யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/15

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
9400 x  2.57 = 24,158
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 24,158    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 25,438
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 21,150
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 21,790
********************
வித்தியாசம் :3,648
********************
தோராய ஊதிய உயர்வு : 14%

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்..

*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.


*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.

*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள்ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு 

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்.

*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.

*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம் 

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும்.நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்.

*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும்ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.

இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:


தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள்மற்றும் சிறப்பு மருத்துவர்கள் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000/ முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000/ முதல் ரூ.3,91,000/ வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவுதிஅரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRC: Primary upper primary crc dates announced...

Topic: Remedial Teaching for late Bloomers

Primary CRC

State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015

Upper Primary CRC

State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

IGNOU:Hall Tickets for December 2015 Term End Examination

520 பொது அறிவு கேள்வி பதில்கள்----தகவல் துளிகள்

Govt school VS Private school---தகவல் துளிகள்,

Heart attack when alone at home---தகவல் துளிகள்

JOBS RELATED GOVERNMENT AND OTHER WEBSITES---தகவல் துளிகள்

Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.---தகவல் துளிகள்

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER

இேதா ஒர கணித விதைத !----தகவல் துளிகள்,

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய ---தகவல் துளிகள்

20/11/15

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?

தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125%
= 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% )
= 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% )
= 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்......

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.

கடந்த, 2010ல், 'அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற, 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டாண்டன் குழு பரிந்துரைத்தது. இது தொடர்பான வழக்கில், மூன்று பல்கலைகள் நீங்கலாக, 41 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து அறிக்கை தர, பல்கலை கழக மானியக் குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதில், மூன்று பல்கலைகள் அங்கீகாரம் பெற்றன.
எஞ்சிய, 38 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து, புதிய தரப் பட்டியலை வழங்கும்படி, என்.ஏ.ஏ.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஏ.ஏ.சி., தரப்பில், 38 பல்கலைகளை ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விவரம்: கடந்த, 2012ம் ஆண்டு, என்.ஏ.ஏ.சி., ஒழுங்குமுறை விதிகளின்படி, 38 நிகர்நிலை பல்கலைகளும் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனால், இந்த நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து இயங்கலாம். மேலும், இந்த பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அது, இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தர வரிசைப் பட்டியல் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிகர்நிலை பல்கலைகள் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை, 2016, ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
இதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தங்களின் எதிர்காலம் குறித்து, பரிதவித்து வந்த, 2 லட்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. 

இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை

புதுடில்லி: ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 48 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், 55 லட்சம் பேர், ஓய்வூதியம் பெறுகின்றனர். தற்போதைய ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
இதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைக்கப்படும். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய வீதம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2014ல், ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, தன் அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்தது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் விபரம் வருமாறு:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் மற்றும் இதர படிகள் சேர்த்து, 23.55 சதவீத அளவுக்கு மொத்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதில், ஊதிய உயர்வு மட்டும், அடிப்படை சம்பளத்தில், 16 சதவீதமாகவும், இதர படிகள், 63 சதவீதமாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஓய்வூதியதாரர்
களுக்கான ஓய்வூதிய உயர்வு, 24 சதவீதமாக இருக்க வேண்டும்.* ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். கேபினட் செயலர்
களுக்கும், அவருக்கு சமமான அந்தஸ்து உள்ள அதிகாரி
களுக்கும், 2.50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.* இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும், 3 சதவீத சம்பள உயர்வும், 24 சதவீத ஓய்வூதிய உயர்வும் வழங்க வேண்டும்.
* ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே பட்ஜெட்டிற்கு சென்று விடும்.
* 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' முறையை, ராணுவத்தினருக்கு மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, செலவுகள் துறை செயலர் தலைமையில், செயலகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், 0.65 சதவீதம் நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.* மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையானது, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊதியக்குழுவின் இந்தப் பரிந்துரைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டதும் அமல்படுத்தப்படும். 2008ல் நியமிக்கப்பட்ட, ௬வது ஊதிய குழு, மத்திய அரசு 
ஊழியர்களுக்கு, 35 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது

பள்ளியின் மேற்கூரை ஓடுகள் விழுந்து புத்தகங்கள் நாசம்

பலத்த மழையால் அரசுப் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள்ளே விழுந்ததில் புத்தகங்கள் சேதமடைந்தன.

ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி அன்சாகரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா காந்தியும், உதவி ஆசிரியராக கோவிந்தியும் பணியாற்றி வருகின்றனர்.


இப்பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் மாணவர்களின் புத்தகங்கள் சேதம் அடைந்தன. வியாழக்கிழமை காலை பள்ளியைத் திறக்க வந்த தலைமையாசிரியர் வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் விழுந்து மழைநீர் புகுந்தது குறித்து உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடம் சென்று சேதமடைந்த பள்ளி வகுப்பறையைப் பார்வையிட்டார். பின்னர் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கூரை சேதமடைந்திருப்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
        இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.
பரிந்துரைகள் விவரம
்*.அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
*.இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும
்*.குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
*.ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
*.ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும
்*.பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.
*.பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.
*.தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.
*.இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.
*.நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்
*.இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!

தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் மொபைல் போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.
இந்தியாவில், வாரந்தோறும் இண்டர்நெட் பயன்படுத்தும் இளைஞர்களில், சுமார் 85% பேர் ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ளனர். இதில் சமூக வலைதளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் 43% பேர் தினமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்; 42% பேர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். இளைஞர்களில் 11% பேர் மொபைல் போன் வழியே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் முறைகளை வாரம்தோறும் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16-30, 31-45, 46-65 வயதுடை 3 பிரிவினருமே மொபைல் போனில் செலவிடும் நேரத்தில் பாதியை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும்

புதுடெல்லி,மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள்
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்குஅதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.இந்நிலையில், 7-வது சம்பளக்கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.
கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:
* மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும் 
* சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள் முழு நேரம் இயக்கப்படும் 
* மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என, இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது கட்டமாக, விண்ணப்பங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவற்றை கொண்டு, கள ஆய்வுக்கான விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் விவரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. ஒரு சில மாவட்டங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கள ஆய்வை துவக்கி 
உள்ளனர்.பெரும்பாலான மாவட்டங்களில், நாளை முதல் கள ஆய்வை துவக்க உள்ளனர். ஆய்வின் போது விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால், ஓட்டுச்சாவடி அலுவலர், தனக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில், 'சரி' என குறிப்பிடுவார். தவறு இருந்தால், 'மொபைல் ஆப்ஸ்' மூலம், உடனடியாக திருத்தம் மேற்கொள்வார்.
கள ஆய்வு விவரமும், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி டிச., 5க்குள் முடிக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பரில் துவங்கி, அக்., 24ல் முடிந்தது. மூன்று நாள் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, 17 லட்சம்; நீக்க, 1.76 லட்சம்; பெயர் திருத்தம் செய்ய, 2.69 லட்சம்; முகவரி மாற்ற, 1.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக, விண்ணப்பத்தில் இருந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.

எனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுவையில் மழை பெய்யும்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவுப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. காற்றின் மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, கடல் பகுதியில் நிலவும் ஈரம் மிகுந்த காற்றை நிலப்பகுதிக்குள் இழுக்கும் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தில், சங்கரன்கோயில் மற்றும் கடம்பூரில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு

ஸ்ரீரங்கம் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததால், விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில், தனக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆறு பேருக்கு, காலியாக உள்ள, அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி வழங்கவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மோகன், காமராஜ், ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த துறைக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களை மாற்றவும், முதல்வர் திட்டமிட்டு உள்ளதால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட இனத்தவரை விமர்சித்த பிரச்னையில் சிக்கிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுார் கூட்டத்தில், சொத்துகள் குறித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வளர்மதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி ஆகியோருக்கு, முதல்வரை சந்திக்க, அழைப்பு சென்றதை தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர்.அவர்களில், முக்கிய பணிகளில் ஈடுபட்ட ஆறு பேருக்கு, முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை வழங்க, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அழைக்கப்பட்டு இருந்தவர்களில், ராசிபுரம் முன்னாள் எம்.பி., சரோஜாவும், முன்னாள் எம்.எல்.ஏ., ராசு ஆகியோரும் அடங்குவர்.

-- நமது சிறப்பு நிருபர் --

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய ஒரே சிடி தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த சிடி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.


இதை அவர்கள் பாடவாரியாக பிரின்ட் அவுட் எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.

மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித்தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தனித்தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஓ.பி.சி., மாணவர்களுக்கு உ.பி., சலுகையோ சலுகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என வகைபடுத்தப்பட்டுள்ள, ஓ.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. 

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் ஓட்டு, 52 சதவீதம் உள்ளது. ஓ.பி.சி., மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 30 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என உள்ளது. 

வரும், 2017ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இந்த மாநிலத்தில், ஓ.பி.சி., பிரிவினரின் ஓட்டுகளை குறிவைத்து, அந்தப் பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான உச்ச வரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, மாநில சமூக நலத்துறை, நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிப்பு

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கவும், அடிப்படை சம்பளாக 16 சதவீதமாகவும், இதர படிகள் 63 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனை 24 சதவீதம் வரையில் உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் தனது அறிக்கையை அமல்படுத்தும் படியும்
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 வகையான படிகளையும் ரத்து செய்யும்படியும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grade pay விற்கு பதிலாக புதிய முறை அறிமுகம்
இடைநிலை ஆசிரியர் new level will b 5
B.T Asst level 7
P.G level 8
For BT entry level pay 53600
Sec.Grade 32900
P.G. 58600

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7வது ஊதியக் குழுவின் அறிக்கை முழு விவரம்

19/11/15

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு

ஒர பளளிககடததகக ஆயவாள ஒரதத வநதார

மீன் உணவு சாப்பிட்டு வாழ்க நலமுடன் நண்பர்களே

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது:

சந்தனம், குங்குமம் மற்றும் திருநீறு இடுவதின் உண்மையான பயன்கள்:-

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்...

ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106:

உங்கள் செல்போன் எண் மறந்துவிட்டதா ..!

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

கணிணி உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள எளிய வழிகள்!

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்

வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை

தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு 
உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் நனைந்தும் சேதமாகி விட்டன.

பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மீண்டும் இலவசமாக வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பட்டியலை விரைவில் சேகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 
உள்ளது.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.


இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. 
விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 மட்டும் போதாது! தேர்தல் கமிஷன் கோரிக்கை

புதுடில்லி,:'இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என்ற தேதி மட்டுமே, 'கட்-ஆப்' தேதியாக உள்ளதை மாற்றி, மேலும் பல தேதிகளை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. தற்போது, நம் நாட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களே, வாக்காளர்களாக,
தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும். இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், புதிய வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 'ஜனவரி, முதல் தேதியில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்' என, விதிமுறை உள்ளது. இதனால், ஜனவரி, 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தால், 18 வயது பூர்த்தியானவர்கள் கூட, ஓட்டளிக்க முடியாத நிலை உள்ளது. இவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு, அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை 
நிலவுகிறது. இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காக, 'ஜனவரி 1 என்ற, ஒரே ஒரு தேதியை மட்டுமல்லாமல், வேறு சில தேதிகளையும், கட்-ஆப் தேதிகளாக அறிவிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டஅமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இடையே, விரைவில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. 

தலைமைஆசிரியர் திடீர் விடுமுறை வகுப்பறையின் பூட்டை உடைத்து பாடம் நடத்திய மாற்று ஆசிரியர்

பொள் ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட கஞ்சம்பட்டி அருகே உள்ள பொன்னேகவுண்ட னூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் தலைமை ஆசிரியரே வகுப்பறையை திறப்பது வழக்கம்.

   இந்நிலையில், நேற்று, தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவில்லை. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறை திறக்கப்படாததால் வாசலிலேயே வெகு நேரம் காத்து கிடந்தனர். தகவலறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல துவங்கினர். மதியம் வரை தலைமை ஆசிரியர் வராததால் அப்பள்ளி செயல்படவில்லை. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  இதையறிந்த மாவட்ட துவக்க கல்வி அலுவலர் காந்திமதி, பொன்னேகவுண்டனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது, பள்ளி வகுப்பறை பூட்டியிருப்பதை பார்த்தார். பின் பூட்டை உடைத்து வகுப்பறை திறக்கப்பட்டது. தொடர்ந்து கஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணி பு ரியும் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து, பிற்பகலுக்கு பின் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட துவக்க கல்வி அலுவலர் காந்தி மதி கூறுகையில், ‘பொன்னேகவுன்டனூரில் உள்ள துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர், நேற்று எந்த வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார்.

  இதனால், பள்ளி வகுப்பறை பூட்டு உடைக்கப்பட்டு, மதியம் முதல் மாற்று ஆசிரியர் மூலம் பாடம் கற்பித்து கொடுக்கப்பட்டது. பள்ளி பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் யாராக இருந்தாலும், விடுப்பு எடுக்கும் போது முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதி முறை உள்ளது. ஆனால், விஜயலட்சுமி எந்த வித தகவலும் தெரிவிக்காமலும், பள்ளி வகுப்பறைக்கான சாவியை கொடுக்காமலும் இருந்துள்ளதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என் றார்.

கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ம. வீ. செந்தில்குமார் மீது நடவடிக்கை கோரி கரூர்,தாந்தோணி,க.பரமத்தி,அரவக்குறிச்சி,
கிருஷ்ணராயபுரம்,கடவூர்,தோகைமலை,குளித்தலை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்த வட்டார நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
கரூரில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஜ. ஜெயராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்ஏ. இராஜா, பொருளாளர் இரா.
ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் டிச.8 அன்று மாவட்ட அளவில் கரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதில், செயலாளர் பா. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் நடத்தப்படுவது எப்போது? பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ‘டெட்‘ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

இதேபோல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் நவோதயா பள்ளி போன்ற, மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியாற்ற விரும்புபவர்கள், சி.பி.எஸ்.இ. அமைப்பு நடத்தும் ‘சிடெட்‘ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு இதுவரை 3 முறை மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. 

2 ஆண்டுகளாக நடைபெறவில்லை

இந்த நிலை யில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் ஆசிரியர் பணியில் சேரு வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாமல் இருப்பது, அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக பி.எட். பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதி முறையை சி.பி.எஸ்.இ. அமைப்பு சரியாக பின்பற்றி வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் முதல் சிடெட் தேர்வு கடந்த பிப்ரவரி மாதமும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பர் மாதமும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டுக்கான (2016) தேர்வு தேதிகளும் அறிவிக்கப் பட்டு விட்டன.

மீண்டும் நடத்த வேண்டும் 

இந்த நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்பட வில்லை. சிறப்பு தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பி.எட். படிப்பு மற்றும் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித்தேர்வை மீண்டும் நடத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே. சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு: 2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியின்போது ஏற்படும் பல்வேறு இன்னல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களின் உடல்நலம், குடும்பச் சூழல், பணி நிலை, ஆசிரியைகளின் பிரச்னை, பணியாற்றும் பள்ளிகள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளிகளில் கல்வி பாதிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 100 முதல் 150 கி.மீ. தொலைவில் தேர்தல் பணிக்கு அனுப்புவதால் அவர்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, ஆசிரியைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கர்ப்பிணி ஆசிரியைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடிப் பணிக்குச் செல்லும்போதும், பணி முடிந்து திரும்பும்போதும் ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்ய வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவலர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் பணியிடம் குறித்து அளிக்கப்படும் 2ஆவது கட்டப் பயிற்சியின்போது, தேர்தல் பணிக்கான மையம், அதற்கான ஆணை வழங்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி':

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 
இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.

இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. 
விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க உதவுங்கள்: பள்ளிகள் எஸ்.எம்.எஸ்.,

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச., 23க்குள், இரண்டாம் பருவத் தேர்வுகளை முடிக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.ஆனால், பருவமழையின் தீவிரம் காரணமாக, 10 நாட்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், பெற்றோர் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. அதில், 'மழை விடுமுறையால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விடுமுறை நாட்களில், மாணவர்கள் வீட்டில் பொழுதைக் கழிக்காமல், பாடங்களை படிக்க, பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்; இவ்விஷயத்தில், பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது- நமது நிருபர் -.

ஆரோக்கியப்பச்சை மூலிகை ஆய்வில் உயிரியியல் மாணவி: காந்திகிராம பல்கலை ஏற்பாடு:

ஆரோக்கிய பச்சை மூலிகையில் உள்ள வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில், காந்திகிராம பல்கலையின் உயிரியியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார்.சீனர்களிடையே 'ஜின் செங்' எனப்படும் பாரம்பரிய மருத்துவ மூலிகை பிரபலம். 
உடல் ஆரோக்கியம், ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வேதிப்பொருட்கள் அதில் உள்ளன. அதன் வேர்கள் மூலம் சீன மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டனர்.மருத்துவ குணமுள்ள ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் மட்டுமே உள்ளதை தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மூலிகையின் வேதிப்பொருட்கள் குறித்த ஆய்வில் காந்திகிராம பல்கலை உயிரியல்துறை மாணவி சசிகலா ஈடுபட்டுள்ளார்.அவர் கூறியதாவது: 1788ல் அகஸ்தியர் மலைக்காடுகளில் இவ்வகை மூலிகை இருந்தது. இதன் தாவரவியல் பெயர் 'டிரைகோபஸ் ஜைலானிக்கஸ்'. பூமிக்குள் நீளமான தண்டினை கொண்டிருக்கும்.
வெற்றிலைக் கிழங்கு குடும்பத்தை சார்ந்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து நாடுகளிலும் இருந்தாலும், அதிக மருத்துவ குணமுள்ள 'டிராவன்கோரிகஸ்' என்னும் ஆரோக்கிய பச்சை மூலிகை மேற்கு மலைத் தொடரில் அகஸ்தியர்(பொதிகை) மலைக்காடுகளில் மட்டுமே வளர்கிறது. இதன் பயன்பாடு 1987 வரை வெளியுலகிற்கு தெரியவில்லை.ஆராய்ச்சியாளர்கள், காணி பழங்குடிகளுக்கு ஏற்பட்ட தொடர்பால் இதன் பயன் வெளியுலகிற்கு தெரிந்தது. 

இம்மூலிகையின் (பாதி பழுத்த) பழத்தை உண்பதன் மூலம் சக்தியுடன், உணவே இல்லாமல் ஆராக்கியத்துடன் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால், காந்தி கிராம பல் கலையில் அந்த மூலிகை, மற்றும் பழங்களில் உள்ள வேதிப்பொருள்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு உள்ளோம், என்றார்.

விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்...


கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு"ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்...
நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...ஜெ.திருமுருகன்கணித பட்டதாரி ஆசிரியர்,மூலத்துறைகோவை மாவட்டம்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்: வேலுர்:4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக சென்னை மாவட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) விடுமுறை என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.மற்றும் வேலுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

BRTE - கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில்ஏற்பட்டுள்ள கட்டிட சேத விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

தொடக்கக்கல்வி - அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் - இயக்குநர் செயல்முறைகள்

TRB மூலம் (2012-2014) கணித பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு

18/11/15

அரசு ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு

புதுடில்லி : 7ம் சம்பள கமிஷன் அறிக்கை வரும் 19ம்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
15 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

நடப்பு நிதி ஆண்டில்5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினைபங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசுதிட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடிரூபாய் கடந்தஅக்டோபர் மாதம்வரை பங்குச்சந்தை
சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகைசென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில்முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த முதலீடுகள் குறித்தஆய்வு மத்தியதொழிலாளர் துறைஅமைச்சர் தலைமையில்வரும் 24-ம்தேதி நடக்கஇருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் கூடுதலாகசேரும் தொகையில்5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர்குழு முடிவுசெய்தது. இதன்படிநடப்பு நிதிஆண்டில் 1 லட்சம்கோடி ரூபாய்கூடுதலாக வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தமுடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்புதெரிவித்தன.


முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம்தேதி பங்குச்சந்தையில்முதலீடு செய்யப்பட்டது. கடந்த இருநிதி ஆண்டுகளாகபி.எப். தொகை மீதானவட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதிஆண்டுக்கான வட்டி விகிதம் நவம்பர் 24-ம்தேதி நிர்ணயம்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்தது. இதனால்சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில்பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில்தமிழக அரசு
ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கமுன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள்மற்றும் அடிப்படைபணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்றுதலைமை செயலாளர்ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவுசெயலாளர் ஆகியோருக்குஇதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 


அந்த கடிதத்தில், “தலைமைசெயலகம் முதல்அனைத்து அரசுதுறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள்2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை“வெள்ள நிவாரணநிதி”யாக  நவம்பர்மாத சம்பளத்தில்பிடித்தம் செய்துகொள்ளசம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசுஅலுவலக ஒன்றியம்சார்பில் மாநிலதலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசுஊர்தி ஓட்டுநர்சங்க மாநிலதலைவர் ஜெயக்கொடிஆகியோரும் ஒருநாள்சம்பளத்தை பிடித்தம்செய்ய அரசுக்குகடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள்மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும்
மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் 80 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டன. அங்கு படித்த மாணவர்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை பொதுப்பணித்துறையும், தொடக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளும் இடிக்க கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 35 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.


முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறுகையில், “பழுதடைந்த கட்டடங்களில் வகுப்பறை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டங்கள் கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து பழுதடைந்த கட்டடங்களும் இடிக்கப்படும்,” என்றார்.

சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு

தொடர் மழையால், சத்துணவுமையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவுமையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97 ஆயிரம் பேர்பணிபுரிகின்றனர். 

இந்நிலையில், புயல், மழைக்குபள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள பள்ளிசத்துணவு மையங்களில், வெள்ளம் புகுந்துள்ளது. பல மையங்களின்மேற்கூரைகள் ஒழுகுகின்றன. எனவே, சத்துணவு மையஇருப்பு அறையில்அரிசி, பருப்பு, கொண்டைக் கடலைஉள்ளிட்டஉணவுப் பொருட்கள்பாதுகாப்பாக உள்ளனவா என, கண்காணிக்கும் படியும், மழையில் நனையாமல், பத்திரப்படுத்தும் படியும், அமைப்பாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரிப்பு

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது.


10 லட்சம் ஆலோசனைகள்


மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடைசியாக 1992-ம் ஆண்டில் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இன்றளவிலும், அந்த கல்வி கொள்கைதான் அமலில் உள்ளது.இப்போது, புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் ஓய்வு பெற்ற 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு கல்வியாளர் அடங்கிய குழு, நகல் கல்வி கொள்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்வி கொள்கையைஉருவாக்க ஏறத்தாழ 10 லட்சம் ஆலோசனைகளை இந்த குழு பரிசீலித்து வருகிறது.


அமைச்சர்களுடன் ஆலோசனை

இந்த குழு தனது நகல் கல்வி கொள்கைக்கான பணியை டிசம்பர் 31-ந் தேதி முடிக்கிறது. அதன் பிறகு, மத்திய அரசு பரிசீலனை செய்து பிப்ரவரி மாதம் இந்தகல்வி கொள்கையை ஸ்மிருதி இராணி பிரதமரிடம் தாக்கல் செய்கிறார்.2016-ம் கல்வியாண்டில், இந்த புதிய கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எத்தகைய கல்விமுறை பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பிற்கு எது எது உகந்ததாக இருக்கும் என்பது போன்ற ஏராளமான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மத்திய செகண்டரி போர்டு போன்ற பல அமைப்புகள் கருத்துகளை வழங்கி உள்ளன. மேலும், இந்த கல்வி கொள்கை தொடர்பாக ஸ்மிருதி இராணி, மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பயிற்சியில் புதிய வழிமுறை

கல்வித்துறை நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில்,புதிய வழிமுறைகளை அதிகம் புகுத்த வேண்டும்,என,கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்களின் தலைமைப்பண்பு, கற்பிக்கும் முறை,எளிமையான முறையில் கற்பித்தல்,ஆங்கில வழியில் கற்பித்தல்,ஆய்வுப்பாடம் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் குறித்து,ஆண்டுதோறும், கல்வித்துறை சார்பில்,ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ்,பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அப்பயிற்சியை வழங்குகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள்,பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன.இதில் நடப்பு கல்வியாண்டில்,பயிற்சிக்கு மட்டுமே பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவை தடைபட்டன.தொடர் பயிற்சிகளால் பாதிப்பு தவிர,தொடர் பயிற்சிகளால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்வித்திறன் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவில்லை;சில பயிற்சிகளில் மற்ற பள்ளிஆசிரியர்களே பயிற்சியளிப்பதால் அதில் பயனில்லை என சில பள்ளி தலைமையாசிரியர்களே கூறுகின்றனர்.


இதற்கு பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்,ஒரே முறையை பின்பற்றி பயிற்சியளிப்பதே காரணமாக உள்ளது.பயிற்சிகளின் நோக்கமே மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது. தற்போது அதன் நிலை மாறி,தொடர் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்விக்கே பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது.உடுமலை,சுற்றுப்பகுதியில்,நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சிகள் பாடவாரியாகவே நடத்தப்படுகிறது. இருப்பினும்,மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு அதன் கருத்துகளை கொண்டு செல்வது என்பது குறித்து பயிற்சியளிப்பதில் புதிய முறைகளை புகுத்த வேண்டும் என,எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு முக்கியத்துவம் அளித்து,இதற்கு மட்டுமே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பயனின்றி உள்ளது. இதனால்அரசின் நிதி ஒதுக்கீடு வீணடிக்கப்படுவதாகவும் பெற்றோர் புகார் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் இதனை ஆய்வு செய்து,புதிய வழிமுறைகளை பயிற்சியில் புகுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம்

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்

தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் பிரிட்டனில் வேலை பார்க்கும் வசதி செய்யப்படும்.


பிரிட்டனில் படிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு இந்தச் செய்தி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய விசார திட்டத்தை லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் அரசிடம் தரவுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறினால் காமன்வெல்த் ஒர்க் விசா இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய விசாத் திட்டம் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்கள் அதன் பிறகு 2 ஆண்டுகள் அங்கேயே வேலை செய்து பணம் ஈட்ட முடியும். இதுகுறித்து போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது: இந்திய மாணவர்களுக்கு புதிய விசா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இரண்டாவதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்கு சிறப்பு விசா திட்டத்தையும் அரசிடம் தரவுள்ளோம். பிரிட்டனில் 3-வது பெரிய வருவாய் உற்பத்தியாளர்களாக இந்திய மாணவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

பன்னிராண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவா சர்மா டாக்டர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு

கால்நடைகளுக்கு மருத்துவ உதவியை அளிப்பதற்காக மன அழுத்த கண்காணிப்பு திட்ட மாதிரியை உருவாக்கியதற்காக திவா சர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.


நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) இக்னைட் 2015 என்ற விருதை அறிவித்தது. இந்த விருதுக்கான போட்டியில் பள்ளிகளைச் சேர்ந்த 28,106 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 40 மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடைசியாக 31 மாணவர்களின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் என்ற வகையில் இந்தத் திட்ட மாதிரியை உருவாக்க போட்டி விதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் திவா சர்மாவின் திட்ட மாதிரி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெறவுள்ளார் திவா சர்மா. இதுகுறித்து திவா சர்மா கூறியதாவது: கால்நடைகளின் உடல்நிலை குறித்து அறிய இந்த சாஃப்ட்வேர் பயன்படும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பிரச்னையை அறிய முடியும். நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு, சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் வெப்பநிலையை இந்த சாஃப்ட்வேர் கண்காணிக்கும் என்றார் அவர்.

இந்த சாஃப்ட்வேரைத் தயாரிக்க டெல்லி ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளார் திவா. இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக ஐஐடி டெல்லி இன்னோவேஷன் மையத்தின் பிவிஎம் ராவ் இருந்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமா?

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப் படுகின்றன. 


திருநங்கைகளை புறக்கணிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

'நோய்களை பரப்பிவரும் நாய் களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர்.


ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை' என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


'தாங்கள் திருநங்கைகள் என தைரியமாக வெளியில் வருவோரை ஆதரிக்க மறுக்கக் கூடாது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த எம்.பாக்கியம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

என் 2-வது மகன் சதீஷ்குமார் (17) 25.9.2015-ல் மாயமானார். அவரை அல்லிநகரத்தைச் சேர்ந்த திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் கடத்தி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தும், என் மக னைக் கண்டுபி டிக்கவில்லை. சதீஷ்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுசிகுமார், திருநங்கைகள் சார்பில் வழக்கறிஞர் ரஜினி, அரசு வழக்கறிஞர் மோகன் வாதிட்டனர்.

நீதிமன்றத்தில் திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அவர்கள் நீதிபதிகளிடம் கூறியது:

குடும்பத்தால் புறக்கணிப்பட்ட திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோர் அல்லிநகரத்தில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்துவருகிறோம்ஒன்றாகவே சமைத்து சாப்பிடுகிறோம்.

கிராமிய கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று சம்பாதிக்கிறோம். மனுதாரர் மகன் பெண் தன்மை காரணமாக, ஜூன் மாதம் எங்களைத் தேடி வந்தார். நாங்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம். 

தற்போது அவர் மாயமானதற்கும் எங்களு க்கும் தொடர்பு இல்லை. இருப் பினும் மனுதாரரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கி பொருள்களை சூறையாடினர்.

தற்போது வீட்டில் ஒரு பொருளும் இல்லை. இந்த சம்பவத்தால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறுகிறார்.

திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பது கடினம். பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம் என கண்ணீர்விட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியது:

திருநங்கைகளுக்கு 3-ம் பாலினமாக உலகம் முழுவதும் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

மற்றவர்களைவிட திருநங்கைகளில் அதிக திறமை உள்ளவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 

பார்வை யற்ற, கேட்கும் திறனற்ற, ஊனத் துடன் பிறப்பவர்களை புறக்கணிப்பதில்லை. ஆனால் திருநங்கைகளை புறக்கணிக்கி ன்றனர். 

நோய் பரப்பும் நாய்களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர்.

ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.

அவர்களை சமூகத்தில் இழிவாக பார்க்கின்றனர்.

திருநங்கையாக இருக்கும் பலர் வெளியில் சொல்லாமல் உள்ளனர். ஆனால் நாங்கள் திருநங்கைகள்தான் என தைரியமாக வெளியே வருவோரை ஆதரிக்க மறுக்கக்கூடாது.

திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.

பின்னர், சிறுவன் மாயமான வழக்கு, திருநங்கைகள் தாக்க ப்பட்ட வழக்கின் விசாரணையை தேனி ஏ.டி.எஸ்.பி. கண்காணித்து, 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திருநங்கைகளுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருநங்கைகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் அறிவிப்பு வெளியீடு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளார். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, 2014 அக்., 30ல், சந்தீப் சக்சேனா பொறுப்பேற்றார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்தது.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கள்ள ஓட்டுகள் அதிகம் பதிவானதாக புகார் எழுந்தது. ஆளும்கட்சிக்கு சாதகமாக அவர் செயல் படுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.எனினும், அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க, தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதன் மூலம், தேர்தல் கமிஷனர்களின் பாராட்டை பெற்றார். தேர்தல் கமிஷனில், மூன்று துணை தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக இருந்தன.

எனவே, சந்தீப் சக்சேனாவை துணை கமிஷனராக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்ய, மூன்று பேரின் பெயர்களை, தமிழக அரசு, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது. மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்வதற்கான, ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. தற்போது, தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலராக உள்ள ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,

'தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ள அதிகாரியின் பெயரை, தமிழக அரசுக்கு அனுப்பும். தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, அவரை விடுவிக்கும். இப்பணி, ஓரிரு நாளில் நடைபெறும்' என்றனர்.

பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: நாடு முழுவதும் சீரான நடைமுறை

இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
 ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச காலஅவகாசம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் மாறுபட்டு இருப்பது கவனத்துக்கு வந்தது. இந்த அதிகபட்ச கால அவகாசத்தை நாடு முழுமைக்கும் சீராக்கும் வகையில், ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ளது.
 அதன்படி, ஒரு மாணவர் இளநிலை பட்டப் படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பை அந்தப் பல்கலைக் கழகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கால அவகாசத்தில் முடிக்க வேண்டும்.
 அவ்வாறு குறைந்தபட்ச காலத்தில் முடிக்க முடியாதவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளில் முடிக்க அனுமதி அளிக்கலாம். இதற்கு மேல், கால அவகாசம் அளிக்கப்படக் கூடாது.
 இருந்தபோதும், தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் இந்தக் கூடுதல் கால அவகாசத்திலும் பட்டப் படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு கூடுதல் அவகாசம் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
 இதையடுத்து, மூன்று ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை, அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை
:* தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும்
* மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும்
*பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
* வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும்
* பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்

அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம், 3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம் நுகர்வோர் கோரிக்கை....!

'தொடர் மழையால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 1.80 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர். மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

சிக்கல்:
இரண்டு வாரங்களாக, சென்னை உட்பட, பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மின் கட்டண மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 'சர்வர்' பழுது காரணமாக, மின் கட்டண மையங்களில் உள்ள கம்ப்யூட்டர், இணைய சேவை பாதிக்கப்பட்டு உள்ளது; இதனால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்:
இதுகுறித்து மின் நுகர்வோர் சிலர் கூறியதாவது:நவ., 7 முதல், மழை பெய்து வருவதால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், தினக்கூலி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, கடந்த வாரத்துடன் முடிவடைந்து விட்டது. 'மழை நீடிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடைசி தேதி முடிந்தவர்கள் அபராதம் இன்றி இந்த மாதம் இறுதி வரை, மின் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். எனவே, கால அவகாசம் அளிப்பது குறித்த அறிவிப்பை, மின் வாரியம் உடனே வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

'Group 2A' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை,

ஆசிரியர் பணி பதிவேடு பராமரிக்க கல்வித்துறை உத்தரவு....

7th pay commission அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு.....!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7th pay commission அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை pay commission அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் pay commission பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7th pay commission-ன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை 
இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:


"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு,அவர் கூறினார்.

ஆதார் எண் Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்