யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/16

இனி வருமான வரி கிடையாது ? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பாெதுபட்ஜெட்டில்வருமான வரி ரத்து செய்யப்படவாய்ப்புள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என அதிரடி அறிவிப்பால்கறுப்புப் பணத்தை வெளிக்காெண்டு வரமுடியும் என பிரதமர் மோடியின்எண்ணமாக இருந்தது. 

இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும்பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி அமளியில்ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
நாட்டின்பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, எதையும்செய்யத் தயாராக இருப்பதாக மோடிதிட்டவட்டமாக தொிவித்துளளாார். சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில்பேசும் போது, 'இன்னும் பலதிட்டங்கள் என் மனதில் உள்ளன' என, சொல்லியிருக்கிறார்.

அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள், அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், வரும் பிப்ரவரி மாதம்அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியை ரத்து செய்யப்பாேவதாகவும்,  அதற்குபதிலாக இரண்டு வரிகள் அமலில்வரப்பாேவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டங்கள் அமலில் வந்தவுடன், வங்கிமூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங்டிரான் சாக்சன்' வரி என்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்என்பதோடு, வருமான வரி ஒழிந்தால்நடுத்தர வகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பதேபிரதமரின் திட்டமாக உள்ளது என கூறப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன் அமைச்சர் பாண்டியராஜன்

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

தமிழகத்தில்அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப்பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதியஇ-மின்னணு பதிவேற்றத்துக்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்அனைவரும் பணிக்கு சேர்ந்தது
முதல்அவர்கள் ஓய்வு பெறும் வரையில்அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு, ஊக்கஊதிய உயர்வு,
பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவிஉயர்வு, பணிக் காலத்தில் பெற்றதண்டனைகள், அயல் பணி உள்ளிட்டவிவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ்ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வோர் அரசு ஊழியருக்கும்தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார்.
மேலும், பணிப் பதிவேட்டில் ஊழியரின் குடும்ப விவரம், கல்வித்தகுதிகள், உடல் தகுதிகள், குடும்பநல நிதி, வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அரசுஊழியரின் பணியிடமாறுதலின் போது, இந்தப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, ஊதியச்சான்றிதழுடன் உரிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்தப்பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கு ஒப்புதலாக ஒவ்வோர் அரசு ஊழியரும்ஆண்டுக்கு ஒரு முறை கையெழுத்திடவேண்டும்.
புத்தகவடிவிலான பதிவேடு: இந்தப் பணிப் பதிவேடுகள்ஆரம்ப காலத்திலிருந்தே தாள்கள் வடிவில் பெறப்பட்டு, பின்னர் புத்தக வடிவில் மாற்றப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகின்றன.
பணிப் பதிவேட்டின் பக்கங்கள் நிறைவு பெற்றதும், இரண்டாவதுபணிப் பதிவேடு பதிவு செய்யப்படும்.
ஆண்டுக்கணக்கில்பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேடுகள்கிழிந்துவிடும் நிலையும் உள்ளது. அவற்றை பைண்டிங்செய்பவர்களிடம் கொடுத்து தைத்துவைத்து பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
மின்னணுபணிப் பதிவேடு: இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும்நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மின்னணு பணிப் பதிவேடு (இ-எஸ்ஆர்) திட்டத்தில், தற்போதுள்ளகாகிதத்தால் ஆன புத்தக வடிவபணிப் பதிவேடுகளின் தகவல்களை அப்படியே மின்னணு முறையில் கணினியில்பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக்கருவூலத் துறையின் உத்தரவின் பேரில், மாவட்ட கருவூலஅலுவலர்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை மின்னணுமுறையில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாள்களுக்குமுன்பு தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, மாவட்டங்கள்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து, கருவூல அதிகாரிகள் இதற்கான ஆயத்தப் பணிகளைமேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒவ்வொருதுறையினரும் பணிப் பதிவேடு தகவல்களைச்சரிபார்த்து, அதை நிறைவாகத் தொகுத்துஅளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துவிழுப்புரம் மாவட்டக் கருவூல அலுவலர் இளங்கோபிரபு கூறியதாவது:
புத்தகவடிவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களின்பணிப் பதிவேடுகளைக் கணினி முறையில் தொகுத்துநவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருவூலஆணையரின் உத்தரவின் பேரில், இதற்காக பணிப்பதிவேடுகள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துத்தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்துத் துறைஅலுவலர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.
விரைவில்இந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய பயிற்சி பெற்றகுழுவினர் மாவட்டத்துக்கு வர உள்ளனர். இவர்கள், துறை வாரியாக தற்போதுள்ள பணிப்பதிவேடுகளின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வர்.
அதன்பிறகு, அந்தந்த துறை அலுவலர்கள், கணினிவாயிலாக பணிப் பதிவேடு தகவல்களைப்பதியவும், பராமரிக்கவும் முடியும்.
தேவைப்படும்போது அந்தத் துறையின் தலைமைக்கும், அரசுத் துறை ஆய்வுக்காகவும் பதிவேடுகுறித்த தகவல்களை இணைய வழியில் அனுப்பிவைக்கலாம். இதன்மூலம், புத்தக முறை பணிப்பதிவேடுக்கு விடை கொடுத்து, எளிதாகப்பதிவு செய்தும், பார்த்தும் பராமரிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசுவிரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
பணிகள்எளிதாகும்: இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில்உள்ள சுமார் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம்ஊழியர்களுக்கும் பணிப் பதிவேடு புத்தகமாகவேபராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நவீனத் திட்டம் நடைமுறைக்குவருவதன் மூலம் எளிதாகத் தகவல்களைப்பதிவு செய்யவும், பராமரிக்கவும் முடியும். காகித முறையால் பதிவேடுசேதமாவது தடுக்கப்பட்டு, தகவல்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன்இருக்கும் என்றனர் அவர்கள்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

மருத்துவபடிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும்
ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவகல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில்சேர, 'நீட்' என்ற தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சிலமாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்குவிலக்கு அளிக்கப்பட்டது.


ஆனாலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், தனியார் கல்லுாரிகளின், மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடந்தது. வரும் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் நடைபெறஉள்ளது. இதற்கு டிசம்பர் முதல்விண்ணப்பங்களை பெற, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதனால், இரு வாரங்களில், 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

'தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்'

தன்னம்பிக்கையுடன்தேர்வுக்கு செல்லுங்கள். வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும்,'' என, மாணவர்களுக்கு, மனநல பயிற்சியாளர்,
கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார். 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மனநல பயிற்சியாளர், கீர்த்தன்யாகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
கடந்தவைகடந்தவையாக இருக்கட்டும். உங்களின் படிப்புக்கு பல இன்னல்கள் வந்திருக்கலாம்; அவற்றை இனிமேல் நினைக்க வேண்டாம். உங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்துவிடுங்கள்; இப்போது புதிதாக பிறந்ததாகநினைத்து கொள்ளுங்கள்.


  பொதுத்தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்களேஇருப்பதால், அதை மட்டுமே நினைக்கவேண்டும். அதற்காக, தினமும், பல மணி நேரம்படிக்க துவங்குங்கள். உங்களுக்கு பிடிக்காத பாடமாக இருந்தாலும், பிடித்ததாககற்பனை செய்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்.வெற்றியை உங்களால் மட்டுமே பெற முடியும். நட்புடன், அருகில் உள்ள மாணவர்களைகட்டியணைத்து, புன்னகையுங்கள். தன்னம்பிக்கையுடன், கைகளை உயர்த்தி, 'ஜெயித்துக்காட்டுவோம்' என, கூறுங்கள். இவ்வாறுஅவர் பேசினார்.

கண்களைமூடி, கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்ட மாணவர்கள், தாங்கள்முன்னர் செய்த தவறுகளை உணர்ந்து, கண்களில் நீர் வடித்தனர். பின், தன்னம்பிக்கை பெற்று புன்னகையுடன், 'ஜெயித்துக்காட்டுவோம்' என, உறுதி கூறினர்.

விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவி

பிளஸ்2 தேர்வில், விடைத்தாளில் விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவிக்கு, 'தினமலர்' நிகழ்ச்சியில் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, பிளஸ்2 தேர்வில், சென்னை, பாரிமுனை, கொலம்பியன்ஸ்ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி வி.ரோமிகா, பொருளியல் பாடப்பிரிவில், 1,182 மதிப்பெண் பெற்றிருந்தார்.


விடைத்தாள்நகலை வாங்கிப் பார்த்த போது, தமிழ்தாளில் நான்கு மதிப்பெண்கள், கூட்டலில்விடுபட்டதை கண்டு பிடித்தார்.பின், மறு கூட்டலுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், 'மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை' என, தேர்வுத்துறை தெரிவித்தது. உடன், 'தினமலர்' நாளிதழ்அலுவலகத்தை, ரோமிகாவின் பெற்றோர் தொடர்பு கொண்டனர்.
அவர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்ணைபெற, 'தினமலர்' அலுவலகம் வழிமுறைகளை காட்டியது.பின், பள்ளிக்கல்வி மற்றும்தேர்வுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, விடுபட்டநான்கு மதிப்பெண்ணை மறு கூட்டலில் பெற்றார். இதன் மூலம் அந்த மாணவி, சென்னையில் மாவட்ட அளவில் இரண்டாவது, 'ரேங்க்' பெற்றார். ஆனால், மாவட்ட, 'ரேங்க்' பட்டியலில் மாணவியின் பெயரை, தேர்வுத்துறையும், கல்வித்துறையும்சேர்க்கவில்லை. 'தினமலர்' அளித்த வழிகாட்டுதலில், சென்னைமாவட்ட ஆட்சியரை அணுகி, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற்றதற்கான சான்றிதழை பெற்றனர்.
தேர்வில்சரியாக விடைகள் எழுதியும், அதற்கானமதிப்பெண்ணை பெற போராடி, ஜெயித்துக்காட்டிய மாணவி ரோமிகாவுக்கு, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவிக்கு, 'தினமலர்' ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி பரிசுவழங்கினார்.

'கிடைத்ததுஅங்கீகாரம்':

மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்

அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழகமாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவுதேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில்
வழங்கப்பட்டது.மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம்என, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசின் ஒதுக்கீட்டு முறையில், கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்குவிலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம், தனியார்கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு, 'நீட்' தேர்வின்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், 'நீட்' குறித்த விழிப்புணர்வுபெறவும், அகில இந்திய மருத்துவஒதுக்கீட்டில், தமிழக மாணவர்கள் இடங்கள்பெற வசதியாக, 'நீட்' குறித்த மாதிரிவினாத்தாள் தொகுப்பு புத்தகம், 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. 'தினமலர்' இதழுடன், வேல்ஸ் பல்கலையின், வேல்ஸ்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட்அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் நிறுவனம் இணைந்து, இந்த புத்தகத்தை வழங்கின. பின், 'நீட்' குறித்தஅடிப்படை தகவல்களை, வேல்ஸ் பல்கலை பேராசிரியைவிஜய் ஆனந்தி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



  இணைந்து வழங்கியோர்'தினமலர்' நாளிதழின், டி.வி.ஆர்.அகாடமி நடத்திய, ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதிஇன்ஜினியரிங் கல்லுாரி, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன்ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனங்கள், இணைந்து வழங்கின. நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்அண்ட் டெக்னாலஜி, வேல்ஸ் பல்கலை, பூர்விகாமற்றும் பெரி இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி நிறுவனங்கள், உறுதுணை வழங்கின

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்கவேண்டும்.மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.அவர்கள் குறிப்பிட்டஅளவிலான பணிகளை முடித்தால் மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.அதன்படி, ஊழியர்களின்பணிகள், அவர்கள் அளிக்கும் வாராந்திரசெயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும்.


வாராந்திரஅறிக்கை அல்லது குறிப்பிட்ட இலக்குகளைமுடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.அரசு ஊழியர் ஒருவர், முதல் 20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

 மக்களுக்குஉபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியாமுதலிடம் வகிப்பதாக
இஸ்ரோ செயற்கைக்கோள் மையஇயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்
.சேலம்மாவட்டம், தாரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  கடந்த ஓராண்டில், இஸ்ரோ10 செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. அனைவரின் உழைப்பு காரணமாக இந்தச்சாதனை எட்டப்பட்டுள்ளது. சந்திரயான் செயற்கைக்கோள் அதன் துருவ வட்டப்பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான்அனுப்பியப் படங்களைக் கொண்டு சந்திரயான் 2-இன்செயல்பாடுகள் குறித்த சோதனைகள் தற்போதுநடைபெற்று வருகின்றன.அடுத்த கட்டமாக சந்திரயான்2 நிலவில் இறங்கிச் சோதனை செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. நிலவில்6 சக்கர வாகனத்தை இறக்கி முழுமையான ஆய்வுகளைச்செய்வதற்கான சோதனைப் பணிகள் பெங்களூரில்முழு வீச்சில் நடந்து வருகின்றன. சந்திரயான்அனுப்பிய படங்களைக் கொண்டு நிலவில் உள்ளகனிம வளங்கள் குறித்து ஆய்வுகள்செய்யப்பட்டன. அதனடிப்படையில், நிலவில் இருப்பதைப் போன்றபாறைகள், நாமக்கல் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், நாமக்கல்லில் இருந்து, 50 டன் பாறையை எடுத்து, பொடியாக்கி நிலவு போன்று உருவாக்கம்செய்து அந்தப் பொடிகளைத் தூவி, சந்திரயான் 2-இன் செயல்பாடுகள் சோதனைசெய்யப்பட்டு வருகின்றன.இந்தச் சோதனைகள் அனைத்தையும்வெற்றிகரமாக முடித்த பிறகு 2017-ஆம்ஆண்டு இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில்சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பப்படும். ஆதித்யா திட்டத்தின் கீழ்சூரிய மண்டல ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. தொழில்நுட்ப ரீதியில் சவாலான பணியான, சூரியனின்புவியீர்ப்பு விசையில் ஆதித்யா செயற்கைக்கோளை நிலைநிறுத்தும்பணி நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் சூரியனின்இயக்கத்தை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா வடிவமைக்கப்பட்டிருப்பதால், சூரியன் பற்றிய கூடுதல்தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.


புவியின்பருவ நிலையைத் தாண்டி, சூரியனின் பருவநிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம், அண்டங்களின் கதிரியக்கத்தைமுழுமையாக அறிந்துகொள்ள முடியும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியின் மூலம்விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அரங்கில் முக்கியஇடம் பிடித்துள்ள இந்தியா, மக்களுக்கு உடனடி பலன் தரும்வகையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.அடுத்த நான்கு ஆண்டுகளில்ஆதித்யா திட்டம் வாயிலாக முழுமையாகதகவல்களைப் பெறுவதற்கான, முதல் கட்டப் பணிகள்தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.

கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!

பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளிதலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு
அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைதுசெய்யப்பட்டார்.

 முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சிஉள்ள ஒடிசாவின் பர்ஹாம்புரில் உள்ள ஒரு பள்ளியின்தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார் திலிப் குமார் ஆச்சாரியா.புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார்நடத்திய சோதனையில், அவர், பல்வேறு வீடுகள், நிலம், தங்கம் என, 3.4 கோடிரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வருமானத்துக்கு அதிகமாக, அவர், 2 கோடி ரூபாய்சேர்த்துள்ளதாக கூறி, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவோருக்கு 7 ஆண்டு சிறை: வருமான வரித்துறை எச்சரிக்கை.

கருப்புப்பணத்தை சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனைஅளிக்கப்படும் என்று
வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது.


கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவிப்பு வெளியான நவம்பர் மாதம்8-ஆம் தேதிக்குப் பிறகு, அனைவரும் தங்களிடமுள்ளஅந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்செலுத்தி வருகின்றனர்.


மோடியின்அதிரடி அறிவிப்பை தொடர்ந்து மனை வணிக வியாபாரிகள், தங்க வர்த்தகர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாகசந்தேகிக்கப்படுபவர்கள் போன்றோர் கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்றிவருவதாக வருமான வரித் துறையினருக்குதொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இதையடுத்துதீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும்வருமான வரித் துறையினர், மிகஅதிகமான தொகையை பழைய 500, 1000 ரூபாய்நோட்டுகளாகச் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளிடமிருந்துபெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.2.5 லட்சத்துக்கும் மேல்பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை வங்கிகள்அளித்து வருகின்றன.

அந்த விவரங்களை ஆய்வு செய்து வரும்துறை அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய வகையில் அதிக தொகையைச்செலுத்தியவர்களிடம் அந்த வருமானத்துக்கான ஆதாரத்தைக்கேட்டு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோருக்குஇந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருவாய்ஆதாரத்தைக் காட்டும் உரிய ஆவணங்களுடன் வருமானவரித் துறை அதிகாரிகளைச் சந்திக்கவேண்டியதற்கான தேதி மற்றும் நேரம்அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணக்கில் வராத கருப்புப் பணத்தைசட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால், புதிய பினாமி பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறைஎச்சரிக்கை செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால்கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் கலக்கத்தில்உள்ளனர்.

இதுகுறித்துவருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில் வராதபணத்தை கண்டுபிடித்துள்ளோம். கடந்த நவம்பர் 8-ம்தேதிக்குப் பின்னர் 50 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

கணக்கில்வராத கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக பிறருடையவங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால், நவம்பர் 1-ஆம் தேதி முதல்அமலுக்கு வந்துள்ள "பினாமி பணப் பரிவர்த்தனைதிருத்தச் சட்டத்தின்" கீழ் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்.

அதாவது, தங்களது கணக்கில் வராத பணத்தை சட்டவிரோதமாகபிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட்செய்தால் 7 வருட சிறைத் தண்டனையும்கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.


கருப்புப்பணம் முறைகேடாக வங்கிகளில் செலுத்தப்படுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தனர்.

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

மத்தியஅரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும்2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில்கிடைக்கிறது. ரூ.500
இதுவரை தமிழகத்துக்குவந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரைவிற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும்கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டுபொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடிவருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்தபோதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டுவினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண முடியும் என்றசூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டுஎப்ேபாது வரும் என்பது தொடர்ந்துகேள்விக்குறியாகி வந்தது. இது குறித்துஅந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதியரூ.500 நோட்டு ஒரு சிலமாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுஉள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்தபணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில்புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்படவாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்” என்றார்.

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

மத்திய அரசு ஊழியர்களுக்குவாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும்நடைமுறை விரைவில்
அமலுக்கு வரவுள்ளது.
 இதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைவிரைவில் கொண்டுவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள்வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையைசமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், முடிக்கப்பட்டபணிகள், நிலுவையில் உள்ள பணிகள் பற்றியவிவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு "செயல்திறன் அடிப்படையில் ஊதியம்' என்ற முறையைஅனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஏழாவது ஊதியக்குழு கடந்த ஜூலை மாதம்பரிந்துரை செய்தது.
அவர்கள்குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடித்தால்மட்டுமே, அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும் என்றும் அந்தக் குழுபரிந்துரை செய்தது.
அதன்படி, ஊழியர்களின் பணிகள், அவர்கள் அளிக்கும்வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, அவர்களுக்கு வருடாந்திர அளவில் தர மதிப்பீடுசெய்யப்படும். வாராந்திர அறிக்கை அல்லது குறிப்பிட்டஇலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்படவாய்ப்புள்ளது.
அரசு ஊழியர் ஒருவர், முதல்20 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றவில்லையெனில் அவரது ஊதிய உயர்வைநிறுத்தி வைக்க முடியும்.

சிறப்பாகப்பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதுஎன்று ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CCE -SECOND WEEK TAMIL TENTATIVE ANSWER KEY IN SINGLE PAGE FOR 1 to 8th Std

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடையாணை கீழே...( இத்தடையாணையின் காரணமாகவே இவ்வாண்டு வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது)



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்தியஅரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பளமுன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் ரொக்கம்

பிரதமர்மோடி கடந்த 8–ந் தேதி500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாதுஎன்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்புமக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்தியஅரசின் குருப்–சி ஊழியர்கள்தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாகரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படிசென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்குரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காகரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–

பணத்தட்டுப்பாடு

பிரதமர்மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாகபணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள்செயல்படாததால் அதை எடுக்க முடியாமல்அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைஏற்பட்டது.

இதன் காரணமாக மத்திய அரசின்ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்குஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

முன்பணம்


இதை கருத்தில் கொண்டு மத்திய அரசுஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர்மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாகவழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படிநவம்பர் மாதம் கொடுக்க வேண்டியஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதிவரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர்அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கியபிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடுகுறையும்.

19/11/16

CCE.இரண்டாம் வார தேர்வு.21.11.2016,திங்கள்-
25.11.2016-வெள்ளி

தமிழ் -விடைகள்
1 ம் வகுப்பு

1. ஈ. ஆலமரம்
2. இ.அகல்
3. ஈ.  கால்
4.  இ.ஆப்பம்
5.  ஆ. ஆ
6.  ஆ. அ
7.  ஆ. தாத்தா
8. ஆ.காகம்
9. ஆ.மாங்காய்
10. இ.ஸ்டாபெரி
   
2 ம் வகுப்பு-தமிழ்

1.இ. உறுதியுடைய
2. அ. கலை-மலை
3. ஈ.  கண்-காளை
4.அ. எழுதினாள்
5. ஆ. கோலி-கோழி
6.ஆ.கற்போம்
7.இ.மிதிவண்டி
8.அ.முடிந்தது
9.ஆ. திருப்பதி
10. இ.கைபேசி                        
 3 ம் வகுப்பு-தமிழ்

1.அ.அழகு
2.ஈ.மலைகளின் அரசி
3.இ.புத்தகங்கள் இருக்குமிடம்
4.ஈ.வளவன்,பந்து
5.ஆ.செயல்
6.அ.விளையாடினான்.
7.இ.நனியுண்டு
8.அ.வீரம்,வெல்லம்
9.ஆ.மரம்
10.ஆ.கடல்+கரை                        
 4 ம் வகுப்பு-தமிழ்

1.அ.மூதுரை
2.ஈ.தொட்டில்
3.இ.தென்னை
4.இ.வெற்றிலைக்கொடி
5.இ.வயல்
6.அ.பள்ளியிலிருந்து
7.ஆ.திண்ணையில்
8.இ.பூட்டியிருந்தது
9.ஈ.அறிமுகமான
10.ஆ.பலர்                        
6 ம் வகுப்பு -தமிழ்

1.ஆ.3
2.ஆ.வா
3.ஆ.குதிரையோட்டம்
4.அ.வந்தார்
5.அ.மாலா பழம் பறித்தாள்
6.அ.நட்பு
7.ஆ.இரு எழுத்தும் நெடில்
8.அ.உறுமும் புலி
9.இ.கத்தும்
10.அ.ஒற்றுமை                        
 5 ம் வகுப்பு-தமிழ்

1. அ. குழந்தை
2. ஈ. தோல்வி
3. அ. பொறாமை
4.  இ.( நேற்று   காலையில் உணவு    
உண்டேன்
5. ஈ.  தன் கையே தனக்குதவி
6. ஈ.  புத்தகங்கள் விற்பனை
7. அ.  11நாள்
8. ஈ.  வள்ளுவர் அரங்கம், சென்னை
9.  இ. சமையல்
10. இ.நுழைவுக்
கட்டணம் கிடையாது.                        
 7 ம் வகுப்பு

1. ஈ .நான்காம் தமிழ்ச்சங்கத்தை
2. ஈ.அரைஞாண்கயிறு விற்கிறான்
3.  ஈ. அவன் உடமை எனக்கு வேண்டும்.
4. இ.இறந்தகாலம்
5. ஆ.வினாக்குறி
6. இ.காவிரி ஆற்றின் தென்கரையில்
7. இ. பேரூர்
8. இ.அமைந்து+உள்ள
9. ஈ.தன் தந்தையிடம்
10. ஆ.இடப்பெயர்                        
 8 ம் வகுப்பு-தமிழ்
1.ஈ. உ0
2.ஈ.ஆந்தை அறியது
3.இ.புனல்
4.இ. வென்று வந்தாள் -பெயரெச்சத்தொடர்
5.அ.தமிழ்நாடே திரண்டது-இடவாகுபெயர்
6.அ.சுப்பிரமணியன்
7.ஆ.15
8.அ.பாஞ்சாலிசபதம்
9.இ.அரசு+அவை
10.ஈ. 1,3 ம்

CCE - SECOND WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

Breaking Now வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

வங்கிகளில்500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம்

முதியர்வர்கள்மட்டுமே நாளை பழைய நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்: வங்கிகள் சம்மேளனம்
முதியோர்களுக்குமட்டுமே நாளை வங்கிகளில் பணம்விநியோகம் செய்யப்படும்.