யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

பணபரிவர்த்தனைக்கு கறும்புள்ளி வேண்டாம்: தேர்தல் ஆணையம் கடிதம்!

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்ற வருகிறவர்களுக்கு கையில் கறும்புள்ளி வைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம்

எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை (16-11-2016) அன்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு விரலில் கறும்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். சிலர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கோடு, அப்பாவி மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்து, வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் என அமைச்சகத்து புகார்கள் வருகின்றன. இதனால், சில மக்களால் மட்டுமே பணத்தை மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே, ‘கறும்புள்ளி’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு இடது கையில்தான் மை வைக்கப்படுகிறது, ஆனால், வங்கியில், வலது கையில்தான் கறும்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை பலரும் வன்மையாக விமர்சித்து இருக்கின்றனர். மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ட்விட்டரில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ‘அரசு தன் சொந்த மக்களையே நம்பாதது தான் இதிலிருந்து தெரிகிறது’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு விரலில் கறும்புள்ளி வைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பது பற்றியும், மம்தா பானர்ஜி எச்சரித்து இருந்தார். நவம்பர் 19ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசம், அச்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கைகளில் கறும்புள்ளி வைக்கும் முடிவு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடைஞ்சலை உருவாக்கும். ஆகவே கைகளில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக