யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்,,,,,,,,உடல்நலம் மருத்துவம்




ரத்த சோகை நோய் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்த சோகை நோய் என்றால் என்ன? உடலின் ஆரோக்கியத்துக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். சிவப்பு அணுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்துகிறது.

ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அனிமியா ஏற்படும். இதைத்தான் ரத்த சோகை நோய் என்கிறோம். ரத்த சோகை நோய் பெரும்பாலும் பெண்களை தாக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கிராமங்களில் விவசாய வேலை செய்யும் பெண்கள் செருப்பு அணியாமல் நடக்கும் போது அதனால் வயிற்றில் புழு உருவாகி அது ரத்தத்தை உறிஞ்சிவிடுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

காலுக்கும் வயிற்றுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்க தோன்றலாம். கால் வழியாகத்தான் குடல் பூச்சிகள் உருவாகின்றன. எனவே கால்களை சுத்தமாக வைத்து பராமரிப்பது அவசியம். அடுத்ததாக மாதவிடாய் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கும்; மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்தம் வெளியேறும் பெண்களுக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

ஆண்களில் ரத்தசோகை நோயால் குறைந்த அளவிலே பாதிக்கப்படுகிறார்கள். ரத்த பரிசோதனை செய்யாமல் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்களுக்கும் ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. பன்றிக்கறி சாப்பிடுபவர்களுக்கும் ரத்த சோகை வரும்.

ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு சோர்வு, கண்ணில் கருவளையம், முடி உதிர்தல், சக்தி இல்லாமல் சோர்வடைதல், எதிலும் சரிவர கவனம் செலுத்த முடியாது, சோம்பல் ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய், நீண்ட நேரம் வேலை செய்ய முடியாமல் சோர்ந்து விடுதல்,  தூக்கம் இன்மை, தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ரத்த சோகை நோய் ஏன் வருகிறது என்று பார்த்தோமேயானால் இரும்புச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடாததே காரணம்.

கிராமப் பகுதியில் இருந்து இப்போது நகர்ப்பகுதி பெண்கள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காய்கறிகள், கீரைகளை அதிகம் சாப்பிடாமல் பாட்டில், டின்களில், பைகளில் அடைத்த உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். பெண்கள் 3 வேளையும் காய்கறியுடன் உணவு சாப்பிடுவது அவசியம்.

இரும்பு சத்து நிறைந்த உணவு மூலம் ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். ரத்தசோகை உள்ளவர்கள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைவகைகளில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.

கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஆரைக்கீரை, புதினா, முலைக் கீரை, அகத்திக் கீரை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

பழங்களில் ஆப்பிள், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா, நெல்லிக்கனி, வாழைப்பழம், பேரிக்காய், மாதுளம் பழம் போன்ற வற்றில் இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கி யுள்ளன. உணவு சமைக்க கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த வேண்டும்.

கிராமங்களில் முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசியைத்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது  மாறிவிட்டது. அவர்கள் கூட ரைஸ்மில்லில் அரைத்த அரிசியைத்தான் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் சத்து அதிகம் உள்ளது. அவல் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை கோழிக்கறி, மீன் சாப்பிட வேண்டும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு எளிய உடற்பயிற்சி அவசியம்.

இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு பழக்கங்கள் மாற்றத்தால் இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் சீக்கிரமே பருவம் அடைகிறார்கள். சிறு வயதிலேயே அவர்களுக்கு மாதா மாதம் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஹீமோ குளோபின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் தெரிந்து கொண்டு அனிமியா வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும் ரத்த சோகையாக இருக்கலாம். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும். ரத்த சோகை நோயை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்ய 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். எனவே சாப்பிட்ட முதல் நாளே சரியாக வில்லையே என்று எதிர்பார்க்கக்கூடாது.

ரத்த சோகை அதிகம் இருப்பவர்கள் மருத்து வரை அணுகி அயர்ன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் சத்து மாத்திரைகள் என்று சொல்வார்கள். இது சத்து மாத்திரை தானே என்று தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்டு 3 மாதம் முதல் 6 மாதத்தில் நிறுத்தி விடலாமா என்று கேட்க வேண்டும்.

மீறி நாமாகவே தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிட்டால் கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அவற்றில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று வலி உண்டாகும். வலது பக்க வயிற்றிலும், இடது பக்க வயிற்றிலும் வலி ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் உடலின் செயல்பாடு குறைந்து விடும். உணவு ஜீரணம் ஆகாது, வயிற்றுப்போக்கு ஏற்படும், தோல் வறட்சியாக காணப்படும்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போலிக் ஆசிட், அயர்ன் மாத்திரைகளுடன் சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் கூட விடாமல் 6 மாதம் வரை அவர்கள் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் கீரை சூப், காய்கறி சூப், ராகி, ராகி கஞ்சி, முருங்கை கீரை கலந்த ராகி தோசை, கம்பு, கோதுமை, கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, புதினா, பேரீட்சம் பழம், மாதுளை, ஆப்பிள் பழங்கள் சாப்பிட வேண்டும்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா, கீரை ரைஸ், அரைக்கீரை, பழச்சாறு, மில்க்ஷேக், இஞ்சி மிளகு ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், கருவேப்பிலை ரசம் செய்து சாப்பிடலாம். இவை ரத்த சோகை வராமல் 100 சதவீதம் தடுக்கும். ரத்த சோகை இருந்தாலும் 100 சதவீதம் நிவர்த்தி ஆகும். காய்கறிகள், கீரைகள் சேர்ப்பதால் ரத்தம் ஊறும். சுறுசுறுப்பு உண்டாகும்.

குழந்தையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவியாக இருக்கும். ரத்தம் சோகை நோயை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ரத்த செலுத்தும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட விடவேண்டாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை வராமல் தடுத்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக