பலத்த மழையால் அரசுப் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள்ளே விழுந்ததில் புத்தகங்கள் சேதமடைந்தன.
ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி அன்சாகரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா காந்தியும், உதவி ஆசிரியராக கோவிந்தியும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் மாணவர்களின் புத்தகங்கள் சேதம் அடைந்தன. வியாழக்கிழமை காலை பள்ளியைத் திறக்க வந்த தலைமையாசிரியர் வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் விழுந்து மழைநீர் புகுந்தது குறித்து உதவித் தொடக்க கல்வி அலுவலர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடம் சென்று சேதமடைந்த பள்ளி வகுப்பறையைப் பார்வையிட்டார். பின்னர் அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கூரை சேதமடைந்திருப்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்