யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/17

வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

ஒரே ஒரு போன் போட்டு ₹ 50 ஆயிரம் சுருட்டல்!!!

2018 பொதுவிடுமுறை நாட்கள் விபரம்!!!

2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது
விடுமுறை நாட்கள்:*👇
*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*
*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*
*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*
*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*
*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*
*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*
*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*
*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*
*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*
*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*

*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*
*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*
*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*
*14. பக்ரீத் -22.08.2018- புதன்*
*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*
*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*
*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*
*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*
*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*
*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*
*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*
*22. மீலாதுன் நபி -21.11.2018- புதன்கிழமை*
*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*

தேர்தல் முடிவு: ஜோதிடர்கள் கருத்து வெளியிட தடை!!!

                                         
தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்துக்களை 
வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல், இன்று(நவ.,9) நடக்கிறது. குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தல், டிசம்பரில் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, டிச., 18ல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

தடை:

இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ஜோதிடர்களின் கருத்தை வெளியிட கூடாது. இதை, பத்திரிகைகளும், 'டிவி' சேனல்களும், கடைபிடித்து, சுதந்திரமாக தேர்தல் நடக்க, ஒத்துழைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு: டி.ஆர்.டி.ஓ-வில் பணி!

                                                   
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் 
(சி.வி.ஆர்.டி.இ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள அப்ரென்டீஸ் ட்ரெய்னீ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

பணியின் தன்மை: அப்ரென்டீஸ் ட்ரெய்னீ

பணியிடங்கள்: 146

கல்வித் தகுதி: ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 26.11.2017

மேலும் விவரங்களுக்கு https://rac.gov.in/cgibin/2017/advtcvrdeapprentice/public/pdf/advtcvrdeapprentice.pdf?3c50455ecca8f627d24301550ed51407=1 என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

சம்பள பட்டியல் சாப்ட்வேரில் ARREAR தயாரிப்பதற்கான OPTION வெளியிடப்பட்டு உள்ளது.நவம்பர் மாத சம்பள பட்டியல் உள்ளீடு கொடுத்து அக்டோபர் மாத ARREAR BILL தயார் செய்து கொள்ளலாம்!!!

                                          

நடைமுறைபடுத்த முடியவில்லையெனில் மக்கள் நலத்திட்டம் எதற்கு-உச்சநீதிமன்றம் கேள்வி

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

                                              

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனேக 
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12 ம் தேதி வரை தமிழகத்திலும், 13ம் தேதி தென் கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!!

வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் 
உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

காற்று மாசு: உ.பி.யில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காற்று மாசுபாடு காரணமாக 
நாளை (நவம்பர் 10) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு அபாயகரமாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரிகள், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு மொரதாபாத்தில் 439, நொய்டாவில் 469, லக்னோவில் 430, ஆக்ராவில் 394, காஸியாபாத்தில் 372 என்ற அளவில் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நடைப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியைப் போல நொய்டாவிலும் நாளை (நவம்பர் 10) எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். நேற்று (நவம்பர் 8) ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாயின.

டெல்லியில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு கடுமையாக அதிகரித்துள்ளது (448). காற்று மாசுபாடு அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் சுகாதார அவசர நிலையைப் பிறப்பிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால், நவம்பர் 12 வரை வரை டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் 25 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் 11ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை : சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி
ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு!

                                        
2018-19 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு
ஆன்லைனில் நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று (நவம்பர் 9) அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் மொத்தமாக மாணவர் சேர்க்கை நடத்துவதால் அதிக பொருட்செலவு, மனிதவளம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது .இதுதவிர மாணவர்கள் பெற்றோர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற எம்.இ, எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ கலந்தாய்வு ஆன்லைன் முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் பொறியியல் சேர்க்கை செயலாளராக இருந்த இந்துமதி மாற்றப்பட்டு ரைமண்ட் உதிரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரப் பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார்.

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!!!

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!
அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் 
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நேற்று (நவம்பர் 8) இடைநீக்கம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2010ஆம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் விதி 9 முதல் 11 வரை மற்றும் பகுதி 6, பிரிவு 6ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இதுவரை 10 தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2015 ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றி பெறாதவர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி குறித்து ஆய்வு செய்தது. ஆனால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த 1,025 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30% வழக்கறிஞர்கள் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும். போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பார் கவுன்சில்களும் வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு தான் வாக்காளர் பட்டியல் தயார் செய்து பார் கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தங்கள் சான்றிதழ்களை அனுப்பினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

9/11/17

எதிர்காலம் கேள்விக்குறி....! கம்ப்யூட்டர் பாடப்பிரிவு தொடங்கிய பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் அரசு மெத்தனம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!!!

கோவை, நவ.8: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில எஸ்எஸ்ஏ உயரதிகாரிகள் அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதில், மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் சேதம், பாழடைந்த மற்றும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்களை போட்டோ எடுத்தும் அனுப்ப வேண்டும், என கூறப்பட்டது.

கோவை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உத்தரவின்பேரில் கோவை, திருப்பூர் என 22 ஒன்றியங்களில் வட்டார வளமைய அதிகாரிகள் பாழடைந்த கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்தும், போட்டோ எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.

இத்தகவல் தொடக்க, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளி தலைைம ஆசிரியர்கள் மூலம் பாழடைந்த கட்டிடங்கள், அதன் போட்டோ எடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாழடைந்த கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என எஸ்எஸ்ஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாருடன் இணைக்காவிட்டல் மொபைல் சேவை துண்டிக்கப்படாது; தொலைத்தொடர்புத் துறை அதிரடி!!!

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் சேவை
துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டல் சேவை துண்டிக்கப்படாது என தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது:-

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மொபைல் சேவையை துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

89 பேருக்கு பணிநியம ஆணை!!

                                                      

ட்விட்டர் தந்த எக்ஸ்டிரா மைலேஜ்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு 
கண்டறியப்பட்ட ட்விட்டர் சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு 100 மில்லியன் பயனர்களை அது எட்டியது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த ட்விட்டர் வசதியைப் பயன்படுத்திவருவது இதன் சிறப்பம்சம்.

உதாரணமாக, கடந்த அமெரிக்க தேர்தலின்போது ட்விட்டர் வலைதளத்தில்தான் பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றன. அதேபோல், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் அதிகமாகப் பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த அப்ளிகேஷனைப் பொறுத்தவரை 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற ஒரு கட்டுப்பாட்டினை ட்விட்டர் நிறுவனம் வகுத்திருந்தது. அதனால் பல்வேறு தகவல்கள் இதில் பதிவிட முடியவில்லை என்றும் வார்த்தைகளின் அளவினை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு பயனர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு செவிசாய்த்துள்ள டிவிட்டர் நிறுவனம் 140 எழுத்துக்களை 280ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் அதிகாரி அலிஷா ரோஷன் தனது வலைப்பூவில் (Blog) பதிவிட்டுள்ளார்.

ஆனால் இன்னும் ஜப்பான், கொரியா, சைனா போன்ற மொழிகளைக் கொண்டு 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவிட முடியும் என்றும் அதற்கான புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு: தேசிய திட்ட அமலாக்கத்துறையில் பணி!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும்
தேசிய திட்ட அமலாக்கத்துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,270

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.70,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 19.11.2017

மேலும் விவரங்களுக்கு http://www.npiu.nic.in/PDF/News/Advt.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதிய அப்டேட், பழைய ஆப்ஷன்!

பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்திவரும்
நிலையில், போனில் வாய்ஸ் கமான்ட் (வாய்மொழி உத்தரவு) மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியைக் கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது. முதலில் இது சிறிய தேடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இதன் மூலம் பல்வேறு செயல்களைச் செய்யும் வகையில் கூகுள் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.

புதிதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில் நாம் கேட்கும் பாடல்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது. 2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஷாசம் என்ற அப்ளிகேஷன் மூலம் இந்த வசதியை ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதேபோல் சோனி நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் டிராக் ஐடி என்ற அப்ளிகேஷன் இந்த வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியை மிகவும் தாமதமாக வெளியிட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பாடலின் சிறு பகுதியை பிளே செய்யும்பொழுது அதனை ஸ்மார்ட் போன் அருகினில் கொண்டு சென்றால் போதுமானது. அந்தப் பாடல் பெயர், அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் முதலான விவரங்களை எளிதில் கண்டறிந்து பயனர்களுக்கு வழங்கும்.

பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களாக 
இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்கள் சில இந்தியக் கல்லூரிகளுக்கு வந்து நேரடியாகப் பணிகளுக்கு இதுவரையில் ஆட்களைத் தேர்வு செய்ததில்லை.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் இந்த நிலையை முதன்முறையாகத் திருத்தியமைக்கவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) மாணவர்களை நேர்முகத்தேர்வின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடியின் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் டி.வி.தேவி பிரசாத் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எந்தவிதமான பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இது மாணவர்கள் தங்களது திறமைகளை மெய்ப்பிக்க உதவும்.

பணிகளுக்கான தேவையைப் பொறுத்தவரையில் வன்பொருள் பொறியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்களில் தேவை அதிகமாக உள்ளது. இன்டகிரேடட் சர்க்யூட், டிசைன் வெரிஃபிகேசன் போன்ற துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதேபோல மொபைல் கம்யூனிகேஷனில் 2டி - 3டி கிராஃபிக்ஸ் சார்ந்த திறமை பெற்றவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

ஹைதராபாத் ஐஐடியில் டிசம்பரில் நடக்கவுள்ள வேலைவாய்ப்புத் தேர்வுக்கு அங்கு பயில்கின்ற பி.டெக்., எம்.டெக். மற்றும் எம்.எஸ்ஸி ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 350 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த நேர்முகத் தேர்வில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாஃப்ட், பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றன.

அதிக டெபாசிட்: ஒரு லட்சம் நோட்டீசுகள்!!!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் பணத்தை 
டெபாசிட் செய்த சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் வரி ரிட்டன்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரமே வருமான வரித் துறை நோட்டீசுகளை வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் செலுத்திவிட்டு, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத 70,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இந்த நோட்டீசுகள் அனைத்தும் வருமான வரிச் சட்டம் பிரிவு 142 (1)-ன் கீழ் அனுப்பப்படவுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதே போல, முன்பு சாதாரணமாக பணத்தை டெபாசிட் செய்து, வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துவிட்டு, பணமதிப்பழிப்புக்குப் பிறகு அதிகமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சுமார் 30,000 நிறுவனங்களுக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இதற்காகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட 20,572 வரி ரிட்டன்களை வருமான வரித்துறை மீளாய்வு செய்யவுள்ளது.

இதுபற்றி வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், “50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தவர்களை எங்கள் நோட்டீசுக்கு பதிலளிக்க நாங்கள் கோருவோம். அவர்கள் ஒத்துழைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குவோம். 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் டெபாசிட் செய்தவர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பாலிடெக்னிக் : விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான, விரிவுரையாளர் பணியிடங்களுக்கான 
தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய கழகம் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என ஜூலை 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 1,70,366 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,33,567பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 % இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நவம்பர் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும். தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in/POL2017/07112017/msg.htm. என்னும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி குறைகளைச் சுட்டிக்காட்டி, பொறியியல் பட்டதாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிகள் அடிப்படையில் விரிவுரையாளர் தேர்வை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

காருண்யா பல்கலை: பட்டச் சான்றிதழ்கள் செல்லாது!

                                              
கோவை, காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் 
நிறுவனத்தை மூடவேண்டும் என யுஜிசி நேற்று (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

யுஜிசியின் சார்புச் செயலர் குண்ட்லா மஹாஜன், காருண்யா பல்கலை பதிவாளர் எலைஜா பிளசிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “யுஜிசி விதிப்படி, அனைத்து நிகர்நிலை பல்கலைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, தொடர் அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்படுகின்றன. ஆய்வின் போது, தாண்டன் குழுவினர் பரிந்துரையின்படி, குறைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. தீர்வு காணாத, 'பி' பிரிவு நிகர்நிலை பல்கலைகளில் புதிய கல்வி மையங்கள் அமைக்கவோ விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவோ அனுமதி அளிப்பதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோவையில் 'பி' பிரிவில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலையின் கீழ் செயல்படும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் புதிய கல்வி மையங்கள், புதிய துறைகள் மற்றும் புதிய பாடத் திட்டங்கள் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியாது. யுஜிசி, குழு ஆய்வு செய்து அக்குழுவினர் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அனுமதியளிக்க முடியும்.

அதன் அடிப்படையில்தான், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், 2004 ஜூன் 23ஆம் தேதி முதல் 2007 ஜூன் 22 வரை நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், நிகர்நிலை அந்தஸ்தில் தொடர்ந்து செயல்பட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. எனவே, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் அதில் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளை மூட அறிவுறுத்தப்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பட்ட சான்றிதழ்களும், பாடப் பிரிவுகளும் செல்லாது . இந்தக் கடிதம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உயர் கல்வி பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் 48ஆவது இடத்தைப் பிடித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் யுஜிசி அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது. இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை யுஜிசியின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் யுஜிசி அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணியையும் யுஜிசி மேற்கொண்டுவருகிறது.

8/11/17

தொலைதூர பிஎட் படிப்புக்குநவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ். விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2018-ம் ஆண்டு பிஎட் (பொது), பிஎட் (சிறப்புகல்வி) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிஎட் (பொது) படிப்பில் ஆசிரியர் பட்டயப் படிப்புடன் (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தற்போது ஆசிரியராக பணிபுரிந்து வர வேண்டும். பிஎட் (சிறப்பு கல்வி) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட இரு படிப்பு களுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம், விளக்கக் கையேட்டை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய 044-24306600, 24306617 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம். இணையதளத்திலும் விவரங்கள் அறியலாம்.

முன் அரையாண்டு, பருவ தேர்வு வேண்டாம்: மாணவர்கள் கோரிக்கை!!!

ஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால்,
அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடைத்தேர்வு : தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாணவர்களுக்கு, இரண்டாம் இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 13ம் தேதி, முன் அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இரண்டாம் இடைத்தேர்வில் வினாத்தாள் இடம் பெறும். ஆனால், முன் அரையாண்டு தேர்வுக்கு, பள்ளி துவங்கியது முதல், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

விடுமுறை : பருவ மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால், பள்ளிக்கல்வி காலண்டர்படி, இதுவரை நடத்த வேண்டிய பாடங்கள், இன்னும் பாக்கி உள்ளது; அதை, நடத்த கூடுதல் நாட்கள் தேவை. எனவே, பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாததால், 13ம் தேதி இடை தேர்வை மாணவர்கள் எழுத முடியாத சூழல் உள்ளது.
அதனால், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், முன் அரையாண்டு மற்றும் இடைத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நாட்களில், கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்களை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை

சென்னை: 'பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' 
என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' 
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்!!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'
என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.

தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

கண் துடைப்பாகும் கல்வி ஆய்வு கூட்டங்கள் : களத்தில் கலெக்டர்கள்!!!

மதுரை: கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு 
அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கற்றல், கற்பித்தல் மேம்பாடு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், 14 வகை நலத்திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டங்களில் நடக்கும் கட்டடப் பணிகள், புதிய வகுப்பறை, பள்ளி சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் 'நபார்டு' திட்டத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சார்பில் அறிக்கை
தயாரித்து, துறை செயலருக்கு அளிக்கப்படுகின்றன.
மேம்போக்காக உள்ள இந்த அறிக்கைகளில் திருப்தி இல்லாததால், கலெக்டர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி கல்வித்துறை செயல்பாடு குறித்து கலெக்டர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும்
விரிவான அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர்களுக்கு, துறை செயலர் பிரதீப் யாதவ்
கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்வித் துறையில் ஆர்வம் உள்ள பல கலெக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர். இது கற்றல் கற்பித்தல் மேம்படவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உந்துதலாகவும் உள்ளது.
இது கல்வித்தரம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோல் அனைத்து கலெக்டர்களும் ஆய்வு செய்து முழு அறிக்கை, கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
கண் துடைப்புக்காக பெயரளவில் ஆய்வுகள் நடத்தி அறிக்கை சமர்ப்பித்த கல்வி அதிகாரிகளுக்கு, செயலரின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

NMMS தேர்வு - online பதிவு செய்வது எப்படி?

Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
"Click to access online portal" பகுதியை Click செய்யவும்

👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.

👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)

👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.

👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )

👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.

👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...

👉SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.

👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.

👉அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇

👉மாணவனின் online registration application - 2 நகல்கள்
👉SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
👉தேர்வு கட்டணம் .
👉குறிப்பு :
மேற்கண்ட Online பதிவேற்றத்தை கால தாமதமின்றி உடனே முடிப்பது சிறந்தது. இறுதி நேரத்தில் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும்
AEE0 அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பத்தையும் தொகுத்து , block wise report தயார் செய்து அனுப்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதால் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இறுதி தேதிக்கு (8.11.17) முன்னதாகவே AEEO அலுவலகத்தில் ஒப்படைப்பது சிறந்தது.

தேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : முதன்மை கல்வி அதிகாரி!!!

சென்னை : வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வடியத்துவங்கியதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் 9 பள்ளிகள், திருவள்ளூரில் 12 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்படுவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மழைப்பொழிவை பொறுத்து வேளச்சேரி பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஓவியப் போட்டி!!!

                                   
சென்னை, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், 
'குளோபல் ஆர்ட் இந்தியா' நிறுவனம் சார்பில், நடந்த, தேசிய ஓவியப் போட்டியில், தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் ரயில் மறியல்!

                                                 
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் ரயில்வே நிலையத்தில்,
ரயிலில் பயணம்

செய்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள், ரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு

எதிராக ரயிலை மறித்து போராட்டம் இன்று (நவம்பர்,7) காலை போராட்டம் செய்தனர்.

56873 மயிலாடுதுறை பயணிகள் ரயில், விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, சிதம்பரத்துக்கு 7.50 மணிக்கு தினந்தோறும் வந்துசேரும். இந்த

ரயிலில்தான், அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், நந்தனார் பச்சையப்ப பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயணிக்கிறார்கள்.

ரயில் மறியல் பற்றி, ரயிலில் பயணம் செய்த பாலமுருகனிடம் கேட்டோம். இதுப்பற்றி அவர் கூறுகையில், புதுச்சத்திரத்தில் ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி

ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து பயணிகள் ரயிலை ½ மணிநேரத்துக்கும் மேலாக

நிறுத்தி, காலதாமதமாக அனுப்புகிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

பவர் கம்பெனிக்கும், பயணிகள் பயணிக்கும் ரயிலுக்கும் என்ன சம்பந்தம்

என்று கேட்டோம். “ பவர் கம்பெனிக்கு தூத்துக்குடியிலிருந்து கூட்ஸ்

மூலமாக ரயில் பாதையில்தான் நிலக்கரி ஏற்றிவருகிறார்கள். கூட்ஸ்பெட்டிகள்

ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலிருக்கும். கூட்ஸ் வண்டி எதிரில் வருவதால், மாணவர்கள் பயணிக்கும் பயணிகள் ரயிலைப் புதுச்சத்திரத்தில் நிறுத்தி, கூட்ஸ் வண்டிக்கு வழிவிடுகிறார்கள். கூட்ஸ் வண்டிக்கு என்ன அவசரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகள் ரயிலுக்கு வழிவிடலாமே? இப்போது தேர்வு நேரம், மாணவர்களின் படிப்புப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்குத் அக்கறை இல்லையா?

அதனால்தான், ரயிலில் பயணித்த அனைவரும் ஒத்தகருத்துடன் இன்று காலை (நவம்பர், 7) ரயில் மறியல் போராட்டம் செய்தோம். அதன்பிறகு, பயணிகள் பயணிக்கும் ரயிலுக்குத் இனி தடையிருக்காது என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள் ரயில்வே நிலைய அதிகாரிகள்.

அடிப்படை உரிமையைக்கூட இங்கு போராடித்தான் பெறவேண்டியதாகயிருக்கு. இந்தியசுதந்திர நாட்டில், இனி போராட்டங்கள் இல்லாமல் பொழுதுகள்

விடியப்போவதில்லை என்பது மட்டும் உணரமுடிகிறது என்று சொன்னார்.

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!!!

                                               
பள்ளிக்கூடத்துக்காகக் கட்டப்பட்ட அறைகளில் வட்டார வளர்ச்சி மையம்
செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளன. சுமார் 306 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். பள்ளியில் மொத்தம் 9 வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகள் போதாது, கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என ஏற்கெனவே மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் பேரில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அப்படிக் கட்டப்பட்ட அறைகளில் வகுப்பறைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அறைகள் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மைய அலுவலங்களாகச் செயல்பட்டுவருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (நவம்பர் 07) காலை வழக்கம்போல் பள்ளிக்கூடம் வந்த மாணவ மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்து பள்ளிக்கூடத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய அறைகள் வகுப்பறைகளாகச் செயல்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதாமணி ஆகியோர் இருந்தனர்.

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே துறை!!!

                                              
48 ரயில்களை அதிவேக ரயில்களாகத் தரம் உயர்த்தவும்,
அவற்றின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ரயில்வே துறை பயணக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ராஜ்தானி, டுரோண்டோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் மிகவும் தாமதமாகவே இயங்கி வருகின்றன. பனிமூட்டம் காரணமாக வடக்குக் கட்டுப்பாட்டு ரயில்கள் அனைத்தும் பல மணி நேரங்கள் குறைவான அளவிலேயே இயங்குகின்றன. எனவே 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாகத் தரம் உயர்த்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள ரயில்வே துறை நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புதிய பயண அட்டவணையில் ரயில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண முறைப்படி, வழக்கமான கட்டணத்தில், ஸ்லீப்பர் பிரிவுக்கு ரூ.30 கூடுதலாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர ஏ.சி. பெட்டிகளில் ரூ.45 கூடுதலாகவும், முதல் தர ஏ.சி. பிரிவுக்கு ரூ.75 கூடுதலாகவும் பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும். சூப்பர் பாஸ்ட் ரயில்களாக 48 ரயில்களும் மாற்றப்பட்ட பிறகு, சூப்பர் பாஸ்ட் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 1,072 ஆக உயரும். ரயில்வே துறையிடமுள்ள விவரங்களின்படி, ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 890 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தாமதமாக இயங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜூலை மாதத்தில் 129 ரயில்களும், ஆகஸ்ட் மாதத்தில் 145 ரயில்களும் செப்டம்பர் மாதத்தில் 183 ரயில்களும் 1 முதல் 3 மணி நேரங்கள் தாமதமாக இயங்கியுள்ளன. இந்நிலையில்தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 5 கி.மீ. வேகம் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

EMIS NEWS

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்*


EMIS தகவல்

பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

 இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

நவமபர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (8-11-17)
👉கலைத்திருவிழா
👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக பதிவேற்ற வேண்டும்
👉EMIS அனைத்து மாணவர்களுக்கும் blood group பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
👉EMIS விடுபட்ட பதிவுகள் முடித்தல்.
👉தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 4 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி,(2 spell)
👉உயர் தொடக்க நிலை ஆசிரியர் களுக்கு 2 நாட்கள் கற்றல் விளைவுகள் பயிற்சி பாட வாரியாக (3  spell)
👉06-11-17 ல் விடப்பட்ட மழை விடுமுறைக்கு  ஈடு செய் வேலைநாள்
👉C& D மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி இம்மாதத்தில் தமிழ் ,கணக்கு பாடத்தில் முழு அடைவை எட்டுதல்
👉 New pay _option கொடுத்து ஊதிய நிர்ணயம் செய்தல்/ சரிபார் த்தல்,
👉டெங்கு விழிப்புணர்வு செயல்பாடுகள்,தினமும் நடைமுறை மற்றும் கண்காணித்து வருதல்
👉school grant,MG போன்றவற்றை முழுமையாக எடுத்து பயன் படுத்துதல்
👉SMC மீட்டிங் நடத்தி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
👉NMMS மாணவர் பதிவு முடித்து அவர்களை தேர்வுக்கு தாயார் படுத்துத்துதல்
👉மேலும் அறிவிக்கப்பட உள்ளதை செயல்படுத்துதல்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து!!!

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் 
தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியமில்லா ஊரக வேலைத் திட்டம்!!!

                                       
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 
19 மாநிலங்களில் ஊதிய பாக்கியில் ரூ.3,066 கோடி இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.

பொதுவேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத் திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்தான் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையில் ஹரியானா மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சங்கர்ச் மோர்ச்சா என்ற பொதுநலச் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இதேபோல, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதலும், கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் 19 மாநிலங்களில் ரூ.3,066 கோடி ஊதிய பாக்கி வழங்கப்படவில்லை. இதனால் 9.2 கோடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைக்கான ஊதியமானது 15 நாட்களில் வழங்கப்படும். ஆனால் மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஊதியம் தருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.689 கோடியாக இருந்ததாக அரசு மதிப்பிட்டுள்ளது.

Flash News : TRB - Polytechnic Exam 2017 - Final Key answers and Individual Candidate Qurey and C.V List Published

6/11/17

70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!

பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி

பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நேற்று நாடு முழுவதும், 91 நகரங்களில் உள்ள, 1,700 மையங்களில் நடந்தது.
இதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். மொத்தம், 84 பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது. தேர்வு பணிகளில், ௨,௦௯௧ கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். இத்தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.

தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி

மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர்.
'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.
'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 2௫ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழகம் முழுவதும், ௩௦ இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மழைக்கால விடுமுறை நிறைவு : பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இன்று, இடை தேர்வுகள் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 

சென்ற வாரம் திங்களன்று மட்டுமே, பள்ளிகள் செயல்பட்டன. வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., ௩௦, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வெள்ளப்பெருக்கு உள்ள பகுதி பள்ளிகளும், வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளிகள் மட்டுமே இன்று இயங்காது.
இதை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று பள்ளிகள் துவங்கும் போது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வும் துவங்குகிறது. அதேநேரத்தில், மழை பாதித்த பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி, நிலைமையை சீர் செய்யவும், அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

மழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா? - பெற்றோர்கள் கவலை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.


வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று மழையால் 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக இன்று 7வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரமான சூழல் நிலவினால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

  

மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது என்றாலும் இரண்டாம் பருவம் மிகக் குறுகிய காலம் என்பதால் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்காவிட்டால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  

தள்ளிப் போன அரையாண்டு

கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் காரணமாக 40 நாட்கள் வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற கவலை பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. மழையால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் போலி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தல்

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு - முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற பெயரில் தெரிவு செய்யப்படுவதில்லை - TRB விளக்கம்

ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அமைத்த "ஸ்மார்ட் வகுப்பு" சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!!!

அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.*

ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*

✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )








TNOU B.ED ADMISSION 2018

தமிழ்நாடு பல்கலையில், நவ., 3௦ வரை,
பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


பல்கலை பதிவாளர்,விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

'இதன்படி, நவ., ௩௦ வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு

 தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 
மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என 900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆதங்கம் -வீட்டு வாடகைப்படி குறைவு!!!

                                            

நவ., 3 தேர்வு 25ல் நடக்கிறது!

சென்னை, அண்ணா பல்கலையில், நவ., 3ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், 25ல் 
நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இரண்டு தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 29-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்கூட்டம் வேலூர் 
டவுன் ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொய்யாமணி, துணைச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரகு வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் செல்வன், மாநில முதன்மை செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில தலைவர் சந்தன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதள பணிகளை செய்ய அதற்கு தேவையான கருவிகள் மற்றும் இலவச இணையதள வசதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஆன்லைன் கருவிகள், இலவச இணையதள வசதி ஆகியவற்றை வழங்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலர்கள் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு, அடுத்த மாதம் 7-ந் தேதியில் இருந்து கூடுதல் பொறுப்பில் நீதிமன்ற பணிகளை தவிர வேறு பணிகளை செய்ய மாட்டோம்.

அதேபோல், டிசம்பர் 14-ந் தேதி முதல் இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பரிந்துரை செய்வதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்துவார்கள். கிராம நிர்வாக அலுவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு கல்வி தகுதியாக பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு!!!

ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் 
இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார்


 திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு

இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்க வேண்டும்-அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!!

                                          

பெண் ஊழியர்களுக்கு 3மாத சம்பளத்துடன் விடுமுறை!!

                                          

70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!

                                          

10ஆம் வகுப்பு சாதனை மாணவி சாலைவிபத்தில் மரணம்!!!

                                                                     

பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் கட்ட கலந்தாய்வு!!!

                                                  
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட ஒன்பது
துணை மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என நேற்று (நவம்பர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்

1.பி.எஸ்சி (நர்ஸிங்) - செவிலியர்களை உருவாக்கும் படிப்பு

2. பி.பார்ம் (பார்மஸி) - மருந்தியல் துறை வல்லுநர்களை உருவாக்கும் படிப்பு

3. பி.பி.டி (பிசியோதெரபி) - முடநீக்கியல் துறை

4. பி.ஏ.எஸ்.எல்.பி (அகெளஸ்டிக்ஸ் மற்றும் லேங்வேஜ் தெரபி ) - செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்

5. பி.எஸ்சி (ரேடியோலஜி) - X ray , Scan போன்றவை குறித்து படிப்பது.

6. பி.எஸ்சி (ரேடியோதெரபி) - ரேடியோ கதிர்களை கொண்டு நோய் நீக்கும் துறை

7. பி.எஸ்சி ( எமெர்ஜென்சி & ட்ராமா கேர் ) - விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைகள் குறித்த படிப்பு

8. பி.எஸ்சி (மெடிக்கல் லேப் டெக்னீசியன்) - இரத்தம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் நோய் கண்டறியும் ஆய்வுகள் குறித்த படிப்புகள்

9. பி.எஸ்சி (மெடிக்கல் ரெக்கார்ட் சைன்ஸ்) - பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிப்பது குறித்த படிப்பு) ஆகிய ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு 8,381 இடங்கள் உள்ளன. துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 25, 293 பேருக்கான தகுதிப் பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

                                           
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்)
காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 354

பணியின் தன்மை : டிரேடு அப்ரென்டிஸ்( பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.)

வயது வரம்பு : 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கடைசித் தேதி : 15/11/17

மேலும் விவரங்களுக்கு www.iocl.com என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்

உச்ச நீதிமன்றம் உத்தரவால் பலர் வேலையிழக்கும் அபாயம்!!!

                                          

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!

                                              
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக 
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in

நாளைவரை மழை நீடிக்கும்-வானிலை மையம் தகவல்!!!

8,10 ஆம் வகுப்பு தகுதிக்கு 18,000 சம்பளத்தில் கஸ்டம்ஸ் வேலை!!!

                                                 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டிகள்- மாவட்ட ஆட்சியர்

                                                     

பென்ஷனுக்காக 45 ஆண்டு போராட்டம்: தியாகி இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு வழங்க உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் கோரி 45 
ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து நிவாரணம் கிடைக்காமல் இறந்த 96 வயது தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அவரது 73 வயது மனைவியிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் எம்.கணபதி(96). இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1943-ல் பணியில் சேர்ந்தார். இவரை பிரிட்டீஷ் ராணுவம் கைது செய்து 1945 ஏப்ரல் முதல் 1946 ஜனவரி வரை சிறையில் அடைத்தது. இவருக்கு 1969 முதல் மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு 1972-ல் விண்ணப்பித்தார். அதன் மீது மத்திய அரசு கடந்த 45 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011-ல் கணபதி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் கணபதி 2012 ஜூனில் இறந்ததால், உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் இவ்வழக்கை அவரது மனைவி வள்ளி(73) தொடர்ந்து நடத்தினார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் வாதிட்டனர். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மாநில அரசு அங்கீகரித்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகியை, சுதந்திரப் போராட்டத்தின்போது அவரது மதிப்புமிக்க சேவையை கருத்தில் கொள்ளாமல், அவரது ஓய்வூதிய கோரிக்கையை கடந்த 45 ஆண்டுகளாக கவனிக்காமல் கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது. தன் கோரிக்கை என்ன ஆனது என தெரியாமலேயே அந்த ஆத்மா மறைந்துவிட்டது.

இதுபோன்ற வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தியாகி ஏ.பிச்சை தொடர்ந்த வழக்கில், ‘இன்றைக்கு நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என் றால் அதற்கு நமது நாட்டின் முன்னோர்கள்தான் காரணம். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தங்கள் ஓய்வூதியத்தை வழக்கின் மூலமாகவே பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தியாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு தனிப் பிரிவு தொடங்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

தியாகி வி.ராஜய்யன் ராபின் தொடர்ந்த மற்றொரு வழக்கில், தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு அளிக்கும் மனுக்களை தொழில்நுட்பரீதியில் அதிகாரிகள் அணுகக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனது கணவருக்குரிய ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மனுதாரர் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை 8 வாரங்களில் அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்