யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

சிறுநீரகபிரச்சனை #உள்ளவர்கள் #எடுத்துக்கொள்ள #வேண்டியஉணவு.----உடல்நலம் மருத்துவம்


..

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

#காரட்பாகற்காய்இளநீர்:

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

#வாழைப்பழம்_எலுமிச்சை:

இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

#அன்னாச்சி_பழம்:

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

#கொள்ளுபாதாம்பருப்பு, #பார்லி_ஓட்ஸ்:

கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

#உப்பு:

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

#நீர்கடுப்புநீர்எரிச்சல்கல் #அடைப்பு_வராமல் #தடுக்க……

#ஒன்றாவது_மருந்து

#தேவையான_பொருள்

சீரகம்

சோம்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி விதை

இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்...

#இரண்டாவது__மருந்து

#இளநீர்_வைத்தியம்

#தேவையான_பொருள்

இளநீரைச் சீவி எடுத்து அதற்குள்

சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு

சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம்

போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சருமம் பொலிவு பெறும். கண்பார்வை தெளிவடையும்.

நீர் எரிச்சல் தீர நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சம் பழச்சாறு எடுத்து அதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து அருந்துவது நல்லது.

பானகம் செய்து அருந்தலாம். அதாவது பனை வெல்லத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து கரைத்து பானகமாக அருந்தலாம்.

சிறிதளவு வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு நீர்த்தாரை புண் போன்றவை நீங்கும்.

மண்பானையில் நீர் ஊற்றி அதில் விலாமிச்சம் அல்லது வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.

முதல்நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த உளுந்து ஊறிய நீரை மட்டும் பருகி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும்.

பசலைக்கீரை நீர்க்கடுப்பைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் இருமுறை பசலைக் கீரையை உண்டு வருவது நல்லது.

பூசணிக்காயை சாறு எடுத்து அதில் செம்பருத்திப் பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் குணமாகும்.

#மூன்றாவது
#மருத்துவம்

1. தண்ணீர் நன்றாகக் குடிக்க வேண்டும். தினம் 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.

2. நீரைக் கொதிக்க வைத்து அதில் பொரித்த சீரகத்தைக்{1டேபிள் ஸ்பூன்} கலந்து குடிக்கலாம். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் சீரகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

3. முள்ளங்கியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி இடித்துச் சாறு பிழிந்து 50 மி.கி. சாறில் சம அளவு நீர் சேர்த்து காலை, மாலையில் உணவுக்கு முன்பு சாப்பிட சிறுநீர் நன்கு பெருகும்.

4. முள்ளங்கிச் செடியின் கொழுந்து இலை 20 கிராம் எடுத்து சோற்றுப்பு(கல் உப்பு) சிறிது சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் அடைப்பு நீங்கும்.

5. முள்ளங்கிக் கிழங்கை சமையலில் அடிக்கடி சேர்த்துச் சாப்பிட நீர்க்கடுப்புடன் மலச்சிக்கலும் நீங்கும்.

6. முள்ளங்கி விதைகளைக் கழுவி 10 கிராம் விதைகளை 200மிலி நீரில் இரவு ஊறவைத்து, அதிகாலையில் குடிக்கலாம்.

7. முள்ளங்கி விதைகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து காலை, இரவு உணவுக்குப் பின் இரண்டு கிராம் பொடியை நீர் அல்லது வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிறு நீர் பெருகும்.

8.பழுத்த மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக மென்று தின்ன வேண்டும். மாதுளம் பழத்தின் விதையை கீழே துப்பி விட கூடாது விதைகளை நன்றாக மென்று மாவாகச் செய்து விழுங்க வேண்டும். மாதுளம் பழவிதைகளை மெல்ல மெல்ல அது பாதாம் பருப்பின் சுவை வரும் அதான் இதை சுலமாக நாம் சாப்பிடலாம். இது போலவே தொடர்ந்து காலை,மாலை என முன்று நாள் சாப்பிட்டால் நீர் கடுப்பு குணமாகிவிடும் தினமும் சாப்பிட வேண்டும் அப்போதுதான் சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக