யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு-ஆசிரியர் சங்கத்தினர் இன்று முடிவு?-விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரிபிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குகண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை,
'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு

விடுத்துள்ளனர்.
இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்டபிரதான அரசியல் கட்சிகள் பலவும்ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில்பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதனால், மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்டவணிக நிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நல சங்கமும்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பால்விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள்மொத்த விற்பனை மார்க்கெட் வியாபாரிகளும், 'பந்த்' போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், மறைமுகமாக ஆதரவளிக்கும் என்பதால், முழு அள வில்தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கும் என, விவசாய சங்கங்கள்கூறின.

ஆசிரியர்கள்இன்று முடிவு: ஆசிரியர் சங்கத்தினர்இன்று சென்னையில் கூடி, விவசாயிகள் நடத்தும்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, முடிவு எடுக்க உள்ளனர்.

புதுச்சேரியிலும்'பந்த்'
தமிழகத்தைப்போலவே, புதுச்சேரியிலும் நாளை, முழு அடைப்புக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில், புதுச்சேரியில்பஸ்கள் ஓடாது; அனைத்து கடைகளும்மூடி இருக்கும்' என, புதுச் சேரிவணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஓரணியில்திரள வேண்டும்!

கர்நாடகஅரசைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புநடத்தும் முழு அடைப்பில், கொங்குஜனநாயக கட்சி பங்கேற்கும்.தி.மு.க., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ளநிலையில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கவேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும்ஓரணியில் திரள வேண்டும்.

நாகராஜ்நிறுவன தலைவர், கொங்குநாடு ஜனநாயககட்சி
ரயில் மறியல் போராட்டம்!
கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிரான வன் முறைவெறியாட்டத்திற்கு, மத்திய அரசே பொறுப்பு. ஏதோ தமிழகத்திற்கும், கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்டபிரச்னைஎன்பதை போல், மத்திய அரசுவேடிக்கை பார்க்கிறது. இந்த மெத்தனப் போக்கைகண்டித்து, நாளை, சென்னை யில்என் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்நடக்கிறது.தி.மு.க., - அ.தி.மு.க., மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒருமித்தகருத்தோடு காவிரி பிரச்னையை அணுகிஇருக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரு க்குஅழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள்
ஓட்டல்கள்பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழக அரசின் சட்டரீதியிலான முயற்சிகளை வலுவிழக்கச் செய்து விடும். கடையடைப்புபோராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.
வெங்கடசுப்பு, சீனிவாசன், கே.எல்.குமார்நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

மருந்துகடைகள் திறப்பு
கடையடைப்புபோராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள்சங்கம் ஆதரவு தெரிவிக் கிறது. அதே நேரத்தில், உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதால், நோயாளிகளின்நலன் கருதி, நாளை ஒருநாள் மட்டும் காலை, 11:00 மணிக்குமேல், மருந்து கடைகள் திறக்கப்படும்.

செல்வம்செயலர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக