இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.
இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:
ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:
ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:
ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.
ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:
ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.
அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:
ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.