யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

உடல்நலம் மருத்துவம்

வெறும் தரையில் படுத்து உறங்க்க்கூடது ஏன்.



நம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும்.


மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது. மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

முன்னோர் வார்த்தைகள் எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது. பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள் மின் அதிர்ச்சி மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம்.

அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர். உடல் என்னும் சக்தி உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

எப்படி உறங்குவது?

வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்


மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட
சுப்ரீம் கோர்ட்
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
.
போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

நீதிபதிகள் கூறியது: மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர்.

காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர்.
இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு

ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அந்தந்த பள்ளிகளுக்கான ஆய்வு தேதிகளை, அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், பள்ளிகளில் தயார் நிலையில் இருப்பர். 'இந்த ஆண்டு, முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்' என, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன்

உத்தரவிட்டுள்ளார்.உதவி தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, ஏ.இ.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., குழுவினர், புகார் வரும் பள்ளிகளிலும், மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிலும் திடீர் ஆய்வு நடத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.பல மாவட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளே, கல்வித்தரம் உயராததற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ளது

ஜன., 22ல் 'நெட்' தேர்வு

உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பான, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடித்தோர், கல்லுாரி, பல்கலைகளில் உதவிப் பேராசிரியராக, மத்திய அரசின் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதுநிலை படிப்பை முடித்தோர், ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து,
மத்திய அரசின் நிதி உதவி பெறவும், இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, நெட் தேர்வு ஜூலையில் முடிந்து விட்ட நிலையில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடத்தப்பட உள்ளது. 'இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ

தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை வெளியிடுகிறது.தமிழகத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளை விட, தனியார் தொடக்கப் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலும், ஆங்கில வழியிலேயே பாடம் கற்றுத் தரப்படுவதால், ஆங்கில வழி மாணவர்களுக்கு, தமிழில் பேசும் போதும், எழுதும் போதும், பிழை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், இதே போன்று உச்சரிப்பு பிழைகள் ஏற்படுகின்றன.


தேர்வுகளில், சரியான விடை எழுதினாலும், எழுத்துப் பிழைகளால், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ் எழுத்து உச்சரிப்பு பாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போனடிக் முறையில், இந்த பாடல்களுக்கு, வீடியோ படங்கள் வெளியிடப்பட உள்ளன.

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

புதுடில்லி : பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.


நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, பி.எப்., அமைப்பு முன் வந்தது; ஆனால், 8.7 சதவீதமாக அதை, நிதி அமைச்சகம் குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 8.8 சதவீத வட்டி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான, வட்டி விகிதம் குறித்து தற்போது ஆலோசனை நடக்கிறது. மற்ற சிறு சேமிப்புகளுக்கு இணையாக, பி.எப்., வட்டி விகிதமும் இருக்க வேண்டும் என, நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.அதன்படி, 'நடப்பு நிதியாண்டிற்கு, 8.6 சதவீத வட்டி வழங்கலாம்' என, பி.எப்., அமைப்பும், நிதி அமைச்சகமும் இறுதி செய்துள்ளதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,

http:/mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை,
nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம்.

புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது. இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது.'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்

புதுடில்லி : நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இணையதளம் துவக்கம் டில்லியில் நேற்று, உயரதிகாரிகள் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், 'கட்' அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போகிறது. ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, குழந்தைகள் பற்றி, பெற்றோருக்கு தெரிய வருகிறது.

இதற்கு தீர்வாக, மாணவர்களின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம், வகுப்பு தேர்வு முடிவுகள், உடல் நலன் தொடர்பான தகவல்கள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், பெற்றோருக்கு தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'ஷால தர்பண்' என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நுழைவதற்கான, 'லாக்இன்' குறியீடும், 'பாஸ்வேர்ட்'டும், மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணிகள், அடுத்த மாதம் முதல் துவங்கும். காலையில் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய தகவல், பெற்றோருக்கு அன்றைய தினமே, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். கேந்திரிய வித்யாலயாவின் புதிய இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை, மின்னணுவியல் முறையில் விளக்கும், 'இ - டுடோரியல்ஸ்' வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'டிஜிட்டல்'மயமாகிறது:
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் மாற்றும் பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால், தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

12 லட்சம் மாணவர்கள்
நாடு முழுவதும், 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்தி வருகிறது. இவற்றில், 12 லட்சம் பேர் படிக்கின்றனர். பல மாணவர்கள், பள்ளிகளுக்கு வராமல், அடிக்கடி, 'கட்' அடிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது

பென்ஷன் திட்ட ஆலோசனை:'ஜேக்டோ'வுக்கு அரசு அழைப்பு

சென்னை;பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்து முடிவு எடுக்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், வரும், 15ம் தேதி, அரசு பேச்சு நடத்துகிறது.தமிழக அரசு அமல்படுத்திய, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
பல கட்ட போராட்டங்களை நடத்தினர். புதிய பங்களிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.இந்தக் குழு, பல அமைப்புகளிடம், வரும், 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜேக்டோ'வில் இருந்து மூன்று நிர்வாகிகள் பங்கேற்குமாறு, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்தஷீலா நாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.


வழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள் உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

புதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாக குறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று வித பணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 % பேருக்கு "டிகிரி' கிடையாது!

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி) முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2009 செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த 8-ஆவது ஆய்வு அறிக்கையை என்.சி.இ.ஆர்.டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்) தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, 12,99,902 பள்ளிகளில் 10,94,510 பள்ளிகள் கிராமப்புறங்களிலும், 2,05,392 பள்ளிகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. இவற்றில் 59 சதவீதம் தொடக்கப் பள்ளிகள், 27 சதவீதம் நடுநிலைப் பள்ளிகள், 9 சதவீதம் உயர்நிலைப் பள்ளிகளும், 5 சதவீதம் மேல்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
மொத்த பள்ளிகளில் 66 சதவீதம் அரசுப் பள்ளிகள், 14 சதவீதம் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், 7 சதவீதம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள், 13 சதவீதம் சுயநிதி தனியார் பள்ளிகள்.
ஆசிரியர்களின் தகுதிகள்: நாட்டில் 67,47,466 ஆசிரியர்கள் உள்ளனர். இது கடந்த 7 ஆவது ஆய்வு அறிக்கை எண்ணிக்கையை விட 22.01 சதவீதம் கூடுதலாகும்.
இவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 26,41,943 முழு நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 4.7 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புகூட முடிக்காதவர்கள்.
அதுபோல, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 15,44,322 முழுநேர ஆசிரியர்களில், 83.72 சதவீதம் பேர் மட்டுமே உரிய கல்வித் தகுதியும் பயிற்சியையும் பெற்றவர்கள். 13.06 சதவீதம் ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் முழு நேர ஆசிரியர்கள் 12,67,000 பேர் ஆகும். இவர்களில் 20.13 சதவீதத்தினர் பட்டப் படிப்புகூட முடிக்காதவர்கள். இந்த எண்ணிக்கை 7 ஆவது ஆய்வு அறிக்கையில் 12.03 சதவீதமாக இருந்தது.
அதே போன்று மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 4,00,695 முழுநேர ஆசிரியர்களில் 24.56 சதவீதத்தினர் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை மட்டும் பெற்றவர்கள். இதுவும் கடந்த முறையைவிட கூடுதலாகும். 7-ஆவது ஆய்வு அறிக்கையில் இந்த எண்ணிக்கை 18.83 சதவீதமாக இருந்தது.
தமிழகம் இரண்டாமிடம்: பிளஸ் 2 வரையிலான மேல்நிலை வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கையில் 53.83 சதவீத சேர்க்கையுடன் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. 53.22 சதவீதத்துடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும், கேரளம் 52.85 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையில் 52.86 சதவீதத்துடன் மேகாலயா முதலிடத்திலும், சிக்கிம் இரண்டாம் இடத்திலும், அஸ்ஸôம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நடுநிலைப் பள்ளி மாணவிகள் சேர்க்கையைப் பொருத்தவரை சிக்கிம் முதலிடத்திலும், மேகாலயா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இடைநிற்றல்: பள்ளி இடைநிற்றலில், ஐந்தாம் வகுப்பில் 15.84 சதவீத மாணவர்களும், 16.08 சதவீத மாணவிகளும் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். எட்டாம் வகுப்புப் பொருத்தவரை 13.42 சதவீத மாணவர்களும், 14.64 மாணவிகளும் இடைநிற்கின்றனர்.

2.74 லட்சம் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வசதி!

நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் பள்ளிகளில் 2,74,445 பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி மாணவர்களும் படிக்கக் கூடிய வகையில் ஒருங்கிணைந்த கல்வி வசதி உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 8,35,287 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த மொத்தமுள்ள 60 லட்சம் ஆசிரியர்களில் 80,942 பேர் மட்டுமே ஒருங்கிணைந்த கல்விக்கான பயிற்சியைப் பெற்றிருக்கின்றனர்.
2002 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் பள்ளிகளில் சேரும் காது கேளாத, கை, கால்கள் ஊனமுள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
காது கேளாத மாணவர்களின் எண்ணிக்கை 3.98 சதவீதம் என்ற அளவிலும், கை, கால்கள் ஊனமுற்ற மாணவர்களின் எண்ணிக்கை 68.05 சதவீத அளவிலும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன. இதே நேரம், பார்வைக் குறைபாடு உடைய மாணவர்களின் எண்ணிக்கை 17.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

CPS : பென்ஷன் திட்ட ஆலோசனை:'ஜேக்டோ'வுக்கு அரசு அழைப்பு

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடிபார்வையில் இருந்து வருகிறது. மத்தியஅரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக்கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரிஅரசு கிடப்பில் போட்டுவிட்டது.

இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்தியஉள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்தியஉள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையானகண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலைஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்துபேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக்கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவதுசம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக்கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வுஅமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர்நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச்செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குதெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டுகண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றமாரியப்பன் வரும் 22ம் தேதிசேலம் திரும்புகிறார். மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்குநிதியுதவி செய்ய அவர் முடிவுசெய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோநகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயரம்தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. மாரியப்பன்பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவரான அந்தபள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும்22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். பரிசுபணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும்என்றார். சொந்த ஊரில் சொந்தவீடு: மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகைவீட்டில் வசித்து வருகிறோம். பரிசாககிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்தவீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

*'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில்*, கணினி ஆசிரியர்களை நியமிக்காமலும், *கணினி அறிவியல் பட்டத்திற்குஅங்கீகாரம் வழங்காமலும்*💥 பள்ளிக்கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

*💥தமிழக அரசுபள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2வில்,
கணினி அறிவியல்படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்புமுடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.*

💥பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி.,
பிறகு பி.எட்., படிப்புகள்துவங்கப்பட்டன. இது வரை, *40 ஆயிரம்பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர்.*💥 இவர்களுக்கு, *📚தமிழகபள்ளிகளில்பல ஆயிரம் காலிப் பணியிடங்கள்இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை😍*.

வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், *கணினிஅறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்கவில்லை.* பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர்.

ஆன்லைன்படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்தியஅரசு அறிவுறுத்த உள்ளது.

*தமிழகஅதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும்* அபாயம் உள்ளது. *பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன்இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டுஉள்ளன;* அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரிஆசிரியர் சங்க மாநில துணைஅமைப் பாளர் *ஏ.முத்துவடிவேல்* கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர்தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் *கணினி அறிவியல் பாடங்கள்சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல்பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,''*😂 என்றார்.

*தினமலர்*

NHIS-HOD NUMBERS FOR ALL DEPARTMENTS

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர் சங்கத்திடம் கருத்து கேட்ட முடிவு

வாய் துர்நாற்றம்

வாழைப்பூ

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்-

விண்வெளி திட்டங்கள் பற்றிய சில தகவல்கள்

விமானத்தில் பயணிக்கும் போது எவற்றையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது

விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல

ஜெயித்த வாழ்க்கையும் ஜெயிக்காத வாழ்க்கையும்

11/9/16

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?

 'பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்   மெயில்
பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.

பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..? போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட் திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட் திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.
பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


வழிமுறை #01
18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண் அட்டை)

வழிமுறை #02
உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும் என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.

வழிமுறை #03
இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.

வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :
1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.


பிற தகவல்கள் :
1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.

பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





Share ...

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)

Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                                                         
 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 


தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மாணவன் தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு

சேலம், நங்கவள்ளி அடுத்த, வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், 10ம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவன், நேற்று முன்தினம் காலை, அவனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். 

விடைத்தாள் மாயமான சம்பவத்தில், பள்ளி ஆசிரியை நாராயணி, மாணவனை திட்டினார்; அதனால் தான், மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என, அவனது தந்தை பழனி சாமி, போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, தற்கொலைக்கு துாண்டியதாக, நாராயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

'வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: 
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு...




CPS ஐ இரத்து செய்ய வல்லுநர் குழுவை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இன்றைய தின இதழ் நாளிதழ்*

DEE PROCEEDINGS-மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு.நாள்:8/9/16



உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு!

காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

பத்ம விருதுகளின் தேர்வு மக்களிடமே ஒப்படைப்பு!

1954ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் சார்பாக கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம 
விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலை நாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி நாள் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் 
துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,

“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!!!

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், 
உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்ற இந்திய வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தங்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என்று முதல்வர் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!

கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. இதை பல்வேறு வகையில் பயன்படுத்தும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள்,

நினைவுச்சின்னங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. குறிப்பிட்ட மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பாலித்தீன் பொருள்களுக்கு மக்கும் தன்மை இல்லை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் பைகள் குவிந்துள்ள பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் பாதிக்கிறது. மேலும், கால்நடைகள் அவற்றை உண்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்த சூழலியலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களில் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தேசிய நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தியன்று அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக இப்போதே சில இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அது விரிவுபடுத்தப்படும். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாவலர்கள், பார்வையாளர்களைச் சோதித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிப்பர். பாலித்தீன் பொருள்களை எடுத்துச் செல்ல முயலுபவர்களுக்கு சுற்றுலாத்தலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். அதே வேளையில், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு செல்வதற்கு தடையில்லை” என்றார் அவர்.

பெரிய பெரிய திரையரங்குகளுக்குள்ளே எந்த பொருளையும் தற்போது அனுமதிப்பதில்லை. அதற்கு நாமும் கட்டுப்பட்டுதான் இயங்குகிறோம். அதேபோல் பிளாஸ்டிக் பைகளின் கட்டுப்பாட்டையும் செயல்படுத்தினால் என்ன? ‘தூய்மை இந்தியா'வுக்குத் தோள் கொடுப்போம்.

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!

தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!!!
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது.


தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனு: எங்கள் கல்வி மையம் மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக்கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015-16 கல்வியாண்டில் எங்கள் மையம் மூலம், 400 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.


வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17ல் தேர்வு நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை. தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பதில் மனு:---தர்மபுரி கல்வி மையம் மூலம் பயின்ற மாணவர்கள் திருப்பத்துார் மையத்தில் தேர்வு எழுதவில்லை. முறைகேடு நடந்திருக்கலாம் அல்லது &'காப்பி&' அடித்து எழுதியிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. பல்கலை உயர்மட்டக்குழு விசாரித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு பதில் மனு செய்திருந்தார். விசாரணையை, நீதிபதி அடுத்தவாரம் ஒத்திவைத்தார்.

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று!!!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.

தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:



காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.

மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர பேசினாம். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.

மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

10/9/16

மாணவர்கள் மறந்த நாடகமேடை!!

பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடை உடை, கதாபாத்திரத்திற்கேற்ப முக பாவனைகள், என அனைத்தையும் ஒருசேர கொண்டு வருவது மேடை நாடகங்கள்தான்.

அத்தகைய நாடகங்களை, பள்ளி குழந்தைகளிடம் இன்று பெரிதும் காணமுடிவதில்லை. கலை இலக்கிய போட்டிகள் என்றாலே, பாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம் என அதோடு முடித்துக்கொள்கின்றனர்.

இதை தவிர்க்க, கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில், பள்ளியிலுள்ள ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவு கலை ஆசிரியர்களை இதன் பொறுப்பாளராக நியமித்து மாணவர்களுக்கு நாடகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

மேடை நாடகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியறிவின் முக்கியத்துவம், நாட்டுபற்று, சுகாதாரம் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது அறிவையும், சமூக பிரச்னைகளை விளக்கும் வகையிலும் நாடகங்கள் இருத்தல் அவசியம்.

ஓரங்க நாடகங்கள், காப்பியங்களிலிருந்து ஒரு பகுதியை மையமாகக் கொண்டும் இருக்கலாம். நாடகங்களில், முகபாவனைகளுடனும், தெளிவான உச்சரிப்புகளுடன் நடிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.

இவ்வாறு, கல்வித்துறையினர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நடப்பாண்டிலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஓரு சில பள்ளிகள் மட்டுமே, நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு விழாக்களிலும், பல்வேறு நிகழ்வுகளின் போதும் பின்பற்றி வருகின்றனர்.

நடுநிலைப்பள்ளிகளில் நாடகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வந்தவுடன் அப்படியே முடங்குகிறது. இதனால், அந்த மாணவர்களின் கலைத்திறனும் மேம்படுவதில்லை. ஈடுபாடில்லாமை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், ஆசிரியர்களுக்கு நாடகங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும் வெளிப்படுகிறது.

இதனால், மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், நாடகக் கதாபாத்திரங்களாக மாறி, நடித்து பயிற்சியளிக்கின்றனர்.

ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தகைய செயல்பாடு பின்பற்றப் படுவதில்லை. அப்படியே நாடகங்கள் நடத்தினாலும், வெறும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். நாடகங்களின் மூலம், மாணவர்களின் ஆளுமைத்திறன், கலைத்திறன், கற்பனைத்திறன் என அனைத்துமே மேம்படுகிறது.

தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, தமிழ் உச்சரிப்புகளை நேர்த்தியாக பேசவும் நாடங்கள் மட்டுமே முழுமையாக உதவுகிறது. எனவே, முழு ஈடுபாட்டுடன், நாடகங்களை நடத்தி, மாணவர்களின் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு்?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு!

காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் 
விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமனம் : கலெக்டர்களுக்கு கமிஷன் 10 கட்டளை




உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.  
இத்தேர்தலில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன்பிறப்பித்து உள்ளது.அதன் விபரம் வருமாறு:  

ஓட்டுச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுபவர், எந்த காரணத்தை கொண்டும் அந்த உள்ளாட்சியை சேர்ந்தவராக இருக்கக் கூடாதுதேர்தல் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், அவர்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது  

மாநகராட்சி பகுதியில், ஒரு மண்டலத்தில் பணி புரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை தவிர்த்து, மற்ற மண்டல ஓட்டுச்சாவடிகளில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்  

ஊராட்சி செயலர்கள் அல்லது ஊராட்சி பணியாளர்களை, அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வசிக்கும் இடத்திலோ, ஓட்டுப்பதிவுஅலுவலர்களாகவோ, ஓட்டு எண்ணும் அலுவலர்களாக வோ நியமிக்கக் கூடாது  

ஏதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சார்புடையவர் மற்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யக் கூடாதுஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர், அப்பகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் உறவினர் எனதெரியவரும் பட்சத்தில், கண்டிப்பாக அவரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்வதில், கூடுமானவரை போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால் பண்ணை போன்ற துறைகளின் அலுவலர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்  

பெண் வாக்காளர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள ஓட்டுச்சாவடி அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில், ஒன்று அல்லது இரண்டு பெண் அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர் கள், ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது பாதகமாக செயல்படுவதை தவிர்க்கும் வகையில், ஒரு ஓட்டுச்சாவடியில், வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்  

தேர்தல் விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அல்லது மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோரை, தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.  

இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

'புதுச்சேரியில்அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்தஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும்என்று அம்மாநில
முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.


மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீதமுத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும்என்றார்.

இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்

RTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான அரசுச் சார்பு செயலரின் கடிதம்..

CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவது -CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்...

TNOU-2017-B.Ed

மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்

அடுத்தகல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள்வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் கூறினார். டில்லியில் நடந்த, தேசிய கல்விவிழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர்
பேசியதாவது: நாடுமுழுவதும், டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பதற்காக, 'டிஜிட்டல்


இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கினார். அடுத்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிகிரி' சான்றிதழ்கள் உட்பட, அனைத்து சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.


போலி கல்வி சான்றிதழ்கள், போலிமதிப்பெண் பட்டியல்கள் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண, அனைத்து கல்வி ஆவணங்களையும், டிஜிட்டல் முறையில் பெற தனி, 'டேட்டாபேஸ்' அமைக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்நடவடிக்கை எடுத்துள்ளது. உலகில், மாற்றங்கள் வேகமாகநடக்கின்றன. இதற்கேற்ப, நம் மனநிலை மாறவேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

எட்டாம்வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ்பெறலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிகமதிப்பெண் சான்றிதழ்களாக, செப்.,
6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது.


'தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறைஅறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன்கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன்கடைகளில் உள்ள,
'பாயின்ட் ஆப்சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டுவருகிறது.

ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம்அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள்இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம்செய்ய வேண்டும்.
அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன்எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்கவேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும்விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம்.


இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிகஅளவில், மொபைல் போன் பயன்பாடுஉள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்குசெல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன்கடைக்கு சென்று காத்திருக்காமல், எளியமுறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்திபலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர்கூறினார்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

உடற்கல்விஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சிஅளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்தைபயன்படுத்தி பாடம்
கற்பித்தல், பாலியல்பாகுபாடு களைதல் குறித்த பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.

இதற்கானபாடப் புத்தகங்கள், பயிற்சி கையேடுகள், பங்கேற்புசான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, வாழ்வியல் திறன் பயிற்சி எனப்படும்யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காகஅந்தந்த மாவட்ட தலைநகரில் செப்.,19 முதல் 23 வரை ஐந்து நாட்கள்யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில்பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்கள்பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளிக்க வேண்டும்.
இதற்கானஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்சார்பில் செய்து

வருகின்றனர்.

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை

வழக்குகள்முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மதுரையில்அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர்பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும்மேற்பட்ட
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல்கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துவருகிறது.

வழக்குகள்நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில்மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவுதெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறுஅவர் கூறினார்.

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் - தமிழக வீரர் சாதனை

ரியோவில்நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில்இந்திய வீரர் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டிதமிழக வீரர் மாரியப்பன் தங்கம்வென்று சாதனைப்படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர்வருண் சிங்
வெண்கலப் பதக்கம்வென்றுள்ளார். 

மாரியப்பன்சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்றகுக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும்காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதானமாரியப்பன் சேலம் தனியார் கல்ல்லூரியில்பிபிஏ படித்து வருகிறார். இவருக்குஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன்ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின்அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில்அவரது வலது கால் கட்டைவிரலை தவிர மற்ற கால்பகுதிகள் சிதைந்து ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன்உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

TMC என்பது தண்ணீரின் அளவையலகு என்பது தெரிகிறது. தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?



 உதாரணமாக கர்நாடகா 10 TMC தண்ணீர் திறந்துவிட்டது என்பதை எப்படிச் சோதித்தறிவது?

TMC என்பது Thousand Million Cubic feet என்பதன் சுருக்கம். இது ஒரு நீர்மத்தின் பெரும் கொள்ளளவை அலகு ஆகும்.

1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ 28.3168 லிட்டர் அளவிலான நீர் கொள்ளும். அப்படி என்றால், 1 TMC என்பது,

28.3168 x 1,000,000,000 = 28,316,800,000 லிட்டர் (ஏறத்தாழ இருபத்தெட்டு  பில்லியன் லிட்டர்)

திறந்து விடப்படும் வழித்துளையின் விட்டம், நீர்மட்டம் (அல்லது அழுத்தம்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மணிக்கு இத்தனை அளவு நீர் வெளியேறும் என்று கணக்கிடப்படும். அதனடிப்படையில், இத்தனை நேரம் திறந்து வைத்திருந்தால் 10 TMC தண்ணீர் வெளியேறும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

ஆசிரியர்குரல் சிறப்பு பதிவு!பகிர்வு(விகடன்)



அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? 

கற்க கசடற விற்க அதற்குத் தக!
பாரதி தம்பி, படம்: க.பாலாஜி

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில் யாருக்கு அதிகப் பங்கு இருக்கிறது? நம் எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும், கூடுதல் பங்கு அரசு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எந்த அரசுப் பள்ளியில் படித்து அந்த வேலையைப் பெற்றார்களோ, எந்த அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்.
ஒரு கிராமத்துப் பள்ளியில் 15 ஆண்டுகள் ஓர் ஆசிரியர் பணிபுரிந்து, அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்யாதவராக இருப்பாராயின், ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சி முடமாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது ஏதோ எதுகை - மோனை வசனம் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தி, செதுக்குவதில் ஆசிரியர் முதன்மையான பாத்திரம் வகிக்கிறார். ஆனால், இதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள், படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகின்றனர். ஆசிரியர் பணியின்மீது சிறு மதிப்பும் இல்லாமல், வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு வந்து, மிகுந்த அவநம்பிக்கையுடன் வகுப்பறைக்குள் நுழைகின்றனர். 'இதுங்கல்லாம் படிச்சு என்ன ஜில்லா கலெக்டர் ஆகப்போகுதுங்களா?’ என்று தன் மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குத் தன்மீதும் மதிப்பு இல்லை; தன் பள்ளியின்மீதும் மதிப்பு இல்லை.

ஓர் ஆசிரியர், ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவரிடம் கற்கும் மாணவர்கள், இளமையின் வேகத்துடன் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களை, நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கிக்கொள்கின்றனர். பயிற்றுநர்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்களும் அந்த வேகத்தில் ஓடியாக வேண்டும். ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல... இது அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஒரு தையல்காரர், 1980-களில் தைத்த 'பெல்பாட்டம் பேன்ட்’போல இன்றும் தைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்று அவர் ஸ்லிம் ஃபிட் தைத்தாக வேண்டும். இல்லை என்றால் அவருக்குத் தொழில் இல்லை. 'எனக்கு கம்ப்யூட்டர் இயக்கத் தெரியாது. எழுதியே பழகிவிட்டது’ என்று ஒதுங்கி நின்றவர்களை காலம் ஒதுக்கிவிட்டது. அதைப்போலவே இது ஸ்பெஷலிஸ்ட்களின் காலம். வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு மதிப்பு இல்லை. எம்.டி., எம்.எஸ் என்று ஏதாவது ஒன்றில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க வேண்டும். அதற்காக, 'ஸ்பெஷல் தோசையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது’ என்றாலும் ஹோட்டல் நடத்த முடியாது. உங்கள் ஹோட்டலில் ஸ்பெஷல் தோசைதான் ஸ்பெஷல் என்றாலும், மற்றவையும் அங்கே கிடைக்க வேண்டும். ஏனெனில் இது மல்டிப்ளெக்ஸ்களின் காலம். ஆக, நவீன காலத்துக்கு அப்டேட் ஆவது, தன் துறையில் நிபுணத்துவம் பெறுவது, தன்னைச் சார்ந்துள்ள துறைகளை அறிந்திருப்பது, எப்போதும் புதுமைகளை உள்வாங்கத் தயாராக இருப்பது... இவை அனைத்துமே இன்று அடிப்படைத் தேவை! 

சாதாரண ஒரு வேலையைச் செய்யவே இவை அவசியம் என்னும்போது, ஒரு தலைமுறைக்கு அறிவைப் போதிக்கும் பெரும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இந்தத் தகுதிகள் கூடுதலாகவே தேவை. கல்வித் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், நம் நாட்டில் உள்ள கல்விமுறைகளின் சாதக-பாதகங்கள், உலக அளவில் முன்னேறிய நாடுகளில் எப்படி கல்வி போதிக்கப்படுகிறது, நவீனத் தொழில்நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்தும் முறை... என எப்போதும் அவர்கள் தேடுதலுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல்போனால், அதன் பாதிப்பைச் சுமப்பது மாணவர்கள்தான். ஒரு தையல்காரர் நவீன மாற்றங்களை உள்வாங்காமல் தொழில் நடத்த முடியாமல்போவது அவருடைய தனிப்பட்ட நஷ்டம். அதுவே ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கி இருந்தால் நஷ்டம், அந்த வகுப்பறையின் மாணவர்களுக்கு. வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் 50 குடும்பங்களின் வளர்ச்சி பின்தங்கிவிடுகிறது. இத்தகைய பரந்துபட்ட புரிதல் இருக்கும்போதுதான், ஆசிரியர் பணியை ஒட்டுதலுடன் பார்க்க முடியும்.

அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வராத அரசு, லேப்டாப் தருவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறதே ஏன்? புதிய டாஸ்மாக் திறக்கும் அரசு, புதிய பள்ளிகளைத் திறந்துள்ளதா? இத்தகைய சிந்தனைமுறை ஆசிரியருக்கு இருக்கும்போதுதான், வகுப்பறையை முதிர்ச்சியுடன் வழிநடத்த முடியும். ஒரு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது எனில், அதன் பின்னே உள்ள சமூகக் காரணத்தை அப்போதுதான் இனம் காண முடியும். ஆனால் நடைமுறை யதார்த்தத்தை ஒப்பிடும்போது இது வெகுதூரத்தில் ஒரு கனவுக் காட்சியைப்போல் உள்ளது. பல ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வதையே தியாகம் செய்வதைப்போல உணர்கின்றனர். 10, 15 ஆண்டுகள் சர்வீஸ் போட்டுவிட்ட ஆசிரியர்களுக்கு நிறைய விடுமுறைகள் மிச்சம் இருக்கும். அவர்கள் அற்பக் காரணங்களுக்காக அல்லது காரணமே இல்லாமல்கூட விடுமுறை எடுக்கின்றனர். 'சும்மா அலுப்பா இருக்கு’ என்று 10 நாட்கள் விடுமுறை எடுப்பார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் தன் சொந்த மகன் அல்லது மகளுக்கு ப்ளஸ் டூ பரீட்சை வரும்போது ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுப்பார்கள். அந்த நேரத்தில், தான் பணியாற்றும் பள்ளியில், தன்னிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு யார் சொல்லித்தருவது என்பது அவர்களின் எண்ணத்திலேயே இருக்காது.

'பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படி இருக்காங்கதான். நான் மறுக்கலை. அதுக்காக எங்களுக்கு வேலையே இல்லைங்றதைப்போல சொல்லக் கூடாது. குறிப்பா ஆசிரியர்கள் ஒவ்வொருத்தருக்கும் கற்பித்தல் அல்லாத வேலைகள் (Non-Teaching works) மலைமாதிரி குவிஞ்சுகிடக்கு’ என்று ஓர் ஆசிரியர் சொன்னார். இதிலும் உண்மை உள்ளது!
பாடம் எடுப்பது மட்டுமே இன்றைய ஆசிரியரின் பணி அல்ல. ரெக்கார்டுகள் எழுதிக் குவிக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பெரும்பகுதி நேரம் இதற்கே செலவு ஆகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கும் இலவசப் பொருட்களை நிர்வகிக்க வேண்டிய பெரும் சுமை ஆசிரியர்களிடமே இருக்கிறது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சைக்கிள், மாணவிகளுக்கு இலவச நாப்கின், ஃபோலிக் ஆசிட் மாத்திரை, லேப்டாப், வரைபடம், வண்ண பென்சில், ஸ்கூல் பேக், செருப்பு, ஜியாமெட்ரி பாக்ஸ்... போன்ற இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் தரப்படுவது இல்லை. ஆண்டு முழுவதும் வெவ்வேறு நாட்களில் இவை வந்துகொண்டே இருக்கும். ஒரு பள்ளியில் 1,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வகுப்புவாரியாகப் பிரித்து இவற்றை வழங்க வேண்டும். அவற்றுக்கான ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்களும், பாடப் புத்தகங்களும் மாவட்ட, வட்டாரத் தலைநகரங்களுக்கு வரும். அதைப்போய் எடுத்துவர வேண்டும். அது ஒரே முறையில் முடிந்துவிடாது. 'அறிவியல் புக் அடுத்த வாரம்தான் வரும்’ என்பார்கள். அதற்கு ஒருமுறை மீண்டும் போக வேண்டும். ஒரு பருவத்துக்குக் குறைந்தது 5 முறை அலைய வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய அரசுப் பள்ளிகளில் நிர்வாக ஊழியர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். எல்லா வேலைகளையும் ஆசிரியர்கள்தான் செய்தாக வேண்டியுள்ளது.
இதை மறுக்கவில்லை. ஆனால் அப்படி வேலைப்பளு இருந்தால், அதற்காக ஆசிரியர் சங்கம் மூலம் போராடி நியாயத்தைப் பெற வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களின் முதன்மையான நோக்கம் பயிற்றுவிப்பதுதான். அதைப் பின்னுக்குத் தள்ளி இதர வேலைகள் தங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதேநேரம், 'வேலைக்கு அப்பாற்பட்ட வேலை’ பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கான பிரத்யேக சிக்கல் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  வாழ்வின் அழுத்தம் அதிகரித்துவிட்ட நவீன காலத்தில், எல்லா துறைகளிலும் இத்தகைய மதிப்புக் கூட்டு வேலைகள் (Value added works) அதிகரித்துவிட்டன. ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி முன்பு மாதிரி கடையில் உட்கார்ந்துகொண்டு இப்போது தொழில் நடத்த முடியாது. வீட்டுக்குத் தண்ணீர் கேன் போடுவதில் அவருக்கு ஒரு கேனுக்கு 2 ரூபாய்தான் கிடைக்கிறது என்றாலும், மூன்று மாடி ஏறியிறங்கிப் போடுகிறார். அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். 'என் வேலை இது மட்டும்தான்’ என்று யாராலும் கறாராகச் சொல்ல முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து பணிபுரிந்தாக வேண்டிய நிர்பந்தம் அனைத்து பிரிவினருக்கும் இருக்கிறது. இது சரியா, தவறா என்பது தனி விவாதம். இங்கு சொல்லவருவது, இந்தச் சிக்கல் ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை. அரசுப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்டிருக்கும் கூலித் தொழிலாளியும் கூடுதல் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது.

புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இத்தகைய சூழலிலும்கூட தாங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட பணியில் இருப்பதையும், நல்ல ஊதியம் பெறுவதையும்தான். இன்று மாநிலம் முழுக்க ஆசிரியர் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். கணவன் 50 ஆயிரம், மனைவி 50 ஆயிரம் என்று குறைந்தபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பணியாற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து யோசித்திருக்கிறார்களா? மிகமிக சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஏழைப் பெற்றோர்கள் அவர்கள். தங்கள் பிள்ளை படித்து வந்து குடும்பத்தைக் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையின் பிடிமானத்தில் வாழ்கிறார்கள். ஏதுமற்றோரைக் கடைத்தேற்ற கல்வியைவிட்டால் வேறு நாதி ஏது? அதை வழங்கும் ஆசிரியர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கு தெய்வங்கள். படிக்காத ஒரு தொழிலாளி, ஆசிரியரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடுகிறார் என்றால் அது வெறும் மரியாதை அல்ல. நீங்கள் பெற்றிருக்கும் கல்விமீதான பிரமிப்பு. தன் பிள்ளைக்கும் அதைத் தருகிறாரே என்ற நன்றியுணர்ச்சி. அந்த நன்றிக்கு உரியவராக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பள்ளியில் உட்கார்ந்து ரியல் எஸ்டேட், வட்டிக்கு விடுவது போன்ற தலையாயப் பணிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்ற குற்றவுணர்ச்சி முதலில் வர வேண்டும். பிற்காலத்தில் தன் ஆசிரியரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, மாணவனின் மனதில் நல்லவிதமாக நீங்கள் பதிவாக வேண்டும். மாறாக 'வட்டி வாத்தியார்’ என்ற கறுப்பு அடையாளத்துடன் அல்ல!  
- பாடம் படிப்போம்...

இப்படியும் சில ஆசிரியர்கள்...

மாநிலம் முழுவதும் பரவியுள்ள தனியார் பள்ளிகள் பலவற்றில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அரசுப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தன் 'பங்குதாரர்’ பள்ளியில் பாடம் நடத்துபவர்கள் பலர். அல்லது அரசுப் பள்ளியில் தன் வேலையை செய்ய 5,000 சம்பளத்துக்கு ஓர் ஆசிரியரை உள் வாடகைக்கு நியமித்துவிட்டு இவர் தனியார் பள்ளியில் பாடம் நடத்துவார். பல இடங்களில் இது நடக்கிறது. முக்கியமாக அரசுப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்தி மாணவர்களை நன்றாகப் படிக்கவைப்பார்கள். அதே பள்ளியில் இருக்கும் இந்த 'பங்குதாரர்’ ஆசிரியரோ... யார் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர் என்பதைக் 'கண்காணித்து’ அவர்களை தன்னுடைய தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆள்பிடி வேலையைச் செய்வார். ஜூன் மாத ஆரம்பத்தில்தான் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்தகைய 'பங்குதாரர்’ ஆசிரியர்கள் பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் மருத்துவ விடுப்புப் போட்டுவிட்டு தனியார் பள்ளிக்கு அட்மிஷனுக்குப் போய்விடுவார்கள். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, தருமபுரி பகுதிகளில் இது மிக அதிகம்.




அரசுப் பள்ளியில் பணிபுரிந்து பல்லாயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்களோ... அந்த அரசுப் பள்ளியின்மீது ஆசிரியர்களுக்கு கொஞ்சம்கூட மரியாதை இல்லை. ஒவ்வொரு நாளும் கடமைக்காக பள்ளிக்குச் சென்று வருபவர்கள்தான் அதிகம்" இது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
sundark

இதை அரசு பள்ளி ஆசிரியர்கள் படிப்பார்களா? படித்து ஒரு 10% ஆசிரியர்கள் மாறினாலே மிக பெரிய வெற்றி இந்த கட்டுரைக்கு..
ReachJegan

புதிய கல்விக்கொள்கை



1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.

8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.

9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.

10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும். 

12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.

13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.

14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.

17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும். 

18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.

19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.

20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.

23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.