யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/11/17

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில், 1,058 ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விபரம் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிரானது; பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நவ., 23 - 25 வரை நடக்க உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது, தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டியலை, உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, அவர்களையும் அழைத்து, பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவியில், 1,065 இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 23 முதல், 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.


இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, நிர்மலா மேல்நிலை பள்ளி மற்றும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வரும், 24, 25ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இன்ஜினியரிங் பாடங்களுக்கு, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், வரும், 23 முதல், 25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்

தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.அவரது அறிவிப்பு:
தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், நவ., 15ல் இருந்து, 25 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு சென்று, பதிவு செய்யலாம்.
விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 125 ரூபாய் மற்றும் இணையதள பதிவு கட்டணம், 50 ரூபாய் என, மொத்தம், 175 ரூபாயை பணமாக, மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்

தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற முடியும்.

CM CELL - கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..

மூன்றே மாதத்தில் மக்கும் மக்காச்சோள கழிவு 'கேரி பேக்'

கோவை:மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை இருப்பதால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மக்காச்சோள கழிவில் தயாரிக்கப்பட்ட 'கேரி பேக்' பயன்படுத்த, கோவை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதில், குறைந்தது, 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன. டீக்கடை, பழக்கடை, பூக்கடை, சந்தை, உணவகங்கள் மற்றும் ஜவுளி கடைகள் என, பல வகைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, மாநகராட்சி பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
பல வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, பயன்பாடு இன்னும் தொடர்கிறது. வணிக நிறுவனத்தினருடன் ஆலோசித்தபோது, 'நுகர்வோருக்கு ஏதேனும் ஒரு வகையில் பொருளை பார்சல் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. மாற்றுப்பொருள் அறிமுகப்படுத்தினால், மாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம்' என, தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து, பெங்களூருவில், மக்காச்சோள கழிவுகளில் 'கேரி பேக்' தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதன் மக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா, விலங்கினங்கள் உட்கொண்டால், உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என, விஞ்ஞான பூர்வமாக அலசப்பட்டது.
மூன்றே மாதத்தில் மக்கும் தன்மை கொண்டது; பொடிப்பொடியாகி, மண்ணோடு கலந்து விடும். சுடுநீரில் கரைந்து விடும். தீ வைத்து எரித்தாலும், துர்நாற்றம் வீசாது என்பது தெரியவந்தது. அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, 'லோகோ' அச்சிட்டு, கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வர்த்தக துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் அழைத்து, கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி - லோகோ' அச்சிட்ட, மக்கும் தன்மையுள்ள 'கேரி பேக்' மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படும். படிப்படியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிக்கப்படும்.மக்காச்சோள கழிவில் இருந்து, மக்கும் தன்மையுள்ள கேரி பேக் தயாரிப்பது எப்படி என, கோவையில் உள்ள தொழில்முனைவோருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தேவையான மூலப்பொருட்கள் தருவித்துக் கொடுக்கப்படும். தற்போது விலை அதிகமாக இருந்தாலும், அதிகப்படியானோர் பயன்படுத்த துவங்கினால், சற்று குறையும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

NAS 2017 - தேர்வு (13/11/2017) அன்று ஆசிரியர்களின் பணிகள்

+ Date: 13/11/2017
+ Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்
+ Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்
+ Field Investigaters பணிகள்
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்
+ தயார்நிலையில் இருக்க வேண்டியவை:
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need
+ NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது
+ உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்
+ Monitoring officers:
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்
+ Supervising Flying squad:
BDO / REVENUE துறை அலுவலர்கள்
+ FIELD INVESTIGATER :
B.Ed பயிற்சி மாணவர்கள் 
+ Portion: ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்

வங்கிக் கணக்கை ஹேக் செய்து நூதன கொள்ளை: அதிர்ச்சியில் கோவை!

கோவையில், வங்கிக் கணக்கை ஹேக் செய்து, 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, என்.ஜி.ஜி.ஒ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். துடியலூரில் இயங்கி வரும், ஶ்ரீ பரம சக்தி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக மேலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலரால் இவரின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆறுமுகம், "எனது மெயில் ஐ.டி-யை முதலில் ஹேக் செய்து, அதில் இருந்து சில ஆவணங்களை திருடியுள்ளனர். பின்னர், அந்த ஆவணங்களை வைத்து, எனது செல்போன் எண்ணை ட்யூப்ளிகேட்டாக எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது.
அந்த செல்போன் எண்ணைத்தான் எனது வங்கி பரிவர்தனைக்கு பயன்படுத்தி வந்தேன். எனவே வங்கிக்கு அழைத்தபோது, RTGS பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தேன். எனக்கு, போலீஸில் இருந்து சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், வங்கியில் இருந்து எந்த விதமான உதவியும் செய்யவில்லை" என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து, சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விகடன்

விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''

வங்கிகள் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு‛‛குட்பை'' சொல்லி, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது : ‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது . படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.

1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும்
2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.
3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும் அகவிலைப்படியை சேர்ந்து  கணக்கில் கொள்ள வேண்டும்.
4.HRA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து  grade I(b) கலத்தில் உள்ளவாறு  கணக்கிடவும்.
5.CCA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல்  உள்ளவாறு  கணக்கிடவும்.
6.மருத்துவப் படி அனைவருக்கும் ரூ. 300.மட்டுமே.
7.மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்  போக்குவரத்துப் படி ரூ. 2500.

8TH STD PRIVATE PUBLIC EXAM APPLY NOW:

திருமணமாகாத மகள் என்ற நிலையில் மனு கொடுத்து, பணி நியமனம் வழங்கப்படும் முன் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மின் வாரியததில் வாரிசு வேலை கொடுக்கலாம் :

12/11/17

JACTTO GEO : நீதிபதி பற்றி அவதூறு - 2 ஆசிரியர் சஸ்பெண்ட் :

ஜாக்டோ ஜியோ சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு  கடந்தமாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவரும்,
வெள்ளேகவுண்டன் பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான பொன்.ரத்தினம்,  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க  மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 5  பேரும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.

இதையடுத்து தலைமையாசிரியர் பொன்.ரத்தினம், ஆசிரியர் திருக்குமரன் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி  அலுவலர் பழனிசாமி உத்தரவிட்டார்.

நீட்' தேர்வு பயிற்சி மையம் 13ல் துவக்கம் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வு பயிற்சி மையத்தை வரும், 13ல் முதல்வர், பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநில அளவில், 412 இடங்களில் பயிற்சி மையம் செயல்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று பேசியதாவது:தமிழக பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாநில அளவில், 412 பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளன.

வரும், 13ல் முதல்வர், பழனிசாமி, முதல் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, பயிற்சியையும் துவக்கி வைக்கிறார். படிப்படியாக பிற இடங்களில் மைய செயல்பாடு துவங்கும். பயிற்சிக்காக இதுவரை, 'ஆன் - லைனில்' 75 ஆயிரம் மாணவ - மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு, டிசம்பருக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும்மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த எல்.முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதரமத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், உரிமைகளுக்கு கல்வி நிலையங்கள் மதிப்பளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.அவர்களையும் மற்ற மாணவர்கள் பயிலும் பொதுப்பள்ளிகளில் சேர்த்தால்தான் மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதல் பிற மாணவர்களுக்கும் ஏற்படும்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த உத்தரவில், ‘தமிழக அரசு, மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைத்திறன், உணர்வுகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்த வேண்டும். அவர்களை தொழில் சார்ந்த செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக் கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லூர்மட்டம், கீழ் ஆர்செடின், மேல் ஆர்செடின், நான்சச் ஆகிய குடியிருப்பு பகுதிகள், குடிநீரில் குளோரின் அளவு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நான்சச் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் திடீரென அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மதியம் சத்துணவு சாப்பிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வியப்படைந்தனர்.
அதனை தொடர்ந்து பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், இந்திரா நகர், பாரத் நகர், கல்குழி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், பாரத் நகரில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தினை ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தனிநபர் கழிப்பறை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ENGINEERING STUDENTS JOB RELATED NEWS | EDUCATION MINISTER:

பொறியியல் படித்த 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

பொறியியல் கல்லூரிகளில் படித்த 10 லட்சம் பேருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இதற்காக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 73 ஆயிரம் பேருக்கு இதற்கான பயிற்சிகள் வரும் 13ம்தேதி தொடங்கப்படவுள்ளது.  இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கவுள்ளார். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதன் மூலமாக மாணவ, மாணவிகள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. 
மேலும் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு நிதியுதவியாக 100 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 593 பொறியியல் கல்லூரிகளில் 10 லட்சம் பேர் படித்துள்ளார்கள். இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் படித்து முடிக்கும்போதே வேலைவாய்ப்புடன் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படும். பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து 7 பேர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். விழாவில், 347 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டது.

10th - NOMINAL ROLL OFFLINE MODE UPLOAD | DATE EXTENDED:

பி.எச்.டி ஆய்வில் புதிய நடைமுறை :

Image may contain: text

சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.!!!

சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.

அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம்.
6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் ‘முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ, அல்லது இணையதளத்தை (www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMIS புகைப்படம் பதிவேற்றம் விளக்கம்

DSE PROCEEDINGS- 23.08.2010 பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறுதல் குறித்தும் , தகுதிகாண் பருவம் குறித்தும் இயக்குநர் தெளிவுரை



இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 4 வாரத்தில் பதில் தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.   4 வாரத்தில்  பதில் தர அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடுவது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்த்தப்பட்ட ஊதியம் தொடர்பான பணிக்கு கட்டாய வசூல் .அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பள்ளிகளில் சாரணர் இயக்கம் கட்டாயம் : அரசு உத்தரவு

பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம்
கட்டாயம் தொடங்கப்பட வேண்டும். இந்த இயக்கத்தில் குறைந்தது 12 பேர் கொண்ட முழுமையான சாரணர் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக பள்ளியில் ஆர்வம் மிக்க ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மாவட்ட அளவிலான பயிற்சிகள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சிகளை வழங்கி ராஜபுரஸ்கார் விருது பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2009& TET போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில கூட்டம்*

2009 & TET மாநில போராட்டக்குழு தலைமையில் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்,*
*திருச்சி*

 *நாள்* :   12/11/2017 ஞாயிறு
 *நேரம்*:  காலை 10 மணி
 *இடம்* : _ஸ்ரீநிவாஸா மஹால்_
             No:1 டோல்கேட்,
     (சமயபுரம் டோல்கேட் )

 திருச்சி           
குறிப்பு*

*தடையாணை பெற நாம் தொடுத்த வழக்கின் தற்போதைய நிலை,  ஊதிய நிர்ணயப் படிவத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் "திரு.ராபர்ட்" அவர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்.*


*விரைவில் மிகப்பெரியவெற்றியை நிர்ணயிக்கும் இந்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், *மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கட்டாயம் கலந்து கொண்டு*

*உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு அனைத்து ஆசிரிய உறுப்பினர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.* 


100% வருகையை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் உங்கள் மாவட்டத்தில் கலந்து கொள்ள உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் பட்டியல் அளித்திடவும்.

அவசரமாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை காரணமாக ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ளவும். *சரியாக 10 மணிக்கு அனைவரும் வந்துவிடவும்.* *


*நம் வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க இருப்பதால் அனைத்து வட்டார & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்...*

*கூட்டம் நடைபெறும் வழித்தடம் குறித்த முழுவிவரமும் அடுத்த பதிவில் அளிக்கப்படும்*.

இடம்குறித்த வேறு ஏதேனும் விபரங்களுக்கு ....

*திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* :-

கு.நவீன்குமார்
9080471884
9787663319

ச.இராஜ்குமார்
9942134391
9677967596

இரா.சந்தோஷ்குமார்
9715051314

மூ.விஜயராகவன்
9600576563

நன்றி!

 *2009 & TET மாநில போராட்டக்குழு.*

ஆசிரியர்கள் கலந்து கொள்வது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டிய மாநில தொடர்பாளர்கள் :

திரு.ரெக்ஸ் ஆனந்தகுமார்.
9942430990
திரு. ஞானசேகரன்
9952226177
திரு. வேல்முருகன்

9842147354

நாஸ்' தேர்விற்கு புதிய கட்டுப்பாடுகள் : திணறும் மாநில அரசு

தமிழகத்தில் 'நாஸ்' எனப்படும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அடைவு ஆய்வு (நேஷனல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வு நடத்த, இந்தாண்டு பல புதிய
கட்டுப்பாடுகளை மத்திய
மனிதவள மேம்பாட்டு துறை விதித்துள்ளது.

இதனால் புகார் இல்லாமல் நடத்தி முடிக்க, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்யும் வகையில் 'நாஸ்' தேர்வு நடக்கிறது. இதற்கு முன் 2013ல் தேர்வு நடந்தது. அதன் பின் இந்தாண்டில் நவ.,13ல் நடக்கிறது. மாவட்டங்கள் தோறும் 61 பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு, 61 பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 51 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் என 'ரேண்டம்' முறையில் ஒவ்வொரு பள்ளியிலும் தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் கற்றல் அடைவு திறன் ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் 2013 தேர்வில், மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர் அடைவு திறனை விட எட்டாம் வகுப்பு மாணவர் திறன் மிக குறைவாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இத்தேர்வை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனர்களே மேற்பார்வை செய்தனர். அப்போது மாணவர்கள் விடை எழுத, அவர்கள் உதவியதாக சர்ச்சையும் ஏற்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்: இதனால் இந்தாண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வு நடத்த ஆசிரியர் பயிற்றுனருக்கு பதில் பி.எட்., இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் தேர்வு நடத்த உள்ளனர்.தேர்வை கண்காணிக்க எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர்களுக்கு பதில் ஒன்றியம் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,), துணை கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு நாளன்று அதே பள்ளி தலைமையாசிரியர் அங்கு இருக்க கூடாது. அப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள், தேர்வு நடத்துவோரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். கலெக்டர் நியமித்த வருவாய்த்துறை குழு, சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் என பல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இந்த புதிய மாற்றத்தால் மாநில கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், " புதிய நடைமுறைகள் தேர்வு மையம் அமைந்துஉள்ள பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.


அச்சத்தில் ஆசிரியர்கள் : மாணவர் அடைவு ஆய்வு மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் தெரியவரும். எஸ்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) மூலம் ஆசிரியர்களுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதற்காக மாணவரின் அடைவு திறனை பாடங்கள் வாரியாக மனிதவள மேம்பாட்டுத்துறை மதிப்பீடு செய்யும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் தெரியவரும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுக்குப்பின் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ,

கணினி ஆசிரியர்களின் பணிக்காண கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறையா அ பதிவு மூப்பு என்பது குறித்து அரசின் பரிசீலணையில் உள்ளது..

திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.

1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம்சேர்த்து கணக்கிடவும்*

*2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.*

*3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும்
அகவிலைப்படியை சேர்ந்து  கணக்கில் கொள்ள வேண்டும்.

*4.HRA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனிஊதியம் ரூ. 2000 சேர்ந்து  grade I(b) கலத்தில் உள்ளவாறு கணக்கிடவும்.


*5.CCA கணக்கிட,  அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனிஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல்  உள்ளவாறு  கணக்கிடவும்.

11/11/17

TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும்,
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது.
இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சியாமளா ஆகியோர் கூறியதாவது:-சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து விலக்கிவிட்டார் கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங்களாக தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம்பளத்தையும் வாங்கிவிட்டனர்.பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட்டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

 இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்கமுடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என்பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், ‘தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனரை நேரில் சென்று பார்க்க முயற்சித்த போது அவர் சந்திக்கவில்லை.மேலும், செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப்- 4 மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக உள்ளது. இதனால் 500 காலிப்பணியிடங்கள் அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4
இரண்டையும் ஒரே தேர்வாக நடத்தப்போவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பழைய குரூப்-4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 100 வினாக்கள் பொதுஅறிவு பாடம் இடம்பெற்றது.

வி.ஏ.ஓ., தேர்வில் 80 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 25 வி.ஏ.ஓ., தொடர்பான வினாக்கள், 95 வினாக்கள் பொதுஅறிவு இடம்பெற்றன.

வினாத்தாள் எப்படி இருக்கும்
இந்நிலையில் தற்போது குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதால் வினாத்தாள் முறை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கூறுகையில், ''புதிய தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா அல்லது பழைய நிலையே தொடருமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐயத்தை போக்க டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றனர்.

நடுநிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் B.Ed ஊக்க ஊதியம் வழங்க இயலாது விளக்கம்.!!



2013 TNTET - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்க என்று கூறப்பட்டது.  இதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை தனக்கு நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் பாடப்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் சரியா பதிலை எழுதிய  மனுதாரர் வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணையை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நீதிபதி ஒரு வக்கீல் குழுவையே நியமித்து தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்பதையும் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும் முடிவுக்கு வந்துள்ளார்.

எனவே, வங்க மொழி அல்லது சமஸ்கிருதம் என்ற 2 பதில்களும் சரிதான் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வங்க மொழி என்று எழுதியவர்களுக்கு 1 மதிப்பெண் தருவதைப்போல் சமஸ்கிருதம் என்று பதில் எழுதியவர்களுக்கும் ஒரு மதிப்பெண் தரவேண்டும். எனவே, இந்த விஷயத்தில் தனி நீதிபதி 1 மதிப்பெண் மனுதாரருக்கு தரவேணடும் என்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

மேலும் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தையும் அரசிடமே இந்த நீதிமன்றம் விட்டுவிடுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்!!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., 
பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப்- 4 மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக உள்ளது. இதனால் 500 காலிப்பணியிடங்கள் அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4
இரண்டையும் ஒரே தேர்வாக நடத்தப்போவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பழைய குரூப்-4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 100 வினாக்கள் பொதுஅறிவு பாடம் இடம்பெற்றது.

வி.ஏ.ஓ., தேர்வில் 80 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 25 வி.ஏ.ஓ., தொடர்பான வினாக்கள், 95 வினாக்கள் பொதுஅறிவு இடம்பெற்றன.

வினாத்தாள் எப்படி இருக்கும்
இந்நிலையில் தற்போது குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதால் வினாத்தாள் முறை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கூறுகையில், ''புதிய தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா அல்லது பழைய நிலையே தொடருமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐயத்தை போக்க டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் : சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு!!!

அறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு
அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து அறநிலையத் துறை செயல்அதிகாரிபதவியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு,ஜூன், 10ல் தேர்வு நடந்தது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், தகுதியானவர்களுக்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

மோட்டார் வாகன பராமரிப்பு துறையில், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பதவியில், மூன்று இடங்களுக்கு, வரும், 17ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான விபரம் மற்றும் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

                                            
ரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை 
கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ
அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.

இந்த ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.

இந்த கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன.

1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.

2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.

3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.

பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை

சென்னை: அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில்
, பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம்.
கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டி.ஆர்.டி.ஓ-வில் பணி: ஐ.டி.ஐ பட்டதாரிகள் விண்ணப்பங்களுக்கு வரவேற்பு!!

                                                 
இந்த ஆய்வகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
பணியிடம்: தமிழ்நாடு
பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ
பணியிடங்கள்: 146
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 26.11.2017 
மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!

                                          
                            
பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், 
பயோடெக்னாலஜி உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள University Research Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

கல்வித் தகுதி: எம்எஸ்சி, எம்.இ. / எம்.டெக்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் நேர்காணல்

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 20.11.2017.

மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/wp-content/uploads/2017/11/URFAdvt20.11.2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் -தேசிய அடைவு ஆய்வு 2017 சார்பாக வழிகாட்டுதல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

கனமழை எச்சரிக்கை!!!

EMIS - STUDENT ID CARD - ONLINE PHOTO UPDATE - STEP BY STEP PROCEDURE

FLASH NEWS : 23.08.2010 பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறுதல் குறித்தும் , தகுதிகாண் பருவம் குறித்தும் இயக்குநர் தெளிவுரை!!!



உயர்கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடத்த புதிய அமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை
நுழைவுத் தேர்வு நடத்த புதிய அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் உருவாக்க ரூ 25 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியத் தேர்வு முகமை என்று நிறுவனத்தை தொடங்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தேசிய முகமை நடத்தும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி!!!

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் வெற்றியை நோக்கி*


*மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு. ..*

*இன்று நடைபெற்ற 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஊதியமுரண்பாடுகுறித்த
வழக்கில் 7th pay fixation option form AEEO அலுவலகத்தில் கொடுக்க நிர்பந்தம் செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இதை தாண்டி யாரேனும் வற்புறுத்தினால்   அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடுக்கலாம் என நீதியரசர் உத்தரவிட்டார்.இதுவரை நமது அலுவலகத்தில் கொடுக்காதவர்கள் பற்றி பிரச்சனை ஏதுவும் இல்லை.*


*விருப்ப படிவம் கொடுத்த ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குபடி  option form தற்போது கொடுக்கவேண்டியதில்லை என்று விபரங்கள் கூறி திரும்ப பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*திரும்ப பெறுவதற்கான படிவம் நமது சார்பில் ஞாயிறு 12.11.2017 அன்று மாவட்ட,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் வழங்கப்படும்*


 *வழக்கு நாம் எதிர்பார்த்ததை விட மிக மிக நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது.*

*வழக்கு குறித்து முழுமையாக தற்போது பதிவு செய்ய இயலவில்லை. வழக்கில்,இரண்டு முறையும்  விசாரணையில் நடந்தது என்ன??*

*வழக்கறிஞர் வழக்கில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் என்ன ? சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான ஆவணங்கள் என்ன ?? இறுதியில் நீதியரசர் வழங்கிய ஆணை குறித்தும் விரிவாக ஞாயிறு கூட்டத்தில் விளக்க உள்ளோம்...*

*அதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (12.11.2017) திருச்சியில் மாநில போராட்டக்குழு தலைமையில் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...*

*கண்டிப்பாக அனைத்து மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து சந்தேகங்களை தீர்த்து கொள்ள மாநில அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ..*

*விரைவில் தமிழக ஆசிரியர்கள் இயக்க வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்*


*ஜே.ராபர்ட்*
*மாநில தலைமை 2009&TET போராட்டக்குழு*

10/11/17

இணையதளத்தில் பாலிடெக்னிக் பாடங்களை வீடியோ வடிவில் பார்க்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் 83 பதிவுகளை வெளியிட்டார்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக் மாணவர்களின் கணக்கு, இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக பிரித்து வீடியோவாக எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டது.

அதில் முதல்கட்டமாக 83 வீடியோக்கள் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். கே.பி.அன்பழகன் இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கும் வசதியை தொடங்கி வைத்தார். DOTE, பாலிடெக்னிக் என்று யூடியுப்பில் பதிவு செய்து இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்கலாம்.நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:அண்ணா பல்கலைகழகத்தில் துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

 புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,670 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக அந்த தொகைகல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஆவணங்கள் சரிபார்த்து இனிமேல் தான் வழங்கப்படும். ஏற்கனவேவிண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் உதவித்தொகைவழங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக அரசுத்தரப்பில் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

 நியாயமான முறையில் எங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்து சேரும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன்  உள்ளனர். ஆகவே தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, சரியான முறையில் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் சின்னம் எங்களுக்கு வந்து சேரும் என்று  நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டி தேர்வு பயிற்சி வகுப்புக்கு 73 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

சாரண-சாரணியர் இயக்கத்தில் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான தலைமை பண்புக்கான பயிற்சி,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-சாரணர் இயக்கம் தன்னலம் கருதாது சேவை செய்து வருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு, உலகளவில் 216 நாடுகளில் 4 கோடி பேர் இதில் உள்ளனர். தமிழகத்தில் சாரண-சாரணியர் இயக்கம் பயிற்சி அளிக்க ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரிடம் இதுதொடர்பாக பேசி அவர்களுக்கு வைப்பு நிதியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு, அதன் மூலம் வரும் ஆண்டுக்கு வட்டித்தொகை ரூ.20 லட்சத்தை கூடுதலாக அவர்கள் பெறுவதற்கான ஆணை பெற்று தந்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில மாணவ-மாணவிகளின் புத்தகங்கள் மழையால் நனைந்து போய் இருக்கின்றன. அவர்களுக்கு மாற்று புத்தகம் வழங்கப்படுமா?

பதில்:- எங்கெங்கு புத்தகம் சேதம் அடைந்து இருக்கிறது என்று சொன்னால், அவர்களுக்கு மாற்று புத்தகங்கள் வழங்கப்படும்.

கேள்வி:- மழைக்காலங்களில் விடுமுறை விடுவதற்கு கல்வித்துறை வசம் இருந்தது. இப்போது அது மாவட்ட கலெக்டர் வசம் சென்றுள்ளது. அதனால் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு வருகிறதே?

பதில்:- இதுதொடர்பாக முதல்-அமைச்சரோடு கலந்து பேசி விரைவில் அறிவிப்போம்.

கேள்வி:- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கட்டிடங்கள் அதிகளவில் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வருகிறதே?

பதில்:- அப்படி இல்லை. பயன்படுத்த முடியாத அளவில்சில கட்டிடங்கள் இருக்கிறது. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டி உள்ளது. அதை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், பொறியாளர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

கேள்வி:- போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்?

பதில்:- இதுவரை 73 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களிலே அது தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு...உரிமையும்... கடமையும்... பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டி

உடுமலை : ஜனநாயக தேர்தல் நடைமுறை குறித்து, இளையதலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிகளில், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
தேர்தல் கமிஷன் சார்பில், முழுமையான வாக்காளர் சேர்க்கை, தேர்தல்களில், நுாறு சதவீத ஒட்டுப்பதிவு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இருப்பினும், 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளராக சேரவும், சேர்ந்த பிறகு, தேர்தலில் ஓட்டளிக்கவும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்காக, கல்லுாரிகளில்,தேர்தல் ஆணையம் சார்பில், மாணவர்கள் பங்களிப்புடன், பேரணி, ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
தேர்தல் கமிஷன் உத்தரவுஇது குறித்த விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு வழங்குவது, மாற்றத்தை தரும் என கருதப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், வாக்காளர்களாக மாற உள்ள மாணவர்கள், நமது நாட்டின் தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், தேர்தல் ஆணையம் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த, உத்தரவிட்டது.அதன்படி, 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு, தேர்தல் நடைமுறைகள் குறித்த, வினாடி-வினா போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன.தேர்தல் ஆணையத்தின் முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல்பங்கேற்பு விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், இப்போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவர்கள் குழுவினரிடையே ஓட்டுச்சாவடி நடைமுறைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினம் உட்பட தேர்தல் நடைமுறைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.மாணவர்கள் ஆர்வம்ஆசிரியர்கள் கூறுகையில், 'வினாடி-வினா போட் டியில், முழுமையாக தேர்தல் நடைமுறைகள், விதிகள் குறித்த கேள்விகளே தயார் செய்யப்பட்டிருந்தன. மாணவர்கள், கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் அளித்து, வாக்காளர்களாக இணைந்து, தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வது ஜனநாயக கடமை என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதை வெளிப்படுத்தினர்', என்றனர்.

அதிகாரிகள் பார்வை

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரண்டு பேர் கொண்ட குழுதேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். திருப்பூர் மாவட்ட அளவிலான சுற்றில்வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான சுற்றுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிகளை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன், கோட்டாட்சியர் அசோகன், தாசில்தார்தங்கவேல் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையிட்டனர்.

வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

ஒரே ஒரு போன் போட்டு ₹ 50 ஆயிரம் சுருட்டல்!!!

2018 பொதுவிடுமுறை நாட்கள் விபரம்!!!

2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது
விடுமுறை நாட்கள்:*👇
*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*
*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*
*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*
*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*
*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*
*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*
*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*
*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*
*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*
*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*

*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*
*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*
*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*
*14. பக்ரீத் -22.08.2018- புதன்*
*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*
*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*
*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*
*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*
*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*
*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*
*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*
*22. மீலாதுன் நபி -21.11.2018- புதன்கிழமை*
*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*

தேர்தல் முடிவு: ஜோதிடர்கள் கருத்து வெளியிட தடை!!!

                                         
தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்துக்களை 
வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இன்று(நவ.,9) நடக்கிறது. குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தடை:

இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்தை வெளியிட கூடாது. இதை, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், கடைபிடித்து, சுதந்திரமாக தேர்தல் நடக்க, ஒத்துழைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு: டி.ஆர்.டி.ஓ-வில் பணி!

                                                   
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் 
(சி.வி.ஆர்.டி.இ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள அப்ரென்டீஸ் ட்ரெய்னீ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ

பணியிடங்கள்: 146

கல்வித் தகுதி: ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 26.11.2017

மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பள பட்டியல் சாப்ட்வேரில் ARREAR தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.நவம்பர் மாத சம்பள பட்டியல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்!!!

                                          

நடைமுறைபடுத்த முடியவில்லையெனில் மக்கள் நலத்திட்டம் எதற்கு-உச்சநீதிமன்றம் கேள்வி

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

                                              

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக 
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை தமிழகத்திலும், 13ம் தேதி தென் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!!

வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் 
உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

காற்று மாசு: உ.பி.யில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காற்று மாசுபாடு காரணமாக 
நாளை (நவம்பர் 10) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு அபாயகரமாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரிகள், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு மொரதாபாத்தில் 439, நொய்டாவில் 469, லக்னோவில் 430, ஆக்ராவில் 394, காஸியாபாத்தில் 372 என்ற அளவில் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நடைப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியைப் போல நொய்டாவிலும் நாளை (நவம்பர் 10) எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். நேற்று (நவம்பர் 8) ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாயின.

டெல்லியில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு கடுமையாக அதிகரித்துள்ளது (448). காற்று மாசுபாடு அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் சுகாதார அவசர நிலையைப் பிறப்பிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால், நவம்பர் 12 வரை வரை டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் 25 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் 11ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை : சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி
ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு!

                                        
2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு
ஆன்லைனில் நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று (நவம்பர் 9) அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கலந்தாய்வு ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் பொறியியல் சேர்க்கை செயலாளராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார்.

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!!!

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!
அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் 
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நேற்று (நவம்பர் 8) இடைநீக்கம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2010ஆம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் விதி 9 முதல் 11 வரை மற்றும் பகுதி 6, பிரிவு 6ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இதுவரை 10 தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2015 ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றி பெறாதவர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி குறித்து ஆய்வு செய்தது. ஆனால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த 1,025 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30% வழக்கறிஞர்கள் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும். போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பார் கவுன்சில்களும் வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு தான் வாக்காளர் பட்டியல் தயார் செய்து பார் கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தங்கள் சான்றிதழ்களை அனுப்பினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9/11/17

எதிர்காலம் கேள்விக்குறி....! கம்ப்யூட்டர் பாடப்பிரிவு தொடங்கிய பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் அரசு மெத்தனம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!!!

கோவை, நவ.8: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில எஸ்எஸ்ஏ உயரதிகாரிகள் அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதில், மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் சேதம், பாழடைந்த மற்றும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்களை போட்டோ எடுத்தும் அனுப்ப வேண்டும், என கூறப்பட்டது.

கோவை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உத்தரவின்பேரில் கோவை, திருப்பூர் என 22 ஒன்றியங்களில் வட்டார வளமைய அதிகாரிகள் பாழடைந்த கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்தும், போட்டோ எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.

இத்தகவல் தொடக்க, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளி தலைைம ஆசிரியர்கள் மூலம் பாழடைந்த கட்டிடங்கள், அதன் போட்டோ எடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாழடைந்த கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என எஸ்எஸ்ஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்காவிட்டல் மொபைல் சேவை துண்டிக்கப்படாது; தொலைத்தொடர்புத் துறை அதிரடி!!!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை
துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டல் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மொபைல் சேவையை துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

89 பேருக்கு பணிநியம ஆணை!!

                                                      

ட்விட்டர் தந்த எக்ஸ்டிரா மைலேஜ்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு 
கண்டறியப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு 100 மில்லியன் பயனர்களை அது எட்டியது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த ட்விட்டர் வசதியைப் பயன்படுத்திவருவது இதன் சிறப்பம்சம்.

உதாரணமாக, கடந்த அமெரிக்க தேர்தலின்போது ட்விட்டர் வலைதளத்தில்தான் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றன. அதேபோல், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் அதிகமாகப் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த அப்ளிகேஷனைப் பொறுத்தவரை 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற ஒரு கட்டுப்பாட்டினை ட்விட்டர் நிறுவனம் வகுத்திருந்தது. அதனால் பல்வேறு தகவல்கள் இதில் பதிவிட முடியவில்லை என்றும் வார்த்தைகளின் அளவினை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு பயனர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு செவிசாய்த்துள்ள டிவிட்டர் நிறுவனம் 140 எழுத்துக்களை 280ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் அதிகாரி அலிஷா ரோஷன் தனது வலைப்பூவில் (Blog) பதிவிட்டுள்ளார்.

ஆனால் இன்னும் ஜப்பான், கொரியா, சைனா போன்ற மொழிகளைக் கொண்டு 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவிட முடியும் என்றும் அதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: தேசிய திட்ட அமலாக்கத்துறையில் பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும்
தேசிய திட்ட அமலாக்கத்துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,270

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.70,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 19.11.2017

மேலும் விவரங்களுக்கு http://www.npiu.nic.in/PDF/News/Advt.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதிய அப்டேட், பழைய ஆப்ஷன்!

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்திவரும்
நிலையில், போனில் வாய்ஸ் கமான்ட் (வாய்மொழி உத்தரவு) மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியைக் கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது. முதலில் இது சிறிய தேடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இதன் மூலம் பல்வேறு செயல்களைச் செய்யும் வகையில் கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.

புதிதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில் நாம் கேட்கும் பாடல்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. 2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஷாசம் என்ற அப்ளிகேஷன் மூலம் இந்த வசதியை ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதேபோல் சோனி நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் டிராக் ஐடி என்ற அப்ளிகேஷன் இந்த வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியை மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பாடலின் சிறு பகுதியை பிளே செய்யும்பொழுது அதனை ஸ்மார்ட் போன் அருகினில் கொண்டு சென்றால் போதுமானது. அந்தப் பாடல் பெயர், அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் முதலான விவரங்களை எளிதில் கண்டறிந்து பயனர்களுக்கு வழங்கும்.

பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களாக 
இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்கள் சில இந்தியக் கல்லூரிகளுக்கு வந்து நேரடியாகப் பணிகளுக்கு இதுவரையில் ஆட்களைத் தேர்வு செய்ததில்லை.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் இந்த நிலையை முதன்முறையாகத் திருத்தியமைக்கவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) மாணவர்களை நேர்முகத்தேர்வின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடியின் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் டி.வி.தேவி பிரசாத் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எந்தவிதமான பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இது மாணவர்கள் தங்களது திறமைகளை மெய்ப்பிக்க உதவும்.

பணிகளுக்கான தேவையைப் பொறுத்தவரையில் வன்பொருள் பொறியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்களில் தேவை அதிகமாக உள்ளது. இன்டகிரேடட் சர்க்யூட், டிசைன் வெரிஃபிகேசன் போன்ற துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதேபோல மொபைல் கம்யூனிகேஷனில் 2டி - 3டி கிராஃபிக்ஸ் சார்ந்த திறமை பெற்றவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

ஹைதராபாத் ஐஐடியில் டிசம்பரில் நடக்கவுள்ள வேலைவாய்ப்புத் தேர்வுக்கு அங்கு பயில்கின்ற பி.டெக்., எம்.டெக். மற்றும் எம்.எஸ்ஸி ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 350 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த நேர்முகத் தேர்வில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாஃப்ட், பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றன.

அதிக டெபாசிட்: ஒரு லட்சம் நோட்டீசுகள்!!!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் பணத்தை 
டெபாசிட் செய்த சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் வரி ரிட்டன்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரமே வருமான வரித் துறை நோட்டீசுகளை வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் செலுத்திவிட்டு, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத 70,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இந்த நோட்டீசுகள் அனைத்தும் வருமான வரிச் சட்டம் பிரிவு 142 (1)-ன் கீழ் அனுப்பப்படவுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே போல, முன்பு சாதாரணமாக பணத்தை டெபாசிட் செய்து, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துவிட்டு, பணமதிப்பழிப்புக்குப் பிறகு அதிகமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சுமார் 30,000 நிறுவனங்களுக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இதற்காகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட 20,572 வரி ரிட்டன்களை வருமான வரித்துறை மீளாய்வு செய்யவுள்ளது.

இதுபற்றி வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், “50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தவர்களை எங்கள் நோட்டீசுக்கு பதிலளிக்க நாங்கள் கோருவோம். அவர்கள் ஒத்துழைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குவோம். 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் டெபாசிட் செய்தவர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பாலிடெக்னிக் : விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான, விரிவுரையாளர் பணியிடங்களுக்கான 
தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய கழகம் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என ஜூலை 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 1,70,366 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,33,567பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 % இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும். தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/POL2017/07112017/msg.htm. என்னும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி குறைகளைச் சுட்டிக்காட்டி, பொறியியல் பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிகள் அடிப்படையில் விரிவுரையாளர் தேர்வை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.