யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/11/16

ஆசிரியர்களை தக்க வைக்க பள்ளிகளில் வட மாநில சிறுவர்கள்

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. ஆங்கில வழி கல்விஆரம்பித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகள் ஓரளவுமாணவர்களை தக்க வைத்து கொண்டன. உதவி பெறும்
பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி சுய நிதிபிரிவாகத்தான் செயல்பட முடியும் என்பதால், இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் மாணவர்கள் குறைவால், உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மாணவர்கள்எண்ணிக்கை குறையும் பட்சத்தில், உபரி ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், ஆசிரியர்களைதக்க வைக்கவும், பள்ளி நிர்வாகங்கள் பல்வேறுநடைமுறைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளன.



இந்நிலையில்தேவகோட்டையில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்வதற்காக 14 பீகார் மாநில சிறுவர்கள், காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துஇறங்கினர். அவர்களை அழைத்து செல்லபள்ளி நிர்வாக தரப்பில் யாரும்வராததால், போலீசார் அவர்களை மீட்டு விசாரணைநடத்தினர்.

போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தேவகோட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவேபீகார் மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்கள்படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதி அமைக்கஎவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு தான்இவர்களையும் பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில், நாங்கள் யாரையும் அழைத்து வர சொல்லவில்லைஎன்கின்றனர். இந்த மாணவர்களை அழைத்துவந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரைதொடர்பு கொள்ள

முயற்சித்துவருகிறோம், என்றனர்.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

பள்ளிகளில்தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை
நடத்த ஆகும் நிதிச்செலவுகளை யார் ஏற்பது என்பதில்ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.


அனைத்துதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்1 முதல் எட்டாம் வகுப்பு வரைமாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வுநடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள்தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்விஅலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாகபள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழகபள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.


இந்தத்தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலைஉயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போதுகாண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதில், அனைத்து குறுவளமையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்றுவழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்துஅவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்குஅளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது.


குறுவளமையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்டபள்ளிகள் உள்ள நிலையில், அதன்பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதைநகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள்எனும் நிலையில் தினமும் இரு பக்கம்கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்துவழங்க ஆகும் செலவை யார்ஏற்பது எனக் கேட்கின்றனர்.


இதுகுறித்துஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள்என கல்வித் துறை அலுவலர்கள்தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு பள்ளியில்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள நிலையில், இருஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில்ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவதுஎப்படி எனக் கேட்கின்றனர். ஒருசில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும்மாணவர்களை குழுவாக அமரச் செய்துஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள்பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.இதனால் பள்ளிகளில் உள்ளமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களைதயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.


இதுகுறித்துபெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார்பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளைஅரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம்பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.எனவேஅரசு உயர் அதிகாரிகள் உடனடிநடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதாரசுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்வலியுறுத்துகின்றனர்.

CPS : ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

ஓய்வூதியநிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய
ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதை சமாளிக்க, தமிழக அரசு நிபுணர்குழுவை அமைத்தது. அந்த குழு, அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்பிரதிநிதிகளிடம், செப்டம்பரில் கருத்து கேட்டது.

இக்குழுவின்பதவிக்காலம், செப்., 26ல் முடிந்தது. குழுவின்பணிகள் முடியாத நிலையில், பதவிக்காலம்நீட்டிக்கப்படவில்லை. இது குறித்து, நமதுநாளிதழில், சில நாட்களுக்கு முன்செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நிபுணர்குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின்காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கே.சண்முகம் பிறப்பித்தார்.
இதுகுறித்துஅவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய
ஓய்வூதியத் திட்டத்தைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்துஆராய தமிழக அரசின் சார்பில்நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும்நபர், சென்னை பொருளாதார பள்ளியின்பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின்முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளைமூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்தகருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும்22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர்26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனதுஇறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடுமேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரைநிபுணர் குழு செயல்படும் என்றுதனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

EMIS Website disabled up to 1/12/2016

பள்ளிக்கல்வி மேல்நிலை முதுகலையாசிரியர் பதவி உயர்வு விகிதாச்சாரா அடிப்படையில் பதவி உயர்வு வழங்குதல்

People started receiving notice from income tax on cash Deposit

போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது - அருண் ஜெட்லி பேட்டி !!

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறிஉள்ளார். நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில்,புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை

மறுசீரமைப்பு செய்யும் பணியானது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கடந்த சிலநாட்களாக நாங்கள் புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது. ஏனென்றால் நாங்கள் எந்தஒரு இடையூறும் ஏற்பட கூடாது என்று உள்ளோம்.கடந்த 7 நாட்களில் கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை தீர்க்கப்பட்டதில் வங்கி ஊழியர்களின் பாராட்டத்தக்க பணிக்காக அவர்களை பாராட்ட விரும்புகின்றேன். கடந்த 7 நாட்களில் வங்கிகள் கூட்டத்தை குறைத்து உள்ளன. இதில் பீதியடைய எதுவும் தேவையில்லை. இதில் சிலர் சிரமத்தை எதிர்க்கொண்டது மிகவும் துரதிஷ்டவசமானது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர், அவர்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி, அவர்களை நான் பாராட்டுகின்றேன். இருப்பினும் சில முதல்-மந்திரிகள் பீதியை ஏற்படுத்துகின்றனர். ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன என்று நான் நினைக்கின்றேன். தேசிய கட்சியான காங்கிரஸ் இந்நகர்விற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும், மாறாக அவர்கள் தடை ஏற்படுத்துகின்றனர், பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பயங்கரவாத நிதியை ஒழிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்கான நன்மை என்ன?. விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டும் என்பது அரசை சார்ந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை திரும்பப்பெறும் கேள்விக்கே இடம் கிடையாது என்று கூறினார்.

தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியரின்,ஆசிரியர்கள் தற்போதைய பணிகள் !!

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

கழிவறை பயன்படுத்த மாணவர்களிடம்  எடுத்துக்கூறுதல்

அறிவியல் கண்காட்சிக்கு உபகரணங்கள் தயாரித்தல் கண்காட்சி நடத்துதல்

CCE WORK SHEET திங்கள் முதல் வெள்ளிவரை 1-8 வகுப்புகளுக்கு தேர்வு நடத்துதல் மதிப்பிடுதல்


குறைதீர் கற்பித்தல்

SG.MG செலவுகளுக்கு இம்மாதத்திற்குள் பணத்தை வங்கியிலிருந்து வெளியே எடுத்து செலவு செய்தல்

SABL.SALM கற்றல் -கற்பித்தல் பணிகளைச் செம்மையாகச்செயதல்

EMIS பணிகளை முழுமைப்படுத்துதல்

முதல் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறறு EMIS உடன் இணைத்தல்

பிற மாணவர்களின் விடுபட்ட பதிவுகள் நவம்பர்.19க்குள் முடித்தல்

நிரப்பப்பட்ட.DISE படிவத்தின் குறைகளைக்களைதல்

SMC VEC PTA MEETING.
பதிவேடுகளை நாளது தேதிவரை நிறைவு செய்தல்

பொம்மலாட்டப் பயிற்சிகளை மெருகூட்டுதல்.

CCE முறைப்படி
FA(a) FA(b) மதிப்பீடு செய்து பதிவு செய்தல்.

வருகின்ற சனிக்கிழமை நவம்பர்.26 டிசம்பர்.3
CRC யில் புத்துணர்ச்சியுடன் கலந்து கொள்ளுதல்.

சிறப்பு பார்வைக்கு ஆவணங்களையும் மாணவர்களையும் தயார்நிலையில் வைத்திருத்தல்

மின்கசிவு சரி செய்தல்

இடிந்த கட்டிடங்கள் ஆய்வு செய்தல்

மழைகால விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அடுத்த நிலை தேர்விற்கு தயார் செய்தல்

இரண்டாம் பருவத் தேர்வுக்கு தயார்நிலைப் படுத்துதல்
பருவத்தேர்வு நடத்துதல்

மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் பாட ஏடுகள் பெற தேவைப்பட்டியல் தயாரிப்பு

இரண்டாம் பருவ மதிப்பீடு இறுதி செய்தல் உரிய ஆவணங்களில் பதிவு செய்தல்...

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்

விடுமுறை கால பணிகள் வழங்குதல்

இந்த ஆண்டு தங்களது வருமானவரிப் படிவங்களை தயாரித்தல்

தற்போதே எல்ஐசி பணம் கட்டுதல்
வீட்டுக்கடன்களுக்கான
அசல் வட்டி செலுத்திய சான்று பெறல்

புத்தாண்டில் புதுப் பொலிவுடன் மூன்றாம் பருவத்தினை தொடங்குதல்.

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET TAMIL QUESTION DOWNLOAD !!

CCE 1 TO 10 STD  2 WEEK WORKSHEET  TAMIL QUESTION DOWNLOAD...https://app.box.com/s/yvi3tpjuonlzxvk06oeodbbypw0nbaym

CCE 1 TO 10 STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD !!!

CCE 1 TO 10  STD 2 WEEK WORKSHEET MATHS QUESTION DOWNLOAD....https://app.box.com/s/8t83v0lj8p19e9ygfopzpqigbwp0yqbe

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு !!

யுபிஎஸ்சி (UPSC) பணியில் உள்ள 463 காலியிடங்களுக்கான தேதி அறிப்பு.இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.

*Employment Type:* Central Govt Jobs

*Click here:* https://www.yoyojobs.com/upsc-recruitment-2016-463-combined-defence-services-examination-cds-2017-posts-apply-online/


*கல்வி தகுதி:* Degree

*காலியிடங்கள்:* 463

*தேர்வு செய்யப்படும் முறை:* Written examination,Interview

*Application Form:* https://goo.gl/15rks9

*கடைசி தேதி:* 02-12-2016

*இந்த தகவல் உங்களுக்கு பயன்படவிட்டலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிபாக SHARE செய்யுங்கள்.*

ரூபாய் நோட்டை மாற்ற கட்டுப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!!

பழைய ரூபாய் நோட்டை மாற்ற, புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

என்ன பிரச்னை?

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், தெருக்களில்கலவரம் தான் நடக்கும்.

தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் ரூ.100 நோட்டுக்களுக்கு என்ன ஆனது? கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் அளவு ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது. பணம் அச்சிடுவதில் பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

நிவாரணம்:

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், பணம் அச்சிடுவதில் மட்டும் பிரச்னை இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள், திருமணம் ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!!!

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மோதல்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

பணபரிவர்த்தனைக்கு கறும்புள்ளி வேண்டாம்: தேர்தல் ஆணையம் கடிதம்!

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது மீண்டும் மீண்டும் நோட்டுகளை மாற்ற வருகிறவர்களுக்கு கையில் கறும்புள்ளி வைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம்

எழுதியுள்ளது. கடந்த புதன்கிழமை (16-11-2016) அன்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், வங்கிகளில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு விரலில் கறும்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். சிலர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கோடு, அப்பாவி மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்து, வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்ற கிளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் என அமைச்சகத்து புகார்கள் வருகின்றன. இதனால், சில மக்களால் மட்டுமே பணத்தை மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே, ‘கறும்புள்ளி’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு இடது கையில்தான் மை வைக்கப்படுகிறது, ஆனால், வங்கியில், வலது கையில்தான் கறும்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை பலரும் வன்மையாக விமர்சித்து இருக்கின்றனர். மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, ட்விட்டரில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ‘அரசு தன் சொந்த மக்களையே நம்பாதது தான் இதிலிருந்து தெரிகிறது’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு விரலில் கறும்புள்ளி வைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்து என்னவாக இருக்கும் என்பது பற்றியும், மம்தா பானர்ஜி எச்சரித்து இருந்தார். நவம்பர் 19ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசம், அச்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கைகளில் கறும்புள்ளி வைக்கும் முடிவு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் இடைஞ்சலை உருவாக்கும். ஆகவே கைகளில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காவல் நிலையங்களில் பதிவாகும் FIR. இனி பதிவிறக்கம் செய்யலாம். ADGP சீமா அகர்வால் அறிக்கை...!!!

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு: ஒரு பயனும் இல்லை - முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்!

'மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததன் மூலம் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை' என்று முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக சக்ரவர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பொறுப்பு வகித்தார் என்பது

குறிப்பிடத்தக்கது. 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியின் தமிழாக்கம்…

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதை பற்றி உங்கள் கருத்து?

மத்திய அரசின் இந்த முடிவால் நமது பொருளாதாரத்துக்கு எந்த நன்மையையும் இல்லை.

ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதே?

கறுப்புப் பணம் என்றால் என்ன? எந்த ரூபாய் நோட்டுகளும் கறுப்பல்ல. எல்லா ரூபாய் நோட்டுகளும் வெள்ளை தான். நமது அமைப்புதான் கறுப்புப் பணத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனது வருமான வரியை தாக்கல் செய்யாதபோதே அதே கறுப்புப் பணமாக மாறுகிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு என்பது வரி செலுத்தாதவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. மாறாக ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஒழிக்க உதவும்.

ஆனால், மத்திய அரசு கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளதே..

நீங்கள் ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதில் ஒரு சில சிறிய கற்கள் இருக்கும். இப்போது நீங்கள் அதில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க வேண்டுமே தவிர, மொத்த அரிசியையும் தூக்கி வீசி விடக்கூடாது. அதேபோல தான், கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான வருமான வரி அமைப்பு இல்லாதது போதுமானம் சட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினாலும் தற்போது பொது மக்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

புழக்கத்தில் உள்ள ரூபாய் 500, 1000 நோட்டுகளில் 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளே என்ற தகவலா அவர்களுக்கு கிடைத்தது? என்னிடம் இது குறித்தான எந்த தகவல்களும் இல்லை. ஒருவேளை அவர்களிடம் இதுகுறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய் 1000 நோட்டுகளில் எத்தனை கள்ள நோட்டுகள் உள்ளது என்ற விவரத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்துள்ளீர்கள். அப்போது மத்திய அரசிடம் இருந்து ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏதேனும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதா?

ஆம். ரூபாய் நோட்டுகளை தடை விதிக்க வேண்டும் என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைத்தது. ஆனால், நாங்கள் அந்த பரிந்துரையை ஆலோசித்த பிறகு நாங்கள் இந்த முடிவை எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டோம்.

அந்த பரிந்துரை முறையாக முன்வைக்கப்பட்டதா? அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்ததற்கான காரணம் என்ன?

அரசிடம் இருந்து வந்த பரிந்துரை அதிகாரப்பூர்வமாக வந்ததா அல்லது தொலைபேசி மூலமாக வந்ததா என்பது இங்கு பிரச்னை இல்லை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அந்த பரிந்துரை வந்தது என்பது உண்மைதான். மத்திய அரசின் அந்த பரிந்துரையால் நமக்கு எந்தவிதமான விளைவுகளும் கிடைப்பதாக தெரியவில்லை. மேலும், அதனை அமல்படுத்த நாம் கொடுக்க வேண்டிய விலைதான் அதிகமாக இருக்குமே தவிர, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மிக மிக குறைவாக இருக்கும் என்பதை அறிந்ததால் நாங்கள் அந்த பரிந்துரையை அமல்படுத்த மறுத்துவிட்டோம்.

நனறி : தி இந்து

வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஐடிபிஐ (IDBI) வங்கியில் காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் ஆபீசர் காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500


பணியின் தன்மை: எக்ஸிக்யூடிவ் ஆபீசர்

கல்வி தகுதி: பட்டப்படிப்பு

சம்பளம்: Rs.17,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: 30.11.2016

மேலும் விவரங்களுக்கு என்ற http://careerpower.in/wp-content/uploads/2016/11/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf இணையத்தள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கணினி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் சேர வேண்டுமானால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவத்துக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய சான்றிதழ் தேர்வு, 2017ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் www.tndote.org என்னும் இணையதள முகவரியில் நவம்பர் 11ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் ரூபாய் 530க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.