யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/15

8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவு!!!

பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, 
கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்து கொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்படுகிறது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்!!!

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 -விற்கு டிச.7-ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9-ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்புகளுக்கு டிச.14-ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது.

இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா!

மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர். பணிநிரவலில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு செய்யும் பள்ளியே, இறுதி செய்யப்படுகின்றன. இதில் பாரபட்சம் இருப்பதால் சிலருக்கு அருகில் உள்ள பள்ளிகளிலும், சிலருக்கு தொலைவிலுள்ள பள்ளிகளிலும் பணிமாற்றம் கிடைக்கிறது என சர்ச்சை எழுந்தது.

இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவதுபோல் கலந்தாய்வு மூலம் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்தாண்டு கோரிக்கை எழுந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தாண்டும் கல்வி அலுவலர்களே பள்ளிகளை முடிவு செய்ய உள்ளனர். இதனால் பட்டியலில் உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "உதவிபெறும் பள்ளிகளில், பொதுவாக ஆசிரியர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தான் பணியில் சேருகின்றனர். இவர்களை, 'உபரி' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்கின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், இந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றனர்.

பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க 
உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என, எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

யார் தவறு செய்தாலும் ஆசிரியர்களுக்கு தண்டனையா??? ஆசிரியர் என்றால் ஏளனமா?

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்து வாந்தியெடுத்த 7 மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்கிய தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை 
எடுக்கும் விதமாக கல்வித்துறை
அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுவது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாகும்.

மாணவர்களின் மது அருந்தும் பழக்கத்தை நியாயப்படுத்துவதுபோல TVயில் கட்சிக்காரர்களும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரியும் மேதாவிகளின் பேச்சு வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சுவதுபோல உள்ளது.

ஏற்கனவே மனிதர்களில் பெரும்பான்மையோரை குடி நோய்க்கு அடிமையாக்கிவிட்ட அரசாங்கம் தற்போது மாணவர்களையும் இந்த இழிநிலைக்கு அழைத்துச்செல்ல ஆயத்தப்படுத்துவது மிகவும் அபாயகரமான செயலாகும்.

அரசிற்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும், மக்களின் சிந்திக்க திறனற்ற நிலை இரண்டுமே போதும் அவர்களின் ஆட்சியை நடத்துவதற்கு.

இந்தச் சமுதாய சீரழிவை தட்டிக்கேட்க முடியாத நிலையையும் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி அரசு மிக எளிதாக செய்துகொண்டு வருகிறது.

பள்ளிக்கு மது அருந்திவிட்டு வரும் மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்ய வேண்டுமென்பதை ஆணையாக வழங்கிவிட்டு போதுமான பயிற்சியையும் எங்களுக்கு வழங்கிவிட்டால் போதும் அதன்படி மிகச்சிறப்பாக செயல்படுவோம். இப்படி தேவையில்லாமல் மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்து கல்வித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்த மாட்டோம்.

யாரோ குற்றம் செய்ய அதனை மறைப்பதற்கு கடைசியில் பலிகடா நமது ஆசிரிய இனம்தான் கிடைத்ததா?

அரசு மாணவர்களுக்கு நலத்திட்டங்களில் விலையில்லா மதுவையும் சேர்த்து வழங்கிவிட்டால் போதும் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் போய்விடும். நீங்களும் தொடர்ந்து ஆட்சிசெய்து வரலாம்.

இந்த கொடுஞ்செயலை அரசு இனிமேலாவது தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமுதாயச் சீரழிவு ஏற்படாமல் இருக்க்கும்.

ஆசிரியர்கள் மீது தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆசிரிய இனம் ஒட்டுமொத்தமாக போராடினால் மட்டுமே கல்விச்சூழல் இனிதாக அமையும்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்திற்கு-மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வேதனை மற்றும் விளக்கம்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்திற்கு பதில் : தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன். 23.11.2015 திங்கள் கிழமையன்று வெளிவந்த ”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கண்டனம் என்று தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாகரீகம் கருதி எங்களது வேதனையை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு அலுவலர்கள் 52 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினால் மத்திய அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக தங்களது தலையங்கம் உடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசரத்திலும்,அரசு அலுவலர்களின் பணி பற்றி தவறாக சிந்தித்தும்,குற்றம் சாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அரைவேக்காட்டுத்தனமாக சித்தரிக்கப்பட்ட தலையங்கமோ? என்று தான் நாங்கள் எண்ணத் தோன்றுகின்றது. தலைங்கம் பற்றி எங்கள் கருத்தினை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். தற்போது வெளிவந்திருக்கும் இந்த ஏழாவது ஊதிய குழு அறிக்கை 1.1.2006க்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு 1.1.2016ல் வெளிவரும் அறிக்கையாகும். மேலும், மத்திய அரசில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ராணுவ வீரர்களுக்கும் இவ்வூதியக்குழு பொருந்தும். இந்த ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு அலுவலர்களின் ஊதியம் ”எங்கோ உயரப்போகிறது” என்ற கற்பனை யாருக்கும் வேண்டாம். ஒரு சிறு கணக்கீடு மத்திய அரசில் பணிபுரியும் ஓர் அடிப்படைப்ப்ணியாளர் தற்போது பெற்று வரும் ஊதியம் ..ரூ.5200+1800=7000. இந்த 7000த்தினை 2.57ல் பெருக்கி வரும் தொகை ரூ.17,990 ஆக ரூ.18,000 இதன் மூலம் ஒரு பணியாளருக்கு ரூ.11,000 ஊதியம் கூடும் என கற்பனை செய்ய வேண்டாம். 1.1.2016ல் அவ்வலுவலர் பெற்று வரும் அகவிலைப்படி 1.1.2016ல் 125 சதவீதம் ஆகும். இந்த 125 சதவீத அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் 1.1.2016ல் அகவிலைப்படி 0 சதவீதம் மட்டும் தான் என்பதையும் அறிக்கையில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓர் அடிப்படை அலுவலர் 1.1.2016ல் பெறும் ஊதியம் + அகவிலைப்படி ரூ.5200 + 1800 + = 8750 = ரூ.15750 ஆகும். ஆக ஏழாவது ஊதியக்குழு அறிக்கையின்படி 2.57சதவீதம் உயர்வின் மூலம் கிடைக்கும் ஊதியம் ரூ.18,000 அகவிலைப்படி 125 சதவீதத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வரும் தொகை ரூ.15,750 = 2,250/- ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் அடிப்படை பணியாளருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு ரூ.2,250/- மட்டுமே என்பதை ”தினமணி” சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2000/- மட்டும் ஊதிய உயர்வு பெறும் அலுவலர்களின் ஊதியம் தங்களின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” மத்திய அர8சாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி அவ்வரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை வழங்குவது ”தேவையற்ற செவினம்” என்று கருதும் தினமணிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்தையே பதிலாக முன் வைக்கின்றேன். ”அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ” வருவாய் செலவினம்” என்று கருதக்கூடாது. அது திட்ட ”முதலீட்டு செலவினம்” ஒரு திட்டத்தினை தீட்டும் பொழுது அத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை முதலீட்டு செலவினமாக எடுத்துக் கொள்வது போல் அரசு தீட்டும் பல மக்கள் நல திட்டங்களுக்காக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினையும் அரசின் முதலீட்டு செலவினமாகத்தான் கருத வேண்டும்” என்று அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக சட்டசபையில் தெரிவித்த கருத்து இதுவாகும். ஆக, ஓர் அரசு மக்களுக்காக செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு எடுத்து செல்லப் பணிபுயும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்கள் பார்வை ”தேவையற்ற சுமையா?” நாளிதழ் என்பது அனைத்து பிரச்னைகளையும் அவரவர் பார்வையில் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து, அதனை தனது பார்வையால் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது. ஆனால், அரசு அலுவலர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில் எங்களது நிலையிலிருந்து இதனை ஆய்வு செய்யாமல் ஏற்கனவே ஒரு முடிவினை முடிவு செய்து கொண்டு தலையங்கம் தீட்டி இருப்பதும், மக்களுக்காக உழைத்து வரும் எங்களை ”தேவையற்ற சுமை” என்று விமர்சிப்பதும், பாரம்பரியமிக்க ”தினமணி”-யின் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து உரிமைகளை வழங்கியுள்ளது. (1) குடியுரிமை (2) காப்புரிமை (3) வாக்குரிமை (4) பேச்சுரிமை (5) எழுத்துரிமை. ஆனால், இந்திய குடிமக்களில் ஒருவராக வாழ்ந்து இந்திய குடிமக்களுக்காக உழைத்து வரும் அரசு அலுவலர்களுக்கு ”வாக்குரிமை” தவிர வேறு எந்த உரிமையும் இல்லை ”நடத்தை விதிகள்” என்ற பெயரில் எங்களது அனைத்து உரிமைகளையும் மறைமுகமாக பறிக்கப்பட்டுது என்பதை ”தினமணிக்கு” தெரியுமா? இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்ளும் நிலைப்பற்றி யாரும் வாய் திறக்காமல், அரசு அலுவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போது மட்டும், விமர்சித்து கருத்துக்களை தெரிவிப்பது ஏன்? அரசிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் எங்களின் ஊதியம் மட்டும் எப்படி தங்களின் பார்வையில் ” தேவையற்ற சுமையாகும்?” இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசு அலுவலர் சமுதாயம் அபரிதமான உழைப்பினை அளித்துள்ளார்கள் என்பதை ”தினமணி” நன்கு உணர வேண்டும். நாட்டில் நிகழும் இயற்கை சீற்றத்தின் காரணமாக நடக்கும் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை காப்பாற்றியும், மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கு அடிப்படை பணிகளிலிருந்து அனைத்துப் பணிகளையும் தங்களது பசியறியாது பணிபுரியும் அலுவலர்கள் என்பதை ”தினமணி” மறுக்க முடியுமா? இன்று உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்று பெருமையுடன் கருதப்படும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் அதன் பிற துறைகளிலும் பணிபுரிபவர்கள் அரசு அலுவலர்க்ளே. இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதத்தை தடுத்தல், பேரிடர் மேலாண்மை என்றும், எல்லையே இந்த நாட்டினை காக்க கண் துஞ்சாது, பசியறியாது பணிபுரியும் ராணுவ வீரர்கள் தினமணி-யின் பார்வையில் ”தேவையற்ற சுமையா” தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுது தொற்று நோய் பரவும் என்ற உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோது சுனாமியால் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்ததோடு மட்டுமல்லாது, அச்சுமியினால் ஏற்படும் தொற்று நோயால் ஒருவர் கூட மரிக்காமல் சீரமைத்த அற்புதத்தினை படைத்தவர்கள் எங்கள் அரசு அலுவலர்கள். பெரியம்மை, பிளேக், காலரா, தொழுநோய் போன்ற நோய்களை அடியோடு அகற்றி புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எங்கள் அரசு அலுவலர்கள். வெண்மை புரிட்சி, கல்விபுரட்சி, பசுமைபுரட்சி, தொழில் புரட்சி என்று சாசுவதமான எத்தனையோ புரட்சி வெற்றி பெற விதையாக இருப்பவர்களும் நாங்கள். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று உங்கள் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் போது அவ்வெற்றிக்கு பின்னர் நிற்பது யார்? அரசு அலுவலர்கள் தான். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே அரசு அலுவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடும் பொழுதெல்லாம் ”அரசின் அச்சாணியாக செயல்படும் அரசு அலுவலர்கள்” என்று விளித்து கூறுவார்கள். அதன்படி ஓர் அரசின் அச்சாணியாக மாண்புமிகு முதலமைச்சர் பார்வையில் திகழும் நாங்கள் ”தினமணி”-யின் பார்வைக்கு மட்டும் எப்படி ”தேவையற்ற சுமை”யானோம். அரசு அலுவலர்கள் அனைவரும் கையூட்டு வாங்குகிறார்கள் இல்லை என்ற தாங்களே தலையங்கத்தில் கூறிவிட்டு கையூட்டாக பெறும் தொகை என்று ஓர் தனியார் நிறுவன ஆய்வினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் தங்களைப் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் செயல்படும் வேளையில், போலி பத்திரிக்கைகளும், நிலவி வரும் போது ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறைசொல்ல இயலாது அல்லவா? அதைப்போல யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தினை குறை சொல்வது ”தினமணி” -க்கு அழகல்ல.. இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சிறு துளி தான்.. .. .. மேலும் குறிப்பிட்டு எழுத முடியும், ஆனால், நாட்களும்,தாட்களும் பத்தாது.. .. .. இறுதியாக,, இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போலியான பெயரில் உலவும் வணிக நிறுவனங்கள், பல பணக்காரர்கள் வரியினை ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ”தினமணி” போன்ற பத்திரிக்கைகளில் செய்தி வருவதை தொடர்ந்து நாங்கள் பார்த்து வரகிறோம். ஆனால், இந்த இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டி வரும் ஒரே சமுதாயம் அரசு அலுவலர் சமுதாயம் மட்டுமே என்பதை தங்கள் பார்வைக்கு சுட்டி காட்ட கடைமைப்பட்டுள்ளோம் என்பதோடு வரி ஒழுங்காக கட்டி வரும் எங்களை பற்றியும் தினமணி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். ”தேவையற்ற சுமை” என்று எங்களை விளித்தது வேதனை தந்தாலும் இந்த விளக்கத்தினை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விழைந்தமைக்கு அத் தலையங்கத்திற்கு நன்றி. அய்யா, நாங்கள் அரசிற்கும் மக்களுக்கும் ”தேவையற்ற சுமை” அல்ல ’சுமைதாங்கிகள்’ அன்புடன் (இரா.சண்முகராஜன்) மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்

28/11/15

ரூ.1 லட்சம் கோடி குஷி Dinakaran தலையங்கம்

சமீபத்தில் தான் தீபாவளிபண்டிகை கோலாகலமாககழிந்தது; மத்தியஅரசு ஊழியர்களைபொறுத்தவரை நேற்றுமுன்தினம் இன்னொரு தீபாவளி என்றுதான் கூறவேண்டும். ஆம், இதுவரை இல்லாதஅளவுக்கு
சம்பளஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமே 18,000 ரூபாய் என்றாகி விட்டது; அதிகபட்ச சம்பளம்2.25 லட்சம் ரூபாய். 47 லட்சம் ஊழியர்கள், 52 லட்சம்ஓய்வூதியதாரர்கள் நிச்சயம், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருப்பர்.
வாக்கு வங்கியை பொறுத்தவரை, அரசு ஊழியர்களையாரும் ஒதுக்கிதள்ளி விடமுடியாது; கணிசமானவாக்காளர்களை கொண்ட மகத்தான பிரிவு இது. அரசு சார்ந்தபொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள்ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தனி இன்சூரன்ஸ்திட்டம், பணிக்கொடைவரம்பு இருமடங்காக அதாவதுரூ.10 லட்சம்வரை அளிப்பது, ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படையினருக்கு ஒரேபணி ஒரேபென்ஷன் திட்டம்என்பன போன்றவைஎல்லாம் கூடுதல்சலுகைகள்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரேமுக்கிய விஷயம், திறன் சார்ந்தபணியின் அடிப்படையைபிரதான தகுதியாகவைத்து சலுகைகள்நிர்ணயிப்பது என்பது தான். முந்தைய சம்பளகமிஷனும் சரி, மத்திய நிதிஆணையமும் சரிஇந்த விஷயத்தைசுட்டிக்காட்டியது. ஆனால், ஏனோஅப்போது இதற்குஅரசு தனிகவனம் செலுத்தவில்லை. இப்போது ஏழாவதுசம்பள கமிஷனுக்குதலைமை வகித்தஓய்வு பெற்றநீதிபதி மாத்தூர், இது தொடர்பாககுறிப்பாக பரிந்துரைசெய்துள்ளார். திறன் சார்ந்த பணிக்கு முக்கியத்துவம்தருவது தொடர்பாகஅந்தந்த துறைகள்ரீதியாக தனிமுறை வடிவமைக்கவேண்டும். அந்தந்ததுறை வளர்ச்சிக்குஊழியர்கள் பங்குஎந்த அளவுக்குஇருக்க வேண்டும்என்பதை பொறுத்துஒவ்வொரு ஊழியருக்கும்பணித்திறன் அடிப்படையை முடிவு செய்ய வேண்டும்.

சாப்ட்வேர் மற்றும் தனியார்நிறுவனங்களில் பெரும்பாலும், பணித்திறன் முக்கியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஊதியம், போனஸ், சலுகைகள்வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறையைகண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களிடம் அமல்படுத்தவேண்டும் என்றுகமிஷன் திடமாகபரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு, தன் ஊழியர்களிடம்இந்த பணித்திறன்முறையை அமல்படுத்தினால்துறை சார்ந்தஇலக்கை எட்டிவிடமுடியும் என்றுகமிஷன் கூறியுள்ளது. இதை அமல்படுத்தினால், மத்திய அரசுதுறை ஊழியர்களின்பணித்திறன் அதிகரிக்கும்; மக்களுக்கும்பெரிதும் பலன்கிடைக்கும் என்று நம்பலாம்

7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும் DINAMALAR

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.
குறிப்பாக, 'குறைந்த விலையில் வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க முற்படுவர். இதனால், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சி 0.65 சதவீதம்:
அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட உள்ள, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.65 சதவீதம் கூடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஆறாவது ஊதியக் குழுவின் போது, 0.77 சதவீதமாக இருந்தது.
* ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்தும் போது, 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது, மத்திய பட்ஜெட்டில், 73 ஆயிரத்து, 650 கோடி ரூபாய், ரயில்வே பட்ஜெட்டில், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் என, பகிர்ந்து கொள்ளப்படும்
* ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 23.55 சதவீதம் உயர்த்தி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை சம்பளம் மட்டும், 16 சதவீத அளவுக்கும், அனைத்து விதமான படிகளும், 63 சதவீதம் அளவுக்கும் உயரும். சம்பளத்திற்கான அரசின் செலவு, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும்.
படிகளுக்கான செலவு, 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவு, 33 ஆயிரத்து, 700 கோடி அதிகரித்து, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக இருக்கும்
* முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதால், சம்பள கமிஷன் பரிந்துரை அமல் கூடுதல் சுமையாகும்.
23.55 %:மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பென்ஷன் உயர்வு
16 %:அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் உயர்வு
63 %:படிகளில் உயர்வு
24 %:பென்ஷனில் உயர்வு
52ரத்து:* ரயில்வே ஊழியர் மற்றும் கேபினட்செயலர்களுக்கான கேளிக்கை படி
* குடும்ப கட்டுப்பாடு, முடி வெட்ட, பரிசோதனை, இறுதிச்சடங்கு, சேமிப்புக் கணக்கு, கூடுதல் வேலை படிகள்
* நர்சிங் ஊழியர்களுக்கான உணவக படி
36:பிற படிகளுடன் இணைப்பு
* வாஷிங் அலவன்ஸ் எனப்படும் துணி துவைப்பு படி இணைப்பு
* குறிப்பிட்ட இடங்களுக்கான படிகள், இடர்பாடு மற்றும் கடினப்பணி படியில் இணைப்பு
108:தொடரும், கூடுதலாகியுள்ள படிகள்
* மாற்றுப்பணி, தேசிய விடுமுறை மற்றும் மொழி படிகள், 50 சதவீதமாக அதிகரிப்பு
* இணையதளம், மொபைல், செய்தித்தாள் படிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
* வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வழங்கப்படும் தினப்படி தொடர்கிறது
தொடர்கிறதுமகப்பேறு 'லீவு':
ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண் ஊழியரின் மனைவியின் பிரசவத்தின் போது, அந்த ஊழியருக்கு, 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை தொடர்கிறது. இந்த சலுகை, இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு படி:
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டும், இதுவரை வழங்கப்பட்டு வந்த, சி.சி.எல்., என்ற, 'சைல்ட் கேர் லீவ்' எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுமுறை, இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மனைவி இல்லாத ஆண் ஊழியர்கள், தங்களின், 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பணிக்காலத்தில், இரு ஆண்டுகள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். முதல் ஆண்டில், 100 சதவீத சம்பளமும், இரண்டாவது ஆண்டில், 80 சதவீத சம்பளமும், ஆண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ளபடி, கணவர் இல்லாத அரசு பெண் ஊழியருக்கு, வழக்கம் போல இந்த சலுகை தொடரும்.
இரண்டு தவணைகளாகமுந்தைய பரிந்துரை:
கடந்த, 2006ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், இரு ஆண்டுகள் கழித்து தான் அமல்படுத்தப்பட்டன. அதனால் மத்திய அரசின் சம்பள பில், 35 சதவீதம் அதிகரித்து, சம்பள உயர்வை மொத்தமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, 40 சதவீத தொகை, 2008 - 09ம் ஆண்டிலும், 60 சதவீத தொகை, 2009 - 10ம்நிதியாண்டிலும் வழங்கப்பட்டது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை, அடுத்த ஆண்டு அமல்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறை மிக அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. சற்றே அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தி விடுவோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் செலவுகள் திடீரென வந்ததல்ல; ஏற்கனவே எதிர்பார்த்தது தான்
சக்திகந்த தாஸ், பொருளாதார துறை செயலர்
குறைந்தபட்ச சம்பள உயர்வு, 18 ஆயிரம், அதிகபட்ச சம்பள உயர்வு, 2.5 லட்சம் ரூபாய்ஆண்டுக்கு, 3 சதவீத சம்பள உயர்வுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை
சம்பள கமிஷன் பரிந்துரையால், ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி நிதிச்சுமை ஏற்படும்
'கிரேடு சம்பளம், பே பேண்ட்' முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு வீரர்களுக்கு, மாத சம்பளத்தில், 21 - 31 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு
சம்பளத்தை அதிகம் சாப்பிடும் நான்கு துறைகள்
ரயில்வே: 36.60 %
உள்துறை: 23.98%
பிற துறைகள்: 19.17%
பாதுகாப்புத்துறை (சிவில்): 12.16%

தபால் துறை: 8.09%

7 வது சம்பளக் கமிஷன் பரிந்துரை : டிஆர்இயு கண்டனம் - நவ. 24 முதல் ஆர்ப்பாட்டம்

7 வது சம்பளக் கமிஷன் பரிந்துரை குறித்த கீழ்க்காணும் கண்டன அறிக்கையை நவம்பர் 24 முதல் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
7வது சம்பளக் கமிஷன் சிபாரிசு அமல்படுத்துவது குறித்து மீண்டும் ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படு மென நிதியமைச்சர் கூறியுள்ளார்.
குழுமத்திற்கு குழு அமைப்பது காலம் கடத்துவதற்கே!ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சம்பளக் கமிஷன், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது.ட
7வது சம்பளக் கமிஷன் அறிக்கை இரண்டாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வுக்கு இணையாக குறைக்கப்பட்டுள்ளது.
6வது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 54 சதம் சம்பள உயர்வை கொடுத்தது. ஆனால் 7வது சம்பளக் கமிஷனோ 14.2 சதம் மட்டுமே உயர்வை அளித்துள்ளது.
குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26,000 உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சம்பளக் கமிஷன் நிராகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமான உயர்வு 14.2 சதமாகவே உள்ளது.
ட அதிகாரிகளுக்கு ரூ.90ஆயிரமாக இருந்த சம்பளத்தை இரண்டரை லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது.
7வது சம்பளக் கமிஷன் 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்காண்டு வழங்கப்படும் இன்கிரிமென்ட் 5சதம் கேட்பது நிராகரிக்கப்பட்டு தற்போதுள்ள அதே 3 சதம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படி தற்போதுள்ள 30 சதம் குறைக்கப்பட்டு 24 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
20சதம் என்பது 16 சதமாகவும் 10 சதம் வீட்டு வாடகைப்படி பெற்றவர்களுக்கு 6 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறுவதற்குள் 5 பதவி உயர்வு என்ற கோரிக்கை மறுக்கப்பட்டு தற்போதுள்ள அதே மூன்று பதவி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டு அலவன்ஸ் உட்பட 52 வகையான அலவன்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட காசுவல் லீவை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நிராகரிப்பு,
எந்த லீவிலும் மாற்றமில்லை.
20 வருடம் பணிமுடித்த தொழிலாளர்களுக்கு வேலைத்திறன் இல்லை எனக் காரணம் கூறி வருடாந்திர இன்கிரிமென்ட்டை முடக்கவும் வி.ஆர்.-ல் அனுப்பவும் திட்டம்.
அதிகாரிகளின் அடக்குமுறைகளை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்ட்ரா ஒர்க் அலவன்ஸ் அறிமுகப்படுத்தியது தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தும்.
பர்பார்மென்ஸ் ரிலேட்டட் பே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பி.எல்.பி. போனசில் பார்முலாவை மாற்றுவதற்கு சிபாரிசு.

காலியிடங்களின் எண்ணிக்கை நிரப்புவதற்கோ (ரயில்வேயில் 2,35,567) அல்லது நிரந்தரத் தன்மையுடைய வேலைகளை காண்ட்ராக்ட் விடுவதற்கோ சிபாரிசுகள் இல்லை

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை குறித்த DAKSHIN RAILWAY EMPLOYEES UNION-இன் கண்டன அறிக்கை. (நன்றி: விமலாவித்யா)





பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு-ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைமுக்கிய அம்சங்கள் நீதிபதி மாத்தூர் தலைமையிலான7-வது ஊதியகமிஷனின் பரிந்துரை அறிக்கைமத்திய அரசிடம்நேற்று முன்தினம்தாக்கல் செய்யப்பட்டது. அதன்முக்கிய 

பரிந்துரைகள் வருமாறு ஒட்டுமொத்தமாக மத்திய அரசுஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில்16% உயர்வு.

படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதரபடிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம்.

அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாகநிர்ணயம், குரூப்இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் பிரிமியம்பிடித்தம் உயரும், ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத உயர்வு.

ஒரே பதவி ஒரேஓய்வூதிய திட்டம்ராணுவத்தை போன்றுதுணை ராணுவபடைகளிலும் அமல். தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், மின்வாரியம், விமான நிலையங்களின் தலைமைநிர்வாகிகளுக்கு ரூ.4.50 லட்சம் ஊதியம்.

ராணுவ பணிக்கு இளைஞர்களை ஈர்க்கஐஐடி மற்றும்ஐஐஎம்களில் ஓராண்டு மானியக் கல்வி.

ராணுவ குறுகிய காலசேவை களில்பணியாற்றும் அதிகாரிகள் 7 முதல் 10 ஆண்டுகளில் எப்போதுவேண்டுமானாலும் ஓய்வுபெற சிறப்பு சலுகை.
தனியார் நிறுவனங்கள் போன்றுபணித் திறன்அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகைவட்டியில்லா கடன்கள் ரத்து, மனைவி துணையில்லாதஆண்களின் நலன்கருதி குழந்தைபராமரிப்புக்காக முழு ஊதியத் துடன் ஓராண்டுவிடுமுறை.

பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.

நன்றி: 21.11.15-தி இந்துதமிழ் நாளிதழ்

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

31.12.2015 இல் D.A 119%

01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%


கூடுதல் (119% + 6%) = D.A 125%.

கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)

= 225% = 2.25

# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,

F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)

= 2.25 + ( 2.25 × 14.29% )

= 2.25 + 0.32

= 2.57


இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது.

மத்திய அரசின் புதிய பாடத்திட்டம் : ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

மத்திய அரசின் 'ஒரேகல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள்புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறுஆசிரியர்கள்
சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்தியமனித வளமேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் 'ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம்' அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான திட்டம் வகுத்து, மாநிலங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களைநடத்தி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம்இடங்களில் சிறப்புகருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன. மதுரை, கோவை, சென்னையில்மட்டுமே கருத்துக்கேட்புக் கூட்டங்கள்நடந்தன. கருத்துக்கேட்புக்கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தேமத்திய அரசுநடத்தி விட்டது. தமிழக, கேரளமாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இது ஒருபுறம் இருக்கபுதிய திட்டத்தில், குற்றம் புரியும்ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதைமக்களே தீர்மானிக்கும்வகையில் கல்வித்திட்டம்உள்ளது.
ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்தமாவட்டம் சார்ந்தவரலாறு இடம்பெறாமல் போவதற்கானசாத்திய கூறுகள்உள்ளன. இதுமாதிரியான13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது, எனக்கூறி, தமிழகஆசிரியர் சங்கங்கள்எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநிலத் தலைவர்மோசஸ் கூறியதாவது:

தவறுகள் இழைக்கும்v ஆசிரியர்கள்தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும்அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பதுஏற்புடையது அல்ல. ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின்வரலாறே இல்லாதவகையில் பாடத்திட்டம்அமைய இருப்பது, அடிப்படை கல்வியேஆட்டம் காணவைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல்இந்திய பள்ளிகளின்ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழக கவர்னரிடம்கோரிக்கை மனுஅளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில்பேரணி நடத்தி, கலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்என்றார்.

27/11/15

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 

விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. 

ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

பாடம் முடிக்காமல் தேர்வா?

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வு டிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழையால், 18 நாட்களாக கல்லுாரி இயங்காமல், பாடங்கள் பாக்கி உள்ளன. புறநகரில், பல கல்லுாரிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில், கல்லுாரிகளுக்கு செல்லும் வழிகளில், வெள்ளம் வடியவில்லை. இந்த ஆண்டில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமாகிறது. இந்நிலையில், பாடங்களை முடிக்காமல், மாதிரித் தேர்வும் நடத்தாமல், செமஸ்டர் தேர்வு எழுதினால், மதிப்பெண் குறையும்; தர வரிசையில் பாதிப்பு ஏற்படும்.
முதல் செமஸ்டருக்கு, 65 நாள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மழை விடுமுறையால், 12 நாள் வீணாகியது. இன்னும் கல்லுாரி எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. எனவே, மழை விடுமுறையை கணக்கிட்டு, தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலை கல்லூரிகளுக்கு தரவரிசை: யு.ஜி.சி.,

நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கல்லுாரிகளும், மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை, ஆராய்ச்சி எண்ணிக்கை, பேராசிரியர் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல புள்ளி 
விவரங்களை, https://www.nirfindia.org/Home இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த பட்டியலில், மொத்தம், 795 பல்கலைகள், 39 ஆயிரம் இணைப்பு கல்லுாரிகள் இணைக்கப்பட்டு, 2.37 கோடி மாணவர்களின் கல்வி தேர்ச்சியும், 10.15 லட்சம் பேராசிரியர்களின் கற்பித்தல் திறனும், ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'

'மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன.
இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள் அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்.

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

தீபாவளி விடுமுறைக்கு பின்னர், தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை (நவ. 26) திறக்கப்பட்டன. 
இதில், குறிப்பிட்ட 24 பள்ளிகளில் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த 24 பள்ளிகளுக்கும் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் விடுமுறை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்தப் பள்ளிகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,480 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாநகராட்சி பள்ளிகளில், அரையாண்டு தேர்வுக்கு பிறகு, காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், தேர்வு எழுதும் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கவும், 'வெற்றிப்படி' என்ற திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகமும், 'அறம் அறக்கட்டளை'யும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த அக்டோபரில் திட்டம் துவங்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், காலாண்டு தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிறப்பு வகுப்பில், பயிற்சி அளிக்கப்படுகிறது.

'அறம் அறக்கட்டளை' நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், குறைந்த மதிப்பெண் பெற்ற, 300 மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சித்தாபுதுார், ராமநாதபுரம், வெங்கிட்டாபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ஒக்கிலியர் காலனி,
வடகோவை, ரத்தினபுரி, வெரைட்டிஹால் ரோடு மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

திட்டத்துக்காக, கமிஷனர், மாநகராட்சி கல்வி அலுவலர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்துக்காக, 3.5 லட்சம் ரூபாய் அறக்கட்டளை மூலம் செலவிடப்படுகிறது.

வழக்கமாக, வகுப்பறையில் பாடம் நடத்துவது போன்றில்லாமல், 'விஷூவல்' முறையில் பாடம் நடத்தப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியத்தில் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.பொதுத்தேர்வில், 35 மதிப் பெண் பெற்று, வெற்றி பெறுவதற்கு பாடத்திட்டத்தில், எந்தெந்த பாடங்களுக்கு, எந்த வினாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் என, பல்வேறு தகவல்களுடன் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

'விஷூவல்' முறையில் வகுப்பு நடப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த முறையில் கல்வி போதிப்பதால், மாணவர்களின் மனதில், 80 சதவீதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். வாரத்தில், புதன் கிழமையில் மாலை நேரத்திலும், சனிக்கிழமையில் முழு நேரமும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவ்வாறு, லதா தெரிவித்தார்.

இந்தாண்டு 'சூப்பர் 50'
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், கடந்த ஆண்டு, 'சூப்பர் 30' என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்தாண்டும் அதே திட்டத்தை செயல்படுத்த, பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு நடக்கிறது.
கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''மருத்துவம், பொறியியல் படிப்புக்கு செல்ல, கடந்தாண்டு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தாண்டு, அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்டு, 'சூப்பர் 50' பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

தென் கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது: 
தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. 


இது, தென்கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய பகுதியில் மேலடுக்குச் சுழற்சியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறினால், கடலோர மாவட்டங்களில் சனி, ஞாயிறு (நவ 28-29) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் வாய்ப்புண்டு.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மிகவும் பலத்த மழை இருக்கும். இந்தப் பகுதிகளில், அதிகப்பட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 70 மி.மீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 40 மி.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் தலைமை ஆசிரியயைக் கண்டித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 36 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியûயாக மேட்டூரைச் சேர்ந்த வசந்தகுமாரி பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பள்ளி முன் தொளசம்பட்டி-தாரமங்கலம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசி வரும் தலைமை ஆசிரியயை மாற்றக் கோரி, தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
பெற்றோர்- ஆசிரியர் கழக நிதியாக மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிப்பதாகவும், தேர்வுக் கட்டணம் என்று தலா ரூ.100-ம், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டுக்கு ரூ.300-ம் வசூல் செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் நள்ளிரவில் பள்ளியில் புகுந்து அசுத்தம் செய்து செல்வதாகவும் குறை கூறினர். மேலும், மாணவ-மாணவியரை அவதூறாகப் பேசும் தலைமை ஆசிரியயை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, போலீஸார் விரைந்து வந்து மாணவர்களை சமரசம் செய்து, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை வசந்தகுமாரியிடம் கேட்ட போது, மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார். பள்ளியில் சிலர் மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி செல்லா குழந்தைகள் விபரம்: 8 ம் வகுப்பு வரை சேகரிக்க உத்தரவு

எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், அடுத்த கல்வியாண்டுக்கான வரைவு திட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், இந்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திட்டம் அமைய உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
வயது வரம்பு: 


31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icicicareers.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3 நாட்களுக்கு கன மழை

'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி வருகிறது. இதனால் அந்தமான் கடல் பகுதியில் மழை பெய்ய துவங்கி விட்டது.தமிழகம் நோக்கி: இந்த காற்று அழுத்த தாழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தற்போதுள்ள வானிலை நிலவரப்படி அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு, வட சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் இடையே டிச., 1ல் கரையை கடக்கலாம் என, கணிக்கப்படுகிறது. எனவே அதுவரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க வானிலை கணிப்பு மையமும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு குறித்து கணித்துள்ளது. அந்த கணிப்புப்படி தமிழகத்தின் வட கடலோர பகுதியில் டிச., 5 வரை கன மழை பெய்யும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிம்மதி: இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தணிந்து வெயில் பதிவானது. 
இது தேங்கியிருந்த மழை நீர் வடிய வாய்ப்பாக இருந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் - 10; திருசெந்துார் - 2; ராமேஸ்வரம், குன்னுார் - 1 செ.மீ., மழை பெய்துள்ளது.குளிர் : தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் குளிர் துவங்கி உள்ளது. தர்மபுரி, வேலுார் மாவட்டம், திருப்புத்துாரில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

26/11/15

மத்திய அரசின் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.


மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் கட்டுரை மற்றும் ஓவியம் தொடர்பாக போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும்,நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களை பாதுகாப்பது,சேமிப்பது,தேசிய அளவில் இதனை பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு  எடுத்து செல்வது  என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன..6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட  70க்கும் மேற்பட்ட மாணவர்களில்  மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில்  மாணவர் ரஞ்சித்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்தும் மீனாள் போட்டிகளை நடத்தினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில்  மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.

               கட்டுரை போட்டியில்  8ம் வகுப்பு மாணவர்  கண்ணதாசன்  முதல் பரிசும்,7ம்  வகுப்பு மாணவி தனலெட்சுமி   இரண்டாம் பரிசும்,அதே  வகுப்பு மாணவி பார்கவி லலிதா மூன்றாம் பரிசும் பெற்றனர். ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும்,7ம்  வகுப்பு மாணவி பிரவீனா  இரண்டாம் பரிசையும் ,அதே  வகுப்பு மாணவர்  பரத்குமார்  மூன்றாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் ஜெகதீஸ்வரன்  நன்றி கூறினார்.

அரசு மகளிர் பள்ளியில் மொபைல் போன்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம், பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்று முன்தினம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, மாணவியரிடமிருந்து, 25க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாணவியரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பள்ளிக்கு வரும்போது மொபைல் போன் கொடுக்கக்கூடாது எனவும், மீறி கொண்டு வந்தால், மாணவியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. 


ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இரு நாட்களாக வெயில் தலை காட்டியதால், பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த, 12 வேலை நாட்களில் வகுப்புகள் இயங்காமல் பாதிக்கப்பட்டதால், இன்று முதல், நேரத்தை வீணடிக்காமல் வகுப்புகளை நடத்துமாறும், மாணவர்களை முடிந்த வரை விடுமுறையின்றி வகுப்புகளில் பங்கேற்க வைக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நவ., 17ல் துவங்க இருந்த திருப்புதல் தேர்வுகளை, பள்ளிகளே முடிவு செய்து, திங்கள் கிழமை முதல் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

வாய்மொழி உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது; மழையால் பாதித்துள்ள மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளை இழந்திருந்தால் அவர்களுக்கு, இன்று முதல் மீண்டும் இலவச புத்தகம், சீருடை வழங்கப்படு கிறது. இதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டன.சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்புள்ள, 11 அரசு பள்ளிகளுக்கு மட்டும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

சீருடைகெடுபிடி இல்லை

வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தும், பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள், சீருடைகளை இழந்திருந்தால், அவர்களை சீருடை அணிந்து வர, சில வாரங்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.


இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அச்சம்
'ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. 

மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும். 

'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை; 

வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன. 

விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர். அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 


விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்திலும் வேலை தனியார் பள்ளி ஆசிரியைகள் அதிருப்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. 


இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொன்ன பள்ளி நிர்வாகங்கள், பராமரிப்பு பணிகளில் ஈடுபட செய்தனர். கண்டிப்பாக பள்ளிக்கு வருமாறும், மற்ற பணியாளர்களை போல் பராமரிப்புப் பணியில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டதால், ஆசிரியைகள் அவதிக்கு ஆளாகினர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்

பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நவ., 12 ல், வி.ஏ.ஓ., தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு தேர்வு எழுதும்போது, வயது உச்சவரம்பு நிர்ணயம் தேவையில்லை என உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இந்த தீர்ப்பு இதற்கு முந்தைய வி.ஏ.ஓ., தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வயதுள்ள பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.தேனியை சேர்ந்த பட்டதாரிகள் கந்தசாமி, சாமிநாதன் கூறியதாவது: 

தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவுக்கும், புதுப்பித்தலுக்கும் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் 57 வயது வரை, அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுதலாம். இதற்கு முந்தைய தேர்வுகளில் தமிழக அரசே இந்த அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது வி.ஏ.ஓ., தேர்வுக்கு அனுமதி மறுப்பது வேதனையாக உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளின் சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வயது உச்சவரம்பு சலுகை அளிக்க வேண்டும், என தெரிவித்தனர்.

21/11/15

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 01.12.2015 அன்று உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,


இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....

தலைமை ஆசிரியர் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, பள்ளியை அடிக்கடி பூட்டி செல்வதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் செயல்பாடால், தற்போது, 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி வந்த மாணவர்கள், பள்ளி பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மற்றொரு ஆசிரியர் விடுமுறையில் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் வராததால், மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, நேரடியாக பள்ளியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின், கஞ்சம்பட்டி பள்ளியிலிருந்து, ஒரு ஆசிரியரை வரவழைத்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காந்திமதி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி, தெற்கு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததுடன், பள்ளியை பூட்டிச் சென்றார்; 'சஸ்பெண்ட்' உத்தரவை, தலைமையாசிரியர் பெற மறுத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னிலையில், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது; அவருக்கு, தபால் மூலமும் சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி உதவியாசிரியர் மூலமாக, பள்ளி தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

இதே போல், ஆனைமலை ஒன்றியம், கன்னியம்மன் கோவில் காலனியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'தவறு செய்த ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' என்றனர்.

7 PAY COMMISSION PAY BAND DETAILS


RATIONALISATION APPLIED IN THE PRESENT PAY STRUCTURE

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை. 
காலியிடங்கள்: 122 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றுஅழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்றுஅழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில்கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், (primary HM)ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
22970 x  2.57 = 59,033
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 59,033    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது. ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 1400 x 2 = 2800
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)
நகர ஈட்டுப்படி : 720   
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)   
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 62, 753
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 28,713
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 1400
நகர ஈட்டுப்படி :360
மருத்துவப்படி : 100
மொத்தம் : 53,543
********************
வித்தியாசம் : 9,210
********************
தோராய ஊதிய உயர்வு : 17%

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
9400 x  2.57 = 24,158
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 24,158    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 25,438
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 21,150
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 21,790
********************
வித்தியாசம் :3,648
********************
தோராய ஊதிய உயர்வு : 14%

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்..

*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.


*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.

*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள்ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு 

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்.

*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.

*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம் 

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும்.நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்.

*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும்ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.

இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:


தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள்மற்றும் சிறப்பு மருத்துவர்கள் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000/ முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000/ முதல் ரூ.3,91,000/ வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவுதிஅரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRC: Primary upper primary crc dates announced...

Topic: Remedial Teaching for late Bloomers

Primary CRC

State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015

Upper Primary CRC

State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

IGNOU:Hall Tickets for December 2015 Term End Examination

520 பொது அறிவு கேள்வி பதில்கள்----தகவல் துளிகள்

Govt school VS Private school---தகவல் துளிகள்,

Heart attack when alone at home---தகவல் துளிகள்

JOBS RELATED GOVERNMENT AND OTHER WEBSITES---தகவல் துளிகள்

Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.---தகவல் துளிகள்

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER

இேதா ஒர கணித விதைத !----தகவல் துளிகள்,

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய ---தகவல் துளிகள்

20/11/15

Pay commission-ல் எப்படி fitment formula மூலம் புதிய ஊதியம் கணக்கிடப்படுகிறது .........?

தற்போது D.A 119%
01-01-2016 - ல் எதிர் பார்க்கப்படும் 6% கூடுதல் D.A உடன் மொத்த D.A 125%.
Pay 100% + D.A 125%
= 225% = 2.25
# ஒரு வேளை அரசின் அளிப்பாக கூறப்படும் 15% ஊதிய உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 15% )
= 2.58
# ஒரு வேளை தொழிற் சங்கங்களின் குறைந்த பட்ச கேட்பான 30% உயர்வு எனில்,
F.F = 2.25 + ( 2.25 × 30% )
= 2.92
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்......