மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர்
மற்றும் துறைத்தலைவராக இருப்பவர் ஜெனீபா செல்வின் (வயது 45).
பல்கலைக்கழகத்தின் சினிமா கல்வியியல் துறையில் பகுதிநேர ஆராய்ச்சி மாணவராக இருப்பவர், குலமங்கலத்தை சேர்ந்த ஜோதிமுருகன் (32). இவர் பேராசிரியை ஜெனீபாவின் துறையில் நேர அடிப்படையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
ஜோதிமுருகனின் நடத்தை, வகுப்பு எடுப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த கல்வியாண்டில் அவருக்கு கவுரவ பேராசிரியர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் துறைத்தலைவரான பேராசிரியை ஜெனீபாவை அடிக்கடி சந்தித்து வேலைவாய்ப்பு குறித்து வற்புறுத்தி வந்தார்.
இருப்பினும், மாணவ–மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அவருக்கு பணி வழங்க முடியாது என ஜெனீபா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறைத்தலைவர் அலுவலகம் முன்பு ஜோதிமுருகன் நின்றிருந்தார்.
அப்போது, பேராசிரியை ஜெனீபா தனது அறைக்கு வந்தார். அவருடன் ஜோதிமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனீபாவை குத்தினார். அவரது கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவ–மாணவிகள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.
அங்கு, கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஜோதிமுருகனை மாணவ–மாணவிகள் சரமாரியாக தாக்கினர். பின்னர் ஜெனீபாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்தனர். அதன்பிறகு, பீபிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு போய்ச் சேர்த்தனர்.
தகவலறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆராய்ச்சி மாணவர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.
ஜோதிமுருகன் இதே பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.பில்., படிப்புகளை முடித்த பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம் துணைவேந்தர் அலுவலகத்தின் அருகில் உள்ள தமிழ்த்துறையின் 2–வது மாடியில் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த போது மு.வ.அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகம் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.
தகவல் அறிந்ததும், துணைவேந்தர் செல்லத்துரை ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பேராசிரியை ஜெனீபாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆஸ்பத்திரியில் பேராசிரியைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.
வேலைவாய்ப்பு கேட்ட ஆராய்ச்சி பிரிவு மாணவர் மீது பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் அவருக்கு மீண்டும் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கவில்லை. அதற்காக பேராசிரியையை கத்தியால் குத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். இதை மாணவ–மாணவிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள், ஆபத்து இருப்பதாக தெரிந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் சுற்றறிக்கையாக அனைத்து துறைத்தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்