யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

கணினி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவத்துக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய சான்றிதழ் தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.tndote.org என்னும் இணையதள முகவரியில் நவம்பர் 11ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூபாய் 530க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக