யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/16

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

புதிய வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்..!! வரவேற்ற பயன்பாட்டாளர்கள்

மும்பை: வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகளில் வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், 
தனது பயனாளர்களுக்காக ஏற்கனவே வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது விடியோ கால் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என மூன்று தளங்களில் இந்த விடியோ கால் வசதி இயங்கும். இதற்கு நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று உங்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், விடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.

அதில் நீங்கள் விடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் இணைக்கப்படும். இந்த விடியோ கால் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் பேச விரும்பும் நபரும் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் பேச விரும்பும் நபருக்கு விடியோ கால் வசதி இணைக்கப்படவில்லை என்றாலோ அல்லது உங்கள் மொபைலில் இந்த வசதி சப்போர்ட் செய்யாது என்று காட்டினாலோ, தயங்காமல் உடனடியாக வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்த விடியோ கால் வசதி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக