யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு : பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம். இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை: அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.
கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல்இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர, அறிவுறுத்த வேண்டும். வகுப்புகளுக்குதேவையில்லாத புத்தகம், நோட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டுப் பாடங்கள் அதிகம் கொடுத்தால், புத்தக பையின் சுமை ஏறும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தவிர, கூடுதல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது; மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், 'செட்' என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில்பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; 'நெட்' தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.அதன்பின் நடந்த, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 'செட்' தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாகபணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் நாளைமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன.தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்புதலைவர், முரளி கூறியதாவது:தமிழகத்தில், 4,600 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது, தாக்கு தல் நடத்தப்படுகிறது.
இதை கண்டித்து, நாளை காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'பங்க்'குகள் மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

12 லட்சம் பேர் விண்ணப்பம் Gr4 : ஒரு பதவிக்கு 234 பேர் போட்டி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும் என்றும் அறிவித்து இருந்தது. அதுபோல இணையதளத்தில் ஏராளமானவர்கள் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பிக்க கடந்த 8-ந்தேதி கடைசி என்று இருந்தது. ஆனால் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்க விரும்பினார்கள். ஆனால் சர்வர் வேலை செய்யவில்லை. எனவே விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கோரிக்கை விடுத்தது போல 14-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அதன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்தார். மேலும் தேர்விற்கான கட்டணம் செலுத்த 16-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையொட்டி விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதில் இணையதளம் கிடைத்தது.

விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 234 பேர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அடுத்த மாதம் 4–ந்தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

ஆசிரியர்நியமன தகுதி தேர்வு விவகாரத்தில்தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாகஇணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதிவிசாரணை நடைபெறும் என்று சுப்ரீம்
கோர்ட்டுநேற்று உத்தரவு பிறப்பித்தது.

வழக்குதாக்கல்
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டஅரசாணை எண் 25–ல் ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையானஇட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும்பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சிமற்றும் எஸ்.டி பிரிவினருக்குமட்டுமே வழங்க வேண்டும் எனவிதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல, வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்குமுன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்புஏற்படும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன்மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இருவேறுதீர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டவழக்கில், தமிழக அரசின் அரசாணையில்அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில்தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, கோர்ட்டுதமிழக அரசின் முடிவு தேர்வுஎழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்குதடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னைஐகோர்ட்டு, அதன் மதுரை கிளைஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகிதமதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ்முறையை ரத்து செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்ததேர்வில் கலந்து கொண்ட லாவண்யாஉள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அக்.4–ல் இறுதி விசாரணை
இந்த மனுவின் மீதான விசாரணைநேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுதாரர் லாவண்யாதரப்பில் மூத்த வக்கீல் நளினிசிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் தமிழகஅரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர்ஆஜரானார்கள்.
விசாரணைதொடங்கியதும், இரு தரப்பினரும் விரிவானஇறுதி விசாரணைக்காக தேதி குறிப்பிட்டு வழக்கைதள்ளி வைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும்மேலும் சில மனுதாரர்கள் தாக்கல்செய்த மனுக்களையும் ஒன்றாக இணைத்து அடுத்தமாதம் (அக்டோபர்) 4–ந்தேதி இறுதி விசாரணைக்குஎடுத்து கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வழக்கு தொடர்பாக மதுரைஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவையும் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவுசரி என்றும் அதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று வின்சென்ட், கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்தாக்கல் செய்த மனுக்களையும் சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மனுக்களையும்ஒன்றாக இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

தமிழகத்தில் நாளை 'பந்த்' போராட்டம் விவசாயிகள் முயற்சிக்கு பெருகும் ஆதரவு-ஆசிரியர் சங்கத்தினர் இன்று முடிவு?-விவசாயிகள் நாளை அறிவித்துள்ள, 'பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், வணிகர் கள் என பல தரப்பிலும், ஆதரவு பெருகி வருகிறது.

காவிரிபிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குகண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை,
'பந்த்' போராட்டத்திற்கு, விவசாயிகள் அழைப்பு

விடுத்துள்ளனர்.
இதற்கு, தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்டபிரதான அரசியல் கட்சிகள் பலவும்ஆதரவு அளித்துள் ளன. தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கமும் போராட்டத்தில்பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

இதனால், மாநிலம் முழுவதும் மளிகை கடைகள் உள்ளிட்டவணிக நிறுவனங்கள் நாளை இயங்குவது சந்தேகம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நல சங்கமும்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பால்விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை,கோயம்பேடு காய்கறி மற்றும் பழங்கள்மொத்த விற்பனை மார்க்கெட் வியாபாரிகளும், 'பந்த்' போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், மறைமுகமாக ஆதரவளிக்கும் என்பதால், முழு அள வில்தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கும் என, விவசாய சங்கங்கள்கூறின.

ஆசிரியர்கள்இன்று முடிவு: ஆசிரியர் சங்கத்தினர்இன்று சென்னையில் கூடி, விவசாயிகள் நடத்தும்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, முடிவு எடுக்க உள்ளனர்.

புதுச்சேரியிலும்'பந்த்'
தமிழகத்தைப்போலவே, புதுச்சேரியிலும் நாளை, முழு அடைப்புக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'பந்த் நாளில், புதுச்சேரியில்பஸ்கள் ஓடாது; அனைத்து கடைகளும்மூடி இருக்கும்' என, புதுச் சேரிவணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஓரணியில்திரள வேண்டும்!

கர்நாடகஅரசைக் கண்டித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புநடத்தும் முழு அடைப்பில், கொங்குஜனநாயக கட்சி பங்கேற்கும்.தி.மு.க., 'பந்த்'திற்கு ஆதரவளித் துள்ளநிலையில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கவேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும்ஓரணியில் திரள வேண்டும்.

நாகராஜ்நிறுவன தலைவர், கொங்குநாடு ஜனநாயககட்சி
ரயில் மறியல் போராட்டம்!
கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிரான வன் முறைவெறியாட்டத்திற்கு, மத்திய அரசே பொறுப்பு. ஏதோ தமிழகத்திற்கும், கர்நாடகாவிற் கும் இடையிலான தனிப்பட்டபிரச்னைஎன்பதை போல், மத்திய அரசுவேடிக்கை பார்க்கிறது. இந்த மெத்தனப் போக்கைகண்டித்து, நாளை, சென்னை யில்என் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்நடக்கிறது.தி.மு.க., - அ.தி.மு.க., மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒருமித்தகருத்தோடு காவிரி பிரச்னையை அணுகிஇருக்க வேண்டும். தமிழக முதல்வர், அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரு க்குஅழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள்
ஓட்டல்கள்பங்கேற்காது!கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது, தமிழக அரசின் சட்டரீதியிலான முயற்சிகளை வலுவிழக்கச் செய்து விடும். கடையடைப்புபோராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற் காது.
வெங்கடசுப்பு, சீனிவாசன், கே.எல்.குமார்நிர்வாகிகள், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

மருந்துகடைகள் திறப்பு
கடையடைப்புபோராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள்சங்கம் ஆதரவு தெரிவிக் கிறது. அதே நேரத்தில், உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதால், நோயாளிகளின்நலன் கருதி, நாளை ஒருநாள் மட்டும் காலை, 11:00 மணிக்குமேல், மருந்து கடைகள் திறக்கப்படும்.

செல்வம்செயலர், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம்

1வது 2வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்விவாரியம்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது:-சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்

சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைஅதிக சுமையாக உள்ளது. இதனால்முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்தமாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின்வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள்முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள்தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும்கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர்என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்டபல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாதுஎன்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்
அதிக எடை இன்றி புத்தகப்பைகள்கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள்பரிசோதனை செய்யவேண்டும்.
பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளைவாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.
பள்ளிக்கூடங்களில்மாணவர்கள் தினமும் எந்த எந்தபுத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்றகால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
மாணவர்களுக்குபள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்குகொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்குவேண்டுகோள்
மாணவர்கள்பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டுவரும் எந்த ஒரு பொருளும்எடை குறைவாக இருக்கவேண்டும்.
தொடக்கப்பள்ளிவரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள்குழந்தைகள் கால அட்டவணை படிகொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.புத்தகப்பை, வீட்டுப்பாடம்
குறிப்பாக1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.

மாணவர்கள்அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவேபள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூடமுதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறுசி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையைஅனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையேநடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டவல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமைநடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல்3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறுஅரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது,
அதிமுக சார்பில்வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழையஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கைபெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமேதொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாககுழு: தமிழக அரசு அமைத்துள்ளகுழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணிஅலுவலர் சாந்தா ஷீலா நாயர்நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னைபொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்புமுயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர்குழுவில் தாங்கள் தொடர முடியாதுஎன அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின்மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர்குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில்அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின்பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக்கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசுஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும், கருத்துக் கேட்புகூட்டத்தின் போது நேரத்தை சிறப்பானமுறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்தஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும்வகையில், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழ்நாடுகல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இக்கூட்டமைப்பின்மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. அமைப்பாளர் செல்வராசன் தலைமை
வகித்தார். மாவட்டநிதிக் காப்பாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகமத்திய அரசு வெளியிட்டுள்ள முன்மொழிவுகளின்மீது பொதுமக்கள் கருத்து கூறுவதற்கு டிசம்பர்மாதம் வரை கால அவகாசம்அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள்நாடு முழுவதும் விரிவான அளவில் புதியகல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புகூட்டங்களை நடத்த வேண்டும்.
கல்வியைமத்திய அரசின் பொதுப் பட்டியலில்இருந்து மாநில அரசுகளின் பட்டியலுக்குமாற்றிடும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு தேசியமொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தமிழக அரசு மாநிலவரவு, செலவு அறிக்கையில் கல்விக்கு30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும்ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் வரும்18-ஆம் தேதி முதல் 28-ஆம்தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில்50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறும்நோக்கில் கையெழுத்து இயக்கம் நடத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலர் ஜோதிபாசு நன்றிகூறினார்.

ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்குஉதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள்மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி
உதவித்தொகையும்வழங்கப்பட்டு வருகிறது.


இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார்எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும்என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்துமாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண்வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்விஉதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்குஅனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார்எண் இல்லை என, மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார்எண் இல்லா தோர், முகவரிஅடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணைபதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்து கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்எம்எஸ் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, புதிய இணையதளத்தை, மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில்இன்று தொடங்கி வைத்தார். ‘www.cpao.in’ என்ற முகவரியில் ஓய்வூதியதாரர்கள்தங்கள் ஓய்வூதியம் பற்றிய நிலையை அறிந்துகொள்ளலாம். அத்துடன் குறைகள் தொடர்பான புகார்களில்
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம்ஓய்வூதியம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மொபைல்போன் மூலமாகவே புகார்களை அனுப்பலாம். அதன் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் தகவலும்அனுப்பப்படும். இதன்மூலம் 11.61 லட்சம் மத்திய அரசுஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலன் அடைவார்கள் என்றுஅருண் ஜேட்லி கூறினார்.
புதிய இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளால்தேவையில்லாமல் ஓய்வூதியதாரர்கள் அலைக்கழிக்கப்படுவது, மனவேதனை அடைவது தடுக்கப்படும். இனிமேல் ஓய்வூதியதாரர்கள் எந்த துன்பமும் படக்கூடாது. ஏனெனில், அவர்கள் நமது நாட்டின்மூத்த குடிமக்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் மிக முக்கியம். அதைசார்ந்துதான் அவர்கள் இருக்கின்றனர் என்றுஜேட்லி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்கணக்கு தணிக்கைத் துறை தலைவர் எம்.ஜே.ஜோசப் பேசும்போது, ‘‘இந்த புதிய இணையதளம் ஓய்வூதியதாரர்களின்குறைகளை தீர்த்து வைப்பதில் வெளிப்படை தன்மை மற்றும் நம்பிக்கையைஏற்படுத்துவதாக இருக்கும்’’ என்றார்.

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது.

 உயர் கல்வி தொழில்நுட்பநிறுவனமான, என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - சி.எப்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, ஜே.இ.இ.,
தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ்ட் என, இரு கட்டங்களாகஇந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை, ஜே.இ.இ., தேர்வில்பெறும் மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல், இந்தவெயிட்டேஜ் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்திற்கு மேல், மதிப்பெண் பெற்றால்மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தேர்வில் பெறும்மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கைநடக்கும்; தரவரிசை பட்டியல் தயாரிக்க, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது. புதிய மாற்றத்துடன் கூடிய, ஜே.இ.இ., தேர்வின்முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளது. அடுத்தகட்ட, அட்வான்ஸ்ட் தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்தஉள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம், முடிவு வெளியிடுதல் போன்றபணிகளை, சென்னை ஐ.ஐ.டி., மேற்கொள்ளும்.

புதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பில்லை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவாய்ப்பில்லை என, ஊரக வளர்ச்சித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளாட்சித்தேர்தல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்க மாநிலதேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சட்டசபைத்தேர்தல் வாக்காளர்கள்
அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடப்பட உள்ளது. புதிதாக வாக்காளர்களைஇந்திய தேர்தல் ஆணையம் மூலமேசேர்க்க முடியும்.

அவற்றிற்குகால அவகாசம் இல்லாததால் வாக்காளர்பட்டியலில் விடுபட்ட பெயர், திருத்தம், முகவரிமாற்றம் மட்டும் மேற்கொள்ள முடியும்வாய்ப்புள்ளது. ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில்வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி செப்., 1 முதல் செப்., 30 வரைநடக்கிறது. இதில் பெயர் சேர்க்க2017 ஜன., 1 ல் 18 வயது நிரம்பினால்போதும். உள்ளாட்சித் தேர்தலில், ஏற்கனவே 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால்மட்டுமே வாக்கு அளிக்க முடியும். இதனால் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களைவயது அடிப்படையில் பிரித்து சேர்ப்பதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மேலும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து பெயர் சேர்த்தலுக்கு காலஅவகாசமும்இல்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில்பெயர் இருந்து உள்ளாட்சி தேர்தல்வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் சரிசெய்ய வாய்ப்பு தரப்படும். அதேபோல் திருத்தம், முகவரிமாற்றம் மேற்கொள்ளலாம். வேட்பாளர்களாக இருந்தால் பெயர் சேர்க்கப்படும், என்றார்.

10ம் வகுப்பு தனி தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளை முதல், இரண்டுநாட்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர்வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, அடுத்த மாதம் நடக்கஉள்ளது. இதற்கு குறித்த நாட்களில்விண்ணப்பிக்க தவறியோர், செப்., 16, 17ம் தேதிகளில், தத்கல்திட்டத்தில்
விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வு சேவைமையங்கள் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

தத்கலில்விண்ணப்பிக்கும், தனித்தேர்வர்களுக்கு, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலுார், கடலுார் மற்றும் சென்னைஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில்மட்டுமே, தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுத் தேர்வு சேவை மையங்கள்விபரத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Flash News-முழு அடைப்பு எதிரொலி:நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள்  சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும்  உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார். நாளைக்கு பதில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Election duty Remuneration

14/9/16

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும், உதவிகளையும், சிறப்புகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்பு செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு என் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.அதே போன்று பாரதியார் பாடல்களும், பாரதிதாசன் பாடல்களும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுகவின்தேர்தல் அறிக்கையில், பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற வாக்குறுதிஅளிக்கப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.

இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு மேலும் வழிவகை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்