யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

சர்க்கரை நோயை வருமுன் காப்போம்: ----உடல்நலம் மருத்துவம்,



சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.

இன்சுலின் மருந்தை கண்டு பிடித்த டாக்டர் பேண்டிங் அவர்களது பிறந்தநாளை (நவம்பர் 14) நினைவு கூர்வோம்! இரண்டாவது வகை சர்க்கரை நோய் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லைஎன்று அலட்சியப்படுத்து வோருக்கு சில தகவல்கள்.


நன்றாக இருந்த ஒரு மனிதர் திடீரென நெஞ்சு வலியால் துடிக்கிறார், அவரை அவசர மாக மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடுகிறார்கள், இப்போது நோய் எப்படி வந்தது என்று யோசிக்க நேரமில்லை.
இப்போதைய தேவை உயிரை காப்பாற்ற உடனடி மருத்துவம், நோயாளி மட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவை. இது அன்றாட நிகழ்வாகும். மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு போன்றவை அவசர நிலைகள். தொடக்ககால காரணங்களை முன்னறிந்து பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை உருவெடுக்காமல் தடுக்கும் முறைகள், நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகும்.

நீண்டகால நோய்களில் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் முதலிடம் வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட அவசரகால தாக்குதல்கள் ஒரே நாளில் வருவதில்லை. இவற்றிற்கான அடித்தளம் உடலில் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விடுகிறது.

சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை தடுப்பதற்கான ஆலோசனைகளை கூறினால் அவர் செவிமடுப்பதில்லை. விளைவு குடும்பம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது. நலமுடன் இருக்கும்போது உடல்நலத்தை பற்றி சிந்தித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

தொற்றுநோய்கள் குறித்து நம்மிடையே இருக்கும் விழிப் புணர்வு நீண்டகால நோய்கள் குறித்து இல்லை. சர்க்கரை நோய் உடலில் உள்ள ரத்தக் குழாய்களை பாதிப்பதால் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறையும் வரை நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் தெரிவதில்லை.

மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பாதங்கள் இழப்பு போன்ற கடுமையான சோதனைகள் உருவாகின்றன. சர்க்கரை நோய்க்கு தொடக்க காலத்தில் அன்றாட வாழ்க் கையை பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. வேலைக்கு போக முடியாமை, கடுமைான சிரமங்கள், உயிருக்கு ஆபத்து என்பது போன்ற பிரச்சினைகள் தொடக்கத்தில் வருவ தில்லை.

இதனால்தான் பலரும் சர்க்கரை நோயை தொடக்கத்தில் கட்டுப்படுத்த தவறி அபாய நிலைக்கு வந்து விடுகிறார்கள். உணவு கட்டுப்பாடு குறித்து எவ்வளவு அறிவுரை கூறினாலும் கண்டுகொள்வதில்லை. தவறான உணவு பழக்கம் மிக அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோய் கட்டுப்பாடு ஒரு சவாலாகவே ஆகிவிடுகிறது. எந்த பாதிப்பும் இன்றி இயல்வு நிலையில் இருக்கும்போது சர்க்கரை நோய் சிகிச்சையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இந்த தகவல்களை தெரிந்து கொண்டு கலங்க வேண்டும். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். தெளிவான உண்மைகளை புரிந்து கொள்ளுதல், முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், யோகா மற்றும் மறு பரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும்.

டாக்டர் ஆர்.ராஜபால்

சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக