யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/16

கணக்குல காட்டிட்டா 50% வரி... கண்டுபிடிச்சா 85% வரி.. வருமானவரிச் சட்டத்தில் திருத்தம்

கணக்கில்காட்டாத பணத்திற்கு அதிக வரி விதிப்பதுதொடர்பாக புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்ற அறிவிப்பிற்கு பின்னர், ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு அதற்கேற்ப வரிவிதிப்புகளைசெயல்படுத்த புதிய வருமானவரிச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும்அமளிக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த8ம் தேதி இரவில் இருந்து500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுஎன்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பழைய நோட்டுக்களைவங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்பவர்கள்கணக்குக் கேட்கப்படும் என்றும், கணக்கு சரியாக இல்லைஎன்றால் கறுப்புப் பணமாக கருதப்படும் என்றும்அறிவிக்கப்பட்டது. அப்படி கணக்கில் காட்டாதகறுப்பு பணத்திற்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்என்றும் வருமான வரித்துறை அறிவித்தது. பின்னர், இந்த அறிவிப்பை செயல்படுத்ததற்போதுள்ள வருமான வரி சட்டத்தில்உரிய அங்கீகாரம் இல்லை. எனவே இந்தமுடிவை மத்திய அரசு கைவிட்டது.
கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் மீது கூடுதாக வரிகளைவிதிப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள்காரணமாக புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி, இன்று லோக்சபாவில் இந்தமசோதாவை மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
ரூபாய்நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்க்காலக் கூட்டத்தில் கடும் அமளி நிலவிவரும் சூழ்நிலையில் லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வருமானவரி சட்டத்திருத்த மசோதாவின் படி, வருமானத்தை கணக்கில்காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு 30 சதவீதம் வருமான வரிவிதிக்கப்படுகிறது. மேலும், அபராதமாக 10 சதவீதவரி விதிக்கப்படுகிறது. இதுபோக 30 சதவீத வரி மீது33 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படும். இவை அனைத்தையும் கூட்டினால், அதன் மதிப்பு கணக்கிற்குமீறியுள்ள பணத்தில் 50 சதவீதமாகும். இந்த தொகையில், 25 சதவீதம்பிரதமரின் ஏழைகள் நலன் வைப்புதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டில் குடிநீர், சாலை போன்ற அடிப்படைவசதிகளை அமைக்க அந்த கருப்புபணத்தை அரசு பயன்படுத்தும்.
அதேவேளையில், எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டு வருமானத்திற்குஅதிகமாக பணம் சேர்த்துள்ளதை மறைத்தால், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கும்போது, கணக்கில் வராத வருமானத்திற்கு 75 சதவீதம்வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்த வருமானத்தின் ஒருபகுதியை நான்காண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுக்க முடியாது. எனவே சிக்கினால் 85 சதவீத வரியும், தானாகஅறிவித்துவிட்டால் 50 சதவீத வரியோடும் தப்பிவிடலாம்.
முன்னதாகஇந்த மசோதா குறித்து முடிவுஎடுக்க பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Directorate of Government Examinations - National Talent Search Examination (NTSE)- November 2016 - Tentative Key Answer...

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்!

500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலிஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தைபெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும்சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனால்தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து20 லட்சம் பேர்
காத்திருக்கின்றனர்.

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல்மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவுசெய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு
ஊழியர்களின் பணிபதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள்ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறுஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட்அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள்கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும்.
இப்பணிமுடிந்தபின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல்சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்தடிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ளமுதல் பக்க சுய விபரம்மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணைபதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறைதகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்துகல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்விதகுதிகளின் உண்மை தன்மை சார்ந்தபதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமைசார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயிலமுன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதியநிர்ணயம், தேர்வு நிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம் சார்ந்தபதிவுகள், பல்வேறு வகையான விடுப்புபதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசுநியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர்கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல்மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டியவழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவுகளைஒருமுறை தனி கவனம் செலுத்திஆய்வு செய்த பின்னர் பணிபதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்றுடிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்யதலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடமுதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கெனஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொருநாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள்சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திடவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம்போல வங்கி
கணக்கில் செலுத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண கட்டுப்பாடு
தமிழகத்தில்14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும்உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும்30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்றுஇந்த மாதமும் வங்கி கணக்கில்பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள்பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதுகுறித்துஎன்.ஜி.ஓ. சங்கதலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வங்கி கணக்கு மூலம் அரசுஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்குபென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கிகணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

வங்கிகளில்ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமேபணம் எடுக்க முடியும் என்றுகட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால்மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.

ரிசர்வ்வங்கிக்கு கோரிக்கை
அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டுவாடகை, மளிகை செலவு, பால்செலவு போன்ற குடும்ப செலவுகளைமேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவேஅரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ்வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும்என்று கோரிக்கை விடுகிறோம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பளவிடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குவீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்,
ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதிஅளிக்கப்படுகிறது.
பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்புஎடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமேவழங்கப்படும். ஆனால் வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி முழுமையாக தரப்படும். தற்போது அடிப்படை சம்பளம்போன்றே படிகளையும் பாதியாக குறைத்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர்தொலை துார கல்வி மூலம்பல்கலைகளில் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., ல் 90 நாட்கள்ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்காக ஆசிரியர்கள் அரைச்சம்பள விடுப்பு எடுத்து வந்தனர். தற்போதுபடி பாதியாக குறைக்கப்பட்டதால் மொத்தசம்பளத்தில் 50 சதவீதம் வரை பாதிப்புஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி

நவம்பர்மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் விடுத்தகோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்தபதிலும்
அளிக்கப்படவில்லை; இது, அரசு ஊழியர்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகள் மற்றும்ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க, மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, நவ., மாத சம்பளத்தை, ரொக்கமாகவழங்க வேண்டும் என, அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, அரசு அலுவலகஉதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்சங்க நிர்வாகிகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலரை சந்தித்து, மனுகொடுத்தனர்; ஆனால், எந்த பதிலும்தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல், வங்கிக்கணக்குகளில் தான், சம்பள பணம்போடப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.

வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போதுவாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரைஎடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாகவங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்யவாடிக்கையாளர்கள்
தயங்கியதாக தெரியவந்தது.
எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்துவாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டைதளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்றுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ளஅனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுஇருக்கிறது. அப்படி எடுக்கும் போதுஅந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும்என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துஇருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாதஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல்,
பணத்தட்டுப்பாட்டைபோக்கும் வகையில் சுமார் 200 கோடிமதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
புழக்கத்தில்இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதியரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்துவங்கி ஏடிஎம் மையங்களில் இருந்துபணம் எடுக்க அதிகளவில் மக்கள்வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில இடங்களைத்தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் புழக்கத்துக்கு கொண்டுவரப்படவில்லை. வங்கி ஏடிஎம் மையங்களில்குறைவான தொகைதான் பெற முடியும் என்பதோடு, பணமின்றி பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதால் மாநிலம் முழுவதிலும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாகவழங்க வேண்டுமென அரசு ஊழியர் அமைப்புதொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும்சுமார் ஒரு லட்சம் அரசுஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம்வழங்க இன்னும் ஒரு நாள்மட்டுமே உள்ளதால் பணத் தட்டுப்பாடு நிலைமையைவங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றனஎன்ற கேள்வி மக்கள் மத்தியில்நீடித்து வருகிறது.
இதுகுறித்துமாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரனிடம்கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்ஊதியத்தை வங்கி ஏடிஎம் மையங்களில்எடுக்க அதிகமானோர் வரக் கூடும் என்பதால், அதனை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு வரப்பெற்றுள்ள500 ரூபாயில் சுமார் 200 கோடி மதிப்பிலான 500 ரூபாய்நோட்டுகள் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளன.
மாவட்டம்முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில்வருகிற புதன்கிழமை (நவ.30) 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில்நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் பணத்தட்டுப்பாட்டை குறைப்பதோடு, கூட்ட நெரிசலையும் கட்டுக்குள்கொண்டு வர முடியும்.

அத்தியாவசியத்தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் மையங்களில்இருந்து பணம் பெற்றுக் கொள்வதோடு, வங்கிகள் மூலம் பெரிய வர்த்தகநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மிஷினைப்பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் போன்றவற்றைவாங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தைஉயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்துபள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்டசெயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளைஉருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாகஅமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்துசெயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில்பேணுதல் அவசியம்.
பள்ளிக்குஅரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்குஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன்நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும்தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
அதற்காகமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல்மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தைஉலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும்மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும்நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில்உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானதுபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும்ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வுஅலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனகல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம்புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காகபள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்டஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளைபதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்தகருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோலபுற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடுமுகவரி மற்றும் கடவுச் சொல்உருவாக்கி அதன் மூலம் புறமதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினைஉருவாக்கலாம்.
அவ்வாறுமதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும்மூன்று என பள்ளிகள் தரஅந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால்சுமார், 2-வது சாதாரணம், 3-வதுதர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்தபள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயேஇத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாககல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடுமுழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்ஒரே சீரான தரத்துடன் கல்விவழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
தரங்கள்மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக்காரணிகள்
1. பள்ளிவளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின்சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள்கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல்அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும்மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின்வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின்வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின்முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதியஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின்வருகை, செயல் இலக்குகளை வரையறுத்துபொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்தவளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச்சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கானசெயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும்மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கியகற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ளகுழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம்ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

7. பள்ளிமேலாண்மைக் குழு மற்றும் பள்ளிமேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளிமுன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும்இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயமகற்றல் வளம், சமுதாய மேம்பாடுஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

இணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி

இன்று (29.11.2016)-திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

திண்டுக்கல் மாவட்டம் SSM பொறியியல் கல்லூரியில் இன்று (29.11.2016) தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்பு .மிகு .
திரு.இளங்கோவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் 
மாவட்டத்தை சேர்ந்த CEO,DEO,DEEO,MATRIC,AEEOs,BRTEs  மற்றும் ஆசிரியர்களுக்கிடையே ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

CCE WORKSHEET - 3 ENGLISH TENTATIVE ANSWER KEYS...

28/11/16

அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய தகவல் டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட  விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை
7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம் பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்

26)அசாதாரணவிடுப்பு விவரம்

27)குடும்ப விவரங்கள்

28)SPF, FBF,GPF, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

29)பதவி உயர்வு பெற்ற விவரம் .

30)பதவி உயர்வில் பணிவரன் முறை செய்யப்பட்ட விவரம்.

CCE - Worksheet - 4 Weeks Abstract Form (Excel Format)

ரயில்வே ஊழியர்களுக்கு முன் பணம்!

மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வரைஉள்ள 20 ரயில்வே நிலையங்களில் பணிபுரியும்1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு சம்பள பணத்தில் முன்பணமாக ரொக்கம் ரூ 10 ஆயிரம்ரூபாய், திருச்சி டிவிஷன் ரயில்வே உயர்அதிகாரிகள் உத்தரவுப்படி ரயில்வே அதிகாரிகள் காரில்போலீஸ் பாதுகாப்புடன் ரயில் நிலையங்களுக்கு வந்துரொக்க பணம் கொடுத்தனர். இதனால்ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும்மகிழ்ச்சியில் உள்ளனர்

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில்பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசுபள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசியகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய
அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள்அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும்இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன.


புதுச்சேரிசார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேருஅரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமேதேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும்தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளிமாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

 தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத்துறையில் தொகுதிசெயல் அலுவலர் நிலை 3 மற்றும்செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான2014 & 2015, 2015 & 16 மற்றும்2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர
அறிக்கைகளை தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்குஇந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும்பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒருபட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிஇரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 24.12.2016 கடைசி நாள் ஆகும்.

செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்துதேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும்பிற்பகலில் நடைபெறுகிறது.

இதற்கானதேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்தவேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவிண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறைதேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவேபயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே போதியகால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில்அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில்தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோஎழ வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள்தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில்சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குதேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை04425332855, 04425332833 மற்றும்கட்டணமில்லாத தொலைபேசி எண்: 18004251002ல் தொடர்பு கொண்டுஅறிந்துக் கொள்ளலாம்.


மேலும்முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf  என்றஇணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள்பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர்அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசைஉள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழகஅரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்புவிழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.

விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், வேலுமணி, பள்ளிக்கல்வி செயலர் சபிதா, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநில அளவிலான போட்டிகள் மற்றும்பரிசளிப்பு விழாக்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க, கோவை மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கமாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், இசை போன்ற தனித்திறன்பயிற்சி அளிக்கும் பணியில், 16 ஆயிரத்து, 500 பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக குறைந்த சம்பளம்வழங்கினாலும், கலை மீதான ஆர்வத்தால்அவர்கள் இப்பணியை சேவையாக செய்கின்றனர்.

'பகுதிநேரஆசிரியர்கள், கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க கூடாது' என, கோவைமாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி, வகுப்புகளை புறக்கணித்தபோது, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பள்ளிகளை இயக்கஉதவினர். ஆசிரியர்களை, இது போன்று அவமதிக்ககூடாது.

இவ்வாறுஅவர் கூறினார்.

SHAALA SIDDI - SCHOOL EVALUATION DASH BOARD - IN PDF FORMAT...