யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

ஆசிரியர்நியமன தகுதி தேர்வு விவகாரத்தில்தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாகஇணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதிவிசாரணை நடைபெறும் என்று சுப்ரீம்
கோர்ட்டுநேற்று உத்தரவு பிறப்பித்தது.

வழக்குதாக்கல்
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டஅரசாணை எண் 25–ல் ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையானஇட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும்பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சிமற்றும் எஸ்.டி பிரிவினருக்குமட்டுமே வழங்க வேண்டும் எனவிதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்குமுன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்புஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன்மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இருவேறுதீர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டவழக்கில், தமிழக அரசின் அரசாணையில்அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில்தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டுதமிழக அரசின் முடிவு தேர்வுஎழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்குதடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னைஐகோர்ட்டு, அதன் மதுரை கிளைஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகிதமதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ்முறையை ரத்து செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்ததேர்வில் கலந்து கொண்ட லாவண்யாஉள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அக்.4–ல் இறுதி விசாரணை
இந்த மனுவின் மீதான விசாரணைநேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யாதரப்பில் மூத்த வக்கீல் நளினிசிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழகஅரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர்ஆஜரானார்கள்.
விசாரணைதொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவானஇறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கைதள்ளி வைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும்மேலும் சில மனுதாரர்கள் தாக்கல்செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்தமாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்குஎடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வழக்கு தொடர்பாக மதுரைஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவுசரி என்றும் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும்ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக