யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/12/15

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

மழை, வெள்ளத்தில் கல்விச்சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும்சிறப்பு முகாம்களுக்குதனி அலுவலர்களைநியமிக்க
வேண்டும்என மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையின் விவரம்:-
வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள்இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றிவிண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குஅனுப்ப வேண்டும். சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குசம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்அறிவுரை வழங்கவேண்டும். இதற்காகபள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெறப்படும்பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக்கல்வி அலுவலர்களின்கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில்ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள்இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, மாற்றுச்சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்விஅலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர். இந்தப் பணிகளில் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டஆசிரியர் பயிற்சிநிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள்மண்டல துணைஇயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்திதொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ்உள்ள வகுப்புகளில்மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்குவிண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ளஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றிவழங்க அந்தந்தபள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரிவிண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளன.

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம்வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத்தேர்வை, ரத்துசெய்ய வேண்டும்என்ற
கோரிக்கைவலுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மற்றும் கடலுார்மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ளத்தால், மக்கள்உடைமைகளை இழந்துதவிக்கின்றனர். இந்நிலையில், 14ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள்செயல்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும், ஒன்பது வேலைநாட்கள் மட்டுமேஉள்ளன. பின், மிலாடி நபி, 25ம் தேதிகிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 1ம்தேதி வரைபள்ளி, கல்லுாரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டு, 2ம் தேதிதிறக்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலையில், 14ம்தேதி பள்ளிதிறந்த பின்மீண்டும், 24ம் தேதி முதல் விடுமுறைவிடப்பட்டு, 2ம் தேதி பள்ளிகள் திறக்கவேண்டும்.

இந்நிலையில், ஜனவரி முதல்வாரத்தில், அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புமுதல், பிளஸ்2 வரை, அரையாண்டுத்தேர்வும்; 1 முதல், 9ம் வகுப்பு வரை, இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படுகின்றன.இந்த இரண்டுதேர்வுகளையும் ரத்து செய்ய கோரிக்கை எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும்கூறியதாவது:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், காலாண்டுத்தேர்வு முடிந்து, 10 நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டு, நான்கில் ஒருபங்கு பாடங்கள்தான் நடத்தப்பட்டுள்ளன. 10 முதல், பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் முடிக்கப்பட்டு உள்ளன.

மற்ற வகுப்புகளுக்கு பாடம்நடத்தாமல், அரையாண்டுத் தேர்வு என்பது வெறும்சம்பிரதாயமாகவே இருக்கும். இக்கட்டான இந்நேரத்தில், மாணவர்களைசோதிப்பது சரியானமுடிவாக இருக்காது. நன்றாக படிக்கும்மாணவர்கள் கூட, வெள்ளப் பாதிப்புமற்றும் குடும்பசூழலால், நல்லமதிப்பெண் பெறமுடியாமல் போகலாம்.இதையும் மீறிதேர்வு நடத்தினால், மதிப்பெண் குறைந்துவிட்டதே என, மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு, இறுதித் தேர்வில்கவனம் செலுத்தமுடியாத அபாயம்ஏற்படும்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.


மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கழகதலைவர் எத்திராஜ்கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, 9ம்வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' தான் வழங்கப்படுகிறது. எனவே, இரண்டாம்பருவத் தேர்வுரத்தானால், நேரடியாக மூன்றாம் பருவத் தேர்வைசந்திக்க எளிதாகஇருக்கும். இல்லையென்றால், மூன்றாம் பருவத்துக்கும் நாட்கள்பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5/12/15

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் மழை வெள்ளம்காரணமாக போக்குவரத்துபாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம்சேவை
முடக்கம்என பொதுமக்களுக்குபல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வங்கிசேவையையோ, ஏடிஎம்சேவையோ பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள்தவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காகடிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும்என்று நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தைநீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களைசெயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா?

மழை பாதிப்பால்தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்புதேர்வு' என்றபெயரில் தேர்வுநடத்த கல்விஅதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.

         சென்னை உட்படவட மாவட்டங்களில்மழை பாதிப்பால்பல நாட்களாகபள்ளி, கல்லுாரிகள்செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்தஅரையாண்டு தேர்வுகளைதள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால், மழை பாதிப்பில்லாதமதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்படதென் மாவட்டங்களில்'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில்டிச.,7 முதல்23க்குள் தேர்வுகள்நடத்த முதன்மைகல்வி அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, பத்து, பிளஸ்1, பிளஸ் 2விற்குமாதிரி வினாத்தாள்தயாரிக்க தலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின்மழை பாதிப்புஅதிகம். பலநாட்கள் விடுமுறைவிடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில்பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்றபெயரில் தேர்வுநடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்


பத்து, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள்என்பதால் அரையாண்டுதேர்வு தள்ளிவைப்புஅறிவிப்பு அனைத்துமாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்தமாவட்டம் சார்பில்நடக்கும் ஆறுமுதல் ஒன்பதாம்வகுப்பு தேர்வுகளுக்குஇந்த அறிவிப்புபொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில்இருந்தும் தெளிவானஅறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் உதவிக்கரம் தந்து மீட்போம்

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து, உடமைகள் அனைத்தையும் இழந்து உண்ண. உணவின்றி, உறங்க இடமின்றி,குழந்தைக்குபால் இல்லாமல், கொடுக்க பிஸ்கட் கூட இல்லாமல் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ யாராவது உதவ வருவார்கள் என்று தன் பிள்ளையின் வயிற்றுப்பசியை மட்டுப்படுத்தி தண்ணீரில் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தாய்கள் எத்தனையோபேர், கடலூரிலும், சென்னையிலும் காத்திருக்கிறார்கள் நாமோ இங்கு உதவ மனமிருந்தும் வழிதெரியாமல் கரைந்திருக்கிறோம்.


கடவுள்கள் கண்ணசந்துவிட்டனர்
நம் சொந்தத்தை நாமே கைகொடுத்து மீட்போம்
இயக்க கண்மனிகளே மாவட்ட பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் வட்டார. பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ஷீட்டுகள், பேஸ்ட்டு, சோப்பு, பாய்கள் ஆடைகள் என உங்களால் எவ்வளவு பெற முடியுமோ பெற்று அதனை உடனே கடலூர், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவையுங்கள்.
இப்படிக்கு  
இரா.தாஸ், பொதுச்செயலாளர், 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி.

இஎம்ஐ உள்ளிட்டவற்றை செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மழை வெள்ளத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இஎம்ஐ உள்ளிட்ட மாதாந்திர ஈவுகளை செலுத்துவதற்கு வங்கிகள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பலத்த பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், அடையாறு நிரம்பி பல இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

ஒரு பக்கம் வெள்ளம், மறுபுறம் ஆறுகள் உடைப்பெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் நெட் பேங்கிங், போன் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளும் கிடைப்பது கடினமாக உள்ளது. பல ஊர்களில் மின்சாரம் இல்லாத நிலை.

பொதுமக்கள் பலர் உயிர் பிழைத்தால் போதுமென்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற வற்றை வீடுகளிலேயே வைத்துவிட்டு வெளி யேறியுள்ளனர். சிலரது அட்டை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. இந்த சூழலில் 4 அல் லது 5 தேதிக்குள் வங்கி இஎம்ஐ, கிரெடிட் கார்டு தொகை போன்ற வற்றை செலுத்த சொல்லி வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்புகின்றன.

வங்கிகள் சொல்கிற தேதியில் பணத்தை கட்டாவிட்டால் அபரா தத் தொகை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இஎம்ஐ போன்றவற்றை செலுத்த வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் கூடுதல் அவகாசம் தர வேண்டும். குறிப்பாக பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தேசிய, தனியார் வங்கிகளும் உடனடியாக இக் கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ்-ல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி: கே.வி. வங்கி அறிவிப்பு.

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அரசுக்கு பக்கபலமாக..

சென்னையில் எதிர்பாராத அளவுக்கு பெய்த மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகைய பாதிப்புகளின்போது அரசுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ.2 கோடி வழங்கவுள்ளது.

இந்த தொகையை விரைவிலேயே அரசு அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

சவால்களுக்குச் சவால்விடு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது! என்றார் உலக உத்தமர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம் இன்னொன்று புறப்போராட்டம்.


அகப்போராட்டம் என்பது நமது ஆக்க சிந்தனைகளுக்கும் எதிர்மறை சிந்தனைகளுக்கும் இடையே நொடிகள் தோறும் நடப்பெறும் போராட்டத்தை குறிக்கும். அதிகாலை எழுந்து உழைஅகிலம் உனக்கு! என்று சிந்தனை நம்மை எழுப்ப முயலும் போது, எல்லம் விதிபோல்தான் நடக்கும் படுத்து உறங்கு!" என்று எதிர்மறை எண்ணம் இழுத்து மூடும்!

இதுபோலத்தான், ஒவ்வொன்றும் நிகழ்கின்றது. ஆதாவது முயற்சி செய்! முடியாது உலகில் இல்லை! என்று ஆக்க எண்ணங்கள் உத்வேக சிறகுகளைக் கொடுக்கும்போது, எதிர்மறை எண்ணம்  வேண்டாம். சும்மா இருப்பதே சுகம் என்று சோம்பல் விலங்குகளை எடுத்து நமது கைகளில் மாட்டும்.  மதித்து நட, உயர்வுக்கு உழைப்பு மட்டும் போதாது, மற்றவர்கள் ஒத்துழைப்பும் வேண்டும்! பணிதான் உன்னை உயர வைக்கும் என்று ஆக்க சிந்தனை அறிவுறுத்தும் போது;  நீ தான் சிறந்தவன் மற்றவன் எல்லாம் மடையன்&' என்று அகந்தை நெருப்பை பற்ற வைத்து தலையில் கனத்தை ஏற்றும்! எதிர்மறை எண்ணம்.

ஆகவே, அகப்போராட்டத்தில், ஆக்க சிந்தனைகளை மட்டுமே வெல்ல வைக்கும் வைராக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகப்போராட்டத்தில் வெற்றி பெற்றால், வெளியில் எதிர்வரும் எந்த சவாலுக்கும் சவால்விட்டு வெற்றி வாகை சூட்ட முடியும்.

அகப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு சில யோசனைகள்:

1. உங்களால் முடியும் என்று முதலில் நம்புங்கள். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.

2. ஒவ்வொரு வேலையையும் ஒத்திப் போடாமல், சாக்குப் போக்குச் சொல்லாமல் உடனுக்குடன் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்களைச் செய்பவர்கள் காரணங்களை சொல்வதில்லை.

3. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பதுடன், அவற்றை முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டி ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! ஏனென்றால், சுயஊக்குவிப்பே  சிறந்த பாராட்டு.

4.மனம் தளர்கின்றபோது, இதுவரையில் நீங்கள் பெற்ற வெற்றிகளை அடைப்போடுங்கள். ஏனென்றால் வெற்றுமனமாக இருப்பதைவிட வெற்றி மனத்தோடு இருப்பதே சிறந்தது.

5.உங்கள் முயற்சிச் சிறகுகளை வெட்டி வீழ்த்தும் முட்டாள்களிடமிருந்து விலகியே இருங்கள்.

6.வெற்றி என்பது எனது பிறப்புரிமை என்று மனதுக்குள்ளாக முழங்கிக் கொண்டே சவால்களுக்குச் சவால் விடுங்கள். 

--சிந்தனை கவிஞ்ர் டாக்டர் கவிதாசன்.

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

*மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? 

பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும். 
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

*பதிவு எண் கட்டாயம்: 

சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*ஓட்டுநர் உரிமம்: 

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும். 

*குடும்ப அட்டை: 

குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும். 

*டெபிட் கார்டு: 

பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
 பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

*பட்டா: 

வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

*சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுமா?

 சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முகேஷ் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் பலரது வீடுகள் முழுவதும் மூழ்கிப் போயின. குடும்ப அட்டை, வங்கிப் பற்று அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் அவசர தேவைக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கூட முடியவில்லை. அடித்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் திரும்பப் பெற எத்தனை நாள்கள் ஆகும் எனத் தெரியவில்லை. எனவே, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

வங்கிகள் நாளை இயங்கும்

சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை, அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும். ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும்,
கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என மத்திய நிதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்

சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். 

எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை (டிச.5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த நான்கு நாள்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்

வங்கக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் காரைக்காலில் பலத்த, மிகப் பலத்த மழை நீடிக்கும். அதேநேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில், இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிக்கிறது. இந்த நிகழ்வின் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

பலத்த, மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, விழுப்புரம், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் ஓரிரு முறை மழை பெய்யவும் வாய்ப்புண்டு.

பலத்த மழை எச்சரிக்கை இல்லை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களுக்கு, பலத்த மழை எச்சரிக்கை இல்லை. இருப்பினும், மாநகரில் ஓரிரு முறை மழை இருக்கும். ஆனால், பலத்த மழை வாய்ப்பு இருக்காது. இதனால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. அதேபோன்று, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு பல இடங்களில் பலத்த மழை இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமை (டிச.8) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.

தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை டிச., 8ல் நிற்குமா?

வங்க கடலில் தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கன்னியகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.இந்த எச்சரிக்கை 7ம் தேதி வரை மட்டும் விடப்பட்டுள்ளதால், 8ம் தேதிக்கு பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: வங்க கடலின் தென்மேற்கே, இலங்கை அருகே, நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அப்பகுதியிலேயே நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிச., 7 வரை மழை நீடிக்கும்.

தேதி வாரியாக முன்னெச்சரிக்கை:
டிச., 5: விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
டிச., 6, 7: தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை:

சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம், கடலுார் - 9; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 5; திருவாரூர் மாவட்டம், நன்னிலம், திருத்துறைபூண்டி, தேனி மாவட்டம், பெரியாறு - 4; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சென்னை டி.ஜி.பி., அலுவலகம்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கன்னியாகுமரி மாவட்டம், குளித்துறை - 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டிச., 8ல் நிற்குமா?

வானிலை ஆய்வு மையம், நேற்று முதல், டிச., 8 வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 7ம் தேதி வரை, மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 8ம் தேதிக்கான எச்சரிக்கை இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தை மிரட்டி வரும் மழையின் தீவிரம், 8ம் தேதியில் இருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இனி ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறை-7வது ஊதியக் குழு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருல் 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. தன் அறிக்கையில் ஏகப்பட்ட சீர்த்திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது 7வது ஊதியக் குழு. மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு சீர்திருத்தங்கள்... பணித்திறன் ஊதியம், மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு தங்கள் குழந்தையைப் பராமரிக்க இரண்டு ஆண்டுகள் விடுமுறை. 


ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்புக்கான விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது, ஊதியக் குழு. ஆண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுமுறை பரிந்துரையை வரவேற்கும் அரசு ஊழியர்கள், பணித்திறன் ஊதிய முறையை எதிர்க்கிறார்கள்.

அதென்ன பணித்திறன் ஊதிய முறை..?

அரசு அலுவலகம் என்றால் ஆமை வேகத்தில் தான் இயங்கும் என்பது பொதுக்கருத்தாக மாறிவிட்டது. ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு, பாதி ஆயுளை அதற்காக அலைந்து திரிந்தே தொலைத்தவர்கள் ஏராளம். ‘அரசு வேலையில் சேர்ந்து விட்டோம், இனி சம்பளம், இங்கிரிமென்ட் வந்துவிடும். வேலை பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன’ என்ற மனோபாவம் சில அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்த மனோபாவத்தைத்தான் நாட்டின் வளர்சிக்குத் தடையாகச் சுட்டிக்காட்டுகிறது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு.

இதற்கு மாற்றாகத்தான் பணித்திறன் ஊதியம் என்ற திட்டம் முன் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருப்பதைப் போல, அரசு ஊழியர்களின் பணித்திறன் முழுமையாக கண்காணிக்கப்படும். தங்களுக்கான பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும்...” என்கிறது ஊதியக் குழு.  



இதை பரவலாக மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்கள் வரவேற்கிறார்கள். ‘மக்கள் சாசனப்படி பொதுமக்களுக்கான பணிகள் நடப்பதை இந்த கண்காணிப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தும்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், அரசு ஊழியர்களின் கருத்து வேறுமாதிரி இருக்கிறது. “பெரும்பாலான அரசுத்துறைகளில் பணிகள் தனியாருக்கு தரப்படுகின்றன. உதாரணத்துக்கு, மத்திய பொதுப்பணித்துறை இருக்கிறது. அதில் பெரும்பாலான பணிகளை தனியார்தான் மேற்கொள்கிறார்கள். ஊழியர்கள், தங்களுக்கான வேலை எதுவென்றே தெரியாமல் தவிக்கிறார்கள்.

அஞ்சல்துறை இருக்கிறது. ஒரு போஸ்ட்மேன் ஒருநாளைக்கு 120 கடிதங்களை கொடுத்தாக வேண்டும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தனியாருக்கு அஞ்சல்துறையை தாரை வார்க்கிறார்கள். கொரியர் நிறுவனங்கள் பெரு வளர்ச்சி அடைந்துள்ளன. 120 கடிதங்களே அஞ்சலகத்திற்கு வராதபோது போஸ்ட்மேன் எப்படி அத்தனை கடிதங்களைத் தந்து தன் பணித்திறனை நிரூபிக்க முடியும்...?” என்று கேள்வி எழுப்பும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழகப் பொதுச் செயலாளர் துரைபாண்டியன், ஆண்களுக்கான குழந்தைப் பராமரிப்பு விடுமுறை திட்டத்தை வரவேற்கிறார்.   

“இந்த ஊதியக் குழுவின் அறிக்கையில் உள்ள ஒரே ஆறுதல், ஆண்களுக்கு கொடுக்கிற குழந்தை பராமரிப்பு விடுமுறை தான். இரண்டு ஆண்டுகள் விடுமுறை என்று அறிவித்துள்ளார்கள். 365 நாட்களுக்கு முழு சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீத சம்பளமும் கிடைக்கும். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். முன்பு பெண்களுக்கு இரண்டு வருடங்களிலும் முழு சம்பளம் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கும் ஆண்கள் மாதிரி 365 நாட்கள் முழு சம்பளம், அடுத்த 365 நாட்கள் 80 சதவீத சம்பளம் என்று மாற்றிவிட்டார்கள்...” என்கிறார் துரைபாண்டியன். இதுவரை அமைக்கப்பட்ட அத்தனை ஊதியக் குழுக்களும் சம்பள உயர்வு பற்றியே பரிந்துரைகள் அளித்துள்ளன. 7வது ஊதியக் குழு காலத்தின் தேவைக்ேகற்றவாறு சீர்த்திருத்தங்களையும் உள்ளடக்கி பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தனியார் நிறுவனங்களைப் போன்றதாகவே பல பரிந்துரைகள் இருப்பதால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த தயாராகி வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

"பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும் என்கிறது ஊதியக் குழு"முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2006, ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.

முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியை, காசோலை, வரைவோலை மற்றும்ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


ஆனால், மழை பாதிப்பில்லாத மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களில் 'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில் டிச.,7 முதல் 23க்குள் தேர்வுகள் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின் மழை பாதிப்பு அதிகம். பல நாட்கள் விடுமுறை விடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில் பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள் என்பதால் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்த மாவட்டம் சார்பில் நடக்கும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் தெளிவான அறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

4/12/15

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன.
நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

நவம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதோடு, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை.

இதன் காரணமாக, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த இருந்த அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இப்போது பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.எஸ். ஆராய்ச்சி படிப்புகள் சேர்க்கைக்காக சனிக்கிழமை (டிச.5) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறினார்.
இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது.
தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.நேற்று காலை, 8:30 மணி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலுார் - 13; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் - 12; மதுரை மாவட்டம், பெரியாறு - 11; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் - 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும், 50 செ.மீ., மழை?'சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், அடுத்த இரு நாட்களில், மீண்டும் 50 செ.மீ., மழை பெய்யும்' என தனியார் வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.ஓய்வு பெற்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தாம்பரத்தில் 49 செ.மீ., மழையும், சென்னை மற்றும் பிற சுற்றுப் பகுதிகளில், 29 - 36 செ.மீ., மழையும் பெய்தது, மிக அதிகபட்சமானது. இதுபோன்ற நிலை எதிர்பாராமல் நடப்பது. மீண்டும் இதேபோல மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது. தற்போது நிலவும் வானிலை நிலவரப்படி, மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20

வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும் விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
சென்னை, சைதாபேட்டை பகுதியில், நேற்று காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும் விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன. அங்குள்ள ஓட்டல் மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை, அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர். விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர்.
'ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு, இதுபோன்று கூடுதல் விலை வைத்து விற்பது மனிதாபிமானமற்ற செயல்' என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முட்டை, பிரட் தட்டுப்பாடுமெழுகுவர்த்தியும் இல்லை

சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்கு இல்லாத வீடுகள், குடிசைப் பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. மழை பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு நாளாகும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.