யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக