யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

பனையின் சிறப்பு பற்றிய ஒரு தொடர் பகிர்வு."---உடல்நலம் மருத்துவம்




 1.எவ்வாறு இப்படி பனை மட்டுமே சாய்ந்து விழாமல் உறுதியாய் நிமிர்ந்து நிக்கின்றது???

பனை தனது வேரை அதன் உயரத்தை விட இரண்டு மடங்கு நேராக நிலத்தில் ஊடுருவி நிற்கும்.
(மரம் 50 அடி உயரம் இருப்பின் அதன் வேர் 100 அடி!!!)

பனை புல் போன்று வளைத்து கொடுத்து நிமிர்ந்து விடும்!!!
வேரின் அடி முதல் மரத்தின் உச்சி வரை வளையும் தண்மையுடைய உறுதியான  தண்டுப் பகுதி இருப்பதால் எந்த புயலும் பனையை வேரோடு சாய்ப்பது சாத்தியம் அறிது!!!

 2.எங்கனம் நிலத்தடி நீரை காக்கிறது???

பனையின் வேர் பகுதி மூன்று அடுக்குகளைக் கொண்டது.

முதல் அடுக்கு மழை நீரை உறிஞ்சும் சிறு சிறு துளைகளைக் கொண்டு மழை நீரை உறிஞ்சி பஞ்சு போன்ற இரண்டாவது அடுக்கில் சேமித்து பாதுகாக்கும்!!!
மூன்றாம் அடுக்கு நீரையும் சத்துக்களையும் மரம் முழுவதும் அனுப்பும் அடுக்கு.

பனை சிறிய மழையில் கிடைக்கும் நீரையும் தனது உச்சி மட்டைகளின் மூலம் வீண் செய்யாமல் மரத்தின் வழியே தனது வேரில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது!!!
( பனை ஏறும் மீனைப் பார்த்து ரசித்தவர்களுக்கு இந்த இரகசியம் புரியும்!.)

ஒரு பனை குறைந்த பட்சம்10000 லிட்டர் நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் படைத்தது!!!

இதன் மகத்துவம் புரிந்த நம் பாட்டன், பூட்டன்கள் பூமியில் வரப்புயர்த்தி அதில் வரிசையாக பனை நட்டனர்.
உயிர் காக்கும்
" உயிர் வேலி" அமைத்தனர்.

மீண்டும் மீண்டும் நினைவில் வைப்போம் "உயிர் வேலி".

 வரப்புயர நீர் உயரும்
''வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்''
என்று -அழகாய் அர்த்தத்துடன்- பாடினால் நம் ஔவைக் கிளவி!!!

பனைகள் நிமிர்ந்த பூமியில் நிலத்தடி நீர் வற்றாது!!!

 ஆறு, குளம், குட்டை,ஏரி,வரப்பு, வாய்க்கால்,கிணறு மற்றும் பல பகுதிகளில் நாம் பார்த்த நம் பாட்டன் வைத்த பனைகள் எங்கே???

அடுத்த பதிவில்...

பனை வான் மழையை ஈர்க்கும் திறன் வாய்தது... எப்படி???

ஏன் பனை பல்லுயிர் பெறுக்கும் கற்ப்பக விருட்சம் ???...

பதில் அடுத்த பதிவில்.....

பதிலளித்து,
இந்த தொடரில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

பனையோடு பயணம் தொடரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக