யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

பணமதிப்பிழப்பு: ஒரு பயனும் இல்லை - முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்!

'மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததன் மூலம் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை' என்று முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக சக்ரவர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பொறுப்பு வகித்தார் என்பது

குறிப்பிடத்தக்கது. 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியின் தமிழாக்கம்…

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதை பற்றி உங்கள் கருத்து?

மத்திய அரசின் இந்த முடிவால் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை.

ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே?

கறுப்புப் பணம் என்றால் என்ன? எந்த ரூபாய் நோட்டுகளும் கறுப்பல்ல. எல்லா ரூபாய் நோட்டுகளும் வெள்ளை தான். நமது அமைப்புதான் கறுப்புப் பணத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனது வருமான வரியை தாக்கல் செய்யாதபோதே அதே கறுப்புப் பணமாக மாறுகிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு என்பது வரி செலுத்தாதவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. மாறாக ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஒழிக்க உதவும்.

ஆனால், மத்திய அரசு கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளதே..

நீங்கள் ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதில் ஒரு சில சிறிய கற்கள் இருக்கும். இப்போது நீங்கள் அதில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர, மொத்த அரிசியையும் தூக்கி வீசி விடக்கூடாது. அதேபோல தான், கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வருமான வரி அமைப்பு இல்லாதது போதுமானம் சட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினாலும் தற்போது பொது மக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

புழக்கத்தில் உள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகளில் 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளே என்ற தகவலா அவர்களுக்கு கிடைத்தது? என்னிடம் இது குறித்தான எந்த தகவல்களும் இல்லை. ஒருவேளை அவர்களிடம் இதுகுறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய் 1000 நோட்டுகளில் எத்தனை கள்ள நோட்டுகள் உள்ளது என்ற விவரத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்துள்ளீர்கள். அப்போது மத்திய அரசிடம் இருந்து ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏதேனும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதா?

ஆம். ரூபாய் நோட்டுகளை தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைத்தது. ஆனால், நாங்கள் அந்த பரிந்துரையை ஆலோசித்த பிறகு நாங்கள் இந்த முடிவை எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டோம்.

அந்த பரிந்துரை முறையாக முன்வைக்கப்பட்டதா? அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்ததற்கான காரணம் என்ன?

அரசிடம் இருந்து வந்த பரிந்துரை அதிகாரப்பூர்வமாக வந்ததா அல்லது தொலைபேசி மூலமாக வந்ததா என்பது இங்கு பிரச்னை இல்லை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அந்த பரிந்துரை வந்தது என்பது உண்மைதான். மத்திய அரசின் அந்த பரிந்துரையால் நமக்கு எந்தவிதமான விளைவுகளும் கிடைப்பதாக தெரியவில்லை. மேலும், அதனை அமல்படுத்த நாம் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகமாக இருக்குமே தவிர, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மிக மிக குறைவாக இருக்கும் என்பதை அறிந்ததால் நாங்கள் அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்துவிட்டோம்.

நனறி : தி இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக