யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/7/17

வினாத்தாள் தயாரிக்கும் உத்தரவால் ஆசிரியர்கள்அதிருப்தி! பிளஸ் 1 மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 22ம் தேதி முதல், இடைத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால், இடைத்தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழுவால்
தயாரிக்காமல், பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.


 தமிழகத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, வேகமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுடன், பிளஸ் 1 மாணவ, மாணவி யருக்கும், நடப்பாண்டு முதல், பொதுத் தேர்வு நடைபெற உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல் லாத நடைமுறை, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்பு பாடங்களை, மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு தயாராகும், பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 22 - 31 வரை, முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

முதல் இடைத்தேர்வு அறிவிப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பிளஸ் 1 வகுப்பிற்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இடைத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, தெரிவித்து உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், தலைமைஆசிரியர் தலைமையிலான கல்விக் குழு தயாரிக்க உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுற்றறிக்கை வந்ததில் இருந்து, ஆசிரியர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான கேள்வி

கடந்த ஆண்டு போல இல்லாமல், பிளஸ் 1 வகுப்பிற்கும் நடப்பாண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிப்பது சரியாக இருக்குமா என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.'நீட்' தேர்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் சூழலில், அதற்கேற்றாற் போல, மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதற்காக, சீரான, ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தேவைப்படுகின்றன என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறுபாடுகள்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள், மாவட்ட கல்விக் குழு தயாரிப்பதும், பிளஸ் 1 வினாத்தாள் பள்ளிகளிலேயே தயாரிப்பதும், மாணவர்களின் கல்வியை பாதிக்க செய்யும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மற்ற வகுப்புகளுக்கு தயார் செய்வது போல், பிளஸ் 1 வகுப்பிற்கும், மாவட்ட கல்விக் குழுவே வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளி திறந்தது முதல், இன்று வரை நடைபெற்ற பாடங்களிடையே, ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவை, மாணவர்களின் இடைத்தேர்வில் எதிரொலிக்கும். சில பள்ளிகள் கூடுதல் எண்ணிக்கையில் பாடம் நடத்தியிருப்பர்; சில பள்ளிகளில் இடைத்தேர்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் நடத்தியிருப்பர்.எனவே, பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கும் முடிவை மாற்றி, இயக்குனகரத்திலிருந்து கேள்வித்தாள் வடிவமைப்பை, முதன்மை கல்வி அலுவலகம் பெற வேண்டும் என, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


'புளூ பிரின்ட்' முறை தற்போது இல்லை. மேலும், கேள்வித்தாள் அமைப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2க்கு ஏற்கனவே வினாத்தாள் அமைப்பு உள்ளது. அது போல, ஜூலை வரை, பிளஸ் 1 வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும்.மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தியிருக்கும் பாடங்களின் எண்ணிக்கை மாறுபடும். எனவே, பள்ளிகளிலேயே வினாத்தாள் தயாரிக்க கூறியுள்ளோம். இதில் எந்த தவறுமில்லை.திருவளர்ச்செல்விமுதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்

அரசுபாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை,
சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக, பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி, முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும்.
'டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுக்கு, பி.இ., என்ற இளநிலை இன்ஜினியரிங் முடித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது.இதை ஏற்று, தமிழக அரசின் அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின், டி.ஆர்.பி., எந்த தகவலையும்
வெளியிடவில்லை. அரசாணை ரத்தால், எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதா; புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுமா; அரசு மேல்முறையீடு செய்துள்ளதா என, தெரியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., - தமிழக அரசின், டி.என்.பி.எஸ்.சி., அமைப்பும், போட்டி தேர்வு நடத்துவதில், வெளிப்படையான முறைகளை கையாள்கின்றன. 'அதே போல, டி.ஆர்.பி.,யும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்களை, இணையதளத்திலாவது, தாமதமின்றி வெளியிட வேண்டும். தேர்வர்களை குழப்பத்தில் தள்ளக்கூடாது' என்றனர்.

அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்

ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு செயல்பாடு -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு





12/7/17

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் கைகோத்த எடப்பாடி அரசு!-- அஷ்வினி சிவலிங்கம்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித்
துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HitechLabs) ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் முதன்முறையாக யோகா ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது.

உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்:



அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும்ஒன்றிணைந்திருக்கும்இம்மாபெரும் வரலாற்றைநாங்கள் மெய்சிலிர்ப்போடுபார்க்கிறோம்.

மிக நம்பிக்கையாகஉணர்கிறோம்.


அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ-  வைநோக்கி திரும்பி இருக்கிறது.



அரசு இதையும் அலட்சியம்காட்டினால்

தமிழ்நாட்டின் அரசுஅலுவல்கள்ஒட்டுமொத்தமாய்முடங்கிப்போய் தமிழ்நாடேஅல்லோலகல்லோலப்படவிருக்கிறது.

இதுவெல்லாம் ஜாக்டோஜியோ- வின் கடந்த காலசாதனைகளை வைத்துநிச்சயம் நடக்கும் எனநம்பலாம். இம்மாபெரும் அமைப்பான.

ஜாக்டோ ஜியோமுத்தாய்ப்பான மூன்றுகோரிக்கைகளை முன்வைக்கிறது.


1) பழைய பென்ஷனைஅமல்படுத்த வேண்டும்.


2) உடனடியாக ஏழாவதுஊதிய குழுவைஅமல்படுத்துவது

( தமிழ்கத்தில் எட்டாவது)


3) 20 சதவீதம் இடைக்காலநிவாரணம்


அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் அடிப்படைவாழ்வாதாரத் தேவைகளாககருதி

இம்மூன்றுகோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்துமுன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்புகோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை
 ஜாக்டோ- ஜியோ விற்கு ஆசிரியர்கள் சார்பாகவைக்கிறோம்.

இன்னுமொருகோரிக்கையை மிக சங்கடத்தோடு  மன்றாடிகெஞ்சி ஜாக்டோஜியோவிடம் கேட்கிறோம்.


இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால்தயவுசெய்து

இடைநிலை ஆசிரியர்கள் 8ஆண்டுகளாக புலம்பிக்கொண்டிருக்கும் ஒரேகோரிக்கையான ஊதியமுரண்பாடு கலைதல் ( 2006 பிறகான இடைநிலைஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு)

என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..


* ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..*




நம்பிக்கையோடும்ஏக்கத்தோடும் இடைநிலைஆசிரியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!!

புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்

சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. 6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு, பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறை!!!

தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டு
களுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு அளித்து உள்ளன.

இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், கீழ்க்கோர்ட்டுகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை என்ற புதிய நடைமுறை மூலம் நீதிபதிகளை நியமிப்பது பற்றி உத்தேசித்து வருவதாக கடிதம் அனுப்பியது.

இந்த கடிதம் கிடைத்ததும் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து, இதை ஒரு வழக்காக பதிவு செய்து, இது குறித்து விசாரிப்பதற்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமித்தது.
கடந்த மே 9–ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின் போது, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதுவரை 3 மாநிலங்கள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், 21 ஐகோர்ட்டுகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.
காஷ்மீர், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுகள் சிறிது கால அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்த அவர், குஜராத், கேரளா, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டுகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், மையப்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்யும் நோக்கில் மட்டுமே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மாநிலங்களில் தற்போது உள்ள வழிமுறைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும், இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கையிலும் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
வருங்காலங்களில் கீழ்க்கோர்ட்டுகளில் நீதிபதிகளின் நியமனம் சீரான முறையில் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கே மையப்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறையை அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 28–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது!!!

மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற
சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு படிகள் குறித்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதில், படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளில் சில ஏற்கப்பட்டுள்ளன; சில நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேபினட் செயலர் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் கேளிக்கை படியை நிறுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு படி வழங்கப்படுகிறது; இதை ரத்து செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு மட்டும், முடி திருத்தம் செய்வதற்கான படி நீட்டிக்கப்படும். அதே போல், அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை கையாளும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு படி, இனி வழங்கப்படாது. ரயில்வே மற்றும் தபால் ஊழியர்களுக்கு, மாதம், 90 ரூபாய் சைக்கிள் படி வழங்கப்படுகிறது. இதை நிறுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்த படி, இனி, மாதம், 180 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 196 படிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன; சில படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

இலவச சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோதனை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச உணவுக்கு ஆசைப்ப
ட்டு, பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், திரவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு உணவகம், 'சில்லி பர்கர்' எனப்படும், மிளகாய் பர்கரை சாப்பிடும் போட்டியை நடத்தியது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.இந்தப் போட்டியில், டில்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கவுரவ் குப்தா, அதிக பர்கர்களை சாப்பிட்டு வெற்றி பெற்றார். அடுத்த நாள், கவுரவ், ரத்த வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர் தீப் கோயல், அதிக காரம் காரணமாக, வயிற்றின் உட்புறச் சுவர் கிழிந்து இருப்பதாகவும், கிழிந்த பகுதியை உடனே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, கவுரவின் வயிற்றில் கிழிந்த பகுதிகள் அகற்றப்பட்டன. தொடர் சிகிச்சையுடன், திரவ உணவு மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார்

ஆர்.டி.ஐ.,யில் தவறான தகவல் : 5 கிலோ 'பேப்பர் வேஸ்ட்

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல்,


தவறான ஆவணங்களை அனுப்பி, ஐந்து கிலோ பேப்பரை, உணவு பாதுகாப்புத்துறை வீணாக்கி உள்ளது. சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காசிமயன். இவர், 2016 ஜூலையில், உணவு பாதுகாப்பு துறையில், ஏழு தகவல்கள் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய கடிதம், பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அவருக்கு பதில் வந்துள்ளது. அதில், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதில் தரப்பட்டுள்ளது. மற்ற நான்கு கேள்விகளுக்கு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைகளுக்கிடையில் நடந்த கடித பரிமாற்றங்களின் நகல்களை அனுப்பி உள்ளனர். நகல்களின் எடை, ஐந்து கிலோ. மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை, ஐந்து கிலோ பேப்பரை வீணடித்ததுடன், பொது மக்களின் பணத்தையும் விரயம் செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த அலட்சிய போக்கு, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

கொசு மருந்து அடிச்சு வெகு நாளாச்சு... எங்கெங்கு காணினும் டெங்கு; யாருக்கு பெரும் பங்கு? கோவையில் பலி எண்ணிக்கை ஏழாச்சு

கோவையில் 'டெங்கு' வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை 
மேற்கொள்வதில், அரசுத்துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதே, முக்கியக் காரணமாகவுள்ளது. பொறுப்புகளை அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால், மாவட்டத்தில் 'டெங்கு' பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம்; கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், 'டெங்கு' பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டில், ஜூன் 3ல் பருவமழை துவங்கியது. கோவை மாவட்டத்தில், நகர்ப்பகுதியில் பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாவிட்டாலும், புறநகரில் ஆங்காங்கே விட்டு, விட்டுப் பெய்கிறது.காலங்காத்தாலே கடி!மாநகரம் முழுவதும், காலை மற்றும் மாலை நேரங்களில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இரவில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் சீரான வெப்பநிலை பதிவாகிறது. மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல் நல பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. அதையும் விட, இந்த சீதோஷ்ண நிலையால், கொசுக்கள் உற்பத்தி, பல மடங்கு பெருகியுள்ளது.குறிப்பாக, 'டெங்கு' பரப்பும் 'டைகர்' கொசுக்கள், நகரில் லட்சக்கணக்கில் உற்பத்தியாகியுள்ளன. முன்பெல்லாம், காலை 11:00 மணியிலிருந்து மாலை 3:00 மணிக்குள் மட்டுமே, வலம் வரும் இந்த கொசுக்கள், சமீபகாலமாக காலையிலேயே வீடுகளுக்குள் படையெடுத்து விடுகின்றன. கலெக்டர் பங்களாவும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் உள்ள பந்தயச்சாலையில், கொசுத்தொல்லை அதிகம்.குடிநீர் வினியோகம், மாதமிருமுறை, மூன்று முறை என குறைந்துள்ளதால், பெரும்பாலான வீடுகளில் குடிநீரை தொட்டிகளில் சேமித்து வைத்து, பயன்படுத்துகின்றனர். இதுவே, கொசுக்கள் உற்பத்தியாக, முக்கிய காரணமாகி உள்ளது. மாவட்டத்தில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்; இப்போதும் ஏராளமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடப்பாண்டில் இதுவரை, ஏழு பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொசு மருந்து அடிப்பது, விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதில், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை; சுகாதாரத் துறை சுத்தமாக முடங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது. நகரில், கொசு மருந்து அடித்தே, பல மாதங்களாகி விட்டது.களப்பணியே அவசியம்!'டெங்கு' பாதிப்பு, மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கொசுப்புழு ஒழிப்பு, மருந்து அடிப்பது, தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பழைய பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளுடன், டெங்கு பாதித்த இடங்களில் கல்லுாரி மாணவ, மாணவியரை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள், வணிக, வளாகங்கள், குடியிருப்புகளில், கொசு உற்பத்தி காரணிகள் இருக்கிறதா என தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.தொட்டிகளில் தண்ணீரை அகற்றி, 'பிளீச்சிங்' பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தண்ணீர் இருந்தால், ஆயில் பால் அல்லது மீன் குஞ்சு விட வேண்டும். கொசுப்புழு உருவாகாமல் தடுக்க, 'அபேட்' மருந்து ஊற்ற வேண்டும். கொசுப்புகை மருந்து அடிக்க வேண்டும். பணிகளில் சுணக்கம் காட்டினாலோ அல்லது டெங்கு பாதிப்பு இருந்தாலோ, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.'டெங்கு' ஒழிப்பு பற்றி, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்ததுடன், களம் இறங்கிப்பணியாற்றினால் பாராட்டலாம்; இதேபோல, மாவட்ட நிர்வாகம், மற்ற உள்ளாட்சி அமைப்புகளையும், சுகாதாரத்துறையையும் ஒருங்கிணைத்து, 'டெங்கு' தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம். இதைச் செய்யாதபட்சத்தில், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அதிகாரிகள் பொறுப்பு ஏற்காமல் இருக்கலாம்; அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு: ஆக.,9க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி:முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு ஆகஸ்ட் 
9க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்ட உதவி வழங்குமாறு அட்டர்னி ஜெனரலை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம
,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால்,அவர்களே கூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அது பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி,முன்மாதிரி திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை வண்டியை முன்னேற்ற பாதையில் உருள வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம்,அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனும்,அந்த துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.
உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல்,ஒ.கே சொல்ல, அந்த துறையில் பல அதிரடி மாற்றங்கள் கடைப்பரப்பப்படுகிறது.
இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸ்கர்கள் மூலமாக நிதி திரட்டி அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்த ப,உதயச்சந்திரனை வைத்து தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளை ரெஃபர் பண்ண சொல்லி அறிவுறுத்தி, அனுப்பி இருக்கிறார்.
'ப.உதயசந்திரன், தலைமை ஆசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நமக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை சிறப்பாக செய்து வரும் 25 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8 ம் தேதி சென்னைக்கு வர சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்க ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து,பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்,'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு,உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்பு திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன் உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை இப்போது அரசே செய்யப் போகிறது. தமிழகம் முழுக்க மூவாயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமா அமைக்க போறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்கு காரணம், உங்க மூலமாகதான் அந்த மூவாயிரம் பள்ளிகளை செலக்ட் செய்ய போறோம்.
அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்து கொடுத்தாலும், அதை பயன்படுத்தாமல் பல பள்ளிகளில் வீணடித்துவிட கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கும் அளவிற்கு அடிப்படை கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய் மூவாயிரம் பள்ளிகளை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படகூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு,எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளிகள் தேர்வு செய்யும் விசயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விசயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அற்ற மூவாயிரம் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள்களுக்குள் எனக்கு தெரிவியுங்கள். அரசு பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவோம்'ன்னு சொல்ல,எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்து சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனால், எங்களை போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க கைகளை பிசைஞ்சுகிட்டு நிற்கிறாங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைச்சு கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளை தேர்ந்தெடுத்து சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.
இதுசம்மந்தமான, பிராசஸ் நடந்த திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்ட

உலகின் மிகச்சிறிய குட்டி நாடு - மக்கள் தொகை 11 பேர்

உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய


ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180வது நிறுவன தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

''படிப்பது 4 பேர்; பணியாற்றுவதோ 5 பேர்'

தமிழக அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் இக்காலத்தில்


அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நகரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில் அவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
மேலும், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணம் வட்டாரத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பல பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையே இல்லாத நிலையும் காணப்படுகிறது.
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு பின்புறம் நகராட்சித் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஆலமரப் பள்ளி என அப்பகுதி பொதுமக்களால் அழைக்கப்பட்ட இப்பள்ளியில் அதிகபட்சமாக 250 மாணவர்கள் படித்த காலமும் உண்டு. 36, 35, 34 ஆகிய வார்டுகள், வெங்கடேசபுரம், சாயிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொடக்க நிலை மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் அவலநிலை உள்ளது.
இப்பள்ளிக்கென இரு வகுப்பறைகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இருந்தன. தற்போது தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காக இரு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு வகுப்பறையில் நகராட்சித் தொடக்கப் பள்ளியும் மற்றொரு அறையில் நகராட்சி உருது பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நகராட்சித் தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டில் 1 முதல் 5 வரை 10 மாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்திருந்தாலும் பள்ளிக்கு தினமும் வருவது 4 மாணவர்கள் மட்டுமே. இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இரு ஆசிரியர்களும், சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பேரும் என 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளியில் நூற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை 50- க்கு மேல் உள்ளது. ஆனால் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் கேட்டபோது, இப்பள்ளிக்கென 34, 35, 36 என 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் இருக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இதே வார்டில் உள்ள பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசாணையே உள்ளது. ஆனால், அதையும் மீறி மற்ற வார்டுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 வார்டுகளில் மாணவர்கள் இருந்தும் இப்பள்ளியில் சேராமல் இருப்பதற்கு நாங்கள் காரணமல்ல என்றார்.
இதுகுறித்து அரக்கோணம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பால்ராஜிடம் கேட்டபோது, அரக்கோணம் வட்டாரத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,327 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 5,071 மாணவர்களே உள்ளனர்.
மாணவர் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை தற்போது பல பள்ளிகளில் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. மேலும் பல ஆங்கிலப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.
குறிப்பிட்ட அரசு நகராட்சி பள்ளிக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் இரு இடத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதனாலேயே நகராட்சித் தொடக்கப் பள்ளியில் சேர்க்கை குறைவாக இருக்கிறது. சேர்க்கை முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அருகருகே இரு பள்ளிகள் இருப்பதே சேர்க்கை குறைவுக்கு காரணம் என கல்வி அலுவலர் தெரிவிக்கையில், கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர என்ன செய்ய வேண்டும் !!

ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் சலுகை இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜியோ தண் தணா தண் சலுகைகளை மாற்றியமைத்து புதிய விலையை ஜியோ அறிவித்துள்ளது*

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் டிராய் அறிவுறுத்தலின் படி ஜியோ திரும்பப் பெற்றது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் எனும் சலுகையை அறிவித்தது. தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.


ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தண் தணா தண் சலுகைகள் ரூ.309-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதன்படி ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகையில் 84-நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது, இதன் வேலிடிட்டி 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399-ஆக மாற்றப்பட்டுள்ளது.


தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84-நாட்களில் இருந்து 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் வேலிடிட்டி மற்றும் டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

 இவை அனைத்திற்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
நன்றி..மாலைமலா்

பள்ளி முதல்வர் அறையாக மாறிய கழிப்பறை!!!

ம.பி., மாநிலத்தில், அரசு உயர்நிலை பள்ளி கழிப்பறையில், பள்ளி முதல்வர் 
அறை செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

300 பேர் படிக்கும் பள்ளி

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சியோனி மாவட்டம், கான்சோர் தாலுகா, பஹாரி கிராமத்தில், அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 300 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் கழிப்பறையில் தான் பள்ளி முதல்வர் அறை செயல்படுகிறது. மாணவர்கள் சிறுநீர் கழிக்க, பள்ளிக்கு வெளியே சென்று திறந்த வெளி பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். சியோன் மாவட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை இணை அமைச்சர் பாகன் சிங் குலஸ்தேவின் மாண்ட்லா லோக்சபா தொகுதிக்குள் உள்ளது.

பள்ளி முதல்வர் பேட்டி

இதுகுறித்து பள்ளி முதல்வர் மணிஷ் மிஸ்ரா கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால், மூன்று வகுப்பறைகள் தான் உள்ளன. எனவே, பள்ளி முதல்வர் அறையை வகுப்பறையாக மாற்றி விட்டோம். அத்துடன் ஆய்வு கூடத்தில் தான் நூலகமும், ஆசிரியர்கள் ஓய்வறையும் செயல்படுகின்றன. போதிய இட வசதி இல்லாததால் தான் மாணவர்கள் கழிப்பறையை எனது அறையாக பயன்படுத்தி வருகிறேன். எனினும், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.

மத்திய அமைச்சர் கோபம்

இப்பிரச்னை குறித்து மத்திய இணை அமைச்சர் குலஸ்தேயிடம் கேட்ட போது,'' பள்ளி முதல்வர் தான் இப்பிரச்னையை முறையாக கையாண்டு இருக்க வேண்டும். அவர் ஒரு முட்டாள் நபர். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

இன்ஜி., கல்லூரிகளில் யோகா கட்டாய

நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா
, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்., - என்.சி.சி.,

இன்ஜினியரிங் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் பழகும் உன்னத் பாரத் அபியான்

போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் இன்ஜி கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் இனி, யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் அச்சம் காரணமாக கிராம மக்கள் வீட்டில் முடக்கம்!!

கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு
அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர். அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

இந்திய
, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு

கோவா மாநில பணிகள்

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில், சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவா மாநிலத்தில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, நெடுஞ்சாலை அமைப்பு, ஆய்வு பணி மேற்கொள்வது, குடிநீர் திட்டம் மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற, நகாய் அதிகாரிக்கு 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்தது. அப்போது லஞ்சம் கொடுத்ததை சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளில் முறைகேடாக ஒப்பந்தங்கள் பெற்று லாபம் ஈட்டியதில், 25 கோடி ரூபாயை அமெரிக்க கருவூலத்தில் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த பிரச்னை குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகாய் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பி
றப்பித்த அறிவிப்புக்கு, தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த மே 23 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதே போல இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும்  மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர்  தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் காங்கிரஸின் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்  

அப்பொழுது வேணுகோபால் நீதிமன்றத்தில், 'மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்த விட்டது. எனவே புதிதாக எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்பில் நிறைய மாறுதல்களை செய்து, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான் அமர்வானது, உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டது

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது

வேலை உங்களுக்குதான்... மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் வேலை

எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற 
கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஆசிரியர்

தகுதி: எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இளநிலை பட்டம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 43க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 200. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான முழுமையான விவரங்கள் அறிய http://www.ssaassam.gov.in/AdvertisementAsstteacherJuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

அரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,அரசு செவிமடுக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் !!

முத்தான மூன்று கோரிக்கை..*
                                      

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுக..
ஏழாவது ஊதியக்குழுவை அமூல்படுத்து..
இடைக்கால நிவாரணம் 20%வழங்கிடுக..

*13ம்தேதி மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்..*


*18ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்பாட்டம்..*

*ஆகஸ்ட் 5ல் கோட்டை நோக்கி பேரணி..*

*ஜாக்டோ-ஜியோ கூட்டறிக்கை...

பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க புதிய திட்டம் - ஜாவடேகர்!!

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து புதிய மென்பொருள் ஒன்றுடன் ஒரு திரையிடல் கருவி
மற்றும் டிஜிட்டல் பலகை ஒன்றையும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும் திட்டம் அமலாகும்; இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமையும் குறையும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் 20 ஹை-டெக் பள்ளிகளை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

”நாடு முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளில் 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இம்மாணவர்களில் 10 கோடி பேர் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ளனர்” என்றார் அமைச்சர்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு!!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக 
சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

11/7/17

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பிராந்திய கிராம வங்கிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.



காலியிடங்கள்: 14192
தகுதி: Degree
வயது வரம்பு: 18-40 ஆண்டுகள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு & இன்டர்வியூ.
சம்பளம்: Rs.47,000/-
ஆரம்ப தேதி: 12.07.2017
கடைசி தேதி: 01.08.2017
விண்ணப்பிக்கும் முறை: Online
Apply link--> https://www.kappajobs.com/ibps-rrb-recruitment-2017-14192-officers-office-assistant-post/

ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய... இருக்கவே இருக்கு 1967! வரிசையில் காத்திருக்க வேண்டாம்!!!

ரேஷன் கார்டு மட்டுமல்ல...வழங்கல் துறையும் படிப்படியாக 'ஸ்மார்ட்' ஆக மாறி வருகிறது
. இனி, ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற, தாலுகா அலுவலகங்களில் கால்கடுக்க காத்து நிற்க தேவையில்லை. கையில் ஒரு ஆன்டிராய்டு மொபைல் போன் இருந்தால் போதும்; 1967 என்ற எண்ணை அழுத்தி, இருந்த இடத்தில் இருந்தே வேலையை கச்சிதமாக முடித்து விடலாம்.ஆம்...! மொபைல் போன் நிறுவனங்களில் உள்ளதை போன்று, வாடிக்கையாளருக்கு சேவையளிப்பதற்காக, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் வகையில், தானியங்கி மொபைல் சேவை மையத்தை உணவு வழங்கல் துறை உருவாக்கியுள்ளது. இச்சேவை மையம், தமிழகம் முழுக்க உள்ள, ரேஷன்கார்டுதாரர்களின் புகார்களை பெற்று, உடனுக்குடன் சரிசெய்து கொடுக்கிறது.ரேஷன்கடையில் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்திருப்பார்கள், குடும்பத்தலைவரின் போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள் அல்லது தெளிவான போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள். அதனால் பலருக்கு 'ஸ்மார்ட் கார்டு' இன்னும் கிடைக்கவில்லை.போட்டோவை நாம் ரேஷன்கடையில், சமர்ப்பிக்க வேண்டுமென்றால், போட்டோவை 'மொபைல் ஆப்' மூலமாகவோ., அல்லது TNEPDS என்ற இணையதளம் மூலமாகவோ மட்டுமே, 'அப்லோடு' செய்ய முடியும். அதன்பின்பு தான் 'ஸ்மார்ட் கார்டு' பிரிண்ட் செய்வார்கள். TNEPDS என்ற இணையதளம் வாயிலாக, 'போட்டோவை' எளிதாக 'அப்லோடு' செய்யலாம்.அதன் பின், அதை 'பிரிண்ட் அவுட்' எடுத்து ரேஷன்கடையில் சமர்ப்பிக்கலாம். இதே இணையதளத்தில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயர் சேர்ப்பு, கடை மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும், இதே போன்று இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் வசதி, விரைவில் வரவுள்ளது.தற்போது இ-சேவை மையங்களில் இச்சேவைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டு விட்டன.இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி கூறியதாவது:உணவு வழங்கல் துறை, பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. தனியாருக்கு இணையாக இணையதள சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். படிக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. அவர்களை தவிர்த்து மற்றவர்கள், இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களும், உணவுப்பொருள் வழங்கல் துறையில் என்னென்ன வசதிகள் உள்ளன, என்பதை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.tnepds.gov.in என்ற வெப்சைட்டில் நுழைந்தால், அதில் உள்ள பல்வேறு வசதிகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம். முடிந்தால், அதிலுள்ள செயலியை (ஆப்) உங்கள் மொபைல் போனில் டவுண்லோடு செய்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.இதன் வாயிலாக, வீட்டில் இருந்து கொண்டே, ரேஷன்கடையிலுள்ள இருப்பை தெரிந்து கொள்ளலாம். கடைக்கு சென்றால் பொருட்கள் கிடைக்குமா, கடை திறந்திருக்கிறதா என்ற தகவல்களை கூட, நாம் தெரிந்து கொள்ளலாம். இச்செயலியை பயன்படுத்திய பலரும், மிகவும் உபயோகமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, சரவணமூர்த்தி கூறினார்.

இப்படித்தான் சாத்தியம்!1967 என்ற எண்ணை, மொபைல் போன் அல்லது தொலைபேசி வாயிலாக, 'டயல்' செய்தால், 'தமிழுக்கு ஒன்றை அழுத்தவும்' என்ற பதில் கிடைக்கும். அதன்படி அழுத்தினால், 'குடும்ப அட்டை வைத்திருப்பவரா' என்ற அடுத்த கேள்விக்கு, எண், 2 ஐ அழுத்தவேண்டும்.சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் ரேஷன்கார்டின் வலது பக்கத்தின், மேற்பகுதியிலுள்ள எண்ணை கேட்பார். உதாரணத்திற்கு, 006/w/33658889 என்ற எண்ணை நாம் தெரிவித்தால், ரேஷன்கார்டிலுள்ள, ஒருவரின் ஆதார் எண்ணை, அவர் கேட்பார். ஆதார் எண்ணை தெரிவித்தால், நம் ரேஷன்கார்டில் நமக்கு தேவையான, மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது ஏற்கனவே பதிவில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு பதிலாக, வேறுஎண்ணையும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவுதான் வேலை. இதற்காக, ரேஷன் கடையிலோ, உணவுபொருள் வழங்கல் துறை அலுவலகத்திலோ வேலைமெனக்கெட்டு காத்திருக்க வேண்டியதில்லை

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது. இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.

இந்நிலையில், 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனையானவற்றிற்கு மட்டுமே டேட்டா பகிரப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

இன்ஜி., படிப்புக்கு 'நீட்' விலக்கு: அமைச்சர் உறுதி !!

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்களித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழகத்தில், இன்ஜி., கலந்தாய்வை நடத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம்,'' என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.


சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட அரசு கலைக் கல்லுாரியில் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அடுத்த கல்வியாண்டில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத சட்டம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அதை அனுமதிக்காத வகையில் பார்த்துக் கொள்வோம், மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இன்ஜி., கலந்தாய்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். 

சிபிஎஸ்சி க்கு நிகராக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு தடை விதித்தது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 2 குழுக்கள் நியமக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாற்றம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறைவேற்றப்படும் என கூறினார்.

இதே போன்று தமிழகத்தில உள்ள பள்ளிகளில் 10 ஆயிரம் நவீன கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள்: பிரணாப்

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க சிரமப்படுவதை தவிர்க்க, பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கல்வித்தரத்தில் வேறுபாடு:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த முடியும். நம் நாட்டில் கிராம பகுதிகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் இடையே கல்வித்தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளது. தவிர மாநிலங்களுக்கு இடையிலும், கல்வி நிலையங்களுக்கும் இடையிலும் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது.

ஆங்கிலத்தில் கற்க சிரமம்:

பிராந்திய மொழிகளில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியை பிராந்திய மொழியில் படித்துவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனை தவிர்க்க பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

வங்கக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டுப்பயிற்சி : அதிர்ச்சியில் சீனா

கடற்படையை வலிமைப்படுத்துவதற்காகவும், எதிரி நாடுகளால் ஏற்படும்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், திடீரென போர் மூண்டால் எதிரி நாடுகளின் வியூகத்தை கணித்து செயல்படவும் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல் மலபார் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜப்பான் கடற்படையும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி முதல் வங்கக்கடல் பகுதியில், இந்தியா - அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017 என்ற பெயரிலான கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்கள், சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. அவற்றுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடல் மற்றும் துறைமுகம் ஆகிய 2 பகுதிகளிலும் நடைபெறும் கூட்டுப்பயிற்சியில், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் நாடுகளால், கடல்வழி அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்தியா உள்பட 3 சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சீனாவிற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது

பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்கள் கண்காணிப்பு : வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல்!!!

மதுர மாவட்டத்தில் இன்று முதல் (ஜூலை 10) துவங்கும் எஸ்.எஸ்.ஏ.,- ஆர்.எம்.எஸ்.ஏ., சிறப்பு
பயிற்சியை கல்வித்தறை செயலாளர் உதயசந்திரன் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்காமல் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் சென்றுவிடுங்கள் என சங்கங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உட்பட பயிற்சி வகுப்புகள் என்றாலே தாமதமாக செல்லும் ஒரு ஆசிரியர் கூட்டமே உள்ளது. சங்கம் பின்னணியில் உள்ள ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பயிற்சியில் பங்கேற்காமல் 'டிமிக்கி' கொடுத்து தப்பித்து விடுவர்.இந்நிலையில் இன்றுமுதல் ஐந்து நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில், 6-10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக பங்கேற்கின்றனர். இப்பயிற்சியின் செயல்பாடுகளை செயலாளர் உதயச்சந்திரன் நேரடியாக கண்காணித்து, முதன்முறையாக காணொலி காட்சி மூலம் பயிற்சியிலுள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், ஜூலை 10- 14 மற்றும் 24 - 28 ம்தேதி என இரண்டு கட்டங்களாக வட்டார வளமையங்களிலும் பயிற்சி நடக்கிறது.பயிற்சியை செயலாளர் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வலியுறுத்தி சங்கங்கள் சார்பில் 'வாட்ஸ்ஆப்' மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதில், 'ஆசிரியர்கள் முன்கூட்டியே பயிற்சி வகுப்பு நடக்கும் அறைக்கு சென்று விடுங்கள். பஸ் வரவில்லை, நிற்கவில்லை, திடீரென உடம்பு சரியில்லாமல் போச்சு போன்ற காரணத்தை தவிர்த்துவிடுங்கள். உண்மையிலேயே உடல் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற்று விடுங்கள்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஏனோ தானோ என்று தான் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என செயலாளர் எச்சரித்துள்ளார். 'வீடியோ கான்பரன்சிங்', 'ஸ்கைப்' மூலம் அவரே குறுக்கிட்டு பயிற்சி குறித்தும் கேட்கவும் வாய்ப்புள்ளது. பயிற்சி மையங்களில் இதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கோர்ட் வாய்ப்பூட்டு


மே மாதம் 24 ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் 
, தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் வேதிக்கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஹட்சன் , டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. அமைச்சர் பேச்சால் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் அமைச்சர் ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் , தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இன்றி விமர்சிப்பதை அமைச்சர் நிறுத்த வேண்டும் என தடை விதித்தது. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

ஏர்இந்தியா விமானத்தில் இனி அசைவ உணவு கிடையாது!!!

அனைத்து உள்நாட்டு விமானங்களின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்யும் பயணிக
ளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஏர்இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும் அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகளை ஏர்இந்தியா 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானங்களில் அதிக சுமை ஏற்றப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த மாதம் முதல் சாலட் உள்ளிட்ட உணவுகள், சில மேகசின்கள் வழங்குவதையும் ஏர்இந்தியா நிறுத்தியது

துணைவேந்தர் நியமனம்; தேடல் குழுவால் தாமதம்

அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், 2016 மே
மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, மூவரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
அதை பரிசீலித்த கவர்னர், மூவரிடமும் நேர்முக தேர்வு நடத்தினார். அவர்களின் தகுதிகளில் திருப்தி அடையாத கவர்னர், தேடல் குழுவின் பரிந்துரையை நிராகரித்ததோடு, குழுவையும் கலைத்தார்.
பின், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் அனந்த பத்மநாபன் மற்றும் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் இடம் பெற்ற, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், ஜூலை, ௧ல் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இதன் பிறகும், புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படவில்லை; அதற்கான நடவடிக்கைகளையும், தேடல் குழு துவக்கியதாக தெரியவில்லை.
அதனால், புதிய துணைவேந்தர் தேர்வு விரைவில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தாமதமாகலாம் என, எதிர்பார்க்கப்படுகி

சிறப்பு பேனா மூலம் அடையாள மை!!

தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக 
தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.
ஆரம்பத்தில், தேர்தல் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன.
அதன்பின், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இருமுறைகளிலும் தேர்தலில் ஓட்டு போட்டவர்களை அடையாளம் காண வாக்காளர்களின் கையில் அழியாத மை வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.

மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த தயாரிப்பு பணி நடைபெறுகிறது.

அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும், இந்த சிறப்பு பேனாவின் தயாரிப்புச் செலவு பாதி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பே‌‌னாவின் மூலம் ஆயிரம் வாக்காளர்களின் விரல்களின் அடையாள மை வைக்க முடியும் என்றும், இதனை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.`

செல்போன் திருடர்கள் 'ஈ'தான் ஓட்டணும்: செல்போன் திருடுபோனால், செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் !

ஒரு வேளை செல்போன் திருடுபோனால், அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய
தொழில்நுட்பம் சோதனை அளவில் இருக்கிறது.

செல்போனை செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது உற்பத்தியில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.

இதனை முன்னிட்டு, செல்போனில் இருக்கும் ஐஎம்இஐ எனப்படும் 15 இலக்க எண்ணை அழிப்பது குற்றச் செயலாகவும், அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் வகை செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தொலைந்து போகும் அல்லது களவு போகும் செல்போனை முற்றிலும் செயலிழக்க வைக்கலாம், அது எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடையதாக இருந்தாலும். மேலும் அந்த செல்போனில் சிம் கார்டு அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டிருந்தாலும் கூட அதனை செயலிழக்க வைக்கலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மையத்தில், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதித்து வருகிறது.

சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடின்டி ரெஜிஸ்டர் (CEIR) எனப்படும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், செல்போன்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த சிஇஐஆர் தொழில்நுட்பம் ஒவ்வொரு செல்போனின் ஐஎம்இஐ தகவல்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்துத் தொலைத்தொடர்பு எண்களுக்கும் மையப் புள்ளியாக சிஇஐஆர் இருக்கும். இதில், களவுப் போன அல்லது தொலைந்து போன செல்போன் குறித்த தகவலை அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த செல்போன் எந்த தொலைத்தொடர்பு எண்ணுக்கும் பயன்படாத வகையில் முடக்கிவிட முடியும். அந்த செல்போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலும் இதனை செயல்படுத்த முடியும் என்கிறது தகவல்கள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வுமையம

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் 
மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் லேசான மழை தூறல் விழுந்தது.

இரவு 7 மணி அளவில் படிப்படியாக மழை அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கோயம்பேடு,  வட பழனி, மயிலாப்பூர், மந்தைவெளி, தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர், மண்ணடி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், திருமுல்லை வாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம்,  புழல்,  செம்பரம் பாக்கம், சோழவரம், பூண்டி, திருவள்ளூர்,  காஞ்சீபுரம் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக நேற்றிரவு பெய்த மழை  இன்றும் நீடிக்கும் என்றும், நேற்று  இரவு  நுங்கம்பாக்கத்தில் 84 மி.மீட்டர் மழையும்,  மீனம் பாக்கத்தில் 46.2 மி.மீட்டர்  மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம்  அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் இன்று பேட்டி அளித்தார். அப்போது  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்

ஐஐடி.,யில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!!

நாடு


முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் என்.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர்க்கை
ஐஐடி நுழைவு தேர்வில் இந்தி வினாத்தாளில் பிழை இருந்ததன் காரணமாக சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி பிழையில்லாத வினாத்தாள் கொண்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற அச்சுப்பிழைகள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது

மொபைல் போன்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்!!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி
கட்டாயம்

                                        
இடம் பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

2016ல் வெளியான அறிவிப்பு

மத்திய தொலைதொடர்பு துறை கடந்த, 2016ம் ஆண்டு ஏப்., 22ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2017 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும், 'பேனிக் பட்டன்' என்ற அபாய கால எச்சரிக்கை பொத்தான் வசதி இருக்க வேண்டும்; 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தயாரிக்கப்படும் மொபைல் போன்களில், 'பேனிக் பட்டன்' இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜி.பி.எஸ்., வசதியை ஏற்படுத்தினால், மொபைல் போன்களின் விலையை, 30 சதவீதம் வரை உயர்த்த வேண்டி இருக்கும் என, மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

பெண்கள் பாதுகாப்பு

ஆனால், இந்த கருத்தை மத்திய தொலை தொடர்பு துறை ஏற்றுக்கொள்ளவில்லை. 2018 ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அனைத்து மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ்., வசதி இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியம். அபாய காலத்தில், சம்பந்தப்பட்டவரின் இருப்பிடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என கண்டிப்புடன் கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை மிஞ்சும் : ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் சீனாவை முந்தும்
                      

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனம், வாகனம், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியா சிறந்து விளங்கும் என்று கூறியுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்றும் தெரிவித்துள்ளது

ஒப்புகை சீட்டு முறையால் தேர்தல் முடிவு தாமதமாகும்: தேர்தல் கமிஷன்

தேர்தல்களில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் 
வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
அதில், 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுவதும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டால், தேர்தல் முடிவுகள் வெளியிட 3 மணிநேரம் வரை தாமதமாகலாம். முதல் சுற்று நிலவரங்களை காலை 11 மணிக்கு முன் வெளியிட முடியாது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படும் போது, ஓட்டு எண்ணிக்கை துவங்கிய அரை மணிநேரத்திற்குள் முதல்கட்ட நிலவரங்கள் தெரிய வந்துவிடும். ஆனால் காகித சிலிப்கள் மூலம் எண்ணப்பட்டால் தேர்தல் முடிவுகளை வெளியிட 3 மணிநேரம் வரை தாமதம் ஆகலாம். இது தோராயணமான தாமத நேரம் மட்டுமே. மனிதர்கள் எண்ணும் போது முதல் சுற்று எண்ணுவதை முடிப்பதற்கே வெகு நேரம் ஆகும் என தெரிவித்துள்ளது

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!!

                                           

வருங்கால வைப்பு நிதியில் புதிதாக ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் - அமைச்சர் தத்தாத்ரேயா

இந்த ஆண்டு பொதுமன்னிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அது வெற்றியும்
 பெற்றது. புதிதாக இணைந்த உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 5.4 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். வருங்கால வைப்பு நிதி திட்டம் சத்துணவு ஊழியர்களுக்கும் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர்.

மேலும் அவர் கூறுகையில் ஊழியர்கள் தங்கள் நிலுவைத் தொகைகளை செலுத்த வசதியாக பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி உட்பட பல வங்கிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை வருங்கால வைப்பு நிதியம் செய்து கொண்டுள்ளது. அதே போல தவணை தொகைகளை வசூலிக்கவும், ஊழியர்களின் சேமிப்பை திரும்ப அளிக்கவும் ஆக்சிஸ் வங்கி, எச் டி எஃப் சி உட்பட பல வங்கிகளை இந்நிறுவனம் கூறியுள்ளது.

சேமிப்புத் தொகையை கையாளும் வங்கிகளுக்கு 1.10 சதவீத நிர்வாக கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அது 65 சதவீதமாக குறைந்துள்ளது.  முன்பு பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.350 கோடியை நிர்வாக செலவினமாக கொடுக்கப்பட்டது. புதிய வங்கிகளை இணைத்ததும் நிர்வாக செலவு ரூ. 140 கோடியாக குறைந்துள்ளது. அடுத்த வருடம் இத்தொகை ரூ 50 கோடியாக குறையும் என்றே எதிர்பார்க்கப்ப்படுகிறது

அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி

                                                            
   அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் 
இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி  பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் இயங்கும் MIT தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பாடப் பிரிவில் சேர்ந்து பயில தனக்கு அட்மிஸன் கிடைத்திருப்பதாகவும், கல்லூரியில் சேர ஆகஸ்ட் மாதம் தான் அங்கே செல்லவிருப்பதாகவும் கூறினார். பெங்களூரு சர்வதேசப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவரான காவேரி கடந்த வாரத்தில் தான், 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப் படும் சர்வதேசப் பள்ளிகளுக்கான IB போர்டு தேர்வில் 45 மதிப்பெண்களுக்கு 44 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறினார்.

தனது பள்ளிப் படிப்பு மற்றும் மதிப்பெண் விகிதங்களில் தான் பெற்று வந்த தொடர் வெற்றிகளே உலக அளவில் சிறந்த இத்தனை பாரம்பரியம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்ததில் முக்கியப் பங்காற்றியதாக காவேரி தெரிவித்தார்.

மகளின் இந்தப் பெருமைக்குரிய சாதனையைப் பற்றிப் பேசும் போது காவேரியின் அப்பா ஸ்ரீகாந்த் நாதமுனி சொன்னதாவது; காவேரிக்கு சிறு வயதிலிருந்தே எதையும் பகுப்பாய்ந்து தெளிவடையும் மனது இருப்பதால் அவரது இந்த வெற்றி குறித்து நாங்கள் முன்னரே அனுமானித்திருந்தோம். டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவரை உலகின் பல முக்கியமான புராஜெக்டுகளில் கைகோர்க்க வைக்கலாம். காவேரி நிச்சயமாக நிறையச் சாதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றால். படிப்பு மட்டுமல்ல பெண்ணுக்கு இசையிலும் நிறைய ஆர்வம் உண்டாம். 4 வயதிலிருந்து தன்னுடைய பாட்டியிடமிருந்து கர்நாடக இசை கற்று வருகிறாராம் காவேரி. படிப்பு, படிப்புக்கு நடுவில் பாட்டு, பாட்டுக்குப் பிறகு தனது புதிய புராஜெக்டுகள் என காவேரி எப்போதும் செம பிஸி!

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு கல்விக்கான விசா கிடைப்பதில்லை. அதற்கு காரணம் ட்ரம்ப்பின் H- 1B விசா நடைமுறைக் கட்டுப்பாடுகளே! இச்சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றில் பயில அனுமதி கிடைத்திருப்பதற்காக அந்த மாணவியை எத்தனை பாராட்டினாலும் தகும்

9/7/17

பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மாநில மாநாடு

அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள்  ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 2014ம் ஆண்டில் ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றி மனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே, கோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த  கூட்டம் 9.7.2017 ஞாயிறு காலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை

அரசுபள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2012 முதல், 16 ஆயிரத்து, 549
ஆசிரியர்கள், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், பகுதி நேரமாக பணியாற்று கின்றனர்.
கணினி அறிவியல், ஓவியம், இசை, தோட்டக்கலை, தையல் என, பல சிறப்பு பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், 'பணியில் இருந்து கொண்டே, உயர் கல்வி படிக்கலாமா; அதற்கு அனுமதி உண்டா' என, பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பி பதில் கேட்டனர்.

அதற்கு, 'உயர்கல்வி படிக்க, பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த தடையும் இல்லை' என, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கேட்ட தகவலுக்கு, மாநில திட்ட இயக்குனரகம் அளித்த பதிலில், 'உயர் கல்வி படிக்க, நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும். பகுதிநேர ஆசிரியர் பணி என்பது முற்றிலும் தற்காலிகமானது. எனவே, அவர்கள் விருப்பம் போல, உயர் கல்வி படிக்கலாம். அதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டியதில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணிஅமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)
முன்ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.
(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)
(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)
(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)
பதவிஇறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு
ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)
குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்
கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது
தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))
தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்
ஊதியஉயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With 
Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.
Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.
இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்
ஊதியஉயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)
பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனைசாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)
(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)
தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.
ஊதியவிகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு
1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)ஊதியஉயர்வுக்கு சேரும் காலம் –
பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல்பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)
ஊதியஉயர்வுக்கு சேராத காலம்
மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)

அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்

மேல்நிலைப் பள்ளிகளில் ஐ.டி., பிரிவு அறிமுகம் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம்

தமிழக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி, இந்த கல்வியாண்டில்
அறிவியல் பாடத்தில் ஒரு பிரிவாக 'ஐ.டி.' கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஐ.டி., கல்வி என்பதில் கணினி வரலாறு முதல் ஆன்ட்ராய்டு செயலி வரை அனைத்து பகுதிகளும் இடம் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.
இதையடுத்து கணினி பாடங்களுக்கு பயிற்றுனர்களை நியமிக்க அரசு செயலர் உதயச்சந்திரன் ெவளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பள்ளி கல்வித் துறையில் 2007-- 2016ம் கல்வியாண்டு வரை தரம் உயர்த்திய 525 மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப கணினி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். தற்போது 240 பள்ளிகளில் கணினி பாடப்பிரிவுகள் இல்லை. பயிற்றுனர் பணியிடம் கணினி பாடப் பிரிவுகள் செயல்படும் பள்ளிகளில், பயிற்றுனர் பணியிடம் தேவையாக உள்ளது. கணினி பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட ஊதிய விகிதங்கள் ஒன்றே. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது.

இந்தநிலையில் காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி பயிற்றுனர்களாக மாற்றி ஒப்படைக்க, பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரினார். இதனை அரசு பரிசீலித்தது. கணினி பிரிவு செயல்படும் பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடம் ஏற்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனர் தொகுப்பில் உள்ள, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதே ஊதியத்தில் கணினி பயிற்றுனர் பணியிடங்களாக மாற்றவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.