தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.
தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை