நாம் யாருமே திறமை குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் திறமை உள்ளது. அத்திறமை முழுமையாக வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடு உள்ளது. ஆகவே, ‘திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள்’, ‘முழுமையாக வெளிப்படுத்தாதவர்கள்’ என்று தான் பிரித்துக்கூற வேண்டுமே தவிர, ‘திறன் உள்ளவர்கள்’, ‘திறனற்றவர்கள்’ என்றல்ல!
நமது முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே, வெற்றியாளராக பரிணமிக்க முடியும்! வெளிப்படுத்துவதில் தான் சாதனையும் அடங்கி உள்ளது!
சாதனையாளர்களின் வாழ்க்கையை உற்று கவனியுங்கள். அனைவரும் தனது திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்கள். எந்த ஒரு செயலையும் பாதியில் அப்படியே விட்டுவிட்டு கடந்து வந்தவர்கள் அல்ல. நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை தனது முதுமையிலும் தினமும் நாதஸ்வரம் பயிற்சி எடுத்து கொண்டவர்.
அதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ஒருநாள் பயிற்சி செய்யாமல் கச்சேரிக்கு போனால் வாசிக்கும் சிறுசிறு குறைகள் கூட தனக்கே தெரியும். இருநாட்கள் பயிற்சி எடுக்காமல் போனால் என்னை போன்ற வித்துவான்களுக்கு குறைகள் தெரியும். மூன்று நாட்களுக்கு பயிற்சி எடுக்காமல் போனால் விஷயம் தெரிந்த ரசிகர்களுக்கு குறை தானாக தெரிந்துவிடும். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்”, என்றார்.
மாநிலத்தின் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் கேட்டுபாருங்கள், அவர்கள் தினமும் படிப்பதுடன் , தொடர்ந்து வினாவுக்கான விடையை எழுதிப்பார்த்ததாக கூறுவார்கள். தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி பிழை திருத்திப்பார்த்தே அனைத்து பாடங்களிலும் 100 சதவீதம் பெற்றோம் என்பார்கள். மருத்துவராக வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும், ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது; தினமும் படிக்க வேண்டும்; தினமும் எழுதிபார்க்க வேண்டும்!
ஒட்ட பந்தயத்தில் முதலாவதாக வர வேண்டுமென்று நினைப்பவன் நன்றாக ஓடினால் பயனில்லை. முழு திறமையும் வெளிப்படுத்தி ஓடினால் மட்டுமே வெற்றி கோட்டையை முதலில் தொட முடியும். ‘நன்றாக ஒடுவேன், நான் கிட்டதட்ட ஜெயித்து விடுவேன்’ என்ற நினைப்புடன் ஒடினால், எப்போதும் போல் தான் ஓட முடியும், அது வெற்றியை பெற்று தந்துவிடாது.
நம் மனது எதை முடிவெடுக்கின்றதோ அதுவே நமக்கு கிடைக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்தின் அளவு மட்டுமே மழை நீரை சேகரிக்க முடியும். மனதை முழு ஈடுப்பாட்டுடன் இணைத்து முழுதிறனும் வெளிப்படும்படி செயல்படுங்கள்... வெற்றியாளராக உருவாகுங்கள். முழுதிறனுடன் ஈடுபடுதல் என்பது நம்மை வெற்றியாளராக மட்டும் அல்ல; விரைவில் சாதனையாளராகவும் மாற்றிவிடும்!
-க.சரவணன், மதுரை.