யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

கணினி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவத்துக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய சான்றிதழ் தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.tndote.org என்னும் இணையதள முகவரியில் நவம்பர் 11ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூபாய் 530க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

18/11/16

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?

TIME TABLE
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத்தேர்வு.

🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத்தேர்வு

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத்தேர்வு.

ஒவ்வொருவாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருபாடத்தில் தேர்வு
வினாத்தாட்களைஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

தேர்வுநேரம்: பி.ப.3.00 to 4.00

தொடக்க கல்வி - பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்தல் அறிவுரை வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள்..

SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.

தங்கள்பள்ளி எந்த நாட்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை உங்கள் BRT அவர்களிடம்கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கப்பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்யவேண்டும்.

நடுநிலைப்பள்ளிகள் நான்கு மாடல் செய்யவேண்டும். 1 - 5. (2)  6 - 8. (2).

மாடல்கள்மாணவர்கள் செய்ய வேண்டும். செய்ததைகண்காட்சி அன்று மாணவர்கள் செய்துகாட்டு விளக்குதல் வேண்டும்.

ஒரு மையத்துக்கு 10 பள்ளிகள் வீதம் கலந்து கொள்வார்கள்.

சிறப்பாகசெய்த மாணவர்க்கு பரிசு உண்டு. பள்ளிக்கும்கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்படும்.

ஒரு மாடலுக்கு ரூபாய் 180. லிருந்து  300. வரைமைய தலைமை ஆசிரியர் வழங்குவார்.

P.F முன்பணம் 2013-14 AEEO அலுவலகத்தில் தணிக்கைச் செய்து உறுதி செய்யப்பட்ட AlC Slip வைத்து போடலாம் என்பதன் அரசு கடிதம்



TNOU-B.Ed -2017

ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’

சென்னையில்பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைமாற்ற, ஆதார் அட்டையை ஒருமுறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.

பணம் செல்லாது அறிவிப்பு

புழக்கத்தில்உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்று மத்திய அரசுஅறிவித்தது. இதனால் அதை மாற்றவங்கிகள் முன்பு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து கிடக்கின்றனர். இவர்கள்தங்களுடைய ஆதார் அட்டை நகலில்கையெழுத்திட்டு, வங்கிகளில் செலுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர்.

முதலில்ரூ.4 ஆயிரம் மதிப்பில் மட்டும்பணமாற்றம் செய்யப்பட்டது. இதனை ரூ.4 ஆயிரத்து500 ஆக மாற்றி மத்திய அரசுஅறிவித்தது. ஒரு வாரத்தில் சகஜநிலைஏற்படும் என்று கருதிய வங்கிஅதிகாரிகளுக்கு, நாளுக்கு நாள் வங்கிகளின் முன்புநிற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

விரலில்மை

இதனை கட்டுப்படுத்த பணம் மாற்ற வருபவர்களின்கை விரலில் மை வைக்கமுடிவு செய்யப்பட்டது. இந்த தகவலால் நேற்றுகாலையில் வங்கிகள் முன்பு கூட்டம் சற்றுகுறைவாக காணப்பட்டது. பெரும்பாலான வங்கி கிளைகளுக்கு மைவந்து கிடைக்காததால், வழக்கம் போல் மைவைக்காமல் பணமாற்றம் செய்யும் பணி நடந்தது.

இதனால்நேற்று பிற்பகலில் வங்கிகள் முன்பு மீண்டும் நீண்டவரிசை காணப்பட்டது. ஸ்டேட் வங்கி தவிரபெரும்பாலான வங்கிகளில் மாற்றித்தருவதற்கு போதிய பணம் இல்லாததால்வங்கிகளில் வழக்கம் போல் டெபாசிட்பெறுவது, காசோலை பரிமாற்ற பணிகள்மட்டுமே நடந்தன. தபால் அலுவலகங்களைபொறுத்தவரையில் போதிய பணம் இல்லாததால்வெறிச்சோடியே காணப்பட்டன.

ஆதார் அட்டை பதிவு

இதுகுறித்துஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களின்வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாகஇருக்கும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்று ரிசர்வ் வங்கி அறிவித்துஉள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பணம் மாற்றவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எதாவதுஒரு அடையாள அட்டையின் நகலில்கையெழுத்திட்டு கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி85 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை நகல்மூலம் பணம் மாற்றித்தரப்பட்டது. அவ்வாறுகொண்டு வரப்படும் ஆதார் அட்டை எண்கள்கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மீண்டும்அதே ஆதார் அட்டைகளை கொண்டுவந்தால் கணினி அதனை ஏற்பதில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மாற்று அடையாளஅட்டைகளை பொதுமக்கள் கொண்டு வந்து பணத்தைமாற்றி செல்கின்றனர்.

கண்காணிப்பு

குறிப்பாககுடிசை பகுதிகளில் இருப்பவர்கள் அதிகளவு வந்து பணத்தைமாற்றுவதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கமிஷன் வாங்கிகொண்டு வேறு நபர்களின் பணத்தைமாற்றுவது ஒரு சிலர் மூலம்தெரியவந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிபணம் மாற்ற வருபவர்களின் கைவிரல்களில்மை வைக்க அறிவுறுத்தி உள்ளது. மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிஅச்சகத்தில் இருந்து பெரும்பாலான கிளைகளுக்குமை வந்து சேரவில்லை. நாளை(இன்று) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைத்தஉடன் மை வைக்கும் பணியைதொடருவோம். அதுவரை வழக்கம் போல்பணம் மாற்றி தரும் பணியில்ஈடுபட்டு உள்ளோம்.

வங்கிகளில்பழைய பணத்தை சேகரிக்க தனிப்படைஅமைக்கப்பட்டு செல்லாத பணம் சேகரிக்கப்பட்டுவருகிறது. ‘ஜன்தன்’ கணக்கில் அளவுக்குஅதிகமாக பணத்தை டெபாசிட் செய்பவர்களும், கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவருபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். புதிய கரன்சி நோட்டுகளைவைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறுஅதிகாரிகள் கூறினர்.

'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார் சுழி போட்ட பெண் அதிகாரி

இரண்டுஆசிரியர்கள் உள்ள தொடக்க பள்ளிகளில், பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது. எனவே, ஒருவருக்குமூன்று நாள், இன்னொருவருக்கு இரண்டுநாள் வேலை என,
ஆசிரியர்கள்பிரித்துக் கொள்கின்றனர். ஆனால், வருகை பதிவேட்டில், அனைத்து நாட்களுக்கும் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதற்குமுற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் முயன்றால், சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவை மாவட்ட தொடக்க கல்விஅதிகாரி காந்திமதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார்.
திடீர்ஆய்வு : தினமும் குறைந்தபட்சம், இரண்டுபள்ளிகளுக்கு, காலையில் அதிரடியாக ஆய்வுக்கு செல்கிறார். உரிய நேரத்தில் வராதஆசிரியர்களை பிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கிறார்.காலை, 9:00 மணிக்கு பள்ளி துவங்கும். தலைமை ஆசிரியர், 8:45க்கும், ஆசிரியர்கள், 9:00 மணிக்கும்வர வேண்டும். பல பள்ளிகளில், 10:00 மணிக்குமேல் தான் ஆசிரியர்கள் வருகின்றனர். அதிலும், சில ஆசிரியர்கள் வாரத்திற்குஇரண்டு, மூன்று நாள் மட்டுமேபணிக்கு வருகின்றனர்; பாதியில், 'கட்' அடித்து செல்கின்றனர். இதையெல்லாம், திடீர் ஆய்வில் காந்திமதிகண்டுபிடித்தார். அதனால், அவரே பள்ளிக்குசென்று பாடம் நடத்துகிறார். ஆசிரியர்கள்என்ன பாடம் நடத்தினர் என்பதை, மாணவர்களிடம் விசாரிக்கிறார். பின், அந்த பாடத்திற்கு, உடனடி தேர்வு வைக்கிறார்; அதன்மூலம், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறனைஅறிந்து கொள்கிறார்; அதில், பின்தங்கிய ஆசிரியர்களுக்குஅறிவுரை வழங்குகிறார்.
வரவேற்பு: இப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 1,100 தொடக்க பள்ளிகளில், 50 சதவீத பள்ளிகளில், இதுவரைநேரடி ஆய்வு நடத்தியுள்ளார். துணிச்சலானஇவரது நடவடிக்கைக்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவரை பார்த்து, மற்றமாவட்டங்களிலும் இதேபோல் அதிரடி ஆய்வுநடத்த, தொடக்க கல்வி இயக்குனரகம்முடிவு செய்துள்ளது. அதனால், 'கட்' அடித்து விட்டு, ஊர் சுற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்று தவறாமல் சமர்ப்பிக்க வலியுறுத்தல்

தங்களின்வாழ்நாள் சான்றிதழை, ஓய்வூதியதாரர்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அமைப்பின்முதன்மை ஆணையர், சலீம் சங்கர்
தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கை: வருங்காலவைப்பு நிதி சட்டம் உள்ளடக்கிய, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்பஓய்வூதிய திட்டத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும்ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம்பெறும் பொருட்டு, ஆண்டுதோறும், நவம்பரில், தாங்கள் உயிரோடு இருப்பதற்கானவாழ்நாள் சான்றிதழ், மனைவியை இழந்தோர் மறுமணம்செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், இந்த ஆண்டும் நவம்பரில், ஓய்வூதியதாரர்கள், மேற்படி சான்றிதழ்களை, தாங்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இந்த வாழ்நாள் சான்றிதழை, தற்போது, இணையம் மூலமாக, 'ஜீவன்பிரமான் போர்ட்டலிலும்' பதிவேற்றம் செய்யலாம்; அல்லது, 'ஜீவன் பிரமான் பதாபுரோகிராம்' பொது சேவை மையங்களைஅணுகியும் சமர்ப்பிக்கலாம். தற்போது, இந்தியாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானபொது சேவை மையங்கள் உள்ளன. எனவே, ஓய்வூதியதாரர்கள், தங்களது வங்கி, ஜீவன்பிரமான் மையம், பொது சேவைமையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி, சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை, இந்தியாவில் உள்ள எந்த ஒருஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாகவும்பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.

2017-ம்ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டு சம்பள பட்ஜெட் திட்டத்தைவில்லிஸ் டவர்ஸ்
வாட்சன் நிறுவனம்வெளியிட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துசேலரீஸ் இன் இந்தியா (salaries in india) நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதுஎன்று கூறியுள்ளது. கடந்த ஆண்டும் 10.8% உயரும்என்று கூறியிருந்தது. ஆனால் உண்மையாக 10% மட்டுமேசம்பள உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசஅளவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்இந்தியா சம்பள உயர்வில் முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வில், இந்தோனேசியாவில் 9% சம்பளம் உயர்வு இருக்கும்என்றும் இலங்கையில் 8.9 சதவீதம் சம்பள உயர்வுஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில்7 சதவீதம் சம்பள உயர்வு இருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.   மேலும் இந்தியாவில்சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் நன்கு பணிபுரியும் ஊழியர்களின்சம்பள உயர்வுக் காக 38% ஒதுக்கப்படும் என்றும்சராசரிக்கு கொஞ்சம் அதிகமாக பணிபுரியும்ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 34 சதவீதம்ஒதுக்கப்படும் என்று இந்த ஆய்வுகூறுகிறது. மேலும் சராசரியாக பணிபுரியக்கூடிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 28 சதவீதம்மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

``அனைத்துஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு வழங்குவதைக்காட்டிலும் நன்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்குசரியான சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்று இந்த ஆய்வுகள்தெளிவாக்கு கின்றன. எந்தவொரு வேறுபாடுஇல்லாமல் சம்பள உயர்வு இருக்கும்என்றால் நிறுவனங்கள் நல்ல திறமையுடைய ஊழியர்களைதக்கவைப்பது சிரமமாக இருக்கும். அதிலும்குறிப்பாக ஊழியர்கள் தேவை இருக்கும் துறைகளில்இன்னும் சிரமமாக இருக்கும்’’ என்றுவில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் நிறுவனத்தின்ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தகவல்சேவை பிராக்டீஸ் தலைவர் சம்பவ் ரக்யான்தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்காமற்றும் இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டில் 3 சதவீதம்மட்டுமே சம்பள உயர்வு இருக்கும்என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பார்மச்சூடிகல்ஸ்துறையில் சம்பள உயர்வு அதிகமாகஇருக்கிறது. நிதி சார்ந்த துறைகளில்சம்பள உயர்வு சராசரிக்கும் கீழே8.5 சதவீதமாக இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை.

தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்
விதிவிலக்கல்ல. அரசு ஊழியர்கள் வங்கிகளில்தவம் கிடப்பதால் பணியும் பாதிக்கப்படுகிறது. வருங்காலவைப்பு நிதி முன்பணம், கல்வி, குடும்ப தேவைக்காக பெற்ற கடன் தொகைக்காகபணம் எடுக்க சிரமப்படுகின்றனர்.  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஊதியத்தில் 25 சதவீதத்தை வாடகையாக செலுத்துகி்ன்றனர். இதை தவிர மாதம்தோறும் குழந்தைகள் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளைதற்போதைய வங்கி கட்டுப்பாட்டினால் மேற்கொள்ளமுடியாமல் உள்ளனர். வருமான வரித்துறைக்கு கணக்குகளைமுறையாக சமர்ப்பிக்கும் ஊழியர்கள் தங்கள் பண இருப்பைபெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கானஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அவர்கள்வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்

எட்டாம்வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவிவெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில்நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்திஅடைந்தவர்கள், இன்று முதல், 25 வரைஆன்லைனில் பதிவு செய்யலாம். அரசுதேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை, தேர்வுத்துறை இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Exam - 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு.

*நகராட்சிஆணையர் (கிரேடு-2)* துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவிபிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி
ஆய்வாளர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாகநிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுஎழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி *ஏதேனும் ஒரு பட்டப்படிப்ப*ு முடித்திருக்க வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு வரைகுரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான்நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ்முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகுபுதிதாக மெயின் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 250 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலானகேள்விகளும், 50 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும்கேட்கப் பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின்தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலானகேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்துகேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும்புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில்*3, 5, 8 மதிப்பெண் கேள்விகள*் கேட்கப்பட்டன.
இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள்முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த *5 மதிப்பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.*
அதற்குப்பதில் *புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும்* சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும்கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில்தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து(Choice) விடையளிக்கலாம்.
இந்த புதிய வினாத்தாள் முறைகுறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள்பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால்அதற்கு முழு மதிப்பெண் பெறும்வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர்எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர்திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளைநல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.

*குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.* நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் *ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும்*என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின்தேர்வில் புதிய வினாத்தாள் முறையைபின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களைசரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி
இயக்குனரகம்சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:-
மாணவர்களின்விவரம்
அடுத்தஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின்விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர்பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்தபட்டியலில் இடம்பெற வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடிசரியாக இருக்க வேண்டும். இதனைகல்வி தகவல் மேலாண்மை முறையில்ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாகஉள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள்சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும்இருக்கக்கூடாது.
கண்காணிக்கவேண்டும்
அனைத்தையும்வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர்கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்டகல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்விஅதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும்கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில்காணொலி காட்சி மூலம் முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம்பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்றுதெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநிலஇயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில்நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள்தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!

இன்று முதல் ரூ.4,500க்குபதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு:விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம்
ரூ.2.5 லட்சம்
வங்கிகளில்பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களைமாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்தஉச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல்குறைக்கப்படுகிறது.
அதிக மக்கள், பணத்தை பெறவசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்குசலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காகமணமக்கள் வீட் டார் வங்கிகணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும்அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள்மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கநீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்பதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும் மத்திய அரசுஉன்னிப்பாக கவனித்து வருகிறது.
பொருளாதாரவிவகாரங்கள் செயலர் சக்தி காந்ததாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:
வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றஅனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல்குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தைபெற வசதியாக இந்த நடவடிக்கைஎடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம்இருப்பு உள்ளது என்பதை, மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.
விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம் ரூபாய்,பெற்றுகொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களைபயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதேஅளவு தொகையை பெற, ஏற்கனவேஅனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக்கணக்கில் இருந்து பெறலாம். விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம்தொகையை செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெறஅனுமதிக்கப்படும். திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை பெறலாம்.
இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்ததொகையை பெற்றுள்ளதாக, சுய அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்.
பல்வேறுபொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப்படுவர். மத்திய அரசில், 'குரூப்சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம்ரூபாய் வரை பெறலாம்; நவம்பர்மாத சம்பளத்தில், இந்த தொகை நேர்செய்யப்படும்.
ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும்வகையில், தக்க மாற்றங்களை செய்யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்புநிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின்இரு சபைகளிலும், நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின்அமளியால், இரு சபைகளும், நாள்முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன

நவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்டாடும்படி உத்தரவு

பள்ளி, கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்டநாள் கொண்டாடும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.

சுதந்திரம்பெற்ற பின், 1949 நவ., 26ல், இந்தியஅரசியலமைப்பு சட்டம்
தேசிய அளவில்ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், சட்டநாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு, அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 26ம் தேதி, இந்தியஅரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடப்படும்என, அறிவித்தார். அதன்படி, 26ல் அரசியலமைப்பு சட்டநாளை, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், அரசியலமைப்பு சட்ட நாளை கட்டாயமாககொண்டாட வேண்டும்; அதன் அறிக்கையை, நவ., 30ல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ப.க.இ.ந.க.எண்,74499 எம்/இ/04/2015 நாள் 16/11/2016ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இயக்குநகரத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்-CM CELL REPLIED

நேர்மறை சிந்தனையின் சக்தி

படித்ததில்

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?