யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்----உடல்நலம் மருத்துவம்


பன்னிரு திரளை உப்பு மருந்துகள்
 The Twelve Tissue Remedies

முன்னுரை :

நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

 குறிப்புகள் :

மருத்துவ மேதை சுசுலர் ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

 உயிரணுக்களும் குருதியும்

நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

 உறுப்புச் சார்பானவை 
1. கொழுப்பு
2. சர்க்கரை
3. வெண்புரதம்

 உறுப்புச் சார்பற்றவை
1. நீர்
2. சோடியம் குளோரைடு
3. கால்சியம் புளோரைடு
4. சிலிசிக் ஆசிடு
5. அயம்
6. கால்சியம்
7. மக்னீசியம்
8. சோடியம்
9. பொட்டாசியம

 உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

1. கல்காரியா ஃபுளோரிகம்
2. கல்காரியா பாசுபாரிகம்
3. கல்காரியா சல்பூரிகம்
4. பெரம் பாசுபாரிகம்
5. காலி மூரியாடிகம்
6. காலி பாசுபாரிகம்
7. காலி சல்பூரிகம்
8. மக்னிசீயம் பாசுபாரிகம்
9. நேட்ரம் மூரியாடிகம்
10. நேட்ரம் பாசுபாரிகம்
11. நேட்ரம் சல்பூரிகம்
12. சைலீசியா

இக் குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

 திரளை உப்பு மருந்துகள்

இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

 1. கல்காரியா ஃபுளோரிகம்  நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

 2. கல்காரியா பாசுபாரிகம்  எலும்பு அணுக்களுக்கு உரியது

 *3. கல்காரியா சல்பூரிகம்  சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

 *4. பெரம் பாசுபாரிகம்  குருதி அணுக்கள், தசை அணுக்கள் 
முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

 5. காலி மூரியாடிகம்  நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

 6. காலி பாசுபாரிகம்  மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

 7. காலி சல்ஃபூரிகம்  மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

 8. மெக்னீசியம் பாசுபாரிகம்  இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

 *9. நேட்ரம் மூரியாடிகம்  உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

 10. நேட்ரம் பாசுபாரிகம்  மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

 11. நேட்ரம் சல்பூரிகம்   கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

 12. சைலீசியா  இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக