத்தகைய தேடுதலும் இல்லாதவர்கள். தானுண்டு, தன் பணியுண்டு என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

 *இவர்களைப் போன்ற ஆசிரியர்களால் பள்ளிக்கூடத்திற்கும், மாணவர்களுக்கும்  மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படாது.*

*மூன்றாம் ரகம்*
     இவர்கள் தான் மிக முக்கியமானவர்கள். தாங்கள் ஆசிரியர் பணிக்கு வந்ததையே மறந்துவிட்டு தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பள்ளிக்கூடங்களில் பாதிப்பை உண்டாக்குபவர்கள்.

    பள்ளிகளில் ஜாதி ரீதியாகவும், வேறு ஏதேனும் வகையிலும்  குழுக்களை ஏற்படுத்தி பிற ஆசிரியர்களுக்கு தொல்லை தருபவர்கள்.
              *தலைமையாசிரியருக்கு ஜால்ரா போடுவதும், மற்ற ஆசிரியர்களைப் பற்றி மற்றவர்களிடம் போட்டுக் கொடுப்பது, ஏதேனும் காரணத்தைக்கூறி பள்ளிக்கூடத்திலிருந்து Escapeஆகி விடுவது, தனியார் பள்ளிகளுக்கு ஏஜெண்ட் போல செயல்பட்டு ஆதாயம் பெறுபவர்கள்*

     மக்களிடையே அரசு பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கை ஏற்பட்டதற்கு இந்த மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முழுக் காரணம்.

     *எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதனையும் மீறி அரசு பள்ளிக்கூடங்களில் மிக இயல்பாக சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முதல் ரக ஆசிரியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.*

    . *ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் முதல் ரக ஆசிரியர்கள் நிறைய உருவாகி வருகிறார்கள். அவர்களின் ஆசிரியர்களை வழிகாட்டியாகக் கொண்டு*

மூ. மகேந்திரன்,
TNPGTA, கரூர்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எத்தனை எம்.எல்.ஏ கள் வாக்களிக்க வேண்டும் !!

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் என்ன நடக்கலாம்??

தமிழக சட்டசபை எண்ணிக்கை 234 - ஜெயா - சபாநாயகர் = 232
உடல் நல குறைவால், கலைஞர் பங்கேற்பது சந்தேகம்.. (232-1) எனவே, மொத்தம் 231.. இதில் பாதி 116 உறுப்பினர்கள் ஆதரித்தால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தப்பும்.. அவருடைய கடிதத்தின் படி, 124 உறுப்பினர்கள் ஆதரிகிறார்கள்.


ஒருவேளை, 8 காங்கிரஸ் உறுபினர்கள், நடுநிலை வகித்தால், வாக்கெடுப்பை புறக்கணித்தல், (231-8) இருப்பது 223. இதில் பாதி, 112 உறுப்பினர்கள் ஆதரித்தால் ஈபிஎஸ் ஆட்சி தப்பும்..

ஒருவேளை திமுக + முஸ்லீம் லீகும் எதிர்த்து வாக்களிக்காமல், நடுநிலையோ, புறக்கணிப்போ செய்தால், (223 - 90) இருப்பது, 133. இதில் பாதி, 67 உறுப்பினர்கள் ஆதரித்தால் ஈபிஎஸ் ஆட்சி தப்பும்..

கூகுள் நிறுவனத்திடம் வேலை கேட்ட 7 வயதுச் சிறுமி !!

இன்றைய காலத்தில் குழந்தைகள் சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தற்போது வளரும் குழந்தைகள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றனர். அதுபோல, இந்தச் சிறுமியின் செயலும் கூகுள் நிறுவனத்தை வியக்கவைத்துள்ளது.



இங்கிலாந்து ஹேரிபோர்ட் பகுதியைச் சேர்ந்த ச்லோ (7) என்ற சிறுமி, கூகுள் நிறுவனத்திடம் வேலைகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டியர் கூகுள் பாஸ், எனது பெயர் ச்லோ. கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புகிறேன். மேலும் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும். அதற்காக நான் சனி மற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்குச் செல்கிறேன்.

கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும்போது பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம். அங்கு வேலை பார்ப்பது விளையாடுவதுபோல் இருக்கும் என்று எனது தந்தை கூறியுள்ளார்.



நான் என்னுடைய வகுப்பில் சிறந்த மாணவியாக இருக்கிறேன் என்று, எனது ஆசிரியர்கள் என் தந்தையிடம் கூறியிருக்கிறார்கள். நான் மடிக்கணினியில் ரோபோட் கேம் விளையாடுவேன். எனக்கு கணினி என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் கணினி பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்வேன். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முகவரிக்கு என்னைப் பற்றிய குறிப்புகளை இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார்

இவ்வாறு ச்லோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. நீ தொழில்நுட்பம் குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உன்னுடைய கனவுகள் நனவாக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகம் விநியோகம்!

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில் கட்டாயமாக்கப்படவுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பள்ளிகள், வாரியத்தின் வலைதளத்தில் அதற்குரிய

மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், பாடத்திட்டம் ஒரே சீரானதாக இருக்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதாவது, டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுபடுத்திக்காட்ட ஒரு பூனையை வைத்து சோதனை செய்யும்வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் தனியார் வெளியீட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.

பாடப் புத்தகங்கள் அரசால் விநியோகிக்கப்படுவது பெற்றோர்களுக்கு ஒரு விடுதலையைக் கொடுத்துள்ளது. ஏனெனில், தனியார் வெளியீட்டாளர்கள் பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் பல பள்ளிகள் தங்கள் வளாகத்துக்குள்ளே ஸ்டோர்ஸ்களை வைத்துள்ளனர். பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் தனியார் வெளியீட்டாளர்கள், அதனுடன் பென்சில், ரப்பர் மற்றும் பிற எழுதுபொருள்கள் அடங்கிய ஒரு பாக்சை விற்பனை செய்கின்றனர். இந்தப் பொருட்கள் வெளியே வாங்கும் விலையைவிட அதிகமாக இருக்கிறது என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பல பள்ளி தலைமையாசிரியர்கள் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தனியார் வெளியீட்டாளர்கள் செய்து கொடுக்கின்றனர் என அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய மனிதவள அமைச்சகம், மார்ச் மாத இறுதிக்குள் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என என்சிஆர்டி-க்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கல்வி வாரியம் 2017-2018ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ-ஐ) நீக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிஎச்.டி. படிப்பில் தமிழகம் முன்னிலை!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிஎச்.டி. எனும் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மனிதவள அமைச்சகம் பதிலளித்தது. 
அப்போது, 2015-16ஆம் ஆண்டில் 3,973 பேருக்கும், கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 3,333 பேருக்கும் பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 கல்வியாண்டில் நாடு முழுவதும் 24,171 பேருக்கு பிஎச்.டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 16 சதவிகிதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், பிஎச்.டி. மாணவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அதாவது, 2,205 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா உள்ளது. இங்கு, 1945 பிஎச்.டி. மாணவர்கள் உள்ளனர் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, 2013-14 முதல் 2015-16ஆம் ஆண்டுகளில் 69,862 பேருக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பொதுச் செயலாளர் பசுபதி கூறுகையில், ‘நெட், செட் தகுதித் தேர்வு தவிர, பிஎச்.டி. படிப்பும் ஆசிரியர் நியமனத்துக்குத் தேவையான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் ஆசிரிய நியமனம் தேர்வு செயல்முறையின்போது, பிஎச்.டி. முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் மதிப்பெண், மாணவர்களை முனைவர் பட்ட படிப்பில் சேரத் தூண்டுவதில் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் 500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 500 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதுவும், பிஎச்.டி. மாணவர்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இலவசமாக விண்வெளி அழைத்து செல்லும் COHU!

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விண்வெளிக்கும் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. சில ரோபோக்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்துஅனுப்பிய புகைப்படத்தை நாம் சமீபகாலத்தில் அதிகம் கண்டிருப்போம் . அதன் படி மனிதர்களும் வேற்றுகிரகத்தில் வசிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று

வருகின்றன. அதனைத் தொடர்ந்து புதுமையான தகவலை வெளியிட்டுள்ளது பிரபல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான COHU நிறுவனம் . அந்த செய்தியில் அந்நிறுவனம் விரைவில் ஒரு மொபைல் கேம் ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், அதில் வெற்றி பெரும் நபர்களுக்கு, விண்வெளி செல்வதற்கு தி ஸ்பேஸ் நேசன் ஆஸ்ட்ரோநாட் ட்ரைனிங் ப்ரோகிராம் (SNAP) எனப்படும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் இலவசமாக விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

CUHU நிறுவனம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஒரு கேம்மில் வெற்றிபெற்றால் விண்வெளிக்கு இலவசமாக செல்ல முடியும் என அறிவித்திருப்பது பெரும் ஆவலை பல்வேறு தரப்பினரிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கேம் ஆனது விளையாடும் நபரின் மனநிலை மற்றும் உடல்நிலை என இரண்டையும் சோதிக்கிறது.நிஜ வாழ்வில் நமக்கு சில சவால்களை வழங்கி நமது திறமையை இந்த கேம் சோதனை செய்யும் என தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த கேம் வெளியிடப்பட்டு அதில் சிறந்த 12 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் வழக்கப்படும் பயிற்சியில் சிறந்து விளங்கும் நபர் ஒருவருக்கு இலவசமாக விண்வெளி செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

நீதியரசர் கவுலின் இரண்டாவது தாய் வீடு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான சஞ்சாய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு, பிரிவு உபச்சார விழா சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.



அவ்விழாவில், அவர் பேசியதாவது: என் தாய் வீட்டுக்கு அடுத்தபடியாக சென்னைதான் எனது இரண்டாவது தாய்வீடு என பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி டி.பிரசன்னா, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைமை நீதியரசரைப் பாராட்டி அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி பேசினார். இதையடுத்து, தலைமை நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு தனித்துவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு, மானம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. நீதிமன்றம் மக்களுக்கானது அது சாமானிய மக்களிடமும் நட்புடன் செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிந்தபின் நிருபர்களிடம் கூறுகையில், சிறந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இங்குள்ள மக்கள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அனைவரின் ஒத்துழைப்புமே நான் சிலவற்றை சாதிக்க காரணமாக இருந்தது. இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.

ஸ்ரீநகரை பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் கவுல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.